† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 2)
✠ புனிதர் லியோடெகர் அல்லது லெகர் ✠
(St. Leodegar Or Leger)
ஆடொன் மறைமாவட்ட ஆயர் & மறைசாட்சி:
(Bishop of Autun & Martyr)
பிறப்பு: கி.பி. 615
ஆடொன், ஸாவொன்-எட்-லொய்ர், பர்கண்டி, ஃபிரான்ஸ்
(Autun, Saône-et-Loire, Burgundy, France)
இறப்பு: அக்டோபர் 2, 679
சார்சிங், சொம், பிக்கார்டி, ஃபிரான்ஸ்
(Sarcing, Somme, Picardie, France)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
நினைவுத் திருநாள்: அக்டோபர் 2
பாதுகாவல்:
குருட்டுத்தனத்திற்கு எதிராகத் தூண்டுதல்; கண் நோய்; கண் பிரச்சினைகள்;
ரணமான கண்கள்.
புனிதர் லியோடெகர் அல்லது லெகர், ஒரு மறைசாட்சியாக கொல்லப்பட்ட “பர்கண்டியன்” (Burgundian) “ஆடொன்” மறைமாவட்ட ஆயர் (Bishop of Autun) ஆவார்.
இவரது தந்தை “பர்கண்டி'யின்” உயர்குடியைச் சேர்ந்த “போடிலோன்” (Bodilon) ஆவார். இவரது தாயார், பின்னாளில் அருட்சகோதரியான “புனிதர் சிக்ராடா” (Saint Sigrada) ஆவார். புனிதர் “வாரினஸ்” (Saint Warinus) இவரது சகோதரர் ஆவார்.
அந்நாளில், “நியோஸ்ட்ரியா அரண்மனையின் ஃபிரான்கிஷ் மேயரான” (Frankish Mayor of the Palace of Neustria) 'எப்ராய்ன்' (Ebroin) என்பவருக்கு எதிராக லியோடெகர் செயல்பட்டதால் அவரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
தமது சிறுவயதை பாரிஸ் நகரில் செலவிட்ட லியோடெகர், அங்கே அரச அரண்மனையிலுள்ள பள்ளியில் கல்வி கற்றார். தமது பள்ளிக் கல்வியை நிறைவு செய்த லியோடெகர், அங்கிருந்து 'பாய்டியர்ஸ்' (Poitiers) எனும் நகரிலுள்ள பேராலய கல்விச் சாலைக்கு உயர் கல்விக்காக அனுப்பப்பட்டார். அங்கே அவர் 'பாய்டியர்ஸ்' மறைமாவட்ட ஆயரும் தமது ஞானத் தந்தையுமான “டெசிடேரிய'ஸின்” (Desiderius) மேற்பார்வையில் கல்வி கற்றார். பின்னர், அவரது இருபதாவது வயதில் அவரே லியோடெகாரை திருத்தொண்டராக்கினார்.
கி.பி. சுமார் 650ம் ஆண்டில் குருத்துவ அருட்பொழிவு பெற்ற லியோடெகர், தமது ஞானத்தந்தை “டெசிடேரிய'ஸின்” பரிந்துரையின்பேரில் “போய்ட்டோ” (Poitou) என்னும் நகரிலுள்ள “புனித மாக்சென்ஷியஸ்” துறவு மடத்தின்' (Monastery of St. Maxentius) மடாதிபதியாக பதவியேற்றார். அங்கே, அந்த துறவு மடத்தில் அவர் “பெனடிக்ட்டைன் ஆட்சிமுறையை” (Benedictine rule) அமல்படுத்தினார்.
கி.பி. 656ம் ஆண்டு, “ஆஸ்ட்ராசியா'வின்” (Austrasia) அரசன் “இரண்டாம் டகோபர்ட்டின்” (Dagobert II) மரணத்தின் பிறகு, அவருக்கு வாரிசுகள் யாருமில்லாததால், அவரது கைம்பெண்ணான “அரசி பட்டில்டா” (Queen Bathilde) தமது ஐக்கிய அரசின் ஆட்சியில் உதவவும், தமது பிள்ளைகளின் கல்விக்காகவும் லியோடெகரை அழைத்தார். அங்கே அரசியின் அரசாட்சியில் பலவிதமாக உதவிய லியோடெகர், மதச்சார்பற்ற மத குருமார்கள் மற்றும் மத சமூகங்கள் மீது பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.
இதற்கிடையே, கி.பி. 660ம் ஆண்டு, “ஆஸ்ட்ராசியா” (Austrasia) பெருங்குடியினர், தமக்கு ஒரு அரசன் வேண்டுமென வேண்டுகோள் வைத்ததால், 'நியோஸ்ட்ரியா' மேயர் ''எப்ராய்னின்” பரிந்துரையால் அங்கே இளம் “இரண்டாம் சைல்டேறிக்” அனுப்பப்பட்டார். கி.பி. 673ம் ஆண்டு, “மூன்றாம் க்ளாடேய்ரின்” (Clotaire III) மரணம் காரணமாக அரசு உரிமை கோரி அங்கே ஒரு புரட்சிப் போராட்டம் வெடித்தது. எப்ராய்ன், “தியோடேரிக்” (Theoderic) ஆட்சிக்கு வர ஊக்குவித்தான். ஆனால், லியோடெகர் மற்றும் அங்குள்ள ஆயர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். “தியோடேரிக்'கின்” மூத்த சகோதரர் “இரண்டாம் சைல்டேறிக்” அரசாள ஆதரவு தந்தனர். “தியோடேரிக்” அரசு பொறுப்பேற்றார். லியோடெகர் இளம் அரசருக்கு உதவ அங்கேயே தங்கினார்.
கி.பி. சுமார் 675ம் ஆண்டில் சில எதிர் ஆயர்கள் துணையுடன் லியோடெகருக்கு எதிராக கலகம் விளைவித்த எப்ராய்ன், லியோடெகரை கைது செய்வித்தான். எப்ராய்னின் தூண்டுதலின் பேரில், லியோடெகரின் கண்கள் பிடுங்கப்பட்டன. கால்கள் எரிக்கப்பட்டன. நாக்கு வெட்டப்பட்டது. அங்கேயுள்ள காட்டில் அவர் கொல்லப்பட்டார்.
† Saint of the Day †
(October 2)
✠ St. Leodegar ✠
French Bishop:
Born: 615 AD
Autun, Saône-et-Loire, Burgundy, France
Died: October 2, 679
Sarcing, Somme, Picardie, France
Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church
Major Shrine :
Cathedral of Autun and the Grand Séminaire of Soissons
Feast: October 2
Patronage:
Millers, Invoked against blindness, Eye disease, Eye problems, Sore eyes
St. Leodegar of Poitiers was a martyred Burgundian Bishop of Autun. He was the son of Saint Sagrada and the brother of Saint Warinus.
Leodegar was an opponent of Ebroin, the Frankish Mayor of the Palace of Neustria and the leader of the faction of Austrasian nobles in the struggle for hegemony over the waning Merovingian dynasty. His torture and death made him a martyr and saint.
Early life:
Leodegar was the son of a high-ranking Burgundian nobleman, Bodilon, Count of Poitiers and Paris and Sagrada of Alsace, who later became a nun at Sainte-Marie de Soissons. His brother was Warinus.
He spent his childhood in Paris at the court of Clotaire II, King of the Franks and was educated at the palace school. When he was older he was sent to Poitiers, where there was a long-established cathedral school, to study under his maternal uncle, Desiderius (Dido), Bishop of Poitiers. At the age of 20, his uncle made him an archdeacon.
Shortly afterwards he became a priest, and in 650, with the bishop's permission, became a monk at the monastery of St Maxentius in Poitou. He was soon elected abbot and initiated reforms including the introduction of the Benedictine Rule.
Career:
Around 656, about the time of the usurpation of Grimoald in Austrasia and the banishment of the boy-heir Dagobert II, Leodegar was called to the Neustrian court by the widowed Queen Bathilde to assist in the government of the united kingdoms and in the education of her children. Then in 659, he was named to the see of Autun, in Burgundy. He again undertook the work of reform and held a council at Autun in 661. The council denounced Manichaeism and was the first to adopt the Trinitarian Athanasian Creed. He made reforms among the secular clergy and in the religious communities and had three baptisteries erected in the city. The church of Saint-Nazaire was enlarged and embellished, and a refuge established for the indigent. Leodegar also caused the public buildings to be repaired and the old Roman walls of Autun to be restored. His authority at Autun placed him as a leader among the Franco-Burgundian nobles.
Meanwhile, in 660 the Austrasian nobles demanded a king, and young prince Childeric II was sent to them through the influence of Ebroin, the mayor of the palace in Neustria. The queen withdrew, from a court that was Ebroin's in all but name, to an abbey she had founded at Chelles, near Paris. On the death of King Clotaire III in 673, a dynastic struggle ensued, with rival claimants as pawns; Ebroin raised Theoderic to the throne, but Leodegar and the other bishops supported the claims of his elder brother Childeric II, who, by the help of the Austrasians and Burgundians, was eventually made king. Ebroin was interned at Luxeuil and Theoderic sent to St. Denis.
Leodegar remained at court, guiding the young king. In 673 or 675, however, Leodegar was also sent to Luxeuil. The cause, a protest against the marriage of Childeric and his first cousin, is a hagiographic convention; as a leader of the Austrasian and Burgundian nobles, Leodegar was easily represented as a danger by his enemies. When Childeric II was murdered at Bondi in 673, by a disaffected Frank, Theoderic III was installed as king in Neustria, making Leudesius his mayor. Ebroin each took advantage of the chaos to make his escape from Luxeuil and hasten to the court. In a short time, Ebroin caused Leudesius to be murdered and became mayor once again, still Leodegar's implacable enemy.
About 675 the Duke of Champagne, the Bishop of Châlons-Sur-Marne and the Bishop of Valence, stirred up by Ebroin, attacked Autun, and Leodegar fell into their hands. At Ebroin's instigation, Leodegar's eyes were gouged out and the sockets cauterized, and his tongue was cut out. Some years later Ebroin persuaded the king that Childeric had been assassinated at the instigation of Leodegar. The bishop was seized again, and, after a mock trial, was degraded and condemned to further exile, at Fécamp, in Normandy. Near Sarcing he was led out into a forest on Ebroin's order and beheaded.
No comments:
Post a Comment