புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

20 September 2020

✠ புனிதர் ஆண்ட்ரூ கிம் டேகொன் ✠(St. Andrew Kim Taegon)செப்டம்பர் 20

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 20)

✠ புனிதர் ஆண்ட்ரூ கிம் டேகொன் ✠
(St. Andrew Kim Taegon)

கொரியா நாட்டின் பாதுகாவல் புனிதர்:
(Patron Saint of Korea)
பிறப்பு: ஆகஸ்ட் 21, 1821
சொல்மோ, டான்க்ஜின், கொரியா
(Solmoe, Dangjin, Korea)

இறப்பு: செப்டம்பர் 16, 1846 (வயது 25)
ஹேன் நதி, ஹேன்சியோங், ஜோசியோன்
(தற்போது சியோல், தென் கொரியா)
(Han River, Hanseong, Joseon)
(Now Seoul, South Korea)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)

அருளாளர் பட்டம்: கி.பி. 1925

புனிதர் பட்டம்: மே 6, 1984
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலம்:
ச்சோல்டுசான் (மறைசாட்சியின் மலை),
சியோல், தென் கொரியா
(Chŏltusan (Martyr's Mount), Seoul, South Korea)

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 20

பாதுகாவல்: கொரிய மத குருமார்கள் (Korean Clergy)

புனிதர் ஆண்ட்ரூ கிம் டேகொன், கொரிய நாட்டில் பிறந்த முதல் கத்தோலிக்க குருவும், கொரிய நாட்டின் பாதுகாவலரும் ஆவார்.

கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் கொரியாவில் கத்தோலிக்கம் மெதுவாக வேர் விட ஆரம்பித்திருந்தது.

புனிதர் ஆண்ட்ரூ கிம், “யங்க்பன்” (Yangban) என்பவருக்கு பிறந்தவர் ஆவார். இவரது பெற்றோர் கிறிஸ்தவர்களாக மனம் மாறியவர்கள். அக்காலத்தில், கிறிஸ்தவம் சம்பந்தமாக பேசுவதுகூட தடை செய்யப்பட்டிருந்தது. கிறிஸ்தவ நடவடிக்கைகள் காரணமாக புனிதரின் தந்தை துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக மரித்தார். 

பதினைந்து வயதில் திருமுழுக்கு பெற்ற கிம், போர்ச்சுகீசிய காலனியிலுள்ள (Portuguese colony) பள்ளியில் கல்வி கற்றார். அவர் புனிதராக பட்டமளிக்கப்பட்ட 'லோலோம்போய்', 'பொகவு', 'புலாக்கன்', 'பிலிப்பைன்ஸ்' (Lolomboy, Bocaue, Bulacan, Philippines) ஆகிய இடங்களிலும் கல்வி கற்றார்.

சுமார் ஒன்பது வருடங்களின் பின்னர், கி.பி. 1844ம் ஆண்டு, அவர் “ஷங்காய்” (Shanghai) நகரில் ஒரு ஃபிரென்ச் ஆயர் (French bishop) “ஜீன்-ஜோசப்” (Jean-Joseph-Jean-Baptiste Ferréol) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். பின்னர், அவர் மத போதனை செய்வதற்காகவும் நற்செய்தி அறிவிக்கவும் கொரியா திரும்பினார்.

'ஜோசியன்' (Joseon Dynasty) வம்ச காலத்தில் கிறிஸ்தவம் நசுக்கப்பட்டது. எண்ணற்ற கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு மற்றும் மரண தண்டனை அளிக்கப்பட்டனர். கத்தோலிக்கர்கள் தமது விசுவாசத்தை இரகசியமாக கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. 

இந்நேரத்தில் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட பல்லாயிரம் கிறிஸ்தவர்களில் புனிதர் ஆண்ட்ரூ கிம்மும் ஒருவர். கி.பி. 1846ல், தமது 25ஆம் வயதில் ஆண்ட்ரூ கிம் 'சியோல்' (Seoul) நகரருகேயுள்ள “ஹான் நதியில்” (Han River) கோரமாக துன்புறுத்தப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

*SAINT OF THE DAY* 

Feastday: September 20

*Martyrs of Korea*
The men and women who were slain because they refused to deny Christ in the nation of Korea. The faith was brought to Korea in a unique fashion. The intellectuals of that land, eager to learn about the world, discovered some Christian books procured through Korea's embassy to the Chinese capital. One Korean, Ni-seung-houn, went to Beijing in 1784 to study Catholicism and was baptized Peter Ri. Returning to Korea, he converted many others. In 1791, when these Christians were suddenly viewed as foreign traitors, two of Peter Ri's converts were martyred, men named Paul Youn and Jacques Kuen. The faith endured, however, and when Father James Tsiou, a Chinese, entered Korea three years later, he was greeted by four thousand Catholics. Father Tsiou worked in Korea until 1801 when he was slain by authorities. Three decades later the Prefecture Apostolic of Korea was established by Pope Leo XII, after he received a letter smuggled out of Korea by faithful Catholics. In 1836, Monsignor Lawrence Imbert managed to enter Korea. Others arrived, and they worked until 1839, when a full persecution started, bringing about the martyrdom of the European priests. Young Korean candidates for the priesthood were sent to Macau for ordination. The first native priest, Andrew Kim Taegon, returned to Korea in 1845 and was martyred the following year. Severe persecution followed, and Catholics fled to the mountains, still spreading the faith. In 1864, a new persecution claimed the lives of two bishops, six French missionaries, another Korean priest, and eight thousand Korean Catholics. The Korean martyrs of 1839, 1846, and 1867 were canonized in Korea in 1984 by Pope John Paul II.

No comments:

Post a Comment