தூலூஸ் நகர்ப் புனித லூயிஸ் (1274-1297)
ஆகஸ்ட் 19
இவர் இத்தாலியைச் சார்ந்தவர். இவரது தந்தை நேப்பிள்ஸை ஆண்டு வந்த இரண்டாம் சார்லஸ் என்பவராவார். இவர் ஹங்கேரி நாட்டைச் சார்ந்த புனித எலிசபெத்தின் நெருங்கிய உறவினரும் கூட.
வசதியான குடும்பத்தில் பிறந்தாலும், சிறிதும் ஆடம்பரமில்லாமல் வாழ்ந்து வந்த இவர், பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து தனது இருபத்து மூன்றாம் வயதில் துறவியானார்.
பின்னர் தூலூஸ் நகரின் ஆயரான இவர், இறைப்பணியை மிகச் சிறப்பாகவும், அதே நேரத்தில் தாழ்ச்சியோடும் செய்து வந்தார். இந்நிலையில் இவர் ஆயரான ஆறாவது மாதத்தில் திடீரென நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்தார்.
இவருக்கு 1317 ஆம் ஆண்டு திருத்தந்தை இருபத்து இரண்டாம் யோவானால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது
No comments:
Post a Comment