† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 21)
✠ புனிதர் லாரண்ட்-ஜோசெப்-மரியஸ் இம்பெர்ட் ✠
(St. Laurent-Joseph-Marius Imbert)
ஃபிரெஞ்ச் மறைப்பணியாளர், ஆயர், மறைசாட்சி :
(French Missionary, Bishop and Martyr)
பிறப்பு : மார்ச் 23, 1796
மரிக்னேன், பௌச்செஸ்-டு-ரோன், ஃபிரான்ஸ்
(Marignane, Bouches-du-Rhône, France)
இறப்பு : செப்டம்பர் 21, 1839 (வயது 43)
சேனம்டியோ, ஜோசியோன் அரசு
(Saenamteo, Kingdom of Joseon)
ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம் : ஜூலை 5, 1925
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)
புனிதர் பட்டம் : மே 6, 1984
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)
முக்கிய திருத்தலம் :
சேனம்டியோ மெமோரியல் ஆலயம், சியோல், தென் கொரியா
(Saenamteo Memorial Church, Seoul, South Korea)
நினைவுத் திருவிழா : செப்டம்பர் 21
புனிதர் லாரண்ட்-ஜோசெப்-மரியஸ் இம்பெர்ட், சில சமயங்களில் “லாரண்ட்-மேரி-ஜோசப் இம்பெர்ட்” (Laurent-Marie-Joseph Imbert) என்றும் அழைக்கப்பட்டார். இவர், கொரிய நாட்டு மக்களால் “ஆயர் இம்பெர்ட் பம்” (Bishop Imbert Bum) என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இவர், ஆசியா கண்டத்தில் பணியாற்றிய ஃபிரெஞ்ச் மிஷனரி ஆயர் ஆவார். கொரியர்களிடையே மிகவும் பிரசித்திபெற்ற இவர், முதல் ஆயர் பார்தெலேமி புரூகியியேர் (Barthélemy Bruguière) மன்ச்சூரியாவில் (Manchuria) இறந்தபோது, திருத்தந்தை பதினாறாம் கிரகோரியால் (Pope Gregory XVI) கி.பி. 1836ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஆயராக நியமிக்கப்பட்டார்.
இறுதியில், ஜோசியோன் அரசில், தமது கத்தோலிக்க விசுவாசத்திற்காக மறைசாட்சியாக படுகொலை செய்யப்பட்டார். கி.பி. 19ம் நூற்றாண்டு கொரியாவில், தமது கத்தோலிக்க விசுவாசத்திற்காக, 8,000 முதல் 10,000 பேர் மறைசாட்சியாக கொல்லப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயர் இம்பெர்ட் உள்ளிட்ட 103 பேர், 1984ம் ஆண்டு, கத்தோலிக்க திருச்சபையால் புனிதர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர்.
“ஹாம்லெட்” (Hamlet of Callas) எனும் இடத்தின் குடிகளாகிய பெற்றோருக்கு, மரிக்னான் எனுமிடத்தில் பிறந்த இம்பெர்ட், தென்ஃபிரான்சிலுள்ள (South of France) “எய்க்ஸ்” (Aix) நகருக்கு கல்வி கற்க அனுப்பப்பட்டார். அறிக்கைகளின்படி, அவர் செபமாலைகள் தயாரித்து விற்பனை செய்து தமது செலவுக்கு பணம் சம்பாதித்தார். பின்னர் அவர் கி.பி. 1818ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 8ம் தேதி, “பாரிஸ் வெளிநாட்டு மறைப்பணி சமூக” (Paris Foreign Missions Society) அமைப்பின் செமினரியில் சேர்ந்தார்.
கி.பி. 1819ம் ஆண்டு, மார்ச் மாதம், 5ம் தேதி, பாரிஸ் உயர்மறைமாவட்டத்தில் (Archdiocese of Paris) இணைந்த இவர், அதே ஆண்டு, டிசம்பர் மாதம், 18ம் நாளன்று, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். சட்டபூர்வ வயதை எட்டாத காரணத்தால், உயர்மறைமாவட்ட ஆட்சியிடமிருந்து “இண்டல்ட்” (Indult) எனும் விதிவிலக்கு பெற்றார். பின்னர் அவர் 1820ம் ஆண்டு, மார்ச் மாதம், 20ம் தேதி, ஃபிரான்ஸில் இருந்து, மிஷனரி சேவைக்காக கடல் மார்க்கமாக புறப்பட்டுச் சென்றார்.
இம்பெர்ட் முதலாவதாக நிறுத்தம் மலாயாவிலுள்ள (Malaya) பினாங்கில் (Penang) தங்கினார். அங்கு ஜெனரல் கல்லூரியில் (College General) (மேஜர் செமினரி) நோயுற்ற ஒரு ஆசிரியரை மாற்றுமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். கி.பி. 1821ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல், 1822ம் ஆண்டு, ஜனவரி மாதம் வரை அவர் அங்கு போதித்தார்.
கி.பி. 1821ம் ஆண்டு, மிஷனரி பணிகளுக்காக இம்பெர்ட் சிங்கப்பூர் (Singapore) தீவுக்கு அழைக்கப்பட்டார். கி.பி. 1821ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 11ம் தேதி அவர் சிங்கப்பூர் சென்றடைந்தார். அந்த தீவில் திருப்பலி நிறைவேற்றிய முதல் குரு இவராக இருந்திருக்கலாம். அவர் அங்கே ஒரு வாரம் தங்கினார்.
கி.பி. 1822ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், “சீன மக்கள் குடியரசின் ‘மக்காவு’ சிறப்பு நிர்வாக பிராந்தியம்” (Macau Special Administrative Region of the People's Republic of China) நோக்கிய தமது கடல் பயணத்தை தொடங்கினார். ஆனால், நேரடியாக அங்கே செல்ல இயலாத அவர், வடக்கு வியட்நாமிலுள்ள (Northern Vietnam) சிவப்பு ஆறு டெல்டா பிராந்தியத்திலுள்ள (Red River Delta Region) “டோன்கின்” (Tonkin) எனும் நகரில் இரண்டு வருடங்கள் தங்கினார். அப்போதுதான் அவரால் சீனாவிற்குள் நுழைய முடிந்தது. அங்கே சிச்சுவான் (Sichuan) நகரில் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்த அவர், மோபின் (Moupin) நகரில் ஒரு செமினரி பள்ளியை நிறுவி அமைத்தார்.
கி.பி. 1836ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 26ம் நாளன்று, இம்பெர்ட் கொரியாவின் விகார் அப்போஸ்தலிக்காகவும் (Vicar Apostolic of Korea), கப்சா (Capsa) நகரின் பட்டம் மட்டும் கொண்டுள்ள ஆயராகவும் (Titular Bishop) நியமிக்கப்பட்டார். கி.பி. 1837ம் ஆண்டு, மே மாதம், 14ம் தேதி, பதவிப் பிரமாணம் செய்விக்கப்பட்டார். பின்னர் அவர் அதே ஆண்டு மஞ்சுரியாவிலிருந்து (Manchuria) கொரியாவிற்கு (Korea) ரகசியமாக கடந்து சென்றார். இந்த சமயத்தில், கொரியா கிறிஸ்தவ துன்புறுத்தலின் காலகட்டத்தில் இருந்தது.
கி.பி. 1839ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 10ம் தேதியன்று, மிஷனரி பணியை ரகசியமாக நடத்திய இம்பெர்ட், காட்டிக் கொடுக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கு முன்பே அது ஒரு விஷயமே என்பதை உணர்ந்த அவர், திருப்பலி கொண்டாட்டத்தை நிறைவேற்றி, அவருக்காக காத்திருந்தவர்களிடம் சரணடைந்தார். கைது செய்தும் சியோல் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், வெளிநாட்டு மிஷனரிகளின் இடங்களை வெளிப்படுத்தும்படி கேட்டு சித்திரவதை செய்யப்பட்டார். மறைந்திருந்த அனைத்து வெளிநாட்டு மிஷனரிகளும் வெளிவந்தால், தம்மால் மனம்திருப்பப்பட்ட கிறிஸ்தவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று நம்பிய இம்பெர்ட், தமது சக மிஷனரிகளுக்கு கடிதம் எழுதினர்.
அதன்படி செய்த அவர்களில் மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு விசாரணை அதிகாரியின் முன் எடுத்துச் செல்லப்பட்ட அவர்கள், அவர்களால் மனம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடத்தை வெளிப்படுத்துமாறு மூன்று நாட்கள் துன்புறுத்தப்பட்டனர். சித்திரவதை அவர்களை உடைக்கத் தவறியதால், அவர்கள் மற்றொரு சிறைக்கு அனுப்பப்பட்டனர். கி.பி. 1839ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 21ம் தேதி, கொரியாவின் செனமோட்டோ நகரில் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பல நாட்களாக கேட்பாரற்று கிடந்தன. இறுதியாக நோகு மலை (Nogu Mountain) மீது புதைக்கப்பட்டன.
† Saint of the Day †
(September 21)
✠ St. Laurent-Joseph-Marius Imbert ✠
French Missionary, Bishop and Martyr:
Born: March 23, 1796
Marignane, Bouches-du-Rhône, France
Died: September 21, 1839 (Aged 43)
Saenamteo, Kingdom of Joseon
Venerated in: Roman Catholic Church
Beatified: July 5, 1925
Pope Pius XI
Canonized: May 6, 1984
Pope John Paul II
Major Shrine:
Saenamteo Memorial Church, Seoul, South Korea
Feast: September 21
Saint Laurent-Joseph-Marius Imbert, sometimes called Laurent-Marie-Joseph Imbert and affectionately known in Korea as Bishop Imbert Bum was a French missionary bishop in Asia. Most notable among the Koreans, he was appointed by Pope Gregory XVI in August 1836 when first Bishop Barthélemy Bruguière died in Manchuria.
Eventually, he was executed in the Kingdom of Joseon for his Catholic faith; it is estimated that 8,000 to 10,000 were killed for their faith in 19th-century Korea—the Korean martyrs. 103 of them, including Imbert, were canonized by the Catholic Church as saints in 1984. His feast day is 21 September, and he is also venerated with the rest of the 103 Korean martyrs.
Imbert was born at Marignane, to parents who were residents of the hamlet of Callas, in the commune of Cabriès in the Department of Bouches-du-Rhône. When of age, he was sent to Aix to pursue his studies. According to reports, he paid his expenses by making and selling rosaries. He then enrolled at the seminary of the Paris Foreign Missions Society on 8 October 1818.
On 5 March 1819 Imbert was incardinated in the Archdiocese of Paris, and ordained on 18 December of that same year, having received an indult from the Holy See due to his not having reached the legal age. He then set sail from France on 20 March 1820, bound for missionary service in China.
Imbert's first stop was in Penang, Malaya, where he was asked to replace a teacher at the College General (Major Seminary), who had taken ill. He taught there from April 1821 to January 1822.
During 1821, Esprit-Marie-Joseph Florens, the Vicar Apostolic of Siam, requested for him to call at Singapore. The bishop had been contemplating opening a missionary station in Singapore. He was not very certain, though, whether there was any urgency nor was he aware of the circumstances prevailing in the island. Therefore, the young missionary was to go check on the situation. He reached Singapore on 11 December 1821 and spent about a week there. Imbert might have been the first priest to celebrate Mass on the island.
In February 1822 Imbert sailed for Macau, but unable to go directly there, he spent the next two years in Tonkin, French Indochina. Only then was he able to enter China, where he spent twelve years in Sichuan and founded a seminary in Moupin.
On 26 April 1836, Imbert was appointed Vicar Apostolic of Korea and Titular Bishop of Capsa. He was consecrated on 14 May 1837 by Giacomo Luigi Fontana M.E.P., the Vicar Apostolic of Huguang. He then crossed secretly from Manchuria to Korea that same year. During this time, Korea was going through a period of Christian persecution.
On 10 August 1839, Imbert, who was secretly going about his missionary work, was betrayed. Realizing that it was only a matter of time before he was arrested and killed, he celebrated Mass and surrendered himself to those who lay in waiting for him. He was taken to Seoul where he was tortured to reveal the whereabouts of foreign missionaries. Believing that his converts would be spared if all foreign missionaries came out from hiding and gave themselves up, he wrote a note to his fellow missionaries, Pierre-Philibert Maubant and Jacques-Honoré Chastan, asking them to surrender to the Korean authorities as well.
They did and the three of them were imprisoned together. They were taken before an interrogator and questioned for three days to reveal the names and whereabouts of their converts. As torture failed to break them down, they were sent to another prison and beheaded on 21 September 1839 at Saenamteo, Korea. Their bodies remained exposed for several days but were finally buried on Nogu Mountain.
The three were among the 79 Korean Martyrs beatified in 1925, and among the 103 Korean Martyrs canonized by Pope John Paul II in Seoul on 6 May 1984.
No comments:
Post a Comment