புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

10 September 2020

புனித மெனோடோரா (-305)(செப்டம்பர் 10)

புனித மெனோடோரா (-305)

(செப்டம்பர் 10)
இவர் சின்ன ஆசியாவில் உள்ள பைதானியாவைச் சார்ந்தவர்; இவருக்கு மெட்ரோடோரா, நிம்போடோரா என்ற இளைய சகோதரரிகள் இருவர் இருந்தனர். 

இம்மூவரும் இறைவன்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தனர். இவர்கள் காட்டிற்குச் சென்று இறைவேண்டலிலும் நோன்பிலும் நிலைத்திருந்தார்கள். இச்செய்தி அப்பகுதியில் ஆளுநராக இருந்த ஃபிரண்டனுஸ் என்பவனுக்குத் தெரிய வர, அவன் மெனோடோரவிடம் வந்து, கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, உரோமைக் கடவுளை வழிபடச் சொன்னான். அதற்கு இவர் மறுப்புத் தெரிவித்தார்.

இதனால் அவன் இவரை மன்னர் முன்பாக இழுத்துச் சென்று நிறுத்தினான். மன்னரும் இவரைக் கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, உரோமைக் கடவுளை வழிபடச் சொன்னபோதும், இவர் தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். எனவே மன்னன் இவரை எரித்துக் கொன்றான்.

இதன் பிறகு மூன்று நாள்கள் கழித்து, இவரது சகோதரிகளான மெட்ரோடோராவும் நிம்போடோராவும் கிறிஸ்துவை மறுதலிக்கக் கேட்டுக் கொள்ளப் பட்டார்கள். அவர்களும் தங்கள் கொள்கையில் மிக உறுதியாக இருந்ததால், அவர்களும் தீயிலிட்டுக் கொல்லப்பட்டார்கள்.  

No comments:

Post a Comment