Saint Thomas the Apostle
திருத்தூதரான தூய தோமா
புனித தோமா
திருத்தூதர்
பிறப்பு : கி. பி 1 (முற்பகுதி)
கலிலேயா
இறப்பு : டிசம்பர் 21, 72 கி. பி
சென்னை, இந்தியா (நம்பப்படுகிறது)
ஏற்கும் சபை/ சமயம் : எல்லா கிறிஸ்தவப் பிரிவுகளும்
முக்கிய திருத்தலங்கள் :
சாந்தோம் தேவாலயம், சென்னை
நினைவுத் திருவிழா :
ஜூலை 3 - கத்தோலிக்கம்
அக்டோபர் 6 அல்லது ஜூன் 30 - கிழக்கு மரபு
உயிர்ப்பு விழாவை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை - பொது
சித்தரிக்கப்படும் வகை : இயேசுவின் விலாவில் கையை இடுபவராக, வேல்
பாதுகாவல் : கட்டட கலைஞர், இந்தியா, மற்றும் பல
திருத்தூதர் புனித தோமா (அல்லது) புனித தோமையார், 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கிறிஸ்தவ புனிதராவார். இவர் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர்.
"நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" (யோவான் 20:28) என்று உயிர்த்த இயேசுவை நோக்கி இவர் கூறிய வார்த்தைகள் மிகவும் புகழ்பெற்றவை.
திருத்தூதரின் கல்லறைப் பீடத்தில் இந்த வார்த்தைகளே பொறிக்கப்பட்டுள்ளன.
இயேசு உயிர்த்துவிட்டார் என மற்ற திருத்தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவர் 'சந்தேக தோமா' (Doubting Thomas) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார்.
இந்தியாவில் இயேசுவின் நற்செய்தியை முதன்முதலில் அறிவித்தவர் இவரே என்று பழங்கால கிறிஸ்தவ மரபும், ஏடுகளும் சான்று பகர்கின்றன. கேரளாவில் வாழும் தோமையார் கிறிஸ்தவர்களும் இதற்கு சான்றாக உள்ளனர்.
பெயரும் அடையாளமும் :
பெயர் மரபு :
இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவரான இவரை நற்செய்தி நூல்கள் தோமா என்ற பெயருடனேயே அடையாளப்படுத்துகின்றன. 'தோமா' என்னும் அரமேய மொழிச் சொல்லுக்கு இரட்டையர் என்பது பொருள். இதற்கு இணையான திதைமுஸ் (Didymus, தமிழ் ஒலிப்பெயர்ப்பு: திதிம்) என்ற கிரேக்க மொழிச் சொல் யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இந்த பெயரின் அடிப்படையில் இவருடன் இரட்டையராகப் பிறந்த ஒரு சகோதரரோ, சகோதரியோ இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பழங்கால சிரிய மரபின்படி, திருத்தூதரின் முழுப்பெயர் யூதா தோமா என்று அறியப்படுகிறது.
இந்தியாவில் கிறிஸ்தவப் பணி :
இந்தியாவில் தோமையார் முதன் முதலில் பண்டைய சேர துறைமுகமான முசிறியில் (தற்போது கேரளாவிலுள்ள) கி.பி. 52-ல் பாதம் பதித்தார். தென் இந்தியாவின் கடற்கறை ஓரமாக நற்செய்தி பணியாற்றிய இவர், ஏழரை ஆலயங்களை நிறுவினார். அவை கொடுங்கல்லூர், பழவூர், கொட்டகாவு, கொக்கமங்கலம், நிரனம், நிலக்கல், கொல்லம் மற்றும் திருவிதாங்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
இறப்பு :
தோமையார் கி.பி 72-ல் சென்னை மயிலாப்பூரில் மரித்தார் என நம்பப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த மார்கோ-போலோ குறிப்புப்படி சென்னை அருகே அம்புகளால் குத்தப்பட்டு இறந்தார். அவரது மீப்பொருட்கள் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் உள்ளன.
விழா நாட்கள் :
9ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ரோமன் நாள்காட்டியில், புனித தோமாவின் விழா நாளாக டிசம்பர் 21ம் தேதி குறிக்கப்பட்டிருந்தது.
1969ம் ஆண்டு ரோமன் நாள்காட்டி திருத்தி அமைக்கப்பட்டபோது, புனித ஜெரோமின் மறைசாட்சிகள் நினைவுநாள் குறிப்பின் அடிப்படையில் திருத்தூதர் தோமாவின் விழா ஜூலை 3ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான ஆங்கிலிக்கத் திருச்சபைகள் டிசம்பர் 21ம் தேதியே புனிதரின் விழாவை சிறப்பிக்கின்றன. கிழக்கு மரபு வழி திருச்சபையைச் சேர்ந்தவர்கள் புனித தோமாவின் விழாவை அக்டோபர் 19ம் தேதி (ஜூலியன் நாட்காட்டியில் அக்டோபர் 6ம் தேதி) கொண்டாடுகின்றனர்.
தோமா ஆண்டவரிடம் ஒரு தனிப்பற்றுதல் கொண்டிருந்தார். நாமும் ஆண்டவருடன் சென்று அவரோடு சாக வேண்டியிருந்தாலும் தயாராய் இருப்போம் என்று கூறியவர். தோமா ஆண்டவரின் விண்ணேற்பிற்கு பிறகு சென்று போதியுங்கள் என்ற அவரின் கட்டளையை நிறைவேற்ற புறப்படுகிறார். யுசிபியுஸ் என்ற புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். "அப்போஸ்தலர் யூதா ததேயுவை எடெஸ்ஸாவிலிருந்த அப்கர் என்ற அரசனுக்கு திருமுழுக்கு கொடுக்க அனுப்பியபின் தமக்கென பார்த்தியா மீட்ஸ், பெர்ஷியா இன்னும் பல அண்டை நாடுகளை தெரிந்துகொண்டு மறைபரப்பு பணியாற்றினார். தோமா. அப்போதுதான் இந்தியா வந்தார். "தோமாவின் பணிகள்" என்ற ஒரு நூல் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியிலேயே மக்களிடம் இருந்ததாக ஆதாரம் இருக்கிறது.
கொண்டோபெர்னஸ்(Condoberns) அல்லது குடுப்பாரா(Cudupara) என்ற மன்னரது ஆட்சி 46 ல் பெஷாவர் வரை பரவிக்கிடந்தது. பஞ்சாபிலிருந்து கொச்சின், திருவிதாங்கூர் சிற்றரசு வரைக்கும் பரவியிருந்தது. அதிலிருந்து " புனித தோமாவின் கிறிஸ்தவர்கள்" என்றே இப்பகுதியினர் அழைக்கப்பட்டு வந்தனர். தங்களுடைய திருவழிபாட்டுக்கு "சீரியக்" என்ற மொழியையே அன்று முதல் இன்றுவரை பயன்படுத்தியதோடல்லாமல் இன்று வரை "சீரியன் கிறிஸ்தவர்கள்" என்றும் அழைக்கப்படுகிறார்கள். சீரியக் மொழி உறுதியாக பெர்ஷியா, மெசப்பொத்தேமியா பகுதிகளிலுருந்து இறக்குமதியானது. தோமா முதன் முதலில் கிராங்கனூர் கடற்கரையை வந்தடைந்தார் எனவும், மலபாரில் மட்டும் 7 ஆலயங்கள் எழுப்பினார் எனவும், பின்னர் குமரி கடற்கரை வழியாக சென்னை வந்தடைந்தார் எனவும், அங்கே பலரையும் மனந்திருப்பிய பின் "சிறிய மலை" என்ற பெயர் கொண்ட இடத்தில் குத்திக் கொல்லப்பட்டார் எனவும் வரலாறு கூறுகின்றது. அவர் மைலாப்பூரில் அடக்கம் பண்ணப்பட்டதற்கு கல்லறை ஆதாரங்களும் உள்ளது.
522 ஆம் ஆண்டு போர்த்துகீசியர் சென்னை வந்தபோது, அவரது கல்லறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்த பொருட்கள் மைலாப்பூரில் சாந்தோம் பேராலயத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. இவரின் திருப்பண்டங்கள் பலவும் 4 ஆம் நூற்றாண்டில் எடெஸ்ஸாவுக்கு(Edesta) கொண்டு செல்லப்பட்டதாக "தோமாவின் பணிகள்" என்ற நூலில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மெசப்பொட்டேமியாவுக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் எடெஸ்ஸாவிலிருந்து பின்னர் அப்ரூஸ்ஸியில் உள்ள ஓர்டோனாவிற்கு(Ordon) எடுத்து செல்லப்பட்டு இன்றுவரை புனிதமாக காப்பாற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு தோமாவிற்கு இந்தியாவிற்குப் போகுமாறு சீட்டு விழுந்தது. எனவே அவர் இந்தியாவிற்கு வந்தார். அப்போது குண்டபோரஸ் என்னும் மன்னன் அழகு மிளிர்ந்த ஒரு மாளிகை கட்ட நினைத்தான். இந்தப் பொறுப்பை அவன் தன்னுடைய ஆலோசகராகிய ஹப்பான்ஸ் என்பவரிடம் ஒப்படைத்தான். ஹப்பான்ஸ் யாரிடம் இந்த வேலையைக் கொடுப்பது என நினைத்துக்கொண்டிருக்கும்போது, அவருக்குக் கனவில், தோமா என்னும் ஒருவர் இருக்கிறார், அவர் கட்டடக் கலையில் வல்லுநர் என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டது. எனவே அவர் தோமாவை அணுகிச் சென்று, மாளிகை கட்டும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். மன்னர் தோமாவிடம் மாளிகை கட்டுவதற்கான போதிய பணத்தைக் கொடுத்துவிட்டு, இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுப் பயணம் சென்றார்.
தோமாவோ, மன்னன் மாளிகை கட்டக் கொடுத்த பணத்தை அதற்காகப் பயன்படுத்தாமல், ஏழை எளியவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து, மன்னர் தோமாவை அழைத்து, “மாளிகை எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவர், “மாளிகை இங்கே இல்லை. விண்ணகத்திலே கட்டப்பட்டிருக்கிறது” என்றார். இதைக் கேட்டு சினமடைந்த மன்னன், தோமாவை சிறையில் அடைத்தான். இதற்கிடையில் மன்னனின் சகோதரன் காத் என்பவன் இறந்துபோனான். ஒருநாள் அவன் மன்னருக்குக் கனவில் தோன்றி, “சகோதரனே! விண்ணகத்தில் உனக்காக ஓர் அழகு மிளிர்ந்த மாளிகை கட்டப்பட்டிருக்கிறது, மேலும் நீ சிறையில் அடைத்து வைத்திருக்கும் மனிதர் சாதாரண மனிதர் அல்ல, அவர் கடவுளின் தூதர்” என்று உரைத்தான். இதை அறிந்த மன்னன் சிறையில் இருந்த தோமாவை விடுதலைசெய்து அனுப்பினான். அதோடு மட்டுமல்லாமல் அவரிடமிருந்து திருமுழுக்குப் பெற்று உண்மைக் கிறிஸ்தவனாக வாழத் தொடங்கினார்
திதிம் என அழைக்கப்படும் தோமா கலிலேயாவைச் சார்ந்தவர். இவரும் தூய பேதுரு, அந்திரேயா, யோவான் யாக்கோபு போன்று மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தார். ஆண்டவர் இயேசு அழைத்த உடன், இவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார். விவிலியத்தில் யோவான் நற்செய்தியைத் தவிர மற்ற நற்செய்தி நூல்களில் இவரைக் குறித்த செய்திகள் காணக் கிடைக்கவில்லை.
இயேசுவின் நெருங்கிய நண்பரான இலாசர் இறந்தபோது, இயேசு பெத்தானியாவிற்கு செல்லவேண்டும் என்று முடிவெடித்தார். அப்போது சீடர்கள் எல்லாம் இயேசுவிடம், “ரபி, இப்போதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று சொல்லி அவரைத் தடுத்தார்கள் (யோவா 11:8). ஆனால் தோமாவோ, “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்று சொல்லி தான் இயேசுவுக்காக எதையும் செய்யத் துணிந்தவர் என்பதை வெளிப்படுத்துகிறார்.
இன்னொரு சமயம் இயேசு சீடர்களிடம், “நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து, உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்” என்று சொல்லும்போது தோமா, “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்திற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்பார். அதற்கு இயேசு, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்பார். (யோவா 14: 1-6). இப்பகுதியில் இயேசு சொன்னது மற்ற சீடர்களுக்கும் புரியாதிருக்கும். ஆனால் அவர்கள் இயேசுவிடம் கேள்வி கேட்கத் துணியவில்லை. தோமாதான் மிகவும் துணிச்சலாக கேள்வியைக் கேட்டு, விளக்கத்தைத் தெரிந்துகொள்கிறார்.
இயேசு தன்னுடைய உயிர்ப்புக்குப் பிறகு, சீடர்களுக்குத் தோன்றினார். அவர் தோன்றிய நேரம் தோமா அங்கு இல்லை. எனவே சீடர்கள் அனைவரும், இயேசு தோன்றிய செய்தியை தோமாவிடம் எடுத்துச் சொன்னபோது, “அவர் நான் அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட காயங்களில் என் விரலையும், அவருடைய விலாவில் ஏற்பட்ட காயத்தில் என்னுடைய கையை விட்டால் ஒழிய நம்ப மாட்டேன் “என்கிறார். எட்டு நாட்களுக்குப் பிறகு சீடர்கள் அனைவரும் (தோமாவும் அதில் இருந்தார்) ஒன்றாகக் கூடி வந்தபோது, இயேசு அவர்கள் நடுவே தோன்றி அவர்களை வாழ்த்தினார். பின்னர் தோமாவிடம், “தோமா உம்முடைய விரலை என்னுடைய கையிலும், கையை என்னுடைய விலாவிலும் விட்டுப் பார்” என்று சொல்லிவிட்டு, “ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்பார். அப்போது தோமா, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்பார் (யோவா 20: 28). இப்பகுதியைக் வைத்து, நிறையப் பேர் ‘தோமா ஒரு சந்தேகப் பேர்வழி’ என்பர். ஆனால் உண்மையில் அவர் முழு உண்மையை அறிந்துகொள்வதற்காக இப்படிச் செயல்பட்டார் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும். “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்” என்று தோமா அறிக்கையிட்ட நம்பிக்கை அறிக்கையைப் போன்று வேறு யாரும் இப்படி வெளிப்படுத்தவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு, தோமா தற்போதைய ஈரான், பெர்சியா போன்ற பகுதிகளுக்குச் சென்று நற்செய்தி அறிவித்ததாகவும், இறுதியில் இந்தியாவின் தென்பகுதியில் வந்து நற்செய்தி அறிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் கிபி. 52 ஆம் ஆண்டு தோமா கேரளாவில் உள்ள கிராங்கநூர் பகுதியில் தரை இறங்கினார் என்றும் அங்கே ஏழு ஆலயங்களைக் கட்டி எழுப்பினார் என்றும் உறுதியாக நம்பப்படுகின்றது. அதற்கு கேரளாவில் உள்ள தோமையார் கிறிஸ்தவர்களே சான்றாக இருக்கின்றார்கள்.
தோமா கிராங்கநூரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அதன்பிறகு, சென்னையிலுள்ள மயிலாப்பூர் பகுதியில் நற்செய்தி அறிவித்தார். அவருடைய போதனையைக் கேட்டு நிறைய மக்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றினார்கள். இதனால் அவருக்கு இந்து பூசாரிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. ஆனால் தோமா தனக்கு வந்த எதிர்ப்புகளை எல்லாம் முறியடித்துவிட்டு, தொடர்ந்து நற்செய்தியை அறிவித்து வந்தார். ஒருசமயம் அவர் சின்ன மலையில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது பகைவர்கள் வந்து, அவர்மீது ஈட்டியைப் பாய்ச்சி அவரைக் கொலை செய்தார்கள்.
இவ்வாறு தோமா, முன்பு சொன்ன, “வாருங்கள் நாமும் போவோம், அவரோடு இறப்போம்” என்ற வார்த்தையை உண்மையாக்கிக் காட்டினார்.
232 ஆம் ஆண்டு தோமாவின் புனித பொருட்கள் எடேசாவிற்கு கொண்டு செல்லப்பட்டன. 15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர்கள் தோமாவின் கல்லறை இருந்த இடத்தில் ஆலயம் கட்டினார்கள். 1972 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த, திருத்தந்தை ஆறாம் பவுல் தோமாவை இந்திய நாட்டின் திருத்தூதராக அறிவித்தார்.
Also known as
• Apostle of India
• Didymus
• Doubting Thomas
• Judas Thomas
• the Twin
• Tomaso
Profile
Apostle. He was ready to die with Jesus when Christ went to Jerusalem, but is best remembered for doubting the Resurrection until allowed to touch Christ's wounds. Preached in Parthia, Persia and India, though he was so reluctant to start the mission that he had to be taken into slavery by a merchant headed that way. He eventually gave in to God's will, was freed, and planted the new Church over a wide area. He formed many parishes and built many churches along the way. An old tradition says that Thomas baptised the wise men from the Nativity into Christianity.
His symbol is the builder's square; there are several stories that explain it
• he built a palace for King Guduphara in India
• he built the first church in India with his own hands
• it is representative building a strong spiritual foundation as he had complete faith in Christ (though initially less in the Resurrection)
• he offered to build a palace for an Indian king that would last forever; the king gave him money, which Thomas promptly gave away to the poor; he explained that the palace he was building was in heaven, not on earth
Died
• stabbed with a spear c.72 in while in prayer on a hill in Mylapur, India
• buried near the site of his death
• relics later moved to Edessa, Mesopotamia
• relics moved to Tortona, Italy in the 13th century
Patronage
• people in doubt; against doubt
• architects
• blind people and against blindness
• builders
• construction workers
• geometricians
• stone masons and stone cutters
• surveyors
• theologians
• Ceylon
• East Indies
• India
• Indonesia
• Malaysia
• Pakistan
• Singapore
• Sri Lanka
• diocese of Bathery, India
• Castelfranco di Sopra, Italy
• Certaldo, Italy
• Ortona, Italy
Representation
• arrow
• builder's rule
• spear
• t-square
Saint Anatolius of Alexandria
அலெக்சாண்ட்ரியாவின் புனிதர் அனடோலியஸ்
ஆயர், ஒப்புரவாளர்:
பிறப்பு: கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலம்
அலெக்சாண்ட்ரியா, டோலேமெய்க் அரசு, எகிப்து
இறப்பு: ஜூலை 3, 283
லாவோடிசியா, ரோம சிரியா (தற்போதைய சிரியாவிலுள்ள லடகியா)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
நினைவுத் திருநாள்: ஜூலை 3
“லாவோடிசியா’வின் அனடோலியஸ்” (Anatolius of Laodicea) என்றும், “அலெக்சாண்ட்ரியா’வின் அனடோலியஸ்” (Anatolius of Alexandria) என்றும் அழைக்கப்படும் இப்புனிதர், ரோம சிரியாவின் (Roman Syria) மத்தியதரைக் கடலோரமுள்ள (Mediterranean) துறைமுக நகரான “லாவோடிசியா” (Laodicea) நகரின் ஆயர் ஆவார். அத்துடன், இயல்பியல் (Physical sciences) மற்றும் “அரிஸ்டோடிலியன் தத்துவத்தில்” (Aristotelean philosophy) அக்காலத்தைய முன்னோடி அறிஞர்களில் ஒருவராகவும் இருந்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Churches) மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் (Eastern Orthodox) இவரை புனிதராக ஏற்கின்றன.
புனிதர் அனடோலியஸ், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், எகிப்து (Egypt) நாட்டின் இரண்டாம் பெரிய நகரான அலெக்சாண்ட்ரியாவில் (Alexandria) பிறந்து வளர்ந்தவர் ஆவார். திருச்சபையின் பெரும் விளக்குகளில் ஒன்றாக மாறுவதற்கு முன்பு, அனடோலியஸ் அலெக்ஸாண்ட்ரியாவில் கணிசமான கௌரவமுள்ள பெரிய மனிதராக வாழ்ந்தார். கணிதம், வடிவவியல் (Geometry), இயற்பியல் (Physics), சொல்லாட்சிக் கலை (Rhetoric), “வாதமுறை ஆராய்ச்சி” (Dialectic) மற்றும் வானியல் (Astronomy) ஆகியவற்றைப் பற்றிய ஒரு பெரும் அறிவைப் பெற்றிருந்தார். கிறிஸ்தவ சரித்திர ஆசிரியரான “யூசேபியஸ்” (Eusebius of Caesarea) என்பவரின்படி, அலெக்ஸாண்டிரியாவிலுள்ள அரிஸ்டாட்டிலின் அடுத்தடுத்த பள்ளியைத் தக்கவைத்துக்கொள்ள அனடோலியஸ் தகுதியுடையவராக கருதப்பட்டார். புறமத பாகன் தத்துவவாதியான “இம்பம்லிகஸ்” (Pagan Philosopher) என்பவர், சிறிது காலம் இவரது சீடர்களிடையே கல்வி கற்றார்.
அவரால் எழுதப்பட்ட பத்து கணிதப் புத்தகங்களின் துண்டுகளும், இயேசுநாதர் உயிர்த்தெழுந்த கொண்டாட்ட நாள் பற்றிய (Paschal celebration) கட்டுரைகளும் இன்றளவும் உள்ளன.
அக்காலத்தில், அலெக்ஸாண்டிரியாவின் ஒரு பகுதியாயிருந்த “புருச்சியம்” (Bruchium) பிராந்தியத்தில் நடந்த கலகத்தை அனடோலியாஸ் எவ்வாறு உடைத்தெறிந்தார் என்பதையும் யூசெபிசியஸ் எழுதியுள்ளார். ஜெனோபியாவின் (Zenobia) படைகளால் நடத்தப்பட்ட அந்த கலகம், ரோமர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு பட்டினியாய் இருந்தது. அந்த நேரத்தில் புரூச்சியத்தில் (Bruchium) வாழ்ந்த துறவி, எல்லா பெண்களையும் குழந்தைகளையும், வயதான மற்றும் நோயாளிகளையும் அங்கிருந்து தப்பிப்பதற்கு ஏற்பாடு செய்தார். அது பாதுகாப்பு மற்றும் கிளர்ச்சியாளர்களை சரணடைய வைத்தது. இது, பாதிக்கப்பட்ட பல மக்களை காப்பாற்றியது, இத்துறவியின் நாட்டுப் பற்றுள்ள நடவடிக்கையாக அமைந்தது.
“லாவோடிசியா” (Laodicea) புறப்பட்ட அவரை, மக்கள் பிடித்து ஆயராக்கினார்கள். அவரது நண்பர் யூசேபியஸ் இறந்துவிட்டாரா அல்லது அவர்கள் இருவரும் சேர்ந்தே சேவை செய்தார்களா என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்தது.
Also known as
Anatolius of Laodicea
Profile
Noted scientist, philosopher, scholar, teacher, and writer. He wrote ten books on mathematics alone, and Saint Jerome praised his scholarship and writing. Head of the Aristotlean school in Alexandria, Egypt. However, he was known not just as a scholar but as a humble and deeply religious man. Ignorance horrified him, and part of his work with the poor was to educate them. Held a number of government posts in Alexandria.
During a rebellion against the Roman authorities in 263, the area of Alexandria was under seige, resulting in the starvation of both rebels and citizens who had nothing to do with the uprising. Anatolius met with the Romans and negotiated the release of non-combatant children, women, the sick, and the elderly, saving many, and earning him a reputation as a peacemaker. The rebels, freed of caring for the non-combatants, were able to fight even longer. However, when they lost, Anatolius found himself with enemies on each side of the conflict, and he decided to leave Alexandria.
Anatolius emigrated to Caesaria, Palestine. His reputation as a scholar and Christian had preceeded him, and he became assistant and advisor to the bishop. In 268, while en route to the Council of Antioch, he passed through Laodicea, Syria. Their bishop, Saint Eusebius of Laodicea, had just died, they saw Anatolius' arrival as a gift from God, and insisted that he assume the bishopric. He accepted, and spent his remaining fifteen years there.
Born
Alexandria, Egypt
Died
283 at Laodicea, Syria of natural causes
Representation
bishop with globes and mathematical books
Saint Eusebius of Laodicea
Also known as
• Eusebius of Alexandria
• Eusebio of...
Profile
Deacon in Alexandria, Egypt, serving under Saint Dionysius the Great. Exiled to Kefro, Libya in the persecutions of emperor Valerian c.255 for refusing to sacrifice to idols, Eusebius went into hiding to avoid the sentence, ministered to other covert Christians for several years, and cared for the sick during a plague outbreak in 260. Negotiated the surrender of women, children and elderly men to Roman troops during a siege of the Brucchium section of Alexandria. Represented his bishop at the Synod of Antioch which dealt with the heresey of Paul of Samosata and the false doctrines of Adoptionism and Monarchianism. Bishop of Laodicea, Syria (modern Latakia, Syria). A shory biography of him was included by Saint Eusebius of Caesarea in his Church History.
Born
3rd century Egypt
Died
269 in Laodicea, Syria (modern Latakia, Syria) of natural causes
Saint Anatolius of Constantinople
Profile
Patriarch of Constantinople from 449 to 458. Known for his simple, austere life, his charity to the poor, his zeal for the faith, and his opposition to heresy. He opposed the heretic Dioscurus at the Council of Chalcedon, and supported the doctrinal authority of Pope Saint Leo the Great, which put him in the midst of both theological and political turmoil. He fought against the Nestorian heresy at the Council of Ephesus. Miraculously healed from a serious illness by Saint Daniel the Stylite. May have been murdered by local heretics for his support of the Pope. Some of his writings, correspondence and hymns have survived the centuries.
Died
458 of unknown circumstances
Saint Gunthiern
Profile
Prince who became a hermit in Brittany. The local lord, Grallon, gave Gunthiern land on the Isle of Groie, near River Blavet to found a monastery. It survives today as the Benedictine house of Kemperle.
Legend says that insects once threatened to destroy the region's crops. Count Guerech I of Vannes, France, requested the saint's help. Gunthiern blessed some water and had it sprinkled over the fields. The insects fled, and the crops were saved.
Born
Welsh
Died
• c.500 in Brittany (in modern France) of natural causes
• his body was hidden during the Norman invasions, and was lost for a while
• remains re-discovered in the 11th century
• relics were translated to the Kemperle monastery
Saint Giuse Nguyen Ðình Uyen
Also known as
• Giuseppe Nguyen Dinh Uyen
• Joseph Peter Uyen
Additional Memorial
24 November as one of the Martyrs of Vietnam
Profile
Layman Dominican tertiary and catechist. Died after being imprisoned for his faith during the persecutions of Emperor Minh Mang. Martyr.
Born
c.1775 in Ninh Cuong, Nam Ðinh, East Tonkin (in modern Vietnam)
Died
4 July 1838 in prison in Hung Yên, East Tonkin (modern Viet Nam from the ill treatment he received there
Canonized
19 June 1988 by Pope John Paul II
Saint Raymond of Toulouse
Also known as
• Raymond Gayrard
• Raimund, Raimundus
Profile
Married layman. Widower. Cantor, archdeacon and canon of Saint Sernin church in Toulouse, France. Helped rebuild the church. Known for his austere lifestyle, charity and generosity to the poor, and his good relations with the local Jewish community.
Born
at Toulouse, France as Raymond Gayrard
Died
• 3 July 1118 of natural causes
• many miracles reported at his tomb, and the church became a popular pilgrimage site
Beatified
1652 by Pope Innocent X (cultus confirmation)
Pope Saint Leo II
Profile
Pope. Eloquent preacher. Interested in music. Noted for his charity to the poor. Confirmed the Sixth Council of Constantinople in 681 which condemned Monthelitism and censured Pope Honorius I for not doing the same. Secured revocation of the edict of Constans II which proclaimed the bishops of Ravenna, Italy free from the direct jurisdiction of the Bishop of Rome.
Born
Sicilian
Papal Ascension
• elected 10 January 681
• consecrated on 17 August 682
Died
28 June 683 in Rome, Italy of natural causes
Saint Ioannes Baptista Zhao Mingxi
Also known as
• Zhao Mingxi Ioannes Baptista
• Ruohan
• Giovan Battista Zhao Mingxi
Profile
Layman Christian in the apostolic vicariate of Southeastern Zhili, China. Martyred in the Boxer Rebellion while trying to rescue some women and children from the rebels.
Born
c.1844 in Beiwangtou, Shenzhou, Hebei, China
Died
3 July 1900 in Beiwangtou, Shenzhou, Hebei, China
Canonized
1 October 2000 by Pope John Paul II
Saint Heliodorus of Altinum
Also known as
• Heliodorus of Altino
• Eliodoro...
Profile
A soldier in his youth. Close friend and financial supporter of Saint Jerome, and helped with the logistics of the translation of the Vulgate Bible. Followed Jerome to the east, but declined the life of a desert hermit. Bishop of Altinum, a small town near Venice, Italy which has since disappeared. Fierce opponent of Arianism.
Born
332 at Dalmatia
Died
390 at Altino, Italy of natural causes
Saint Philiphê Phan Van Minh
Also known as
• Filippo Phan Van Minh
• Philip Minh
Profile
Priest in the the apostolic vicariate of West Cochinchina (in modern Vietnam). Member of the Paris Society for Foreign Missions. Martyred in the persecutions of Emperor Tu-Duc.
Born
c.1815 at Cái Mon, Vinh Long, West Cochin-China (modern Vietnam)
Died
beheaded on 3 July 1853 at Ðinh Khao, Vietnam
Canonized
19 June 1988 by Pope John Paul II
Saint Petrus Zhao Mingzhen
Also known as
• Baiduo
• Zhao Mingzhen Petrus
• Pietro Zhao Mingzhen
Profile
Layman Christian in the apostolic vicariate of Southeastern Zhili, China. Martyred in the Boxer Rebellion while trying to rescue some women and children from the rebels.
Born
c.1839 in Beiwangtou, Shenzhou, Hebei, China
Died
3 July 1900 in Beiwangtou, Shenzhou, Hebei, China
Canonized
1 October 2000 by Pope John Paul II
Blessed Barbara Jeong Sun-Mae
Additional Memorial
20 September as one of the Martyrs of Korea
Profile
Lay woman martyr in the apostolic vicariate of Korea. Convert to Catholicism. Moving to Seoul, she founded a group of other Christian lay women who wanted to live in community. Martyr.
Born
1777 in Yeoju, Gyeonggi-do, South Korea
Died
3 - 4 July 1801 in Yeoju, Gyeonggi-do, South Korea
Beatified
15 August 2014 by Pope Francis
Blessed Andreas Ebersbach
Profile
Premonstratensian monk. Canon of the monastery in Teplá, Bohemia (in the modern Czech Republic). Abbot of Teplá in 1599; he served in that office for 30 years. Known for his strict adhereance to the Rule of his Order, and commended by diocesan authorities for his work as a Christian catechist and apologist.
Born
c.1554 in the modern Czech Republic
Died
3 July 1629 of natural causes
Saint Irenaeus of Chiusi
Also known as
Ireneo
Profile
Deacon. Tortured and martyred with Saint Mustiola for ministering to Christian prisoners, and giving proper burial to martyrs.
Died
273 at Chiusi, Tuscany, Italy
Patronage
Chiusi, Italy
Representation
• deacon holding a palm
• with Saint Mustiola
• with Saint Secundus
Saint Germanus of Man
Also known as
Germain, German, Jarman
Profile
Nephew of Saint Patrick. Missionary monk in Ireland, Wales and Brittany. Bishop on the Isle of Man where several locations are still named for him.
Died
c.474 of natural causes
Saint Dathus of Ravenna
Also known as
Datus, Dathius
Profile
Bishop of Ravenna, Italy during the reign of the Roman emperor Commodus. Elected to the see when a dove miraculously appeared over his head during the deliberations.
Died
190 of natural causes
Representation
dove
Saint Hyacinth of Caesarea
Profile
Chamberlain to the emperor Trajan at Caesarea, Cappadocia. Imprisoned for his faith, his only food was meat that had been offered to idols; he starved rather than touch it. Martyr.
Died
starved to death c.120 in Caesarea, Cappadocia (in modern Turkey)
Saint Mennone the Centurian
Also known as
Memnon
Profile
Centurian in the imperial army in the reign of Diocletian and Maximian. Convert, brought to the faith by Saint Severus. Tortured and murdered for his new faith. Martyr.
Died
Byzie, Thrace (modern Vize, turkey)
Saint Firminus of Apsaros
Profile
One of seven Christian brothers who were soldiers in the imperial Roman army. Kicked out of the military, exiled and eventually martyred in the persecutions of Maximian.
Died
c.311 at Apsaros (in modern Georgia)
Saint Firmus of Apsaros
Profile
One of seven Christian brothers who were soldiers in the imperial Roman army. Kicked out of the military, exiled and eventually martyred in the persecutions of Maximian.
Died
c.311 at Apsaros (in modern Georgia)
Saint Guthagon
Profile
May have been Irish royalty. Hermit at Oostkerk, Flanders, Belgium.
Born
Eighth century Ireland
Died
• in Belgium of natural causes
• many miracles reported at this tomb
• relics translated on 3 July 1059
Saint Mark of Mesia
Profile
Martyr of the early Church for refusing to sacrifice to idols.
Died
beheaded in Mesia (in modern Spain)
Saint Maelmuire O'Gorman
Also known as
Marianus O'Gorman
Profile
Abbot of Knock, Louth, Ireland. Noted as a poet.
Born
Irish
Died
some time after 1167 of natural causes
Saint Mucian of Mesia
Also known as
Mocian
Profile
Martyr of the early Church for refusing to sacrifice to idols.
Died
beheaded in Mesia (in modern Spain)
Saint Byblig
Also known as
Biblig, Peblig, Peglig, Piblig, Publicius
Profile
A holy man with some connection to Carnarvon, Wales.
Born
Welsh
Died
5th century
Blessed Gelduin
Profile
Monk. Abbot of a monastery near Douai, France. Friend of and extensive correspondent with Saint Anselm of Canterbury.
Died
1123 of natural causes
Saint Cillene
Also known as
Killen
Profile
Monk. Elected abbot in Iona Abbey in Scotland in 726.
Born
Irish
Died
752 of natural causes
Saint Paul of Mesia
Profile
Martyr of the early Church, executed for encouraging other martyrs not to lose their faith.
Died
put to the sword
Saint Bladus
Also known as
Blade
Profile
Early bishop on the Isle of Man.
Martyrs of Alexandria
Profile
Thirteen Christian companions marytred together. No details about them have survived but the names - Apricus, Cyrion (2 of), Eulogius, Hemerion, Julian, Julius, Justus, Menelaus, Orestes, Porfyrios and Tryphon (2 of).
Died
Alexandria, Egypt, date unknown
Martyrs of Constantinople
Profile
A group of 24 Christians martyred in the persecutions of Arian emperor Valens. We know little more than their names – Acacios, Amedinos, Ammonius, Ammus, Cerealis, Cionia, Cionius, Cyrianus, Demetrius, Eulogius (2), Euphemia, Heliodoros, Heraclios, Horestes, Jocundus, Julian, Martyrios, Menelaeus, Sestratus, Strategos, Thomas, Timotheos and Tryphon.
Died
c.367 in Constantintinople
Theodotus and Companions
Profile
Six Christians who were imprisoned, tortured and martyred together in the persecutions of Trajan. Saint Hyacinth ministered to them in prison. We know nothing else about them but their names - Asclepiodotus, Diomedes, Eulampius, Golinduchus, Theodota and Theodotus.
Died
beheaded c.110, location unknown
No comments:
Post a Comment