புனித கௌதென்சியா
(ஆகஸ்ட் 30)
இவர் இத்தாலியைச் சார்ந்தவர்.
சிறுவயதிலிருந்தே கடவுள்மீது மிகுந்த பற்றுக்கொண்டு வாழ்ந்து வந்த இவர், வளர்ந்து பெரியாளான பின்பு தன் வாழ்வையே ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழத் தொடங்கினார்.
இந்நிலையில் கிறிஸ்தவர்களைக் கூண்டோடு அழிக்க நினைத்த உரோமை அரசாங்கம், யாரெல்லாம் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டிருந்தார்களோ, அவர்களைப் பலவாறாகச் சித்திரவதை செய்து, கொடுமைப்படுத்திக் கொலை செய்து வந்தது.
கௌதென்சியா கிறிஸ்துவின்மீது மிகுந்த பற்றுக் கொண்டிருப்பதை அறிந்த உரோமை அரசாங்கம் அவரைக் கொலை செய்தது.
இவ்வாறு கௌதென்சியா இயேசுவுக்காகத் தன் இன்னுயிரைத் துறந்து மறைச்சாட்சியானார்.
No comments:
Post a Comment