புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

21 July 2020

பிரிந்திசி நகர் புனித லாரன்ஸ்(St.Lawrence of Brindisi)மறைவல்லுநர் (Doctor of the Church July 21

இன்றைய புனிதர் :
(21-07-2020)

பிரிந்திசி நகர் புனித லாரன்ஸ்(St.Lawrence of Brindisi)
மறைவல்லுநர் (Doctor of the Church)
பிறப்பு 
1559
பிரிந்திசி(Brindisi), இத்தாலி
    
இறப்பு 
1619
லிஸ்பன்(Lisbon)

இவர் பிரிந்திசி நகரிலிருந்த கப்புச்சின் சபைத் துறவிகளிடம் கல்வி பயின்றார். வெனிஸ் நகரிலிருந்த புனித மார்க் கல்லூரியில் தனது மேற்படிப்பை முடித்தபின், தனது 16 ஆம் வயதில் கப்புச்சின் சபையில் சேர்ந்து குருத்துவப் பயிற்சி பெற்றார். பதுவை நகரில் தத்துவக்கலையை முடித்தபின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பல மொழிகளை கற்றுத் தேர்ந்த இவர், பல நாடுகளுக்கு சென்று நற்செய்தியை போதித்தார். பின்னர் திருத்தந்தையின் வேண்டுதலின்படி ஜெர்மனி நாட்டிற்கு யூதர்களிடம் அனுப்பப்பட்டார். யூத மக்களிடையே லாரன்சின் பணி செழிப்படைந்தது. மார்ட்டின் லூத்தரின் தவறான போதனைகளை நம்பிய மக்கள், தற்போது லாரன்ஸ் கூறிய போதனைகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவை பின்பற்றினர். 

லாரன்ஸ் மறைபரப்பு பணியோடு சேர்ந்து, தொற்று நோய் கொண்ட மக்களிடமும், பிளேக் நோயாளிகளிடையேயும் தொண்டாற்றினார். அம்மக்களுக்கும் கிறிஸ்துவை யார் என்று அறிவித்து, அன்பு பணியாற்றினார். பின்னர் இம்மக்களுக்காக 3 துறவற இல்லங்களை தொடங்கினார். 1602 ஆம் ஆண்டு அச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அப்பதவியில் அவர் மனம் நாட்டங்கொள்ளாததால் 3 ஆண்டுகளில் அப்பதவியிலிருந்து விலகினார். இவர் கிறிஸ்துவுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு, நன்மை செய்ய, தன்னையும் போர் படைகளில் இணைத்துக்கொண்டு கையில் சிலுவையை ஏந்தி போர்புரிந்தார். அப்போது பல்வேறு பணிகளை ஆற்றி, சிறப்பாக பல விசுவாச நூல்களையும் எழுதினார். ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து திருமுறையைப்பரப்பினார். தன் இறப்புவரை மிக எளிமையான கப்புச்சின் குருவாக வாழ்ந்து இறந்தார். 


செபம்:
மகிமையின் மன்னரே எம் இறைவா! ஞானத்தையும், அறிவையும் பெற்று, இளம் வயதிலிருந்தே தன்னை மறைபரப்புப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ளும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, உம் பணி இவ்வுலகில் மேலும் சிறப்படைய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (21-07-2020)

St. Lawrence of Brindisi

St. Lawrence was born on July 22, 1559 at Brindisi in Italy. His baptismal name was Giulio Cesare Russo (Julius Caesar Rossi). His father was Guglielmo de Rossi and mother Elisabetta Masella. He studied at St. Mark’s College in Venice and joined the Capuchins in Verona and took the name Lawrence. He also studied in the University of Padua. He was appointed as the 'Difinitor General' (Difinitor is the person who gives assistance to the Superior General) for the Capuchins in Rome. As directed by the Pope Clement-VIII, he specially preached among the Jews in Rome to convert them to Christianity. He established many monasteries in Germany and Austria and converted many Protestants to catholic faith. It is said about him that he often used to fall in ecstasies when celebrating mass. He later served as the Imperial chaplain for the army of the Holy Roman Emperor Rudolph-II. He led the army armed only with a crucifix during the capture of Szekesfehervar, a city in Hungary, from the Ottoman Empire. The Christian army with only 18000 soldiers fought and defeated the Ottoman Empire army with about 80000 soldiers. In 1602 he was elected Vicar General of the Capuchin Friars, the highest office in the Capuchin Order at that time (the post was changed to Minister General in 1618 by Pope Paul-V). He was appointed as Papal Nuncio to Bavaria and then to Spain. After serving as the Papal Nuncio, he retired in a monastery. But he was again recalled in 1619 to serve as a special envoy to the king of Spain, regarding the actions of the Viceroy of Naples. After finishing the special envoy work, he died on July 22, 1619 at Lisbon, Portugal.
St. Lawrence was beatified on June 1, 1783 by pope Pius-VI and canonized by pope Leo-XIII on December 8, 1881. He was declared Doctor of the Church by pope John-XXIII in the year 1959.

---JDH---Jesus the Divine Healer---

† இன்றைய புனிதர் †
(ஜூலை 21)

✠ பிரிந்திசி நகர் புனிதர் லாரன்ஸ் ✠
(St. Lawrence of Brindisi)

கத்தோலிக்க குரு/ மறைவல்லுநர்:
(Roman Catholic Priest/ Doctor of the Church)

பிறப்பு: ஜூலை 22, 1559
பிரிந்திசி, நேப்பிள்ஸ் அரசு
(Brindisi, Kingdom of Naples)

இறப்பு: ஜூலை 22, 1619 (வயது 60)
லிஸ்பன், போர்ச்சுகல்
(Lisbon, Portugal)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: ஜூன் 1, 1783
திருத்தந்தை ஆறாம் பயஸ்
(Pope Pius VI)

புனிதர் பட்டம்: டிசம்பர் 8, 1881
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

நினைவுத் திருவிழா: ஜூலை 21

பாதுகாவல்: 
பிரிந்திசி (Brindisi)

பிரிந்திசி நகர் புனிதர் லாரன்ஸ் (Saint Lawrence of Brindisi) ஒரு கத்தோலிக்கக் குருவும், கப்புச்சின் சபைத் (Order of Friars Minor Capuchin) துறவியுமாவார்.

“கியுலியோ சீசர் ருஸ்ஸோ” (Giulio Cesare Russo) எனும் இயற்பெயர் கொண்ட இவர், நேபிள்ஸ் அரசின் (Kingdom of Naples), பிரிந்திசி (Brindisi) மாகாணத்தில், வெனீஷிய (Venetian) வணிகர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். வெனிஸ் நகரில் உள்ள “புனித மார்க் கல்லூரியில்” (Saint Mark's College) கல்வி பயின்ற பின்னர் "சகோதரர் லாரன்ஸ்" என்னும் பெயரோடு வெரோனாவில் (Verona) உள்ள கப்புச்சின் சபையில் இணைந்தார். இவர் பதுவை நகர பல்கலைக்கழகத்தில் (University of Padua) உயர்கல்வி பெற்றார். இவர் ஒரு திறமையான மொழியியலாளர் ஆவார். இவர் பெரும்பாலான ஐரோப்பிய (European) மற்றும் “செமிட்டிக்” (Semitic languages) மொழிகளை சரளமாக திறமை கொண்டவராவார். “ஹெப்ரூ” (Hebrew), “அரபிக்” (Arabic), “அராமைக்” (Aramaic), “அம்ஹரிக்” (Amharic), “டிக்ரினியா” (Tigrinya), “டிக்ரே” (Tigre), “அஸ்சிரியன்” (Assyrian), “மால்டிஸ்” (Maltese) உள்ளிட்ட மொழிகள், “செமிட்டிக்” (Semitic languages) என்று அழைக்கப்படுகின்றன. கி.பி. 1582ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்ட லாரன்ஸ், ஒரு அறிவு செறிந்த குருவாக திகழ்ந்தார்.

கி.பி. 1596ம் ஆண்டு, ரோமில் உள்ள கப்புச்சின் சபைக்கு தள தலைவராக (Definitor General) நியமிக்கப்பட்டார்; திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் (Pope Clement VIII), அந்த நகரத்தில் உள்ள யூதர்களிடம் மறைபணியாற்றி அவர்களை மனம் மாற்ற இவரை அனுப்பினார். கி.பி. 1599ம் ஆண்டு தொடங்கி, லாரன்ஸ் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் பல கப்புசின் மடங்களை நிறுவுவதன் மூலம் கத்தோலிக்க மறுமலர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.

கி.பி. 1601ம் ஆண்டு, புனித ரோம பேரரசர் (Holy Roman Emperor) “இரண்டாம் ருடால்ஃப்” (Rudolph II) என்பவருடைய இராணுவ படைகளுக்கு ஆன்மீக குருவாக பணியாற்றினார். அப்போது “ஓட்டோமேன் துருக்கியர்களுக்கு” (Ottoman Turks) எதிராக போராட உதவ பிலிப் இம்மானுவலை (Philippe Emmanuel) சேர்த்துக்கொண்டார். “ஒட்டோமன்” பேரரசிடமிருந்து (Ottoman Empire) ஹங்கேரி (Hungary) நாட்டிலுள்ள (Székesfehérvár) என்னும் இடத்தை கைப்பற்ற நடந்த போரின்போது, சிலுவையை மட்டுமே கையில் கொண்டு படைக்கு முன் சென்றார்.

இவர் கப்புச்சின் சபையின் தலைவராக (Vicar General of the Capuchin friars) கி.பி. 1602ம் ஆண்டும், அதன் பின்னர் கி.பி. 1605ம் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கி.பி. 1605ம் ஆண்டு அதனை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் திருப்பீட தூதுவராக பவேரியாவுக்கு (Bavaria) பணியாற்ற அனுப்பப்பட்டார். பிறகு ஸ்பெயின் நாட்டின் திருப்பீட தூதுவராக பணியாற்றியபின்னர், இவர் கி.பி. 1618ம் ஆண்டு ஓய்வுபெற்றார். கி.பி. 1619ம் ஆண்டு, ஸ்பெயின் அரசருக்கு நேபிள்ஸ் வைஸ்ராயாயின் (Viceroy of Naples) நடவடிக்கைகள் குறித்த ஒரு சிறப்பு தூதராக இவர் அனுப்பப்பட்டார். இந்த பணியை முடித்த பிறகு, “லிஸ்பன்” (Lisbon) நகரில், தனது பிறந்தநாள் அன்று மரித்தார்.

இவருக்கு கி.பி. 1783ம் ஆண்டு, திருத்தந்தை ஆறாம் பயஸ் (Pope Pius VI) அவர்களால் முக்திபேறு பட்டமும், கி.பி. 1881ம் ஆண்டு, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) அவர்களால் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. கி.பி. 1959ம் ஆண்டு, திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால் (Pope John XXIII) இவர் திருச்சபையின் மறைவல்லுநராக (Doctor of the Church) அறிவிக்கப்பட்டார்.

இவரது நினைவுத் திருவிழா ஜூலை மாதம், 21ம் நாளாகும்.

No comments:

Post a Comment