புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

04 November 2020

அருளாளர் தெரசா மேங்கனல்லோ (1849-1876)நவம்பர் 04

அருளாளர் தெரசா மேங்கனல்லோ (1849-1876)

நவம்பர் 04

இவர் (#Bl_Theresa_Manganiello) தெற்கு இத்தாலியில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
இவரது குடும்பத்தில் மொத்தம் பதினொரு பேர். அவர்களில் இவர்தான் கடைசிக் குழந்தை. இவரது பெற்றோரால் இவரைப் படிக்க வைக்க முடியவில்லை. அதனால் இவர் தோட்ட வேலைகளையும், வீட்டு வேலையையும் செய்து வந்தார். 

இவருக்குப் பதினெட்டு வயது நடக்கும் போது, இறைவன் தனது பணிக்கென அழைப்பதை இவர் உணர்ந்தார். இதனால் இவர் பிரான்சின் மூன்றாம் சபையில் சேர்ந்தார்.

இறைவேண்டலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்த இவர், ஒருநாள்கூடத் தவறாமல் கோயிலுக்குச் சென்று, திருப்பலி கண்டு வந்தார். இவர் தான் அனுபவித்த ஒவ்வொரு துன்பத்தையும் பாவிகளின் மனமாற்றத்திற்காக ஒப்புக் கொடுத்தார். திருச்சிலுவை ஆண்டவர்மீதும் இவர் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார்.

தன்னை நாடி வந்த ஏழைகள், வறியவர்கள், நோயாளர்கள் ஆகியோருக்கு முகங்கோணாமல் இவர் உதவி செய்தார். மேலும் இவர் தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொண்டார். இத்தகைய பணிகள் தொடர்ந்து நடைபெற இவர்  Franciscan Immaculate Sisters என்ற துறவற சபையினைத் தோற்றுவித்தார்.

இப்படி மிகச் சிறிய வயதிலேயே இறையன்புக்கும் பிறரன்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய இவர், 1876 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்குத் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது.
Born to a farm family. Lifelong lay woman in the Diocese of Benevento, Italy. She was strongly drawn to the religious life, and became a Secular Franciscan Tertiary. Having received the blessing of Pope Blessed Pius IX for her project, Teresa was in the process of forming a new congregation when she died of a sudden illness. However, her work led to the creation of the Franciscan Immaculatine Sisters by Father Lodovico Acernese, and Teresa is considered the spiritual cornerstone of the congregation.

No comments:

Post a Comment