புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 March 2021

✞ தூய சூசையப்பர் ( யோசேப்பு )புகழ்மாலை ✞*

*✞ தூய சூசையப்பர் ( யோசேப்பு )புகழ்மாலை ✞*

சுவாமி கிருபையாயிரும்.

கிறிஸ்துவே கிருபையாயிரும்.

சுவாமி கிருபையாயிரும்.

கிறிஸ்துவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே, எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா!

-எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா!

-எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

தூய ஆவியாகிய சர்வேசுரா!

-எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா!

-எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

புனித மரியாயே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித சூசையப்பரே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தாவீது இராஜாவின் கீர்த்தி பெற்ற புத்திரனே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிதாப்பிதாக்களின் மகிமையே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ தாயாரின் பத்தாவே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னிமரியாளின் கற்புள்ள காவலனே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவகுமாரனை வளர்த்த தகப்பனே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கிறிஸ்துநாதரை உற்சாகப் பற்றுதலுடன் காப்பாற்றினவரே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருக்குடும்பத்தின் தலைமையானவரே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தம நீதிமானான புனித சூசையப்பரே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தம விரத்தரான புனித சூசையப்பரே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தம விவேகமுடைத்தான புனித சூசையப்பரே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தம தைரியசாலியான புனித சூசையப்பரே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தம கீழ்ப்படிதலுள்ளவரான புனித சூசையப்பரே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தம பிரமாணிக்கமுள்ளவரான புனித சூசையப்பரே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொறுமையின் கண்ணாடியே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தரித்திரனின் அன்பனே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தொழிலாளிகளுக்கு மாதிரிகையே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சம்சார வாழ்க்கையின் ஆபரணமே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னிகையின் காவலனே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குடும்பங்களுக்கு ஆதரவே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாதிக்காரர்களுக்கு நம்பிக்கையே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மரிக்கிறவர்களுக்கு பாதுகாவலரே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பசாசுகளை நடுநடுங்கச் செய்கிறவரே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரிசுத்த திருச்சபையின் பரிபாலனே!

-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!

-எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!

-எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!

-எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

முதல்வர்: கர்த்தர் அவரை தமது வீட்டின் எஜமானாக ஏற்படுத்தினார்.

துணைவர்: அவருடைய உடைமைகளை எல்லாம் நடப்பிக்கவும் ஏற்படுத்தினார்.

செபிப்போமாக!

சர்வேசுரா சுவாமி! உம்முடைய மகா புனித மாதாவின், பரிசுத்த பத்தாவாக, முத்தனான சூசையப்பரை, மனோவாக்குக் கெட்டாத பராமரிக்கையால் தெரிந்துக் கொள்ளத், திருவுளமானீரே!

பூலோகத்தில், அடியோர்களை ஆதரிக்கிறவரென்று, எங்களால் வணங்கப்படுகிற அவர், பரலோகத்தில், எங்களுக்காக மனு பேசுகிறவராய் இருக்கும் படிக்கு, நாங்கள் பாத்திரவான்களாக, தேவரீர் அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

பிதாவோடும், தூய ஆவியோடும், சதாகாலமும் ஜீவியருமாய், இராச்சிய பரிபாலனம் பண்ணுகிற ஆண்டவரே!

-ஆமென்.

நவநாள் செபம்

எங்கள் உள்ளங்களில் குடிகொண்டிருக்கும் எங்கள் நல்ல தந்தை புனித சூசையப்பரே!

உமது அடைக்கலம் மிகவும் மகத்தானது! 
வல்லமை மிக்கது!

இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது.

எனவே, என் எண்ணங்களையும், ஆசைகளையும் உமது அடைக்கலத்திலே வைக்கிறேன்.

(உங்களுக்கு தேவையான வரங்களை கேட்கவும்)

எங்கள் நல்ல தந்தை புனித சூசையப்பரே!

நான் இப்பொழுது உம்மிடத்தில் கூறியதை, எல்லாம் வல்ல எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவிடம், உமது வல்லமைமிக்க பரிந்துரையால் கேட்டுப் பெற்றுத்தாரும்.

இதைச் செய்வதன் மூலம், மறு உலகில், உமக்குள்ள வல்லமையை, எல்லாம் வல்ல நம் கடவுளாகிய தந்தையிடம் சொல்லி, நன்றி செலுத்தக் கடமைப்படுவேன்.

நல்ல தந்தை புனித சூசையப்பரே!

உம்மையும், உம் திருக்கரங்களில் உறங்கும் இயேசுவையும், சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை.

அவர், உம் மார்போடு சாய்ந்து தூங்கும் வேளையில், அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

அவரை என் பொருட்டு, இணைத்து அணைத்துக் கொள்ளும். 
என் பெயரால், அவர் நெற்றியில் முத்தமிடும். 
நான் இறக்கும் தருணத்தில், அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும்.

மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலரே! 

எங்களுக்காக மன்றாடும். - ஆமென்.

புனித சூசையப்பரிடம் செபம்

மகா பாக்கியம் பெற்ற புனித சூசையப்பரே!

எங்களுடைய துன்ப வேளையில் உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின்பு, உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம்.

தேவ தயாபரரான, ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த, புனித கன்னிமரியாளிடத்தில் உமக்குள்ள சிநேகத்தின் பெயராலும், திவ்விய குழந்தை இயேசுநாதருக்கு, நீர் காண்பித்த தந்தையின் அன்பைக் குறித்தும், உம்மிடத்தில் நாங்கள் கேட்கும் மன்றாட்டு ஏதென்றால்...

(உங்களுக்கு தேவையான வரங்களை  நல்ல தந்தை புனித சூசையப்பரிடம் கேட்கவும்.)

மேலும்,

இயேசுகிறிஸ்துநாதர், தமது இரத்தத்தால் நமக்காக சம்பாதித்த சுதந்திரத்தை, தேவரீர் கிருபையாய்ப் பார்க்கவும், எங்கள் இக்கட்டிலே, உமது பலமுள்ள ஒத்தாசையால் துணையாயிருக்கவும் மன்றாடுகிறோம்.

ஓ! திவ்விய குடும்பத்தை, உத்தம ஞானத்தோடு நடத்திவந்த கைத்தாதையே!

இயேசுகிறிஸ்து தம்முடையவர்களாக தெரிந்து கொண்ட மக்களைப் பராமரித்தருளும்!

ஓ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தகப்பனே!

நாங்கள் எவ்வித தவற்றிலும் கேட்டிலும் விழாதபடி, எங்களைக் காப்பாற்றும்!

ஓ! எங்களைப் பாதுகாத்தருளும்படி மேலான வல்லமையுள்ளவரே!

எங்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில், கருணையுடன் எங்களுக்குத் துணையாய் நிற்பீராக.

திவ்விய பாலகன், முன்னாள் சாவின் ஆபத்துக்குத் தப்பித்துக் கொள்ளும்படி, தேவரீர் எவ்விதம் ஏதுவாயிருந்தீரோ, அவ்விதமே இறைவனுடைய திருச்சபையையும், பசாசின் வலையிலும் எவ்வித ஆபத்திலும் இருந்தும் பாதுகாத்தருளும்!

உமது பாதுகாவல் இடைவிடாமல் என்றும் இருக்கக்கடவது!

உமது புண்ணிய மாதிரிகையாலும், உம்முடைய உதவியின் துணையாலும், நாங்கள் எல்லோரும் புனிதராய் வாழ்ந்து, பக்தியாய் இறந்து, விண்ணுலகில் முடிவில்லாப் பேறு பெற்று வாழும்படி கிருபை செய்ய, உம்மை மன்றாடுகிறோம்.

- ஆமென்.

புனித சூசையப்பர்

1. திருக்குடும்பத்தின் பாதுகாவலர் ;  
2. குடும்பங்களின் பாதுகாவலர் ;
3. நன்மரணத்திற்குப் பாதுகாவலர் ; ( ஏனெனில் இவரது மரணத்தின் போது நம் அன்னையும் , நமது ஆண்டவரும் இவருக்கு அருகில் இருந்தனர் )
4. உழைப்பாளர்களின் பாதுகாவலர் ; ( திருக்குடும்பத்தைக் காக்க அயராது உழைத்தவர் ; எனவே எல்லா உழைப்பாளர்களுக்கும் பாதுகாவலர் )
5. பொறியியலாளர்களின் , பொறியியல் வேலை செய்பவர்களின் பாதுகாவலர்  

இறை அனுபவம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் புனித சூசையப்பரைப் போல இருக்க வேண்டும்.
எவ்வாறெனில் ஆண்டவரையும் நம் அன்னையையும் அருகே காண வேண்டும் ; அவர்களோடு இருக்க வேண்டும் ; அவர்களுக்காக உழைக்க வேண்டும் ; அவர்களது மகிழ்ச்சியைத் தேட வேண்டும் ; அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் ;கேள்விகள் இன்றி ஆண்டவரையும் , அன்னையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் ; 

எல்லாவற்றிக்கும் மேலாக , விவிலியத்தில் நீங்கள் எங்கேயும் ' சூசை கூறினார் ' என்று ஒரு வார்த்தை கூட இருக்காது ; இறை அனுபவம் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு வார்த்தை கூட பேச வேண்டிய அவசியம் இல்லாதபடி , பேச முடியாதபடி அவர் இறை அனுபவத்தில் நிறைந்திருந்தார் .

மார்ச் 19 -  புனித சூசையப்பர் திருவிழா .
புனித சூசையப்பர் நவநாள் -  புதன் கிழமை

மார்ச் மாதம் முழுவதும் இவருக்கு அர்பணிக்கப்பட்ட மாதம் . இவரது பரிந்துரை பெற இவரை மன்றாடுவோம்
முந்தின நாள்

மார்ச் மாதத்தினை புனித சூசையப்பருக்கு ஒப்புக்கொடுப்பதற்கான காரணமும் நோக்கமும்

தியானம்

- தந்தையாகிய புனித சூசையப்பரை அனைத்து புனிதர்களையும் புண்ணியவான்களையும் விட அதிகமாக வணங்கி  மேன்மைப்படுத்த வேண்டும். இவர் அனைவரையும்விட அதிகமாக உயர்த்தப் பட்டவரானதாலும், புண்ணியத்திலும், பக்தியிலும், மகிமையிலும், அதிகாரத்திலும் சிறந்து விளங்குவதாலும், சகல கிறிஸ்தவர்களுக்கும் அடைக்கலமும ஆதரவுமாக இருப்பதாலும் நாமும் நம்முடைய துன்ப துயரங்களில் அவரை வணங்கி அவர் ஆதரவை நாடித்தேட வேண்டும். மரியன்னையின் கரங்களில் உயிர்விட்ட பாக்கியமும் நன் மரணத்திற்கு பாதுகாவலுமாக இருக்கும் மேன்மையும் உடையவராக இருப்பதாலும் அவரிடம் நாம் விசுவாசம், நம்பிக்கை பக்தியோடு செபிக்க கடமைப்பட்டுள்ளோம். 

சனிக்கிழமை மரியன்னைக்குரிய நாளாகும். புதன்கிழமையானது புனித சூசையப்பருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் மரியன்னைக்கும், மார்ச் மாதம் புனித சூசையப்பருக்கும் குறிக்கப்பட்ட மாதங்களாகும. இந்த முப்பத்தொரு நாட்களும் பக்தி முயற்சிகளில் ஈடுபட்டு, இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும். இதனை கிறிஸ்தவ மக்கள் கடைப்பிடிக்க உதவியாக இந்நூல் விளங்குகிறது.

- நாம் செலுத்தும் பக்தி வணக்கமானது  ஒரு மரத்திற்கு ஒப்பானது. இந்த மரத்தின் வேரானது நமது மனதில் உள்ள பாசம் ; இதன் மலர்கள் பக்தியால் வருகிற செபமும் மன்றாட்டும், இதன் காய் கனிகள் தூயவர்களை பின்பற்றுதல் ஆகும். மலர்கள் மலர்ந்து கனிகளை வழங்காவிட்டால் எந்த பயனும் இல்லாததுபோல் கிறிஸ்தவர்கள் புனித சூசையப்பரின் புண்ணிய வாழ்வு வாழாவிட்டால் எந்த பயனுமில்லை. எண்ணிக்கையில்லா கிறிஸ்தவர்கள் இம்மாதத்தினை புனித சூசையப்பருக்கு ஒப்புக்கொடுப்பதுபோல நாமும் ஒப்புக்கொடுத்து அவரின் ஆசீரைப் பெறுவோம்.

புதுமை

பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாநகரில் மரியன்னையின் புகழ்பெற்ற ஆலயம் உள்ளது. அங்கு தூய இருதய சபை நிறுவப்பட்டுள்ளது. இச்சபையில் பல கோடி மக்கள் சேர்ந்து புண்ணிய வழியில் ஈடுபட்டு வருகிறார்கள். இம்மாதத்தில் புனித சூசையப்பரின் பீடம் அலங்கரிக்கப்பட்டு திருநாள்களை வெகு சிறப்புடன் நடத்திவருவதோடு கிறிஸ்தவர்கள் ஒப்புரவு அருட்சாதனம் பெற்று திவ்விய நற்கருணை உட்கொண்டு பக்தி முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்கள். தாங்கள் பெற்ற உதவிகளுக்கு நன்றியாக பொன், வெள்ளி காணிக்கைகளை அவரது காலடியில் மக்கள் சமர்ப்பித்தனர். மக்கள் அவரிடம் பக்தி கொண்டு ஏராளமான வரங்களை பெற்று நன்மை அடைந்து வருகிறார்கள். நாமும் இறையாசீர் அதிகமாக கிடைக்கவும், பாவிகள் மனந்திரும்பவும், அனைத்து மக்களும் கிறிஸ்துவை வழிபடவும், நமக்கு தேவையான வரங்கள் கிடைக்கவும் புனித சூசையப்பரை மன்றாடுவோம்.

3பர, அரு, பிதா

செபம்

தந்தையாகிய புனித சூசையப்பரே! மிகுந்த பக்தியோடு இம்மாதத்தினை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். இந்த மாதத்தில் எங்களுடைய செபங்களையும், புகழ்ச்சியையும், நற்செயல்களையும் தயவுடன் ஏற்றுக்கொள்ளும். சகல மக்களும் செய்யும் செபங்களை உமது பாதங்களில் காணிக்கையாக்குகிறோம். இந்த மாதத்திலும் எங்கள் வாழ்நாள் முழுவதிலும் நாங்கள் பாவத்தைச் செய்யாமல் தர்ம வழியில் நடக்க உதவி செய்யும். உமது மகனாகிய இயேசுகிறிஸ்துவிடமும், மரியன்னையிடமும் எங்களுக்காக செபிக்கும்படிக் கேட்டுகொள்கிறோம். ஆமென்.

இன்று சொல்ல வேண்டிய செபம்

தந்தையாகிய புனித சூசையப்பரே! உமது அடியவர்களாயிருக்கிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தந்தையாகிய புனித சூசையப்பரே! உமது சீடர்களாயிருக்கிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தந்தையாகிய புனித சூசையப்பரே! உமது குழந்தைகளாகிய எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செய்ய வேண்டிய நற்செயல்

வீட்டிலோ, ஆலயத்திலோ இருக்கும் புனித சூசையப்பரின் திரு சுரூபத்தை அலங்காரம் செய்வது.

புனித சூசையப்பருக்கு செபம்(1900 ஆண்டுகள் பழமையானது)

புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. ஏனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.
உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன்.
புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும். - ஆமென்.

No comments:

Post a Comment