புனித மேரினுஸ் (275-366)
(செப்டம்பர் 03)
இவர் இத்தாலியில் உள்ள உர்பினோ என்ற இடத்தைச் சார்ந்தவர்.
கட்டடப் பணியாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், கடவுள்மீது மிகுந்த பற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தார். மேலும் இவர் கிறிஸ்துவைப் பற்றிப் பலருக்கும் அறிவித்து, அவர்களைக் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார்.
இந்நிலையில் உரோமையை ஆண்டு வந்த தியோகிளசியன் என்பவன் கிறிஸ்தவர்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார்.
இதனால் இவர் தான் இருந்த இடத்தைவிட்டு, வேறோர் இடத்திற்குத் தப்பியோடினார்.
சென்ற இடத்தில் இவர் திருத்தொண்டராகவும் அருள்பணியாளராகவும், அதன் பின்னர் ரிமினி நகர் ஆயராகவும் உயர்ந்தார்.
ஆயராக இருந்து நல்ல முறையில் இவர் பணிசெய்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு பெண்மணி அபாண்டமாக இவர்மீது பழிசுமத்தினார். இதனால் இவர் மொன்டே டைடானோ என்ற இடத்தில் இருந்த குகைக்கு வந்து, கடைசிக் காலம்வரை அங்குத் தனிமையில் நாள்களைச் செலவழித்தார்.
இவர் திருத்தொண்டர் மற்றும் அபாண்டமாகப் பழிசுமத்தப்பட்டோர் ஆகியோருக்குப் பாதுகாவலராக இருக்கிறார்.
www.Stjck.blogspot.com
No comments:
Post a Comment