புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

11 November 2020

#அலெக்சாந்திரியா_நகர்ப்_புனித_ஜான்(550-616)நவம்பர் 11

#அலெக்சாந்திரியா_நகர்ப்_புனித_ஜான்
(550-616)

நவம்பர் 11
இவர் சைப்ரஸைச் சார்ந்தவர்; இவரது தந்தை சைப்பிரசின் ஆளுநராக இருந்தவர்.

திருமணம் முடித்து, தன் மனைவி மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவருடைய வாழ்க்கையில்,  திடீரென்று புயல் வீசியது. ஆம். நன்றாக இருந்த இவருடைய மனைவியும் மகனும் திடீரென்று இறந்து போனார்கள். இதனால் இவர் எல்லாவற்றையும் துறந்துவிட்டு துறவற வாழ்க்கையை மேற்கொள்ளத் தொடங்கினார். 

இதற்குப் பிறகு இவர் எகிப்திலுள்ள அலெக்சாந்திரியாவிற்குச் சென்று அங்கு பேராயராகப் பணியாற்றினார். 

ஏழைகளிடமும் நோயாளர்களிடமும் மிகுந்த இரக்கம் கொண்டிருந்த இவர் தன்னிடம் இருந்ததை இல்லாதவருக்குத் தாராளமாக பகிர்ந்து கொடுத்தார். இவரது காலத்தில் பாரசிகர்களின் ஆதிக்கம் மிகுதியாக இருந்ததால், இவர் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்தார். 

இப்படி இறைவன்மீது மிகுந்த பற்றும், ஏழைகளிடம் இரக்கமும் கொண்டு வாழ்ந்து வந்த இவர் 616 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

Born to the Cypriot nobility; his father as the governor of Cyprus. Married briefly, and father of one child. Entered the religious life when his wife and child died of disease. Patriarch of Alexandria, Egypt in 608. Archbishop. Known as the Almoner because of his generosity to the poor. Helped refugees from Persian assults on the Holy Lands. Forced to leave Alexandria when the Persians threatened to overrun it, he returned to his home on Cyprus. Predicted the date of his own death.

No comments:

Post a Comment