புனித ஐடன் (-651)
(ஆகஸ்ட் 31)
இவர் அயர்லாந்து நாட்டைச் சார்ந்தவர். சிறுவயதிலேயே இறைவன் மிகுந்த பற்றுக் கொண்ட இவர், வளர்ந்ததும், துறவு மடத்தில் சேர்ந்து துறவியானார்.
திருவிலியத்தில் புலமை பெற்றிருந்த இவர் கடவுளின் வார்த்தையை மிகவும் வல்லமையோடு எடுத்துரைத்து, பலரையும் ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொள்ளச் செய்தார். நார்தம்பரியாவில் இவர் ஆற்றிய நற்செய்திப் பணியே இதற்குச் சான்று.
இவர் ஏழைகளிடம் மிகுந்த கரிசனையோடு இருந்தார். அதே நேரத்தில் தூய்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்.
இப்படிப்பட்டவர் லின்டர்ஃபர்ன் (Lindesfarne) என்ற இடத்தின் ஆயராகத் திருநிலைப்பட்டார். இதன் பிறகு இவர் கடவுளின் வார்த்தையை இன்னும் சிறப்பாக அறிவித்தார். லின்டர்ஃபர்னில் இவர் ஒரு துறவுமடத்தையும் நிறுவினார். இத்துறவுமடம் மக்களுக்கு ஆன்மிகத்தை மட்டும் போதிக்காமல் பல துறைகளைச் சார்ந்தவற்றையும் போதித்தது.
இப்படித தன் வாழ்வையே சிறந்த நற்செய்தியாகத் தந்த இவர் 651 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
No comments:
Post a Comment