அனாக்னி நகர்ப் புனித பேதுரு (1030-1109)
(ஆகஸ்ட் 03)
இவர் இத்தாலியில் உள்ள சலர்னோ என்ற நகரில் பிறந்தவர்.
சிறு வயதிலேயே இறைவன்மீது மிகுந்த பற்றுகொண்ட இவர், வளர்ந்து பெரியவரானபோது, புனித பெனடிக்ட் சபையில் சேர்ந்து துறவியானார்.
இவரிடருந்த ஞானத்தையும் அறிவாற்றலையும் திறமையையும் கண்டு வியந்துபோன, திருத்தந்தை ஏழாம் கிரகோரி இவரை அனாக்னி ன்ற நகரின் ஆயராகத் திருநிலைப்படுத்தினார்.
இவர் ஆயராக உயர்ந்த பிறகு, தன் மறைமாவட்டத்திலிருந்த மக்களுடைய ஆன்மிக வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தார்; அவர்களுக்கென பெருங்கோயில் (Cathedral) ஒன்றையும் கட்டித் தந்தார்.
இப்படி மிகச் சிறப்பான பணிகளைச் செய்து வந்த இவரை, இரண்டாம் அர்பன் என்ற திருத்தந்தை தன்னுடைய பிரதிநிதியாக ஏற்படுத்தினார். இவருடைய காலத்தில் புனித நாடுகளுக்கு ஆபத்து வந்தபோது, அவற்றை எப்படிப் பாதுகாக்கலாம் என்பதற்கு இவர் நல்ல முறையில் ஆலோசனைகளை வழங்கினார்.
இவ்வாறு மக்களுடைய ஆன்மிக வாழ்வில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி, நல்ல ஆலோசகராகச் செயல்பட்டு வந்த இவர் 1109 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு இரண்டாம் பாஸ்கல் என்ற திருத்தந்தை, இவர் இறந்த நான்காம் ஆண்டிலேயே புனிதர் பட்டம் வழங்கினார்
No comments:
Post a Comment