† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 18)
✠ புனிதர் ஜோசப் கப்பர்ச்சினோ ✠
(St. Joseph of Cupertino)
குரு, ஒப்புரவாளர், திருக்காட்சியாளர்:
(Priest, Confessor, Mystic)
பிறப்பு: ஜூன் 17, 1603
கப்பர்ச்சினோ, அபுலியா, நேப்பிள்ஸ் அரசு
(Copertino, Apulia, Kingdom of Naples)
இறப்பு: செப்டம்பர் 18, 1663 (வயது 60)
ஓசிமோ, மார்ச்சே
(Osimo, Marche)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: ஃபெப்ரவரி 24, 1753
திருத்தந்தை 14ம் பெனடிக்ட்
(Pope Benedict XIV)
புனிதர்பட்டம்: ஜூலை 16, 1767
திருத்தந்தை 13ம் கிளமெண்ட்
(Pope Clement XIII)
பாதுகாவல்:
ஒசிமா நகர், (The City of Osimo), விமான போக்குவரத்து, விண்வெளி வீரர்கள், மாணவர்கள், மன நலமற்றவர்கள், தேர்வுகள்
நினைவுத் திருநாள்: செப்டம்பர் 18
“கியுசெப் மரிய டேசா” (Giuseppe Maria Desa) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் ஜோசப் கப்பர்ச்சினோ, ஒரு இத்தாலிய ஃபிரான்சிஸ்கன் சபை துறவியாவார்.
இவரது பெற்றோர் “ஃபெலிஸ் டேசா” மற்றும் “ஃபிரான்செஸ்கா பானரா” (Felice Desa and Francesca Panara) ஆவர். இவர் பிறப்பதற்கு முன்பே இவரின் தந்தை இறந்துவிட்டார். தந்தை ஏற்படுத்திய கடனை இவரின் தாயால் அடைக்கமுடியவில்லை. இதனால் தாயிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் கடன்காரர்கள் அபகரித்து சென்றார்கள். இதனால் இவரின் தாய், மகன் ஜோசப்பை கஷ்டப்பட்டு வளர்த்தார். இவருடைய தாயார் இவரை இளம் வயதிலிருந்தே பக்தி மார்க்கத்தில் வளர்த்தார். இறைபக்தியில் வளர்ந்த ஜோசப், சிறுவயதிலிருந்தே இறைதரிசனங்களை பெற்றார்.
ஜோசப் பல நல்ல குணங்களை பெற்று வளர்ந்தார். இருப்பினும் கோபம் என்னும் குணமும் இவரோடு வளர்ந்தது. இதனால் துன்பங்களுக்கும் ஆளானார். இவரும் இவரின் தாயும் துன்பப்படுவதை அறிந்த இவரின் மாமா ஜோசப்பை தன்னுடன் அழைத்து சென்றார். இவர் செய்த காலணிகள் செய்யும் தொழிலை ஜோசப்பிற்கும் கற்றுக்கொடுத்தார். அத்தொழிலை செய்தபோதும், ஜோசப்பின் மனம் ஆன்மிக வாழ்வில் நாட்டம் கொண்டிருந்தது.
இதனால் கி.பி. 1620ம் ஆண்டு ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்வதற்காக விண்ணப்பித்தார். கல்வித் தகுதிகள் இல்லாத காரணத்தால் அவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டது.
பிறகு, “டராண்டோ” (Taranto) நகருக்கு அருகிலுள்ள “மார்ட்டினோ” (Martino) எனுமிடத்திலுள்ள “கப்புச்சின்” (Capuchin friars) துறவற மடம் சென்று விண்ணப்பித்தார். அவர்கள் அவரை குருத்துவம் பெறாத அருட்சகோதரராக (Lay brother) சேர்த்துக்கொண்டனர். ஆனால், தொடர்ந்து அவர் கண்ட திருக்காட்சிகளால் அவரை மடத்திலிருந்து வெளியே அனுப்பினார்கள்.
தமது குடும்பத்தினரால் பரிகாசம் செய்யப்பட்ட ஜோசப், கப்புர்ச்சினோ நகருக்கு அருகேயுள்ள துறவியர் இல்லத்திற்கு சென்று, தம்மை அங்கே பணியாற்ற சேர்த்துக்கொள்ளுமாறு கெஞ்சி, மன்றாடி சேர்ந்துகொண்டார். சுமார் ஐந்து வருடங்கள் அயராது பணியாற்றிய ஜோசப்பின் கடின உழைப்பைக் கண்ட துறவியர், 1625ம் ஆண்டு, அவரை துறவற சபையில் இணைத்துக்கொண்டனர். அங்கே, மூன்று வருட கடின பயிற்சியின் பின்னர், கி.பி. 1628ம் ஆண்டு, மார்ச் மாதம் 28ம் தேதி குருத்துவ அருட்பொழிவு பெற்றார். குருத்துவம் பெற்ற ஜோசப், அங்கிருந்து “மடோன்னா டெல்லா க்ராஸியா” (Shrine of the Madonna della Grazia) திருத்தலத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கே, அவர் சுமார் பதினைந்து வருடம் பணியாற்றினார்.
இதன்பின்னர், இவர் கண்ட திருக்காட்சிகள் பன்மடங்காயின. திருக்காட்சிகளின் பின்னர் அவர் பறப்பது போன்ற அல்லது மிதப்பது போன்ற ஒருவித பரவச நிலைக்கு போனார். இதனால் அவரது தூய்மைத்தன்மையின் புகழ் பரவத் தொடங்கியது. இதனால் எரிச்சலைடைந்த அவரது ஆன்மீக தலைவர்களும் திருச்சபையின் முன்னோடிகளும் அவரை ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்தனர். பொது மக்கள் கூடும் இடங்களுக்கும் பொதுக்கூட்டங்களுக்கும் போக அனுமதி மறுக்கப்பட்டார்.
அவரது இத்தகைய பறப்பது போன்ற அல்லது மிதப்பது போன்ற நிகழ்வுகள் மாந்திரீகங்களுடன் தொடர்புடையன என்று பரவலாக நம்பப்பட்டது. இதன் காரணமாக, ஜோசப் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவர்களின் உத்தரவின்படி, அவரை கண்காணிப்பதற்காக, அவர் ஒரு ஃபிரான்சிஸ்கன் துறவு மடத்திலிருந்து மற்றொரு மடத்திற்கு அனுப்பப்பட்டார். முதலில், 1639–53 ஆண்டு காலத்தில் “அசிசி” (Assisi) நகருக்கு அனுப்பப்பட்டார். பின்னர் சிறிது காலம் “பியெட்ரருபியா” (Pietrarubbia) எனுமிடத்திற்கும், அதன்பின்னர் இறுதியில் கி.பி. 1653–57 ஆண்டு காலத்தில், “ஃபொஸ்சொம்ப்ரோன்” (Fossombrone) எனுமிடத்திற்கும் அனுப்பப்பட்டார். இங்கேயெல்லாம் இவர் கப்புச்சின் துறவியரின் மேற்பார்வையில் வைக்கப்பட்டார். அவர் தனது வாழ்நாள் முழுவதிலும் கடுமையான கட்டுப்பாடுகளை அனுபவித்தார். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே திட உணவு வகைகளை உண்டார். தமது உணவில் கசப்புப் பொருட்களை சேர்த்துக்கொண்டார். தமது வாழ்வின் முப்பத்தைந்து வருடகாலம் இவ்வாறே கழித்தார்.
இறுதியில், கி.பி. 1657ம் ஆண்டு, ஜூலை மாதம், 9ம் நாள், “ஓசிமோ” (Osimo) நகரிலுள்ள கத்தோலிக்க பள்ளிகளின் சமூகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டார். அங்கேயே அவர் மரித்தார்.
*SAINT OF THE DAY*
Feast Day: September 18:
*St.Joseph of Cupertino*
(1603-1663)
St.Joseph was born on June 17, 1603, in a small Italian village to poor parents. He was very unhappy as a boy and a teenager. His mother considered him a nuisance and treated him harshly.
Joseph soon became very slow and absent-minded. He would wander around as if he were going nowhere. But he had a temper, too, and so he was not very popular. He tried to learn the trade of shoe-making, but failed. He asked to become a Franciscan, but they would not accept him. Next, he joined the Capuchin order, but eight months later he was advised to leave. He could not seem to do anything right. He dropped piles of dishes and kept forgetting to do what he was told. His mother was not at all pleased to have the eighteen-year-old Joseph back home again. She finally got him accepted as a helper at the Franciscan monastery. He was given the Franciscan habit to wear and was assigned to care for the horses.
About this time, Joseph began to change. He grew more humble and gentle. He became more careful and successful at his work. He also began to do more penance. It was decided that he could become a member of the order and could start studying to become a priest. Although he was very good, he still had a hard time with studies. But Joseph trusted in God's help and he was ordained a priest. God began to work miracles through Father Joseph. Over seventy times people saw him rise from the ground while saying Mass or praying. He would be suspended near the ceiling like a star at the top of a Christmas tree. Often he went into ecstasy and would be completely wrapped up in talking with God. He became very holy. Everything he saw made him think of God.
Father Joseph became so famous for his miracles that he was kept hidden. This made him happy for the chance to be alone with his beloved Lord. Jesus never left him alone and one day came to bring him to heaven. Joseph died in 1663 at the age of sixty. He was proclaimed a saint in 1767 by Pope Clement XIII.
Reflection: The life of this saint can help us to understand that holiness and closeness to God aren't dependent on our natural talents or abilities or the judgments of others, but are, instead, a free gift from God.
No comments:
Post a Comment