புனித_அங்கடிரிஸ்மா (615-619)
அக்டோபர் 14
இவர் (#St_Angadrisma) பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர்.
சிறுவயதிலேயே இறைவன்மீது மிகுந்த பற்றுக்கொண்டு வாழ்ந்து வந்த இவர் ஒரு துறவியாகப் போகவேண்டும் என்று கனவு கண்டிருந்தார்.
இந்நிலையில் இவரது பெற்றோர் இவரை அன்ஸ்பர்ட் என்பவருக்கு மணம் முடித்துக்கொடுக்க முடிவு செய்தனர். இதையறிந்த இவர், தன்னுடைய திருமணம் எப்படியாவது நின்றுவிட வேண்டும் என்றும், தான் எப்படியாவது துறவியாகிவிட வேண்டும் என்றும் இறைவனிடத்தில் மிக உருக்கமாக மன்றாடத் தொடங்கினார்.
இதனால் இவருக்குத் தொழுநோய் வந்தது. இதைப் பார்த்துவிட்டு, அன்ஸ்பர்ட் வேறொரு பெண்ணை மணமுடித்தார். இது நடந்த சில நாள்களிலேயே இவரிடமிருந்து தொழுநோய் நீங்கியது. இதற்குப் பிறகு இவர் ஓமர் மற்றும் லாம்பார்ட் ஆகியோரிடம் கல்விகற்று, பிரான்சில் உள்ள, அர்வர் என்ற இடத்தில் இருந்த புனித பெனடிக்ட் துறவு மடத்தில் சேர்ந்து துறவியானார்.
துறவு மடத்தில் இருந்த நாள்களில் இவர் இறைவேண்டலுக்கும் நோன்பிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். இறைவன் இவருக்கு வல்ல செயல்களைச் செய்யும் ஆற்றலை அளித்திருந்தார். அதைக் கொண்டு இவர் பல்வேறு வல்ல செயல்களைச் செய்தார்.
இவர் 695 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
St. Angadresma
Feastday: October 14
Death: 695
FredericAngadresma was born in 615 and was educated by St. Omer. Her cousin, who aided in her training, was St Iaambert. Angadresma was betrothed to St. Ansbert of Chausey but prayed to be allowed a religious vocation. She contracted leprosy, and Ansbert married another. The disease disappeared after the ceremony when she entered a monastery and was received there by St. Ouen. Angadresma became the abbess of a Benedictine monastery, Arver, near Beauvais, France. She is reported to have performed many miracles.
No comments:
Post a Comment