இன்றைய புனிதர்
2020-10-07
மறைசாட்சி எர்னஸ்ட் Ernst von Neresheim OSB
பிறப்பு
11 ஆம் நூற்றாண்டு,
ஜெர்மனி
இறப்பு
7 அக்டோபர் 1148,
மெக்கா, சவுதி அரேபியா
இவர் ஜெர்மனியிலுள்ள அவுக்ஸ்பூர்க்கில் (Augsburg) 1119 ஆம் ஆண்டு பெனடிக்டின் துறவற மடத்தில் சேர்ந்தார். இவர் நேரஸ்ஹைம் என்ற ஊரில் பெனடிக்டின் துறவற இல்லம் ஒன்றையும் துவங்கினார். நாளடைவில் இத்துறவற இல்லத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் புனித நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். அவ்வேளையில் இவர் சிறைபிடித்து செல்லப்பட்டார். பின்னர் மெக்காவில் வைத்து சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார். அச்சமயத்தில் பல துன்பங்களின் மத்தியில் கொலை செய்யப்பட்டார்.
செபம்:
இரக்கமே உருவான இறைவா! புனித பெனடிக்டின் சபையில் உழைத்து மரித்த ஒவ்வொரு துறவிகளையும், உமது வான் வீட்டில் சேர்த்தருளும். இவர்களின் இறைவேண்டலால் அச்சபையை தொடர்ந்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
• கொலோன் நகர் ஜெரால்டு Gerold von Köln
பிறப்பு: 1201, கொலோன் Köln, ஜெர்மனி
இறப்பு: 7 அக்டோபர் 1241, கிரேமொனா Cremona, இத்தாலி
• பதுவை நகர் மறைசாட்சி ஜஸ்டீனா Justina von Padua
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு, பதுவை, இத்தாலி
இறப்பு: 300, பதுவை
• திருத்தந்தை மார்குஸ் Marcus
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு, உரோம், இத்தாலி
இறப்பு: 7 அக்டோபர் 336, உரோம், இத்தாலி
No comments:
Post a Comment