புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

05 July 2020

புனித ட்ரிஃபினா (ஆறாம் நூற்றாண்டு) July 4

ஜூலை 5 

புனித ட்ரிஃபினா  (ஆறாம் நூற்றாண்டு)
இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரிட்டினியைச் சார்ந்தவர். இறைவன்மீது மிகுந்த பற்று கொண்ட  ஒரு குடும்பத்தைச் சார்ந்த இவர், ஓர் ஆண்மகனை மணந்தார்.

இவர்களுடைய இல்லற வாழ்வு நன்றாகச் சென்றது.  இறைவன் இவர்களுக்கு ட்ரிமோருஸ் என்ற குழந்தையைத் தந்தார். இப்படி இருக்கையில், இவருடைய கணவர் திடீரென இறந்தார். இதனால் இவர் தனித்து விடப்பட்டார்.

இதற்குப் பிறகு இவர் தன்னுடைய மகன் ட்ரிமோருஸை இறை நம்பிக்கையிலும் பிறரன்பிலும்  நல்ல விதமாய் வளர்த்து வந்தார். இச்செய்தி பிரிட்டினியில் இருந்த ஓர் அரச அதிகாரிக்குத் தெரியவந்தது. அவன் கிறிஸ்தவர்களை அறவே வெறுத்தவன்.

அவன் ட்ரிஃபினாவின் மகன் ட்ரிமோருஸைப் பிடித்துத் தலையை வெட்டிக் கொன்றுபோட்டான். பின்னாளில் இந்த ட்ரிமோருஸ் புனிதராக உயர்த்தப்பட்டார்.

தன் மகனுடைய இறப்புக்குப் பிறகு ட்ரிஃபினா, ஒரு துறவுமடத்தில் தஞ்சமடைந்து, அங்கு தன்னுடைய வாழ்வின் கடைசிக்காலம் மட்டும் இருந்து, இறையடி சேர்ந்தார்.

No comments:

Post a Comment