புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

13 August 2020

புனித பெனில்திஸ் (1805-1862)(ஆகஸ்ட் 13)

புனித பெனில்திஸ் (1805-1862)

(ஆகஸ்ட் 13)

இவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர். இவரது குடும்பம் ஒரு சாதாரண விவசாயக் குடும்பம்.
இவர் தனது தொடக்கக் கல்வியை தெலசால் அருள்சகோதர்கள் நடத்தி வந்த பள்ளிக்கூடத்தில் கற்றார். இவரிடம் விளங்கிய அறிவாற்றலைக் கண்டு வியந்த அங்கிருந்த அருள் சகோதரர்கள் இவரைப் 14 வயதிலேயே மாணவர்களுக்குப் பாடம் எடுக்க இசைவு தந்தனர்.

இருபதாவது வயதில் தெலசால் அருள் சகோதரர்கள் சபையில் சேர்ந்த இவர், தனது நாற்பத்து ஒன்றாம் சாகஸ் என்ற இடத்திலிருந்த ஓர் இல்லத்தின் தலைவரானார்.

சாகஸ் என்ற இடம் ஒரு சாதாரண சிற்றூர். இவ்வூரில் கல்வியில் பின்தங்கிய மாணவ மாணவிகள் பலர் இருந்தார்கள். அவர்களுக்கு இவர் மாலை நேர வகுப்பு எடுத்து அவர்கள் கல்வியில் சிறந்தோங்கச் செய்தார்.

இவர் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த நேரம் போக, மற்ற நேரங்களில் நோயாளர்களைச் சந்தித்து அவர்களிடம் ஆறுதலாகப் பேசினார்; மாணவர்களுக்கு மறைக்கல்வியும் எடுத்தார். இதனால் சாகஸ் என்ற அந்தச் சிற்றூர் கல்வியில் மட்டுமல்லாது ஆன்மிகத்திலும் சிறந்து விளங்கியது.

இவர் இறக்கும் போது, இவரிடம் கல்வி கற்ற 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் அருள்பணியாளர்களாக மாறி இருந்தார்கள்.

இவருக்கு 1967 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுலால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment