புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

11 September 2020

கொரோமோடோ புனித கன்னி மரியா(செப்டம்பர் 11)

கொரோமோடோ புனித கன்னி மரியா

(செப்டம்பர் 11)
வெனிசுலா நாட்டில் உள்ள போர்த்துக்கியூசா மாகாணத்தில் உள்ளது குவானரே என்ற இடம். இங்கு 1591 ஆம் ஆண்டு ஒருசில மறைப்பணியாளர்கள் மறைப்பரப்பச் சென்றார்கள். இவர்களை பார்த்து விட்டு ஏற்கெனவே அங்கிருந்த கோஸ்பெஸ் கொரோமோடா இனத்தைச் சார்ந்தவர்கள் காடுகளுக்குத் தப்பியோடி, அங்கேயே வாழத் தொடங்கினார்கள்.

இதன்பிறகு 1651 ஆம் ஆண்டு புனித கன்னி மரியா கோஸ்பெஸ் கொரோமோடா  இனக்குழுத் தலைவருக்கு ஓர் ஆற்றில் தோன்றி, "நீயும் உன்னுடைய இனத்தாரும் அருகே இருக்கும் மறைப்பணியாளர்களிடம் சென்று திருமுழுக்குப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார். உடனே இனக்குழு தலைவர் தன்னுடைய மக்களை  மறைப்பணியாளர்களிடம்அழைத்துச் சென்று திருமுழுக்குப் பெறச் செய்தார்.

தன்னுடைய மக்களெல்லாம்  மறைப்பணியாளர்களிடம் திருமுழுக்குப் பெற்றபொழுது அவர் மட்டும், 'நான் திருமுழுக்குப் பெற்றால் எனது பதவி பறிபோய்விடுமே' என அஞ்சித் திருமுழுக்கு பெறாமலேயே இருந்தார். 

1652 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 8 ஆம் நாள் புனித கன்னி மரியா  கோஸ்பெஸ் இனக்குழுத்  தலைவருக்குத் மீண்டுமாக தோன்றி, திருமுழுக்குப் பெறுமாறு சொன்ன பொழுது, அவர் புனித கன்னி மரியாவைப் பிடிக்க முயன்றார். அப்பொழுது புனித கன்னி மரியா தன்னுடைய திருவுருவம் பதித்த ஓர் ஓவியத்தை அங்கு விட்டுவிட்டு, அங்கிருந்து மறைந்து போனார். அதுதான் கொரோமோடோ புனித கன்னி மரியாவின் திருவுருவம்.

இவ்வாறு திருமுழுக்கு பெறாமலேயே இருந்த கோஸ்பெஸ் இனக்குழுத் தலைவர், தன்னுடைய வாழ்வின் இறுதிக்கட்டத்தில் திருமுழுக்குப் பெற்று ஆண்டவர்மீதும் புனித கன்னி மரியாவின் மீதும் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்.

1942 ஆம் ஆண்டு வெனிசுலா நாட்டு ஆயர்கள் கொரோமோடா  புனித கன்னிமரியாவை வெனிசுலா நாட்டின் பாதுகாவலியாக அறிவித்தார்கள். 1944 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் நாள் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இதை உறுதி செய்தார். 1996 ஆம் ஆண்டு குவானரே என்ற இடத்தில் இருந்த கொரோமோடோ புனித கன்னி மரியாவின் திருத்தலம் தேசியத் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்டோ இதனைப் பெருங்கோயில் (Basilica) என்று அறிவித்தார்.

No comments:

Post a Comment