† இன்றைய புனிதர் †
(நவம்பர் 2)
✠ அருளாளர் ஜான் போடீ ✠
(Blessed John Bodey)
கல்வியாளர், பொதுநிலை இறையியலாளர், மறைசாட்சி:
(Academic Jurist, Lay Theologian, and Martyr)
பிறப்பு: கி.பி. 1549
வெல்ஸ், சோமர்செட், மேன்டிப் மாவட்டம், தென்மேற்கு இங்கிலாந்து
(Wells, Somerset, Mendip district, South West England)
இறப்பு: நவம்பர் 2, 1583
ஆன்டோவார், ஹேம்ப்ஷைர், இங்கிலாந்து
(Andover, Hampshire, England)
முக்திப்பேறு பட்டம்: டிசம்பர் 15, 1929
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)
நினைவுத் திருநாள்: நவம்பர் 2
அருளாளர் ஜான் போடீ, ஒரு ஆங்கிலேய ரோமன் கத்தோலிக்க கல்வியாளராகவும், பொதுநிலை இறையியலாளராகவும் இருந்தார். கி.பி. 1583ம் ஆண்டு, மறைசாட்சியாக மரித்த இவர், கி.பி. 1929ம் ஆண்டு, அருளாளராக கத்தோலிக்க திருச்சபையால் உயர்த்தப்பட்டார்.
இவர், தென்மேற்கு இங்கிலாந்து (South West England) நாட்டின், சோமர்செட் (Somerset) மாநிலத்தின், மேன்டிப் (Mendip district)மாவட்டத்தின், வெல்ஸ் (Wells) எனப்படும் ஒரு கத்தோலிக்க நகரத்தில், கி.பி. 1549ம் ஆண்டு, பிறந்தார். ஒரு பணக்கார வியாபாரியின் மகனாகப் பிறந்த இவர், "வின்செஸ்டர் கல்லூரி" (Winchester College) எனப்படும், பிரிட்டிஷ் பொதுப் பள்ளி பாரம்பரியத்தில் சிறுவர்களுக்கான ஒரு சுயாதீன உறைவிடப் பள்ளியில் தமது பள்ளிக் கல்வியையும், "ஐக்கிய அரசு" (United Kingdom) நாடுகளிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் (University of Oxford) கீழுள்ள கல்லூரிகளில் ஒன்றான, "புதிய கல்லூரியில்" (New College) பட்டப்படிப்பையும் பயின்ற இவர், 1568ம் ஆண்டு, அதே கல்லூரியின் ஆசிரியருமானார். பின்னர், அங்கேயே முதுகலை பட்டமும் பெற்றார். ஆனால், ஐவரும், இவருடன் ஆசிரிய பணியாற்றிவந்த மற்றும் ஏழு பெரும், கி.பி. 1576ம் ஆண்டு, கல்லூரிக்கு வருகைதந்த "வின்செஸ்டர் ஆயர்" (Bishop of Winchester), "ராபர்ட் ஹார்ன்" (Robert Horne,) என்பவரால் தம் பணியை இழந்து வெளியேற்றப்பட்டனர்.
அதற்கு பிந்தைய வருடம், சிவில் சட்டம் (Civil law) கற்பதற்காக ஃபிரான்ஸ் நாட்டின் "டோவாய்" (Douai) என்னுமிடத்திலுள்ள "ஆங்கிலேய கல்லூரிக்கு" (English College) சென்றார். ஆனால், கி.பி. 1578ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், இங்கிலாந்து திரும்பினார். திரும்பியதும், அவர் "ஹாம்ப்ஷயர்" (Hampshire) நகரின் பள்ளி ஆசிரியரானார். 1580ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், இவரது சக பள்ளி ஆசிரியரான "ஜான் ஸ்லேடு" (John Slade) என்பவருடன் சேர்ந்து, "ராயல் மேலாதிக்கத்தை" (Royal Supremacy) மறுத்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டு, கால்களில் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, "வின்செஸ்டர் காவுல்" (Winchester Gaol) சிறையில் மூன்று ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டார். கி.பி. 1583ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், உயர் தேசத்துரோகத்திற்காக கண்டனம் செய்யப்பட்டார். இந்த தண்டனை அநியாயமானது மற்றும் சட்டவிரோதமானது என்ற உணர்வு வெளிப்படையாக இருந்த காரணத்தால், அவர்கள் மீண்டும் விசாரிக்கப்பட்டனர். கி.பி. 1583ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், "ஹாம்ப்ஷயர்" (Hampshire) மாகாணத்தின் "அன்டோவர்" (Andover) சிறைச்சாலையில், மீண்டும் கண்டனம் செய்யப்பட்டார்.
ஒரு ஆங்கிலேய இறையியலாளரும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் (University of Oxford) கீழுள்ள "மகதலின் கல்லூரியின்" தலைவரும் (President of Magdalen College), இங்கிலாந்து திருச்சபையின் (Church of England) "க்ளோசெஸ்டர்" (Gloucester) மற்றும் "வின்செஸ்டர்" (Winchester) பேராலயங்களின் தலைவருமான, "லாரன்ஸ் ஹம்ப்ரி" (Lawrence Humphrey) என்பவருடன், "பைத்தீனிய" நகரான "நிசியா" (Bithynian city of Nicaea) எனுமிடத்தில் நடந்த கிறிஸ்தவ ஆயர்களின் முதலாவது மகா சபை (The First Council of Nicaea) தொடர்பாக, ஜான் போடீ பல சர்ச்சைகளைக் கொண்டிருந்தார். "யூசிபியஸிடமிருந்து" (Eusebius) அவரது குறிப்புகள் இன்னும் உள்ளன.
ஜான் போடீ, தமது இரண்டாவது வழக்கு விசாரணைக்குப் பிறகு, சிறையிலிருந்து, ஆங்கில கத்தோலிக்க தெய்வீக முனைவர் "ஹம்ப்ரி எலி" என்பவருக்கு பின்வருமாறு எழுதினார்:
"பூமியில் பரவும் எமது காரணங்களுக்காக, இரும்பும், பரலோகத்தில் தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற கற்களை மிஞ்சும் என்று நாங்கள் கருதுகிறோம். அதுவே எமது குறிக்கோள். அதுவே எமது விருப்பமுமாகும். இந்நிலையில், நாங்கள் தினமும் அச்சுறுத்தப்படுகிறோம். தடைகள் எப்போது வாசலுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்த்திருக்கிறோம். எங்கள் வலிமை, எங்கள் மகிழ்ச்சி மற்றும் இறுதிவரை எங்கள் விடாமுயற்சி ஆகியவற்றிற்காக உங்கள் அனைவரின் நல்ல ஜெபங்களையும் நாங்கள் விரும்புகிறோம் என்று கடவுளின் பொருட்டு நான் உங்களைக் கோருகிறேன்."
- எங்கள் பொறுமை பள்ளியிலிருந்து.
செப்டம்பர் 16, 1583
இங்கிலாந்து தேசத்தின் மகாராணியை இங்கிலாந்து கிறிஸ்தவ திருச்சபையின் தலைவியாக ஒப்புக்கொள்ளாத காரணத்திற்காகவும், தாம் கொண்டிருந்த கத்தோலிக்க விசுவாசத்திற்காகவும், ஜான் போடீ, 1583ம் ஆண்டு, நவம்பர் மாதம், 2ம் தேதி, ஆண்டோவரில் (Andover) தூக்கிலிடப்பட்டார்.
தூக்கு மேடையில் நின்றிருந்த ஜான் போடீ, அங்கு சூழ்ந்திருந்த மக்களை பார்த்து, பின்வருமாறு கூறினார்:
"உண்மையில், நான் இரண்டு முறை தண்டிக்கப்பட்ட காரணத்தால், நான் போதுமான அளவு தணிக்கை செய்யப்பட்டுள்ளேன்... திருப்பலி கேட்பதனையும், 'மரியே வாழ்க' என்று கூறுவதனையும் தேசத்துரோகம் என்று நீங்கள் நினைத்தால், அந்த தேசத்துரோகத்தினை நீங்கள் தாராளமாகச் செய்யலாம்... உலக சம்பந்தமான, மற்றும் அனைத்து லௌகீக காரணங்களுக்காகவும், நான் அன்னை மரியாளையே எனது சட்டபூர்வ மகாராணியாக ஒப்புக்கொள்கிறேன்... வேறு யாருமல்லர்... இங்குள்ள நல்ல மனிதர்கள்... ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்... இங்கிலாந்து நாட்டின் மகாராணியை, இங்கிலாந்து கிறிஸ்தவ திருச்சபையின் தலைவியாக ஒப்புக்கொள்ளாத ஒரே காரணத்துக்காக நான் சாகிறேன்... அதனை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்... ஒப்புக்கொள்ளவே மாட்டேன்... உங்கள் எலிசபெத் மகாராணியின் மாட்சிமை, அமைதி, மற்றும் பாதுகாப்பிற்காக கூட நான் கடவுளை நீண்டகாலமாக ஜெபிக்கிறேன்... நீங்கள் வேறு யாருக்கும் கீழ்ப்படியக்கூடாது என்று நான் விரும்புகிறேன்..."
ஜான் போடீயின் சகோதரர் "கில்பர்ட்" (Gilbert), கி.பி. 1581ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 28ம் நாளன்று, இயேசுசபையின் குருவான, அருட்தந்தை "அலெக்சாண்டர் பிரையண்ட்" (Alexander Briant) என்பவருடன் கைது செய்யப்பட்டார். அவர், "பிரிட்வெல்" (Bridewell) எனுமிடத்தில், சவுக்கடி தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டர். பின்னர் கிளைச் சிறைகளில் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டார். பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ஆஜராகாமல், ஃபிரான்ஸ் நாட்டின் "ரைம்ஸ்" (Rheims) நகருக்கு தப்பியோடினார்.
† Saint of the Day †
(November 2)
✠ Blessed John Bodey ✠
Academic Jurist, Lay Theologian, and Martyr:
Born: 1549 AD
Wells, Somerset, Mendip district, South West England
Died: November 2, 1583
Andover, Hampshire, England
Beatified: December 15, 1929
Pope Pius XI
Feast: November 2
Blessed John Bodey, was an English Roman Catholic academic jurist and lay theologian. He was martyred in 1583 and beatified in 1929.
John Bodey was born in Wells, Somerset, in 1549. His father was a wealthy merchant. He studied at Winchester College and New College, Oxford, of which he became a Fellow in 1568 and took an M.A. degree in February 1576. In June 1576, he and seven others were deprived of their fellowships by the visitor, Robert Horne, Bishop of Winchester, and expelled.
The following year he went to Douay College to study civil law but returned to England in February 1578. Upon his return, he became a schoolmaster in Hampshire. Arrested in 1580, he was kept in iron shackles in Winchester gaol and was condemned in April 1583, together with John Slade, a schoolmaster, for high treason by denying the Royal Supremacy. There was apparently a feeling that this sentence was unjust and illegal, and they were retried—and condemned again—at Andover, Hampshire, in August 1583.
Bodey had a controversy with Lawrence Humphrey, Dean of Winchester, on the Nicene Council, and his notes from Eusebius still exist. After his second trial, he wrote from prison to Dr Humphrey Ely, "We consider that iron for this cause borne on earth shall surmount gold and, precious stones in Heaven. That is our mark, that is our desire. In the mean season, we are threatened daily and do look still when the hurdle shall be brought to the door. I beseech you, for God's sake, that we want not the good prayers of you all for our strength, our joy, and our perseverance unto the end. ...From our school of patience the 16th September 1583."
Bodey was hanged, drawn and quartered at Andover on 2 November 1583. At his execution, he said:
“Indeed, I have been sufficiently censured, for I have been condemned twice; if you may make the hearing of a Blessed Mass treason, or the saying of an Ave Maria treason, you may make what you please treason... I acknowledge her as my Lawful Queen in all temporal causes, and none other... Ye shall understand, good people all, I suffer death not for not granting her Majestie to be supreme head of Christ's Church in England, which I may not and will not grant; I pray God long to preserve her Majestie in tranquillity over you, even Queen Elizabeth, your queen and mine; I desire you to obey none other.”
Bodey's brother Gilbert was arrested with Alexander Briant on 28 April 1581. He was scourged at Bridewell and afterwards confined at one of the Counter Prisons. He was released on bond, and when not called to appear, escaped to Rheims.
John Slade:
Like Bodey, Slade attended the New College, Oxford until, being expelled for being Catholic, he travelled to Douai to take the study of law. However, since as a Catholic he was not permitted to practice, he became a tutor in a gentleman's household in Dorset. Slade was eventually arrested and confined with Bodey at Winchester. Slade was hanged, drawn, and quartered at Winchester 30 October 1583.
No comments:
Post a Comment