புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

01 September 2020

புனித பியாட்ரிக்ஸ் த சில்வா (1424-1490)(செப்டம்பர் 01)

புனித பியாட்ரிக்ஸ் த சில்வா (1424-1490)

(செப்டம்பர் 01)

இவர் போர்ச்சுக்கல் நாட்டைச் சார்ந்தவர். இவரது தந்தை வியன்னாவில் அரச அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார்.
இவர் தன் வாழ்வின் பெரும்பகுதியை ஈசபெல் அரசியினுடைய அரசவையில் ஆலோசகராகச் செலவழித்தார்.

இப்படி இருக்கையில் இவர் இறைவனின் சிறப்பான அழைப்பை உணர்ந்தார். ஆதலால், இவர் தான் வாழ்ந்து வந்த சொகுசான வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு, டொலேதோ என்ற இடத்தில் இடத்தில் இருந்த சிஸ்டர்சியன் சபையில் சேர்ந்து துறவியாக வாழத் தொடங்கினார்.

1984 ஆம் ஆண்டு இவருக்கு அறுபது வயது நடக்கும்போது, அழைப்புக்குள் ஓர் அழைப்பு வந்தது. அதனால் இவர் அமல உற்பவியான புனித கன்னி மரியா என்ற சபைத் தோற்றுவித்து, தான் இறக்குமட்டும் அச்சபையின் மூலம் மரியாவின் புகழை எங்கும் பரப்பி வந்தார்.

இவர் சிறைக் கைதிகளுக்குப் பாதுகாவலர்.

No comments:

Post a Comment