புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

06 October 2020

✠ அருளாளர் மேரி ரோஸ் டியுரோச்சர் ✠(Blessed Marie Rose Durocher)அக்டோபர் 6

† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 6)

✠ அருளாளர் மேரி ரோஸ் டியுரோச்சர் ✠
(Blessed Marie Rose Durocher)
“இயேசு மற்றும் மரியாவின் புனித பெயர்களின் சகோதரியர்” எனும் அமைப்பின் நிறுவனர்:
(Foundress of the Sisters of the Holy Names of Jesus and Mary)

பிறப்பு: அக்டோபர் 6, 1811
தூய அந்தோனி-சுர்-ரிச்செளியு, லோயர் கனடா, பிரிட்டிஷ் பேரரசு
(Saint-Antoine-sur-Richelieu, Lower Canada, British Empire)

இறப்பு: அக்டோபர் 6, 1849 (வயது 38)
லாங்குவெய்ல், கனடா மாகாணம், பிரிட்டிஷ் பேரரசு
(Longueuil, Province of Canada, British Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (கனடா மற்றும் அமெரிக்கா)
(Roman Catholic Church - Canada and the United States)

முக்திபேறு பட்டம்: மே 23, 1982
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலங்கள்:
மேரி-ரோஸ் சிற்றாலயம், தூய பதுவை அந்தோனியார் இணைப் பேராலயம், லாங்குவெய்ல், கியூபெக், கனடா
(Chapelle Marie-Rose, Co-cathedral of St. Anthony of Padua in Longueuil, Quebec, Canada)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 6

அருளாளர் மேரி ரோஸ் டியுரோச்சர், ஒரு கனடிய ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும், “இயேசு மற்றும் மரியாவின் புனித பெயர்களின் சகோதரியர்” (Sisters of the Holy Names of Jesus and Mary) எனும் கல்வி கற்பிக்கும் அமைப்பின் நிறுவனருமாவார்.

தொடக்க கால வாழ்க்கை:
“யூலலி மெலனி டியுரோச்சர்” (Eulalie Mélanie Durocher) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கிழக்கு கனடா நாட்டின் காடுகள் நிறைந்த பிரதேசமான “கியூபெக்” (Quebec) பகுதியில், “தூய அந்தோனி-சுர்-ரிச்செளியு” (Saint-Antoine-sur-Richelieu) எனும் கிராமத்தில் பிறந்தார். வசதியுள்ள விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ‘ஒலிவர்” (Olivier) இவரது தந்தை ஆவார். இவரது தாயாரின் பெயர், “ஜெனீவீ டியுரோச்சர்” (Geneviève Durocher)ப் ஆகும். இவரது பெற்றோருக்குப் பிறந்த பதினோரு குழந்தைகளில் இவர் பத்தாவது குழந்தை ஆவார். மூன்று சகோதரர்கள் குழந்தைப் பருவத்திலேயே மரித்துப் போக, அவரது சகோதரர்களான “ஃபிலேவியன்”, “தியோபில்”, மற்றும் “யூசெப்” (Flavien, Théophile, and Eusèbe) ஆகிய மூவர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் குருக்களானார்கள். ஒரு சகோதரி “செரஃபின்” (Séraphine) கனடாவின் “மாண்ட்ரீல்” (Montreal) எனுமிடத்திலுள்ள “நோட்ரே டேம் சபையில்” (Congregation of Notre Dame) இணைந்து துறவறம் பூண்டார்.

டியுரோச்சர், தமது பத்து வயதுவரை, தமது தந்தை வழி பாட்டனார் “ஒலிவர் டியுரோச்சரிடம்” (Olivier Durocher) கல்வி பயின்றார். 1821ம் ஆண்டு இவரது பாட்டனார் மரித்துப் போனதும், “செயின்ட்-டெனிஸ்-சுர்-ரிச்செலியு” (Saint-Denis-sur-Richelieu) எனுமிடத்திலுள்ள “நோட்ரே டேம் சபையினர்” நடத்தும் பள்ளியில் 1823ம் ஆண்டுவரை கல்வி கற்றார். தமது பன்னிரண்டு வயதில் அங்கேயே “புதுநன்மை” (First Communion) அருட்சாதனம் பெற்றார். பின்னர், வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தார். இக்காலகட்டத்தில், “சீசர்” (Caesar) எனும் பெயர் கொண்ட குதிரையை சொந்தமாக வாங்கிய இவர், தகுதிவாய்ந்த குதிரையேற்றம் (Equestrian) செய்பவரானார்.

தமது பதினாறு வயதில், “மாண்ட்ரீல்” (Montreal) எனுமிடத்திலுள்ள “நோட்ரே டேம் சபையின்” உண்டுறை பள்ளியில் சேர்ந்த டியுரோச்சர், அதே சபையில் ஏற்கனவே அருட்சகோதரியாயுள்ள தமது தமக்கை “செரஃபினை” போலவே தாமும் அச்சபையிலேயே துறவற புகுநிலையில் (Novitiate) இணைய விரும்பினார். ஆனால், அவரது உடல்நிலை மிகவும் நலிவடைந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டதால், துறவற பயிற்சியை பூர்த்தி செய்ய இயலாத டியுரோச்சர், இரண்டு வருடங்களின் பின்னர் வீடு திரும்பினார்.

கி.பி. 1830ம் ஆண்டு, டியுரோச்சரின் தாயார் “ஜெனீவீ” மரித்துப் போனதால், வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு இவரிடம் வந்தது. பின்னர் 1831ம் ஆண்டு, தமது சகோதரர் “தியோஃபில்” உதவி பங்குத் தந்தையாக பணியாற்றும் பங்கின் குருக்கள் மற்றும் அலுவலர்கள் தங்கும் இல்லத்துக்கு தமது தந்தையுடன் வந்து தங்கிய இவர், அவ்வில்லத்தின் பணிப்பெண்ணாகவும், தமது சகோதரரின் செலயலராகவும் கி.பி. 1843ம் ஆண்டுவரை பணியாற்றினார். இந்த காலகட்டத்தில், சுற்றுப்புற கிராமப்புறங்களில் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் கடுமையான பற்றாக்குறை பற்றி அவர் அறிந்திருந்தார். வசதியுள்ள, மற்றும் ஏழைச் சிறுவர்களின் கல்விக்காக அர்ப்பணிப்புள்ள ஒரு மத சமூகத்தின் அவசியம் பற்றி தமது குடும்பத்தினர் மற்றும் பரிச்சயமுள்ளவர்களுடன் விவாதித்தார்.

நிறுவனர்:
கி.பி. 1841ம் ஆண்டு, “லாங்குவெய்ல்” (Longueuil) பங்குத்தந்தை “லூயிஸ்” (Louis-Moïse Brassard), ஃபிரான்ஸ் நாட்டின் “மார்செய்ல்ஸ்” (Marseilles) மறைமாவட்ட ஆயர், “சார்ள்ஸ்” (Charles-Joseph-Eugène de Mazenod) என்பவருடன் கனடாவின் “கியூபெக்” (Quebec) மாகாணத்தில் நிறுவப்படவேண்டிய புதிய சபை பற்றிய பேச்சுவார்த்தையில் இறங்கினார். முன்மொழியப்பட்ட பணியைப் பற்றி அறிந்துகொண்ட டியுரோச்சர், கனடாவுக்கு வரவிருக்கும் புதிய சபையின் துறவற புகுநிளைக்காக தமது சிநேகிதியான “மெலடி” (Mélodie Dufresne) என்பவருடன் சேர்ந்து தந்தை லூயிஸ் மூலமாக அதற்கு விண்ணப்பித்தார். ஆனால், இப்புதிய சபைக்கான பணிகள் மேற்கொண்டு நடக்கவில்லை.

கி.பி. 1841ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 2ம் தேதி, “ஒப்லேட் தந்தையர்” (Oblate Fathers) எனப்படும், “மாசற்ற மரியாளின் ஒப்லேட் மறைப்பணியாளர் சபையின்” (Missionary Oblates of Mary Immaculate) குழுவொன்று “மோன்ட்ரீல்” (Montreal) வந்து சேர்ந்தது. 1842ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், “லாங்குவெய்ல்” (Longueuil) நகரில் ஒரு ஆலயத்தைக் கட்டி திறந்தனர். இந்த தந்தையர் குழுவிலுள்ள அருட்தந்தை “டெல்மன்” (Father Pierre-Adrien Telmon) என்பவர் டியுரோச்சரின் ஆன்மீக வழிகாட்டியானார். கி.பி. 1843ம் ஆண்டு, அக்டோபர் மாதம், தமது சகோதரர் “யூசூபின்” (Eusèbe) சத்திய பிரமாண வைபவங்களைக் காண்பதற்காக “லாங்குவெய்ல்” (Longueuil) பயணித்த டியுரோச்சர், அங்கே ஆயர் “போர்கேட்” (Bishop Bourget) என்பவரைச் சந்தித்தார். அங்கே, இவரது ஆன்மீக வழிகாட்டியான தந்தை “டெல்மன்” மற்றும் ஆயர் “போர்கேட்” இருவரும் புதிதாய் ஆரம்பிக்கப்படவுள்ள, இளைஞர்களின் கல்விக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆன்மீக சபையின் தலைமைப் பொறுப்பினை ஏற்குமாறு டியுரோச்சரை வேண்டினர். இதனை ஏற்றுக்கொண்ட இவர், தமது சிநேகிதியான “மெலடி” (Mélodie Dufresne) மற்றும் உள்ளூரின் ஆசிரியையாக பணியாற்றி வந்த “ஹென்றியட்” (Henriette Céré) ஆகியோருடன் இணைந்து தமது பணிகளை தொடங்கினர்.

கி.பி. 1844ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 28ம் தேதி, ஆயர் “போர்கேட்” (Bishop Bourget) நடத்திய ஒரு சிறு விழாவில், இம்மூவரும் தமது துறவற புகுநிலையைத் (Novitiate) தொடங்கினர். துறவற சீருடைகளைப் பெற்றுக்கொண்ட இவர்கள், தமது ஆன்மீக பெயர்களையும் தேர்ந்து கொண்டனர். டியுரோச்சர், “சகோதரி மேரி-ரோஸ்” (Sister Marie-Rose) என்றும், “மெலடி” (Mélodie Dufresne), “சகோதரி மேரி-அக்னேஸ்” (Sister Marie-Agnes) என்றும், “ஹென்றியட்” (Henriette Céré), “சகோதரி மேரி-மகதலின்” (Sister Marie-Madeleine) என்றும் பெயர்களை ஏற்றுக்கொண்டனர். புதிதாய் தொடங்கப்பட்ட சபைக்கு மறைமாவட்ட அங்கீகாரமளித்த ஆயர் போர்கேட், புதிய சபைக்கு “இயேசு மற்றும் மரியாவின் புனித பெயர்களின் சகோதரியர்” (Sisters of the Holy Names of Jesus and Mary) எனும் பெயரிட்டார். கி.பி. 1844ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் நாளன்று, மூவரும் தமது சத்திய பிரமாணங்களை ஏற்றுக்கொண்டனர். போர்கேட், சகோதரி மேரி ரோசை புதிய சபையின் தலைமை அன்னை என்றும், பயிற்சித்துறவியரின் தலைவர் என்றும் அங்கீகரித்தார். அருட்சகோதரியர் மூவரும் “சகோதரி மேரி-மகதலினுடைய” பள்ளி இல்லத்தில் கற்பிக்கும் பணியைத் தொடங்கினர். ஆனால் இவர்களது பணிக்கான வேண்டுதல்கள் அசாதாரணமானதாக இருந்தது. அவர்களுக்கிருந்த இடம் போதாமையால் பெரிய இடத்துக்கு மாறினார்கள். மாணவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் வருடங்களில் கூடிக்கொண்டே போனதால், அடுத்தட ஐந்து வருடங்களுக்குள் இன்னும் நான்கு பள்ளிகளை திறந்தார்கள். முப்பது புதிய ஆசிரியைகளை சேர்த்தார்கள். தொடக்கத்தில் சிறுமிகளுக்கு மட்டுமே கல்வி என்று ஆரம்பித்த இவர்களது பணி, பின்னர் வேறு வழியின்றி, சிறுவர்களுக்குமாக என்றானது.

கி.பி. 1845ம் ஆண்டு, மார்ச் மாதம், 17ம் தேதி, கனடிய பாராளுமன்றம் தமது நடவடிக்கை மூலம் இச்சகோதரியரை இணைத்தது. 1846ம் ஆண்டு, கத்தோலிக்க திருச்சபையிலிருந்து விலகி, எதிர்த்திருச்சபைக்கு சென்ற அருட்தந்தை “சார்ள்ஸ்” (Charles Chiniquy) என்பவருடன் சகோதரி மேரி ரோஸுக்கு மோதல் ஏற்பட்டது. இவர், அருட்சகோதரியரின் பள்ளிக்கூடங்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர எண்ணினார். இவரது இந்த எண்ணம் சகோதரி மேரி ரோசால் உடைக்கப்பட்டதால், இவர் அருட்சகோதரியரைப் பற்றி வெளிப்படையாக பொதுவில் இழிவுபடுத்தி விமர்சிக்க தொடங்கினார்.

மரணமும் முக்திபேறும்:
தமது வாழ்நாள் முழுதும் மோசமான உடல்நிலையால் பாதிக்கப்பட்டிருந்த அருட்சகோதரி மேரி ரோஸ், கி.பி. 1849ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 6ம் நாள், ஒரு வீணான நோயின் காரணமாக மரித்தார். அவரது வயது, முப்பத்தெட்டு ஆகும்.
† Saint of the Day †
(October 6)

✠ Blessed Marie Rose Durocher ✠

Foundress of the Sisters of the Holy Names of Jesus and Mary:

Born: October 6, 1811
Saint-Antoine-sur-Richelieu, Lower Canada, British Empire

Died: October 6, 1849 (Aged 38)
Longueuil, Province of Canada, British Empire

Venerated in:
Roman Catholic Church
(Canada and the United States)

Beatified: May 23, 1982
Pope John Paul II

Major Shrine:
Chapelle Marie-Rose Co-cathedral of St. Anthony of Padua in Longueuil, Quebec, Canada

Feast: October 6

The Blessed Marie-Rose Durocher, S.N.J.M., was a Canadian Roman Catholic religious sister, who founded the Sisters of the Holy Names of Jesus and Mary. She was beatified by the Roman Catholic Church in 1982.

Durocher Eulalie (baptized Eulalie Mélanie Durocher), named Mother Marie-Rose, founder and first superior of the Sisters of the Holy Names of Jesus and Mary in Canada; b. 6 Oct. 1811 in Saint-Antoine-sur-Richelieu, Lower Canada, daughter of Olivier Durocher and Geneviève Durocher; d. 6 Oct. 1849 in Longueuil, Lower Canada.

Eulalie Durocher was the tenth of 11 children, 3 of whom died in infancy. Her father, a wealthy farmer, had partially completed his classical studies, and her mother had been given the most attentive schooling at the Ursuline convent in Quebec. Consequently, both were in a position to ensure that their children obtained a good education. Eulalie’s brothers Flavien*, Théophile, and Eusèbe entered the priesthood, and her sister Séraphine joined the Congregation of Notre-Dame.

Eulalie did not attend the village school; her paternal grandfather Olivier Durocher, a distinguished and scholarly man who served in the militia, undertook to be her teacher at home. Upon his death in 1821, however, the little girl went as a boarding-pupil to the convent run by the Congregation of Notre-Dame in Saint-Denis on the Richelieu. After taking her first communion at the age of 12, she returned home; there she was again tutored privately by Abbé Jean-Marie-Ignace Archambault, a teacher at the Collège de Saint-Hyacinthe. Eager to dedicate herself to God in the religious life, she entered the boarding-school of the Congregation of Notre-Dame in Montreal in 1827, intending to do her noviciate there as had her sister Séraphine. But after two years of study broken by long periods of rest, she had to abandon her plans for the religious life because of poor health. She went back home, to await God’s good time.

At her mother’s death in 1830 Eulalie took over her role and became the life and soul of the family. Of an ardent temperament, easily peremptory, deeply pious, she had a special influence on those around her. Her brother Théophile, curé of Saint-Mathieu parish in Belœil, managed to persuade his father to move from the ancestral farm to the presbytery at Belœil; Eulalie assumed the housekeeping duties, which she carried out from 1831 till 1843. In the comings and goings of the busy presbytery, Eulalie’s calling gradually took shape. The serious political, educational, and religious problems of the day were freely discussed there. She took an interest in them and became aware of the urgent need to make education accessible to children in the countryside whether rich or poor. As there was an alarming shortage of schools and teachers, she began to dream of a religious community that could easily establish more convents. When in 1841 the parish priest of Longueuil, Louis-Moïse Brassard*, appealed to the Sœurs des Saints-Noms de Jésus et de Marie of Marseilles, in France, Eulalie enrolled herself in advance, with her friend Mélodie Dufresne, as a novice in this congregation. But the French sisters did not proceed. The bishop of Marseilles, Charles-Joseph-Eugène de Mazenod, who had founded the Oblates of Mary Immaculate, then advised the bishop of Montreal, Ignace Bourget*, to set up a fledgeling religious community with the two women who had been eager to be part of the anticipated French group.

In the meantime, an initial party of Oblates, including Father Adrien Telmon, had arrived in Montreal. Telmon came to Belœil to conduct popular missions, and he quickly recognized in Eulalie a mentor able to gather kindred souls about her and guide them in the ways of the spirit. He lost no time in encouraging her to found a religious community typically Canadian in its dedication to educating the young. She, Mélodie, and Henriette Céré, the first three candidates, began to prepare themselves for the religious life under the guidance of the Oblates in October 1843. They moved into a building in Longueuil used as a school, in which Henriette Céré taught. On 28 Feb. 1844, Bishop Bourget conducted the ceremony when the three young women took the habit. Eulalie became Sister Marie-Rose in the community, which assumed the name and the institutions of the Sœurs des Saints-Noms de Jésus et de Marie of Marseilles. On 8 December of that year, Bourget received the religious vows of all three in the parish church. Marie-Rose was then named superior, mistress of novices, and depositary.

Mother Marie-Rose faced many difficulties, not the least being her community’s disputes with Abbé Charles Chiniquy*. Chiniquy entered the Oblates’ noviciate in 1846 and wanted to take control of the teaching in the schools established by the sisters When he met with refusals from the perspicacious superior, he publicly disparaged the community. Despite the storms, Mother Marie-Rose stood firm. A woman of great virtue, in close communion with the Lord and a peerless educator, she gave the community an impetus that has not been lost with the passage of time. When she died on 6 Oct. 1849, on her 38th birthday, the community already had 30 teachers, 7 novices, 7 postulants, and 448 pupils in 4 convents.

After the funeral, Bourget told the mourning sisters: “I confess to you with heartfelt sincerity that I was deeply moved to see so many virtues knit together in one soul... I begged her to procure me the same zeal for governing my diocese as she had for directing you.” Thirty years later, in 1880, Bourget was to say: “I invoke her aid as a saint for myself, and I hope that the Lord will glorify her before men by having the church award her the honours of the altar.” His last wish was fulfilled on Sunday 23 May 1982 in St Peter’s Square in Rome, when before a huge crowd Pope John Paul II proclaimed Marie-Rose Durocher blessed.
~ Marguerite Jean

No comments:

Post a Comment