புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

04 September 2020

புனித ரோசலீனா St.Rosalinaநினைவுத்திருநாள் : செப்டம்பர் 4

புனித ரோசலீனா 
St.Rosalina
நினைவுத்திருநாள் : செப்டம்பர் 4

பிறப்பு : 1130, பலேர்மோ (Palermo),இத்தாலி
இறப்பு : 1166, மவுண்ட் பெலேக்ரினோ Pellegrino, இத்தாலி

புனிதர்பட்டம்: 1625 திருத்தந்தை 8 ஆம் ஊர்பான் Pope Urban VIII

பாதுகாவல்: பலேர்மோ நகரின் பாதுகாவலர்

ரோசலீனா சீனிபால்டு(Sinibald) என்பவரின் மகள். இவரின் இதயம் இளம் வயதிலிருந்தே இறைவனை மட்டுமே நாடியது. விவிலிய வார்த்தைகளால் தன் இதயத்தை நிரப்பினார். இறைவன் மட்டுமே தன் வாழ்வின் மையமாக இருக்கவேண்டுமென்று எண்ணினார். இறை இயேசுவின் பாதையில் தன் வாழ்வை அமைத்தார். தன் வீட்டைவிட்டு வெளியேறி, ஒரு குகைக்கு சென்று வாழ்ந்தார். உலக வாழ்விலிருந்து தன்னை மறைத்து வாழ்ந்தார். இதயம் என்னும் அவரின் வீட்டில் கடவுளுக்கு மட்டுமே இடம் கொடுத்து வாழ்ந்தார். பின்னர் அவர் வாழ்ந்த குகையைவிட்டு வெளியேறி பெலேக்ரினோ என்ற மலைக்கு சென்றார். 

அம்மலையில் சிறிய இல்லம் அமைத்து தனது வாழ்வை இறைவனோடு வாழ்ந்தார். அங்கு ஒரு கெபி கட்டினார். அதன் அருகில் குழி ஒன்றை வெட்டி, தான் இறந்ததும் அதில் புதைக்கும்படி இறைவனிடம் வேண்டினார். இவர் செபித்தவாறே இவரின் இறந்த உடல் அக்குழியில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. 

இவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து 1625 ஆம் ஆண்டு உடல் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாண்டே இவர் புனிதர் பட்டமும் பெற்றார்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 4)
✠ பலேர்மோ நகர் புனிதர் ரோசலியா ✠
(St. Rosalia of Palermo)

கன்னியர்:
(Virgin)

பிறப்பு: கி.பி. 1130
பலேர்மோ, சிசிலி அரசு
(Palermo, Kingdom of Sicily)

இறப்பு: கி.பி. 1166
மவுண்ட் பெலேக்ரினோ, சிசிலி அரசு
(Mount Pellegrino, Kingdom of Sicily)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர்பட்டம்: ஜூலை 15, 1625 
திருத்தந்தை 8ம் அர்பன் 
(Pope Urban VIII)

பாதுகாவல்: 
பலேர்மோ, மான்ட்டேரி, கலிஃபோர்னியா (Monterey, California) ஆகிய இடங்களைச் சேர்ந்த இத்தாலிய மீனவர்கள்

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 4

இத்தாலியின் பலெர்மோ நகரைச் சேர்ந்த புனிதர் ரோசலியா, ஒரு கத்தோலிக்க புனிதர் ஆவார்.

“சார்லமக்னேயின்” (Charlemagne) வம்சாவளியைச் சேர்ந்த ஒரு உன்னத நார்மன் (Norman) குடும்பத்தில் ரோசலியா பிறந்தார்.

“சினிபால்ட் (Sinibald) என்பவரின் மகளான இவரின் இதயம் இளம் வயதிலிருந்தே இறைவனை மட்டுமே நாடியது. விவிலிய வார்த்தைகளால் தன் இதயத்தை நிரப்பினார். இறைவன் மட்டுமே தன் வாழ்வின் மையமாக இருக்க வேண்டுமென்று எண்ணினார். இறை இயேசுவின் பாதையில் தன் வாழ்வை அமைத்தார். 

தன் வீட்டைவிட்டு வெளியேறி, “பெல்லேக்ரினோ” (Mount Pellegrino) மலையிலுள்ள ஒரு குகைக்கு சென்று தனிமையில் வாழ்ந்தார். பாரம்பரியப்படி, அவரை இரண்டு சம்மனசுக்கள் வழிநடத்தி குகைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. உலக வாழ்விலிருந்து தன்னை மறைத்து வாழ்ந்த இவர், இதயம் என்னும் அவரின் வீட்டில் கடவுளுக்கு மட்டுமே இடம் கொடுத்து வாழ்ந்தார்.

அவர் வசித்த குகையின் சுவர்களில், “சினிபால்டின் மகளான ரோசலியா எனும் நான், என் ஆண்டவரான இயேசு கிறிஸ்துவின் அன்புக்காக வாழ்வதென்று தீர்மானித்துள்ளேன்” என்று எழுதப்பட்டிருந்தது.

ரோசலியா, அந்த குகையிலேயே தனிமையிலே கி.பி. 1166ம் ஆண்டு மரித்தார்.

கி.பி. 1624ம் ஆண்டு, பலெர்மோ நகரில் பிளேக் நோய் பரவியது. இத்துன்ப காலத்தில், ஒரு நோயாளிப்பெண்ணுக்கும், ஒரு வேட்டைக்காரனுக்கும் காட்சியளித்த புனிதர் ரோசலியா, தமது எலும்புகள் கிடக்கும் இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார். தமது எலும்புகளை நகருக்குள் ஊர்வலமாகக் கொண்டுவர கூறினார். மலையேறிச் சென்ற வேட்டைக்காரன், அவர் கூறியது போலவே அங்கே எலும்புகள் கிடக்கக் கண்டான். அவர் கூறியதுபோலவே மும்முறை அவரது எலும்புகளை ஊருக்குள் ஊர்வலமாக கொண்டு சென்றதும் பிளேக் நோய் முற்றிலுமாக நீங்கியது. இச்சம்பவத்தின் பிறகு, புனிதர் ரோசலியா பலெர்மோ நகரின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார். இவரது எலும்புகள் காணப்பட்ட குகையில் இவரது நினைவுச் சரணாலயம் அமைக்கப்பட்டது.
† Saint of the Day †
(September 4)

✠ St. Rosalia of Palermo ✠

Virgin:

Born: 1130 AD
Palermo, Kingdom of Sicily

Died: 1166 AD (Aged 35–36)
Mount Pellegrino, Kingdom of Sicily

Venerated in: Roman Catholic Church

Feast: September 4

Patronage:
Palermo; El Hatillo; Zuata Anzoátegui; Italian Fishermen of Monterey, California

Saint Rosalia, also called La Santuzza or "The Little Saint", and in Sicilian as "Rusulia", is the patron saint of Palermo in Italy, and three towns in Venezuela: El Hatillo, Zuata, and Anzoátegui. She is especially important internationally as a saint invoked in times of plague (disease).

Biography:
Rosalia was born of a Norman noble family that claimed descent from Charlemagne. Devoutly religious, she retired to live as a hermit in a cave on Mount Pellegrino, where she died alone in 1166. Tradition says that she was led to the cave by two angels. On the cave wall, she wrote: "I, Rosalia, daughter of Sinibald, Lord of Roses, and Quisquina, have taken the resolution to live in this cave for the love of my Lord, Jesus Christ."

1624 Plague:
In 1624, a plague beset Palermo. During this hardship, Saint Rosalia appeared first to a sick woman, then to a hunter, to whom she indicated where her remains were to be found. She ordered him to bring her bones to Palermo and have them carried in procession through the city.

The hunter climbed the mountain and found her bones in the cave as described. He did what she had asked in the apparition. After her remains were carried around the city three times, the plague ceased. After this Saint Rosalia was venerated as the patron saint of Palermo, and a sanctuary was built in the cave where her remains were discovered.

Her post-1624 iconography is dominated by the work of the Flemish painter Anthony van Dyck, who was trapped in the city during the 1624-1625 quarantine, during which time he produced five paintings of the saint, now in Madrid, Houston, London, New York and Palermo itself. In 1629 he also produced Saint Rosalia Interceding for the City of Palermo and Coronation of Saint Rosalia to assist Jesuit efforts to spread her cult beyond Sicily.

No comments:

Post a Comment