புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

20 November 2020

புனித_புரோக்குலுஸ் (-447)நவம்பர் 20

புனித_புரோக்குலுஸ் (-447)

நவம்பர் 20

இவர் (#StProclusOfConstantinoble) கான்ஸ்டாண்டிநோப்பிளில் (தற்போதைய துருக்கியில்) பிறந்தவர்.
புனித ஜான் கிறிஸ்சோஸ்தமின் சீடரான இவர் பின்னாளில் கான்ஸ்டாண்டிநோப்பிளின் ஆயராக உயர்ந்தார். 

இவரது காலத்தில் நெஸ்தோரிஸ் என்பவர், 'மரியா இயேசுவின் தாய்தானே அன்றி, கடவுளின் தாய் அல்ல' என்ற தப்பறைக் கொள்கைப் பரப்பி வைத்தார். இதனைத் தனது வல்லமையான போதனையால் எதிர்த்த இவர், அதற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

இதற்குப் பிறகு தப்பறைக் கொள்கையைப் பரவக் காரணமாக இருந்தவர்கள் மனந்திரும்பி, திருஅவையிடம் வந்தபோது, அவர்களை இவர் மன்னித்து ஏற்றுக் கொண்டார். 

தூய்மைக்கும் இறைப்பற்றிற்கும் மிகப்பெரிய எடுத்துக் காட்டாக விளங்கிய இவர், பலரையும் தன்னுடைய வல்லமை மிக்க போதனையால் கிறிஸ்தவ மறைக்குள் கொண்டுகொண்டுவந்தார்.

447 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோப்பிள் நகரில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்ட போது, இவர் இறைமக்களோடு சேர்ந்து இறைவனிடம் வேண்டியதால் அந்த அபாயம் வராமல் தவிர்க்கப் பட்டது.

இப்படி இறைமக்களுக்கு நல்லதோர் ஆயனாக இருந்து, திருஅவையை எதிரிகளிடமிருந்து கட்டிக் காத்த இவர் 447 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

No comments:

Post a Comment