புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

09 October 2020

புனித ஜான் லியோனார்டி, சபை நிறுவுனர் St. John Leonardi SPநினைவுத்திருநாள் : அக்டோபர் 9

இன்றைய புனிதர்: 
(09-10-2020)

புனித ஜான் லியோனார்டி, சபை நிறுவுனர் 
St. John Leonardi SP
நினைவுத்திருநாள் : அக்டோபர் 9
பிறப்பு : 1541, டஸ்கனி Tuscany, இத்தாலி
இறப்பு : 9 அக்டோபர் 1609, உரோம்

முத்திபேறுபட்டம்: 1861, திருத்தந்தை 9 ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 1938, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
பாதுகாவல்: மருந்தகங்கள்

இவர் மருந்து தயாரித்து விற்கும் கலையை கற்றார். ஆனால் அப்பணியை செய்ய விருப்பமில்லாமல் இருந்தார். இவரின் மனம் குருவாக வேண்டுமென்று ஆசைக்கொண்டது. எனவே அப்பணியை விட்டுவிட்டு, 1572 ஆம் ஆண்டு குருவானார். பிறகு மறைப்பணியை ஆற்றினார். முக்கியமாக இவர் தானாகவே முன்வந்து சிறுவர்களுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுத்தார். இவர் 1574 ஆம் ஆண்டில் இறையன்னையின் பெயரால், துறவற சபை ஒன்றை நிறுவினார். இதனால் பல இன்னல்களை மேற்கொண்டார். இடையூறுகளால் மிகவும் பாதிக்கப்பட்டார். இருப்பினும், திருமறையை பரப்புவதற்கென்று, மீண்டும் மறைப்பணியாளர்களின் குழு ஒன்றை ஏற்படுத்தினார். உரோம் நகரிலுள்ள "திருமுறைப் பரப்புதலின் பேராயம்" என்ற நிறுவனத்திற்கும் அடித்தளம் இட்டார். 

திருத்தந்தையர்கள் பலரின் முயற்சியால் இச்சபைகள் அனைத்தும், இன்று சிறப்பாக செயல்படுகின்றது. திருச்சபையில் உள்ள பல சபைகள் மீண்டும் தங்களின் ஒழுங்குமுறைப்படி செயல்பட, இவர் பரிவன்புடனும், முன்மதியுடனும் செயல்பட்டார். இவையனைத்தையும் நிறைவேற்றி வெற்றி பெற பல துன்பங்களையும் பொறுமையோடு ஏற்று, எளிமையாக வாழ்ந்தார். 1614 ஆம் ஆண்டு திருத்தந்தை 5 ஆம் பவுல் இச்சபைகள் முழுமையாக செயல்பட அதிகாரம் வழங்கினார். 

செபம்:
மூவொரு கடவுளே! மனிதனின் நோய்கலை குணமாக்கும் மருந்து தயாரிப்பவர்களை நீர் கண்ணோக்கியருளும். தங்களின் பணியில் கவனம் செலுத்தி, சிறப்பாக செயல்பட, உம் சக்தியை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day: (09-10-2020)

Saint John Leonardi

Worked as a pharmacist's apprentice while studying for the priesthood. After ordination on 22 December 1572, he worked with prisoners and the sick. His example attracted some young laymen to assist him, most of whom became priests themselves. This group formed Clerks Regular of the Mother of God of Lucca, a congregation of diocesan priests which, for reasons having to do with the politics of the Reformation and an unfounded accusation that John wanted to form the group for his own personal aggrandizement, provoked great opposition. The Clerks were confirmed on 13 October 1595 by Pope Clement VIII, but John was exiled from Lucca for most of the rest of his life. John was assisted in his exile by Saint Philip Neri, who gave him his quarters - and his pet cat!

In 1579 he formed the Confraternity of Christian Doctrine, and published a compendium of Christian doctrine that remained in use until the 19th century. He died from a disease caught while tending plague victims. By the deliberate policy of the founder, the Clerks have never had more than 15 churches, and today form only a very small congregation. The arms of the order are azure, Our Lady Assumed into Heaven; and its badge and seal the monogram of the Mother of God in Greek characters.

Born : 
1541 at Diecimo, Lucca, Italy

Died : 
• 8 October 1609 at Rome, Italy of natural causes
• buried in Santa Maria in Portico

Canonized: 
17 April 1938 by Pope Pius XI

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment