புனித அர்னால்டு (1040-1087)
(ஆகஸ்ட் 14)
இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். சில காலம் முதலாம் ஹென்றியின் படையில் ராணுவ வீரராகப் பணியாற்றிய இவர், இறைவனின் அழைப்பை உணர்ந்து, அதை விட்டுவிட்டுச் சோஸ்சன்ஸ் என்ற இடத்திலிருந்த புனித பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்து துறவியானார்.
துறவுமடத்தில் இவர் வாழ்ந்த எடுத்துக்காட்டான வாழ்க்கையைப் பார்த்து விட்டு, இவரைத் துறவுமடத்தின் தலைவராக உயர்த்தினார்கள். அப்பதவி தனக்கு வேண்டாம் என்று இவர், துறவிமடத்தை விட்டு ஓடியபொழுது, அதிசயமாக ஓர் ஓநாய் வந்து இவரைத் தடுத்து நிறுத்தி, இவரைத் துறவிமடத்தின் தலைவர் பொறுப்பை ஏற்குமாறு செய்தது.
இதற்குப் பிறகு இவருக்கு சோஸ்சன்ஸ் நகரின் ஆயராகப் பொறுப்பேற்குமாறு அழைப்பு வந்தது. "ஒரு பெரும் பாவி ஆயர் பதவிக்குப் பொருத்தமானவர் கிடையாது" என்று சொல்லி அதை இவர் தட்டிக் கழிக்கப் பார்த்தார்; ஆனால் ஆயர் பதவிக்கு இவரைவிட பொருத்தமானவர் வேறு யாரும் கிடையாது என்று இவரைச் சோய்சன்ஸ் நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்படுத்தினார்கள்.
தனக்கு கொடுக்கப்பட்ட ஆயர் பொறுப்பை நல்ல முறையில் செய்து வந்த இவர், துறவற வாழ்வுதான் தனக்குச் சரியாக வரும் என்று முடிவு செய்து, ஆயர் பதவியைத் துறந்துவிட்டு, முன்பிருந்த மடத்திற்கு வந்து, கடைசி வரைக்கும் ஒரு துறவியாக வாழ்ந்து இறையடி சேர்ந்தார்.
www.Stjck.blogspot.com
No comments:
Post a Comment