#அசிசி_நகர்ப்_புனித_ஆக்னஸ் (1197-1253)
நவம்பர் 15
அசிசி நகரைச் சார்ந்தவரான இவர் (#St_Agnes_Of_Assisi), புனித கிளாராவின் இளைய சகோதரி.
இவருக்குப் பதினைந்து வயது நடக்கும்போது, எல்லாவற்றையும் துறந்துவிட்டு தன் சகோதரியின் சபையில் சேர்ந்து, அவரைப் போன்று கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்து வாழத் தொடங்கினார்.
இதற்கு இவருடைய உறவினர்களிடமிருந்தும் பெற்றோரிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு வந்தது. ஆனாலும் இவர் தன்னுடைய முடிவில் மிக உறுதியாக இருந்ததால், அவர்களால் இவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதற்குப் பிறகு 1219 ஆம் ஆண்டு, அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ் இவரை மோன்டிசெல்லி( Monticelli) எந்த இடத்தில் இருந்த துறவுமடத்தில் தலைவியாக நியமித்தார். அங்கு இவர் தன்னுடைய எடுத்துக்காட்டான வாழ்வால் பலருக்கும் முன் மாதிரியாக இருந்தார்.
இவர் தன்னுடைய கடின உழைப்பால் வெனிஸ், பாதுவா ஆகிய இடங்களில் துறவு மடங்களை நிறுவி, கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி பல இடங்களிலும் பரவக் காரணமாக இருந்தார்.
மேலும் இவர் தன் சகோதரி கிளாராவின் கடைசிக் காலத்தில் அவரோடு இருந்து, அவருக்குப் பேருதவி செய்தார். அவர் இறந்த அடுத்த மூன்றாவது மாதத்தில், அதாவது 1253 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் பதினாறாம் நாள் இவர் இறையடி சேர்ந்தார்.
Daughter of Count Favorino Scifi and Blessed Hortulana, she was raised in a series of castles in and around Assisi, Italy. Younger sister of Saint Clare of Assisi, and her first follower, leaving home two weeks after Clare to join the Benedictines at San Angelo di Panzo at age fifteen. The family tried to bring Agnes back by force, dragging her from the monastery, but her body became so heavy that several knights could not budge her. Her uncle Monaldo tried to beat her, but was temporarily paralyzed. The family then left Agnes and Clare in peace.
In 1221 a group of Benedictine nuns in Monticelli asked to become Poor Clares, and Saint Francis assigned Agnes as their abbess. Agnes wrote about how much she missed Clare and the other nuns at San Damiano, and after establishing other Poor Clare monasteries in northern Italy, Agnes was recalled in 1253 when Clare was dying. Agnes followed Clare in death three months later.
No comments:
Post a Comment