இன்றைய புனிதர் :
(05-09-2020)
புனித பெர்டின்
St. Bertin
நினைவுத் திருநாள் : செப்டம்பர் 5
பிறப்பு : 615, கோடான்ஸ் (Coutances), பிரான்சு
இறப்பு : 709
பெர்டின் தனது இளம் வயதிலேயே பிரான்சு நாட்டிலுள்ள லக்ஸ்யூல் (Lexeuil) என்ற பெயர் கொண்ட துறவற மடத்திற்குஸ் சென்றார். இச்சபை புனித கெலம்பானூஸ் என்பவர் தயாரித்த சட்டதிட்டங்களை சபையின் ஒழுங்காகக் கொண்டு செயல்பட்டது. பெர்ட்டின் கொலம்பானூசின் உறவினர். 638 ஆம் ஆண்டு மோரினி (Morini) என்றழைக்கப்ட்டவர், இச்சபையின் முதல் துறவியாவர். இச்சபை வளர்வதற்கு, பிரான்சிஸ் ஆயராக இருந்த புனித ஓமர் என்பவர் மிகப்பெரிய அளவில் எல்லாவிதங்களிலும் உதவியானார்.
ஆயர் ஓமர் (Omer) தனது மறைமாவட்டத்திற்கு சொந்தமான, பாழடைந்த ஒரு நிலத்தைக் கொடுத்தார். அந்நிலம் காடு போன்று காணப்பட்டது. விஷப்பூச்சிகளும், கடற்பாசிகளும் நிறைந்திருந்தது. அந்நிலத்தைப் பரிசாகப் பெற்ற அத்துறவற சபையினர் நிலத்தை தூய்மைப்படுத்தி, பல குடும்பங்களை வாழ செய்தனர்.
இச்சபையினர் ஊர் ஊராக சென்று நற்செய்திப் பணியை ஆற்றினர். ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்த இத்துறவிகள் சில ஆண்டுகள் கழித்து பெரிய துறவற இல்லம் ஒன்றை கட்டினர். இதற்காக பெர்ட்டின் தன்னையே வருத்தி, கடினமாக உழைத்தார். இவரின் உழைப்பால் குறுகிய காலத்தில் 150 துறவிகள் இச்சபைக்கு வந்து சேர்ந்தனர். இவர் கிராமங்களுக்கு சென்று பணியாற்றினார். சிறுவர்களை ஒன்று சேர்த்து கல்வி கற்பித்தார். பல குடும்பங்களில் கல்வியை அறிமுகப்படுத்தினார்.
பெர்ட்டின் ஏழை மக்களின் மத்தியில் சிறப்பான பணியை ஆற்றினார். இவர் வாழும் போதே மக்களால் ஒரு புனிதராக போற்றப்பட்டார். இவர் தன்னுடன் இருந்த மற்ற துறவிகளுக்கும், ஒரு தாயாக இருந்தார். இவர் மட்டுமே தனது சொந்த உழைப்பால், மேலும் இரண்டு துறவற இல்லங்களை கட்டினார். அனைத்து இல்லங்களிலும், குழந்தைகள் கற்க ஏற்பாடு செய்தார்.
ஏழை குடும்பங்களில், வளமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்த இவர், ஒருநாள் குடும்பங்களை சந்திக்க சென்றபோது உடல் நலம் குன்றிபோனது. அன்றிலிருந்து உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு இறந்தார்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (05-09-2020)
Saint Bertin the Great
Educated at the Abbey of Luxeuil, France known for its strict adherence to the Rule of Saint Columban, a Rule known for its austerity. Though he was not a novice, Bertin felt called to follow the Rule with the monks at the abbey; when grown, he took the cowl. In 639, Bertin and two other monks, Mommelinus and Ebertram, joined Saint Omer in evangelizing the people in Pas-de-Calais, a region renowned for idolatry and immorality. The evangelists had no great success, but they built a monastery in honor of Saint Mommolin. Bertin served as its first abbot, a calling that lasted the remaining 60 years of his life. He sent monks to found other monasteries in both France and England, and he travelled constantly to teach and evangelize. His monastery served as an example to the locals, and brought many to the faith; 22 of its monks have been canonized. During a life that spanned nearly a century, Bertin was known for holiness and severe self-imposed austerities. On his death, the monastery was re-dedicated to him.
Born :
early 7th century at Constance (in modern Germany)
Died :
c.709 of natural causes
---JDH---Jesus the Divine Healer---
No comments:
Post a Comment