புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

07 August 2020

புனித கயட்டான் (Kajetan von Tiene)சபை நிறுவுனர் August 7

இன்றைய புனிதர் :
(07-08-2020)

புனித கயட்டான் (Kajetan von Tiene)
சபை நிறுவுனர்
பிறப்பு 
1480
ட்டியன்ன(Tiene), வீசென்சா(Vicenza), இத்தாலி
    
இறப்பு 
7 ஆகஸ்டு 1547
நேயாபல், இத்தாலி
புனிதர்பட்டம்: 1671, திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
பாதுகாவல்: பவேரியா (Bayern)

இவர் சிறுவயதிலிருந்தே குருவாக வேண்டுமென்று ஆசைகொண்டார். இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில் திருச்சபை சட்டம் பயின்றார். பின்னர் குருத்துவ பயிற்சி பெற்று குருவானார். இவர் இஞ்ஞாசியாருடன் இணைந்து, திருச்சபையில் நடந்த கொடுமைகளை எதிர்த்து, திருச்சபையை நல்வழியில் நடத்தி செல்ல பெரும்பாடுபட்டார். தன் வாழ்நாள் முழுவதும் பிறரை எல்லாச் சூழலிலும் அன்பு செய்து வாழ்ந்தார். கடுமையான ஒறுத்தல் வாழ்வை வாழ்ந்து பல மாற்றங்களை மக்களிடையே கொண்டுவந்தார். ஏழைகளின் மேல் அதிக அன்பும் அக்கறையும் கொண்டுவாழ்ந்தார். 

தான் ஓர் அரச குடும்பத்தில் பிறந்ததால், தன் பெற்றோரின் சொத்திலிருந்து பெற்ற பணத்தைக்கொண்டு, தான் பிறந்த ஊரான விச்சென்சாவில் ஒரு மருத்துவமனையை கட்டினார். தான் வாழ்வு முழுவதையுமே நோயாளிகளுக்காக அர்ப்பணித்தார். தன் பிள்ளைகளாலும், உறவினர்களாலும், கைவிடப்பட்ட நோயாளிகளை, இறுதிமூச்சுவரை பராமரிக்க ஓர் துறவற சபையை தொடங்கினார். இவரால் தொடங்கப்பட்ட இச்சபையினர் "தியேற்றைன்ஸ்" (Thietrains) என்றழைக்கப்பட்டார்கள். வெனிஸ் நகரிலும், நேப்பிள்ஸ் நகரிலும் இச்சபையை பரவ செய்தார். இத்துறவற சபையினர் பிறருக்கு பணிசெய்வதின் வழியாக, இயேசுவை மக்களுக்கு அறிவித்து, அவரின் சாட்சிகளாயினர். 
புனித கயத்தான் இறைவேண்டலிலும் பிறருக்கு அன்புப்பணி ஆற்றுவதிலும் சிறந்தவராய் இருந்தார். இறக்கும்வரை இயேசுவுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து இறந்தார். 

செபம்:
அன்பு தெய்வமே எம் இறைவா! திருச்சபைக்காகவும், ஏழை மக்களுக்காகவும் உழைத்து உயிர் துறந்த புனித கயத்தானைப் போல, எங்கள் வாழ்வில் நாங்களும் உம்மை பற்றிக்கொண்டு, உமது விண்ணரசுக்கு சொந்தமான ஏழை மக்களின் மேல் அன்பு கொண்டு வாழ, நீர் உமது அருள்வரங்களை பொழிந்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 7)

✠ புனிதர் கஜெட்டன் ✠
(St. Cajetan)

மத சீர்திருத்தவாதி/ ஒப்புரவாளர்:
(Religious Reformer/ Confessor)

பிறப்பு: அக்டோபர் 1, 1480
விசென்ஸா, வெனிட்டோ, வெனிஸ் குடியரசு, தற்போது இத்தாலி
(Vicenza, Veneto, Republic of Venice (Now Italy)

இறப்பு: ஆகஸ்ட் 7, 1547 (வயது 66)
நேப்பிள்ஸ், கம்பேனியா, நேப்பிள்ஸ் அரசு
(Naples, Campania, Kingdom of Naples)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: அக்டோபர் 8, 1629
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 12, 1671 
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
(Pope Clement X)

பாதுகாவல்: 
வங்கிப் பணியாளர், வேலையற்ற மக்கள், சூதாட்டம் ஆடுபவர்கள், வேலை தேடுபவர்கள், அல்பேனியா (Albania), இத்தாலி (Italy), ஹம்ருன் (மால்டா) (Ħamrun (Malta), அர்ஜென்ட்டினா (Argentina), பிரேசில் (Brazil), எல் சால்வடார் (El Salvador), குவாடேமலா (Guatemala)

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 7

புனிதர் கஜெட்டன், ஒரு இத்தாலிய கத்தோலிக்க குருவும், மத சீர்திருத்தவாதியும் ஆவார். இவர், “பௌலோ கான்சிக்லியேரி” (Paolo Consiglieri), “போனிஃபேசியோ ட கோல்” (Bonifacio da Colle) மற்றும் “கியோவன்னி பியெட்ரோ கரஃபா” (பின்னாளில் திருத்தந்தை நான்காம் பவுல்) (Giovanni Pietro Carafa (Afterwards Pope Paul IV) ஆகிய மூவருடன் இணைந்து “தியேடைன்ஸ்” – “தெய்வீக தரிசனத்தின் வழக்கமான கத்தோலிக்க சபை” (Theatines - Congregation of Clerics Regular of the Divine Providence) எனும் சபையை நிறுவியவர் ஆவார்.

“கேடனோ டேய் கோன்டி டி தியேன்” (Gaetano dei Conti di Thiene) எனும் இயற்பெயர் கொண்ட இவரது தந்தை, “தியேன்” (Thiene) என்ற இடத்தின் பிரபுவான “காஸ்பர்” (Gaspar) ஆவார். “மேரி போர்ட்டா” (Mary Porta) இவரது தாயார் ஆவார். இவருக்கு இரண்டு வயதாகையில் இவரது தந்தை மரித்துப் போனார். இவரது தாயார் இவரை பக்தி மார்க்கத்தில் வழி நடத்தினார்.

பதுவை நகரில் கல்வி கற்ற கஜெட்டன், தமது இருபத்துநான்கு வயதில் “சிவில் மற்றும் நியதிச் சட்டம்” ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்றார். கி.பி. 1506ம் ஆண்டு, திருத்தந்தை “இரண்டாம் ஜூலியசின்” (Pope Julius II) அரசியல் தூதராக பணியாற்றினார். “வெனிஸ் குடியரசை” (Republic of Venice) சமரசப்படுத்தும் பணியில் இவர் திருத்தந்தைக்கு உதவி புரிந்தார்.

கி.பி. 1513ம் ஆண்டு திருத்தந்தை “இரண்டாம் ஜூலியஸ்” மரணமடைந்ததும் திருத்தந்தையர் அலுவலக சபையிலிருந்து விலகினார். ஆனால், அதுவரை இவர் குருத்துவ அருட்பொழிவு பெறவில்லை. கி.பி. 1516ம் ஆண்டு, தமது முப்பத்தாறு வயதில் இவர் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். தமது தாயார் மரணமடைந்ததும் சொந்த ஊரான “விசென்ஸா” (Vicenza,) அழைக்கப்பட்ட இவர், அங்கே கி.பி. 1522ம் ஆண்டு குணப்படுத்த இயலாத நோயாளிகளுக்கென ஒரு மருத்துவமனையை நிறுவினார். கி.பி. 1523ம் ஆண்டு, “வெனிஸ்” (Venice) நகரிலும் அதேபோன்றதொரு மருத்துவமனையை நிறுவினார். மருத்துவ சிகிச்சைகளைவிட ஆன்மீக ரீதியான குணமாக்களில் அதிக ஈடுபாடு காட்டினார். ரோம் நகரிலுள்ள “தெய்வீக அன்பின் பிரசங்க கலை” (Oratory of Divine Love) என்றழைக்கப்படும் “தோழமைக் கூட்டுறவில்” (Confraternity) இணைந்தார்.

கி.பி. 1524ம் ஆண்டு, திருத்தந்தை “ஏழாம் கிளமென்ட்டின்” (Pope Clement VII) ஆலோசனையுடன் தமது மூன்று நண்பர்களுடன் இணைந்து “தியேடைன்ஸ்” – “தெய்வீக தரிசனத்தின் வழக்கமான கத்தோலிக்க சபை” (Theatines - Congregation of Clerks Regular of the Divine Providence) எனும் சபையை நிறுவினார். இவரது நண்பர்களில் ஒருவரான “கியோவன்னி பியெட்ரோ கரஃபா” (Giovanni Pietro Carafa) பின்னாளில் திருத்தந்தை “நான்காம் பவுல்” (Pope Paul IV) ஆனார். இவர்களது சபை மிதமான வேகத்தில் வளர்ச்சியடைந்தது. கி.பி. 1527ம் ஆண்டு, பன்னிரண்டு உறுப்பினர்கள் இருந்த நிலையில், ரோம் நகரிலிருந்த இவர்களது சபை அழிக்கப்பட்டது. ஸ்பேனிஷ் பேரரசன் “ஐந்தாம் சார்ளசின்” (Charles V) இராணுவத்தினர் கஜெட்டனை துன்புறுத்தினர். “தியேடைன்ஸ்” சபையின் உறுப்பினர்கள் “வெனிஸ்” (Venice) நாட்டுக்கு தப்பியோடினர்.

அங்கே அவர் புனிதர் “ஜெரோம் எமிளியானியை” (Jerome Emiliani) சந்தித்தார். அவருடன் இணைந்து “சோமாஸ்கன்ஸ்” (Somascans) என்று சுருக்கமாக அழைக்கப்படும் (Congregation of Clerks Regular) எனும் சபையை உருவாக்குவதில் உதவி புரிந்தார்.

கி.பி. 1533ம் ஆண்டு, “நேப்பிள்ஸ்” (Naples) நகரில் ஒரு இல்லம் அமைத்தார். கி.பி. 1540ம் ஆண்டு “வெனிஸ்” (Venice) நகரிலும், அதன்பின்னர் “வெரோனா” (Verona) நகருக்கும் தமது பணிகளை விரிவுபடுத்தினார். ஏழை மக்களுக்கு உதவுவதற்காக வங்கி ஒன்றினை நிறுவினார். அதுவே பின்னாளில் “நேப்பிள்ஸ் வங்கி” (Bank of Naples) என்றழைக்கப்படுகிறது.

கஜெட்டன், கி.பி. 1547ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 7ம் நாளன்று, “நேப்பிள்ஸ்” (Naples) நகரில் மரணமடைந்தார்.
Saint of the Day : (07-08-2020)

St. Cajetan

St. Cajetan was born on October 1, 1480 and his baptismal name was Gaetano dei Contidi Tiene. He studied law in Padua and got a degree on civil and cannon law at age 24 years. He was working as a diplomat in the Venetian Republic for Pope Julius-II. He was ordained as a priest during the year 1516. He founded a congregation named “The Oratory of Divine Love”. The Bishop of Chieti diocese, Giovanni Pietro Carafa was the first superior of this Oratory, who later became Pope Pius-IV. The members of the Oratory are also called as “theatines” in the name of the city of Chieti, which is called as “Theate” in Latin. In the year 1533 he founded a house in Naples to fight against Lutheranism and to check its spreading. When he fell ill, he slept on a wooden board. When the doctors told him to take rest on a comfortable bed, he refused and said that his savior died on a cross and at least let him die on wood. He died on August 7, 1547.

He was beatified by Pope Urban-VIII on October 8, 1629 and also canonized on April 12, 1671. He is the patron saint of workers, job seekers and un-employed people.

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment