புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

20 March 2020

தூய கத்பர்ட் (மார்ச் 20)

இன்றைய புனிதர் :
(20-03-2020) 

தூய கத்பர்ட் (மார்ச் 20)
“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மத் 16: 24)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் கத்பர்ட், இங்கிலாந்து நாட்டில் உள்ள நார்த்தம்பிரியா என்னும் இடத்தில் 635 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சிறுவயதிலே தன்னுடைய பெற்றோரை இழந்ததால், கென்ஸ்வித் என்பவருடைய பாதுகாப்பில்தான் வளர்ந்து வந்தார்.

கத்பர்ட், சிறுவயதில் பள்ளிக்குச் செல்லவில்லை, மாறாக ஆடுகளை ஓட்டிக்கொண்டு மெல்ரோஸ் என்ற மலைச்சரிவில் மேய்க்கச் சென்றார். அப்போது அங்கிருந்த ஆசிர்வாதப்பர் துறவற மடத்தைக் கண்டு, ஒருநாள் தானும் ஒரு துறவியாகவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். இதற்கிடையில் வயது வந்த இளைஞர்கள் யாவரும் நாட்டிற்காக இராணுவத்தில் சேர்ந்து போராடவேண்டும் என்றொரு நிலை உருவானது. எனவே, கத்பர்ட் இராணுவத்தில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமாக தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, ஏற்கனவே செய்து வந்த வேலையைச் செய்து வந்தார்.

இச்சமயத்தில் ஒருநாள் தூய ஆர்டன் என்பவருடைய ஆன்மாவை வானதூதர்கள் தூக்கிக்கொண்டு போகும் காட்சியைக் கண்டார். இதனைக் கண்ட கத்பர்ட், தன்னுடைய ஆன்மாவையும் இவ்வுலக மாசுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும், அதற்கு நாம் துறவற வாழ்க்கையை மேற்கொள்வதே சரியானது என்று முடிவுசெய்து மெல்ரோஸ் மலைச்சரிவில் இருந்த தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியானார். கத்பர்ட், சிறுவயதில் பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் துறவற மடத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடங்களை மிக எளிதாகக் கற்று, கல்வியில் சிறந்து விளங்கினார்.

இப்படி கத்பர்ட்டின் வாழ்க்கை மகிழ்ச்சியாய் போய்கொண்டிருந்த தருணத்தில், அவர் இருந்த துறவற மடத்தில் நிறையப் பேர் குறிப்பாக தலைமைப் பொறுப்பில் இருந்த தூய பாசில் உட்பட தொற்றுநோய் தாக்கி இறந்துபோனார்கள். அதனால் கத்பர்ட் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்காலத்தில் வழிபாடுகள் ஒழுகில்லாமல் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதனைக் கவனித்த ஆயர் பேரவை உரோமை வழிபாட்டு முறையை எங்கும் அமுல்படுத்தக் கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில் கத்பர்ட் தான் இருந்த பகுதியில் உரோமை வழிபாட்டு முறையை அமுல்படுத்தினார். இது பிடிக்காத ஒருசிலர் அவருக்கு எதிராகக் கிளர்தெழுந்தார்கள். கத்பர்ட் அதற்கெல்லாம் அஞ்சாமல் மிகவும் துணிச்சலாக இருந்து இறைப்பணியைச் செய்து வந்தார்.

இதற்குப் பின்பு, அவர் பார்னா என்ற தீவிற்குச் சென்று, அங்கு தனிமையில் இறைவனிடம் ஜெபித்து வந்தார். அப்போது அவருக்கு லின்டிஸ்பர்னே என்னும் இடத்திற்கு ஆயராகப் பொறுபேற்க வேண்டும் என்றொரு அழைப்பு வந்தது. கத்பர்ட் அதனைக் கீழ்ப்படிதலோடு ஏற்றுக்கொண்டு சிறப்பான முறையில் இறைப்பணியைச் செய்து வந்தார். இப்படி அவர் ஓயாது பணிசெய்து வந்ததால் அவருடைய உடல் நலம் குன்றியது. இதனால் அவர் 686 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கத்பர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இறைவனின் அழைப்பை உணர்ந்து, அவர் பணி செய்ய விரைதல்

தூய கத்பர்ட்டின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதன்மையான பாடமே இறைவனின் அழைப்பை உணர்ந்து அவருடைய வழியினில் நடப்பதுதான். அவர் இளைஞனாக இருந்த சமயத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது வானத்தூதர்கள் தூய ஆர்டனின் ஆன்மாவை எடுத்துக்கொண்டு போவதைக் கண்டு அதை இறைவன் கொடுக்கின்ற அழைப்பாக உணர்ந்து, அவர் பணி செய்ய விரைந்தார் என்றும் தொடக்கத்தில் பார்த்தோம். இறைவன் அவரை அந்த நிகழ்வின் வழியாக அழைத்ததுபோல், நம்மையும் அவர் பல்வேறு நிகழ்வுகளின் வழியாக அழைக்கின்றார். நாம் அவரது குரலுக்கு செவிகொடுத்து, அவர் பணி செய்ய விரைகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பஞ்சாப் பகுதியில் நற்செய்திப் பணியைச் செய்து வந்த சாது சுந்தர் சிங் சொல்லக்கூடிய கதை. ஒரு ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார். அந்தப் பணக்காரருக்கு ஒரு மகன் இருந்தான். ஒருநாள் அவர் தன்னுடைய மகனிடம், “மகனே! நம்முடைய வயல் அறுவடைக்காக நெருங்கி இருக்கின்றது. அதனால் அதனைப் போய் பார்த்துக்கொள்” என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்லி, வயலுக்குச் சென்றான். அவன் சென்ற நேரத்தில் வயலில் பறவை இனங்கள் எல்லாம் கதிர்களைக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன. அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாது, தந்தை நம்மை வயலைப் பார்த்துக்கொள்ளத்தானே சொன்னார், பறவையினங்களை விரட்டச் சொல்லவில்லையே என்று பேசாதிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ஆடு மாடுகள் எல்லாம் அந்த வயலில் நுழைந்து அதனை நாசம் செய்தன. அப்போதும் அவன் ஒன்றும் செய்யாதிருந்தான்.

இதற்கிடையில் பணக்காரர் வயலுக்கு வந்தார். வந்தவர் வயலில் ஆடுமாடுகள் மேய்வதையும் பறவையினங்கள் கதிர்களைக் கொத்தித் தின்பதையும் பார்த்துவிட்டு, தன்னுடைய மகனைப் பார்த்து, “உன்னை வயலைப் பார்த்துக்கொள்ளச் சொன்னால், இப்படி ஒன்றும் செய்யாமல் இருகின்றாயே” என்றார். அதற்கு அவன், “அப்பா, நீங்கள் என்னை வயலைப் பார்த்துக்கொள்ளத்தான் சொன்னீர்களே ஒழிய, அதில் வந்து மேயும் ஆடுமாடுகளை விரட்டச் சொல்லவில்லை” என்றான். இதைக் கேட்ட அவனுடைய தந்தை, “வயலைப் பார்த்துக்கொள் என்று சொன்னால், வயலில் ஆடுமாடுகள் மேயாமல் பார்த்துக்கொள் என்பதுதானே அர்த்தம், இதுகூடத் தெரியாத மரமண்டையாக இருக்கின்றாயே” என்று அவனை அடியடி என அடித்தார்.

கதையில் வரும் முட்டாளைப் போன்றுதான் நாமும் கடவுள் தம்மை எவ்வளவோ வகையில் வெளிப்படுத்தினாலும் நாம் அதனைப் புரிந்துகொள்ளாமலே இருக்கின்றோம்.

ஆகவே, தூய கத்பர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரை போன்று இறைவனின் அழைப்பினை உணர்ந்து, அவருடைய பணியைச் செய்ய விரைவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (20-03-2020)

Saint Cuthbert of Lindisfarne

Orphaned at an early age. Shepherd. Received a vision of Saint Aidan of Lindesfarne entering heaven; the sight led Cuthbert to become a Benedictine monk at age 17 at the monastery of Melrose, which had been founded by Saint Aidan. Guest-master at Melrose where he was know for his charity to poor travellers; legend says that he once entertained an angel disguised as a beggar. Spiritual student of Saint Boswell. Prior of Melrose in 664.

Due to a dispute over liturgical practice, Cuthbert and other monks abandoned Melrose for Lindisfarne. There he worked with Saint Eata. Prior and then abbot of Lindesfarne until 676. Hermit on the Farnes Islands. Bishop of Hexham, England. Bishop of Lindesfarne in 685. Friend of Saint Ebbe the Elder. Worked with plague victims in 685. Noted (miraculous) healer. Had the gift of prophecy.

Evangelist in his diocese, often to the discomfort of local authorities both secular and ecclesiastical. Presided over his abbey and his diocese during the time when Roman rites were supplanting the Celtic, and all the churches in the British Isles were brought under a single authority.

Born :
634 somewhere in the British Isles

Died :
20 March 687 at Lindesfarne, England of natural causes
• interred with the head of Saint Oswald, which was buried with him for safe keeping
• body removed to Durham Cathedral at Lindesfarne in 1104
• his body, and the head of Saint Oswald, were incorrupt

Patronage :
against plague and epidemics
• boatmen, mariners, sailors, watermen
• shepherds
• England
• Hexham and Newcastle, England, diocese of
• Lancaster, England, diocese of
• Durham, England
• Northumbria, England

---JDH---Jesus the Divine Healer---

மார்ச் 19 - புனித சூசையப்பர் திருவிழா

மார்ச் 19 -  புனித சூசையப்பர் திருவிழா. மார்ச் மாதம் முழுவதும் இவருக்கு அர்பணிக்கப்பட்ட மாதம். இவரது பரிந்துரை பெற இவரை மன்றாடுவோம்.
புனித சூசையப்பர் (Saint Joseph), இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித கன்னி மரியாவின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.

பிறப்புகி.மு.39/38
இறப்புகி.பி.21/22
அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் தச்சுத் தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான நம் அன்னை மரியாளுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், அன்னை மரியாள் தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார். அன்னை மரியாள் திடீரென கருவுற்றதால் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் அன்னை மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கி விட நினைத்தார். அன்னை மரியாள் கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை சம்மனசு வழியாக அறிந்த இவர் அன்னை மரியாளை ஏற்றுக் கொண்டார்.

இயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும் அன்னை மரியாளையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் பாதுகாத்தார். பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். அன்னை மரியாளும் நெசவுத் தொழில் மூலம் இவருக்கு உதவினார்.
அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். அன்னை மரியாளுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட அர்ச்சியசிஷ்ட சூசையப்பர், திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமைதாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் அன்னை மரியாளும் அருகில் இருக்க அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் பாக்கியமான மரணம் அடைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
தூய யோசேப்பு.

யோசேப்பை குறித்து சொல்லப்படும் ஒரு நிகழ்வு. மரியாளுக்கு மூன்று வயதானபோது அவருடைய பெற்றோர்கள் அவரை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்துவிட்டுச் சென்றனர். அதன்பிறகு மரியாள் பதினான்கு வயது வரை அங்குதான் இருந்தார். அவருக்கு பதினான்கு வயது வந்தபோது ஆலயத்தில் இருந்த தலைமைக் குரு, “பதினான்கு வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்று, தங்களுக்குப் பிடித்தமான கணவரை மணந்துகொள்ளுமாறு” சொன்னார். தலைமைக் குருவின் வார்தைகளுக்குக் கீழ்படிந்து மரியாவோடு இருந்த பதினான்கு வயது நிரம்பிய மற்ற பெண் குழந்தைகள் எல்லாம் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றார்கள். மரியாள் மட்டும், “நான் ஆண்டவருக்கு அடிமை” என்று சொல்லி அங்கேயே இருந்தாள்.

இதற்கிடையில் ஆலயத்தில் இருந்த தலைமைக் குரு காட்சி ஒன்று கண்டார். அந்தக் காட்சியில், தாவீதின் குலத்தைச் சேர்ந்த ஆண்மகன்கள் தங்களுடைய கையில் தளிர் ஒன்றை ஏந்தி வந்து, அதனை தலைமைக் குருவிடம் கொடுப்பார்கள். யார் கொண்டுவந்த தளிர் மலர்ந்து பூப்பூக்கிறதோ அவரை மரியாள் கணவராக மணந்துகொள்ள வேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்டார். இச்செய்தியை தலைமைக் குரு மரியாளிடம் எடுத்துச்சொல்லி, குறிப்பிட்ட அந்த நாளுக்காக அவரும் மரியாவும் காத்திருந்தார்கள்.

காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது போன்று, ஒரு நாளில் தாவீதின் குலத்தைச் சேர்ந்த திருமண வயதில் இருந்த ஆண்மகன்கள் தங்களுடைய கையில் தளிர் ஒன்றை ஏந்தி வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் யோசேப்பும் வந்திருந்தார். எல்லாரும் தாங்கள் கொண்டுவந்த தளிர்களை தலைமைக் குருவிடம் கொண்டுவந்து கொடுத்தார்கள். யோசேப்பைத் தவிர. யோசேப்பு தான் வயது மிகுந்தவர் என்பதனால் அப்படிச் செய்யவில்லை. மாறாக அவர் தான் கொண்டு வந்த தளிரை பீடத்தில் போய் வைத்தார். நீண்ட நேரமாகியும் யாருடைய தளிரும் பூப்பூக்கவில்லை. இதனால் குழம்பிப் போன தலைமைக் குரு இறைவனிடத்தில் மன்றாடியபோது, “யார் தன்னுடைய தளிரை பீடத்தில் வைத்திருக்கிறாரோ அவரே மரியாளுக்கு கணவராக ஆக வேண்டியர். நீ சிறிது நேரம் பொறுத்திருந்து பார், அவருடைய தளிர் பூப்பூக்கும். அப்போது தூய ஆவியானவர் அதன்மேல் இறங்கி வருவார்” என்றார்.

இதனால் தலைமைக் குரு சிறிது நேரம் பொறுத்திருந்து பார்த்தார். காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது போன்று யோசேப்பு பீடத்தில் வைத்த தளிர் திடிரென்று பூப்பூத்தது. பின்னர் அதன்மேல் தூய ஆவியானவர் புறாவடிவில் இறங்கி வந்தார். இதைப் பார்த்த தலைமைக் குரு யோசேப்பை மரியாளுக்கு கணவராக மண ஒப்பந்தம் செய்தார். மண ஒப்பந்தத்திற்குப் பிறகு, யோசேப்பு தன்னுடைய சொந்த ஊரான பெத்லகேமிற்குச் சென்றார். மரியாள் நாசரேத்திற்குச் சென்றார். நாசரேத்தில் தான் வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னார்.

வரலாற்றுப் பின்னணி

இன்று நாம் மரியாளின் கணவர் தூய யோசேப்பின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். தாவீதின் வழிமரபில் தோன்றிய யோசேப்பு தன்னுடைய மனைவி மரியாவிற்கு ஒரு சிறந்த கணவராக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால் திருமணத்திற்கு முன்பாகவே மரியாள் கருவுற்றிருப்பது யோசேப்புக்கு தெரிய வந்ததும் அவளை கல்லால் எறிந்துகொல்ல முற்படவில்லை மாறாக பெருந்தன்மையோடு அவரைத் யாருக்கும் தெரியாமல் விளக்கி விட நினைக்கின்றார். பின்னர் கடவுளின் தூதர் அவருக்கு எல்லாவற்றையும் கனவில் வெளிப்படுத்திய பிறகு மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்கிறார்.

மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்ட பிறகு யோசேப்பு அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார். குழந்தை இயேசுவை ஏரோது மன்னன் கொல்ல நினைத்தபோது, குழந்தையையும் தாய் மரியாவையும் தூக்கிக் கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். பின்னர் கொடுங்கோலன் இறந்த பிறகு அவர்களைக் கூட்டிக்கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். இவ்வாறு மரியாளின் உணர்வுகளை மதிக்கின்ற, அவரை எல்லாவிதங்களிலும் சிறப்பாகப் பராமரிக்கின்ற ஒரு நல்ல கணவராக யோசேப்பு விளங்கினார் என்று சொன்னால் அது மிகையில்லை. யோசேப்பு, இயேசுவுக்கு ஒரு நல்ல வளர்ப்புத் தந்தையாக இருந்தும் செயல்பட்டார். இயேசுவை உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் வளர்த்தெடுத்ததில் யோசேப்பின் பங்கை நாம் மறந்து விட முடியாது.

இவ்வாறாக யோசேப்பு தன்னுடைய மனைவி மரியாவுக்கு ஒரு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு ஒரு நல்ல, சிறந்த முன்மாதிரியான வளர்ப்புத் தந்தையாவும் இருந்து செயல்பட்டு, ஒரு கணவர் எப்படி இருக்கவேண்டும், ஒரு தந்தை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக விளங்குகின்றார்.

18 March 2020

புனித கொரோனா

💫💦: புனித கொரோனா

கத்தோலிக்கத்  
திரு அவையில்  கொரோனா  என்றொரு  புனிதை  இருக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இவர்  தன்  பதினைந்தாவது  வயதில் 
கிறிஸ்தவ  நம்பிக்கைக்காக கிபி 165 ஆம் ஆண்டு, பேரரசர்  மார்குஸ்  அவுரேலியஸ்  
காலத்தில்  உயிர் துறந்தார்.

இரண்டு ஈச்ச  மரங்களை  வளைத்து, இவரது கைகளைக்  கட்டிவிட்டார்கள். இதனால் இவரது உடல் இரண்டாகக்  கிழிக்கப்பட்டு  இறந்தார். 

இவருடைய  புனித  எலும்புகள்   இத்தாலியில் உள்ள  அன்சு  நகரில்  உள்ளது. 

இவர்  கொள்ளை  நோயின்  பாதுகாவலர்.

   
புனித  கொரோனாவே,   எங்களுக்காக  
வேண்டிக்கொள்ளும்.
[3/17, 23:02] 🌾ஸ்டார்வின் ராஜ சேவியர்💫💦: There is a Saint Corona, And she is the Patron Saint against plague and epidemics
[3/17, 23:04] 🌾ஸ்டார்வின் ராஜ சேவியர்💫💦: Saints Victor and Corona are two Christian martyrs. Most sources state that they were killed in Roman Syria during the reign of Marcus Aurelius (170s AD). However, various hagiographical texts disagree about the site of their martyrdom, with some stating that it was Damascus, while Coptic sources state that it was Antioch. Some Western sources state that Alexandria or Sicily was their place of martyrdom. They also disagree about the date of their martyrdom. They may have been martyred during the reign of Antoninus, Diocletian, while the Roman Martyrology states that it was in the third century when they met their death.[1] Saint Corona was popular in folk treasure magic, being called upon by a treasure hunter to bring treasure, and then sent away through a similarly elaborate ritual.[2]

Saints Victor and Corona
SaintsVictor and Corona.JPG
Illuminated miniature of the martyrdom of Saints Victor and Corona, on a full leaf from a Book of Hours, France (Paris), ca. 1480.
Martyrs
Died
~170 AD
Venerated in
Roman Catholic Church
Feast
14 May
Patronage
Feltre; Castelfidardo; Corona is invoked in connection with superstitions involving money, such as gambling or treasure hunting


St Victor of Siena (left) and St Corona by the Master of the Palazzo Venezia Madonna in the National Gallery of Denmark.
Legend Edit

Their legend states that Victor was a Roman soldier of Italian ancestry, serving in the city of Damascus in Roman Syria during the reign of Emperor Antoninus Pius. He was tortured - including having his eyes gouged out.

While he was suffering from these tortures, the sixteen-year-old spouse of one of his brothers-in-arms, named Corona,[3] comforted and encouraged him. For this, she was arrested and interrogated. According to the passio of Corona, which is considered largely fictional, Corona was bound to two bent palm trees and torn apart as the trunks were released.

Victor was beheaded in Damascus in 160 AD.

Other sources state that they were husband and wife.[4]

Veneration Edit

Victor and Corona's memorial day is 24 November (11 November in the Orthodox church calendar). Their feast day is 14 May. Outside the town of Feltre on the slopes of Mount Miesna is the church of SS. Vittore e Corona, erected by the Crusaders from Feltre after the First Crusade.

Corona is especially venerated in Austria and eastern Bavaria. She is invoked in connection with superstitions involving money, such as gambling or treasure hunting.

Otto III, around AD 1000, brought Corona's relics to Aachen.

எருசலேம் நகர தூய சிரில் (மார்ச் 18)

இன்றைய புனிதர் : 
(18-03-2020) 

எருசலேம் நகர தூய சிரில் (மார்ச் 18)

நிகழ்வு
எருசலேமின் ஆயராக தூய சிரில் இருந்த காலகட்டத்தில், எருசலேமில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களெல்லாம் உணவின்றிப் பட்டினியில் தவித்தார்கள். இதைப் பார்த்த சிரில் ஆலய உடைமைகளை விற்று, அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு மக்களின் பசியைப் போக்கினார். இது பிடிக்காத ஒருசில தலைவர்கள், சிரில் ஆலயச் சொத்துகளை வீணடிக்கின்றார் என்று குற்றம் சுமத்தினார்கள். அப்போது அவர் அவர்களுக்கு அளித்த பதில், “திருச்சபையும் மக்களும் வேறு வேறா என்ன... மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், அதற்கு திருச்சபையின் – ஆலயத்தின் – உடைமைகளை விற்றுக்கொடுப்பதிலே என்ன தவறு இருக்கின்றது?” என்றார். இதற்கு அவருடைய எதிரிகளால் ஒன்றும் பேச முடிவில்லை.

நல்மனதோடு நாம் மக்களுக்கு நல்லது செய்கின்றபோது, அதற்கு எதிராக ஒருசிலர் பேசித்திரிவார்கள். அத்தகையவர்களுக்கு நாம் எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை சிரிலின் வாழ்வில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

வாழ்க்கை வரலாறு

சிரில், எருசலேம் நகரில் 315 ஆம் ஆண்டு ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். சிரிலின் தந்தை அவர்மீது அதிகமான அன்பு வைத்திருந்த படியாலும் அவருக்கு நல்ல கல்வியைக் கொடுக்கவேண்டும் என்பதாலும் அன்றைய காலத்தில் எருசலேமில் தலைசிறந்த ஆசிரியராக இருந்த ஒருவரிடம் அனுப்பி வைத்து, அவருக்கு கல்வியறிவைக் கொடுத்தார். சிரிலும் கல்வியில் சிறந்தவராய் விளங்கி வந்தார். குறிப்பாக சிரிலின் விவிலிய அறிவைக் கண்டு எல்லாரும் வியப்படைந்தார்கள்.

படிப்பை நிறைவு செய்த சமயத்தில், சிரிலுக்கு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன்படியே அவர் குருவானவராக மாறினார். அப்போது சிரிலிடம் இருந்த அறிவையும் ஞானத்தையும் கண்ட எருசலேம் நகர ஆயர் மார்க்கஸ் அவரை புகுமுக பயிற்சி பெறுவோருக்குப் பொறுப்பாளராக நியமித்தார். சிரிலும் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை மிகச் சிறப்புடனே செய்தார். சிரில் புகுமுகப் பயிற்சி பெறுவோருக்கு பொறுப்பாளராக இருந்த சமயத்தில், திருமுழுக்குப் பெறுகின்றபோது எத்தகைய மனநிலையோடு பெறவேண்டும், அதற்காக ஒருவர் எப்படியெல்லாம் தன்னைத் தயார் செய்யவேண்டும் என்பதை பற்றிய நிறைய எழுதினார். அது மட்டுமல்லாமல், நற்கருணை வாங்குகின்றபோதும் எத்தகைய நிலையோடு வாங்கவேண்டும் என்பதைப் பற்றி நிறைய எழுதினார். இன்னும் சொல்லப்போனால் சிரில் அளவுக்கு நற்கருணையைக் குறித்து யாரும் அதிகமாகப் பேசியதில்லை என்று சொல்லலாம்.

இப்படி பல்வேறு கருத்துகளை குறித்து திறம்பட எழுதியும் புகுமுகப் பயிற்சிபெறுவோருக்கு நல்லவிதமாகப் பயிற்சியும் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் எருசலேமின் ஆயர் மார்க்கஸ் இறந்துபோனார். இதனால் சிரில் எருசலேம் நகர ஆயராகப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இச்சமயத்தில்தான் கிறிஸ்துவின் இறைத்தன்மையை மறுத்துப் பேசும் ஆரியபதம் தலைவிரித்து ஆடியது. இதனை சிரில் மிகக் கடுமையாக எதிர்த்து பேசினார். இதனால் ஆரிய பதத்தைத் தூக்கிப் பிடித்த அக்கரியாஸ் என்ற செசாரிய நகர், அவரோடு சேர்ந்து ஒருசிலர் சிரிலுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். இதனால் சிரில் மூன்று முறை நாடு கடத்தப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இறுதியில் இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்கும்பொருட்டு, ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் சிரிலின் வாதம் சரியானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் அவர் மீண்டுமாக எருசலேமின் ஆயராக உயர்ந்தார். சில காலம் ஆயர் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்த சமயத்தில் அவர் நோய்வாய்ப்பட்டு 386 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சிரிலின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. தகுதியான நிலையோடு நற்கருணையை உட்கொள்ளுதல்

தூய சிரிலின் நினைவுநாளைக் கொண்டாடும் இந்த சமயத்தில், அவர் சொல்லக்கூடிய ஒரே ஒரு செய்தியை மட்டும் நம்முடைய மனதில் இருத்திக்கொள்வோம், அது வேறொன்றுமில்லை நற்கருணையை தகுதியான உள்ளத்தோடு உட்கொள்வது என்பதாகும். நற்கருணையை உட்கொள்ளும் நாம், சில நேரங்களில் ஏனோ தானோவென்று அதற்குரிய மரியாதை கொடுக்காமல் உட்கொள்கின்றோம். இந்த நேரத்தில் நாம் தகுதியான உள்ளத்தோடுதான் நற்கருணையை உட்கொள்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில், தகுதியற்ற நிலையில் ஆண்டவரின் திருவிருந்தில் பங்குகொள்வோர் பாவம் செய்கின்றார் என்று சொல்வார். ஆகவே, தகுதியான விதத்தில் நற்கருணை உட்கொள்வதே சரியான ஒரு வழிமுறையாகும்.

ஆகவே, தூய சிரிலின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம், தகுதியான உள்ளத்தோடு நற்கருணை உட்கொள்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (18-03-2020)

St. Cyril of Jerusalem

He was born in the year 313 near Caesarea in Palestine in modern day Israel. He was ordained as a Deacon by the bishop St. Macarius of Jerusalem and then ordained a priest by bishop Maximus of Jerusalem in the year 343. But in the year 350 he succeeded St. Maximus as the bishop of Jerusalem. At the Council of Constantinople (381) he voted for the acceptance of the doctrine Homoousios which means Jesus and God are of the same substance and both are equally God. When there was a heavy shortage of food in Jerusalem, he sold the sacramental ornaments and helped the people affected from starvation. He was deposed from the bishop for this action but later exonerated by the Emperor. He died in the year 386 in Jerusalem. He was declared as the Doctor of the Church by pope Leo-XIII in the year 1883.

---JDH---Jesus the Divine Healer---

17 March 2020

தூய பேட்ரிக் (மார்ச் 17)

இன்றைய புனிதர் : 
(17-03-2020) 
தூய பேட்ரிக் (மார்ச் 17)

நிகழ்வு

தூய பேட்ரிக் அயர்லாந்தில் உள்ள சால் என்ற பகுதியில் நற்செய்திப் பணியை ஆற்றிக்கொண்டிருந்தபோது அவருக்கு அங்கே இருந்த மக்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் வந்தன. ஒருசமயம் மக்கள் அவரிடம் “நீர் போதித்துக்கொண்டிருப்பது உண்மையான கடவுள்தான் என்பதை எங்களுக்கு நிருபித்துக்காட்டும்” என்றார்கள். உடனே அவர் அருகே இருந்த “Shamrock” என்ற பாறையைச் சுட்டிக்காட்டி, இந்த ஒரு பாறையிலிருந்து மூன்று பாறைகள் தோன்றியிருக்கின்றன. இந்தப் பாறை மூவொரு கடவுளான தந்தை, மகன், தூய ஆவியைச் சுட்டிக்காட்டுகிறது” என்றார். இதைக் கேட்டு அவர்கள் மலைத்துப் போனார்கள். இச்செய்தி அங்கிருந்த அரசரின் காதுகளை எட்டியது. அவன் பேட்ரிக்கை, தன்னுடைய ஆளுகைக்குள் உட்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானலும் போதித்துக் கொள்ளலாம் என்று சொல்லி அவருக்கு அனுமதி அளித்தார்.

வாழ்க்கை வரலாறு

பேட்ரிக் பிரிட்டனில் உள்ள ஓர் உயர்குடியில் 390 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை கல்போனியஸ், இவருடைய தாய் கோன்செஷ்சா என்பவர் ஆவார்கள். பேட்ரிக் சிறுவயது முதல் கடவுள் மீது பக்தியில்லாமலே வாழ்ந்து வந்தார். இவருக்கு 16 வயது நடந்துகொண்டிருந்தபோது அயர்லாந்தைக் சேர்ந்த ஒருசில முகமூடிக் கொள்ளையர்கள் இவரைக் கடத்திச் சென்று, அங்கே இருந்த ஒரு கணவானிடம் விற்றுவிட்டார்கள். அங்கே பேட்ரிக் கணவானிடம் இருந்த ஆடுகளை மேய்த்துவந்தார். அந்தக் காலகட்டத்தில் எல்லாம் பேட்ரிக் போதிய உணவில்லாமல், சரியான ஆடையில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவர் கடவுளை மறந்து இப்படி வாழ்ந்ததனால்தான், அவர் இப்படித் தன்னை தண்டித்துவிட்டார் என்று மனம் வருந்தி அழுதார். அதனால் அன்றிலிருந்து அவர் இறைவனிடம் ஜெபிக்கத் தொடங்கினார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் அவர் அங்கிருந்து தப்பித்து, சொந்த நாட்டுக்குப் போகும்படியாக வந்தது. எனவே, அவர் தான் வேலைபார்த்துக் கொண்டிருந்த கணவானிடமிருந்து தப்பித்து, ஒரு கப்பல் வழியாக தன்னுடைய சொந்த நாட்டிற்குச் சென்றார். தன்னுடைய பெற்றோர்களோடு அங்கே மகிழ்ச்சியாக இருந்தார்.

நாட்கள் சென்றன. அவருக்கு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே, அவர் குருவாகப் படித்து பிரான்ஸ் நாட்டில் சில காலம் பணிசெய்தார். ஒருநாள் அவருக்கு மீண்டுமாக ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு மனிதன் அவரை அணுகிவந்து, “எங்களுடைய நாட்டிற்கு வந்து கிறிஸ்துவைப் பற்றி அறிவி” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார். கனவிலிருந்து விழித்தெழுந்த பேட்ரிக், அப்போது திருத்தந்தையாக இருந்த முதலாம் ஜெலஸ்டின் என்பவரைத் சந்தித்து தன்னுடைய கனவை, விருப்பத்தை எடுத்துரைத்தார். இதற்கிடையில் ஏற்கனவே அயர்லாந்து நாட்டிற்கு மறைபோதகப் பணியை ஆற்றச் சென்ற பலேடியஸ் என்பவர், அங்கு பல்வேறு எதிர்ப்பு வந்ததால் நாடு திரும்பி இருந்தார். இப்போது பேட்ரிக் அயர்லாந்துக்கு சென்று, மறைபோதகப் பணியை ஆற்றப் போவதாகச் சொன்னதைக் கேட்டதும் அவர் பெரிதும் மகிழ்ந்து போனார். எனவர் திருத்தந்தை பேட்ரிக்கை உளமகிழ்வோடு அனுப்பி வைத்தார்.

பேட்ரிக் கப்பில் பயணம் செய்துசெய்து அயர்லாந்தில் உள்ள தென்பகுதிச் சென்றார். தென்பகுதில் இருந்த மக்கள் அவரை விரட்டிவிட்டார்கள். எனவே அவர் வடபகுதிச் சென்று நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். அப்பகுதியிலும் அவருக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் அவர் அங்கு மன உறுதியோடு இருந்து பணிசெய்தார். ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைத்தார். நோயாளிகளைக் குணப்படுத்தினார். பார்வைஇழந்தவர்களுக்கு பார்வை அளித்தார். இறந்த ஒன்பது பேரை உயிர்த்தெழச் செய்தார் (அவருடைய வாழ்க்கைக் குறிப்பில் இது சொல்லப்பட்டிருக்கிறது). இப்படியாக அவர் அயர்லாந்து நாட்டில் கிறிஸ்தவம் படிப்படியாக பரவுவதற்குக் காரணமாக இருந்தார்.

அயர்லாந்தில் வேற்று தெய்வ வழிபாடு அதிகமாகவே இருந்தது. எனவே பேட்ரிக் அதனைத் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொண்டார். இவருடைய பணிகளைப் பார்த்த திருத்தந்தை மேலும் மூன்று கர்தினால்களை அங்கு அனுப்பி வைத்து, அவருக்குப் பேருதவியாக இருக்கச் செய்தார். பேட்ரிக் செய்த மிகச் சிறப்பான காரியம், அந்த நாட்டிலேயே குருக்கள், துறவறத்தாரை தோன்றச் செய்து அந்நாடு முழுவதும் நற்செய்தி பரவக் காரணமாக இருந்தார். இதற்காக அவர் பல்வேறுமுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். ஆனாலும் கிறிஸ்துவின் மீது கொண்ட பற்றினால் எல்லாவற்றையும் மிகவும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். இப்படியாக தன்னுடைய உடல், பொருள் ஆவி அத்தனையும் அயர்லாந்து மண்ணில் நற்செய்தி பரவுவதற்காக அர்பணித்த பேட்ரிக் 461 ஆண்டு தன்னுடைய எழுபத்தில் இரண்டாம் வயதில் இந்த மண்ணுலக வாழ்வு விட்டுப் பிரிந்து சென்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

‘அயர்லாந்து நாட்டின் அப்போஸ்தலர்’ என அழைக்கப்படும் தூய பேட்ரிக்கின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஜெப வாழ்வு

தூய பேட்ரிக் சிறுவயதில் கடவுள் பக்தி இல்லாமல் வாழ்ந்தாலும் கூட, அவர் அயர்லாந்திற்கு நாடு கடத்திச் செல்லப்பட்ட பிறகு, அங்கே அவர் தனிமையை, வெறுமையை உணர்ந்துபோது இறைவனிடத்தில் அதிகமாக ஜெபிக்கத் தொடங்கினார். அந்த ஜெபம்தான் அவருக்கு புதுத் தெம்பூட்டியது. அவருடைய ஜெபத்தினால் நிறைய வல்ல செயல்கள் நடந்தன. இதோ ஒருசில:

பேட்ரிக் அயர்லாந்திலிருந்து தன்னுடைய சொந்த நாட்டிற்கு கப்பல் வழியாக தப்பி வந்தபோது, இடையில் மோசமான சீதோசன நிலை காரணமாக கப்பல் ஒரு தீவில் போய் ஒதுங்கியது. கப்பலை ஓட்டிவந்த மாலுமிகள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். அப்போது பேட்ரிக் கடவுளிடத்தில் உருக்கமாக மன்றாடினார். உடனே வானத்தில் வெளிச்சம் பிறந்தது. இதனால் மாலுமி கப்பலை பாதுகாப்பாக ஓட்டிச் சென்று, மக்கள் போகவேண்டிய இடத்தில் போய் இறக்கினார். இன்னொருமுறை அயர்லாந்து நாட்டில் பேட்ரிக் நற்செய்திப் பணி ஆற்றிக்கொண்டிருந்தபோது, மக்களில் ஒருசிலர் அவரிடத்தில் வந்து, “நச்சுப் பாம்பில் தங்களுக்கு அதிகமான தொல்லைகள் ஏற்படுவதாகக்” கூறினார்கள். அவர் கடவுளிடத்தில் மன்றாடிய பிறகு நச்சுப் பாம்புகளின் தொல்லைகள் இன்றி மக்கள் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினார்கள். இன்றைக்கும் கூட அயர்லாந்து நாட்டில் பாம்புத் தொல்லை இல்லை என்பது நாம் அறிந்துகொள்ளவேண்டிய செய்தி.

இப்படியாக தூய பேட்ரிக் தன்னுடைய ஜெபத்தினால் பல்வேறு அற்புதங்களை அதிசயங்களைச் செய்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் ஜெப வீரர்களாக வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் இயேசு கூறுவார், “இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி வேறு எதனாலும் வெளியேறாது” (மத் 17:21). நாம் தூய பேட்ரிக்கைப் போன்று ஜெபிக்கும் மனிதர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறைவனின் ஆசிரை அதிகதிகமாகப் பெறுவோம்.

2. எல்லாவற்றையும் நல்லதாக, இறைத்திருவுளுமாக ஏற்றுக்கொள்வோம்.

தூய பேட்ரிக்கிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் இரண்டாவது பாடம் அவர் எல்லாவற்றிலும் இறைத்திருவுளம் இருக்கின்றது என்று உணர்ந்து வாழ்ந்ததாகும். தூய அவிலா தெரசா அடிக்கடி குறிப்பிடுவார், “நீங்கள் எல்லா நிகழ்வுகளிலும் கடவுளின் திருவுளத்தைக் கண்டுகொள்ளுங்கள்’ என்று. தூய பேட்ரிக் தான் சிறுவயதில் அயர்லாந்திற்கு நாடுகடத்தப்பட்டதைக் கூட, பின்னாளில் இறைத் திருவுளமாகவே, நல்லதாகவே கண்டார். எப்படி பழைய ஏற்பாட்டில் வரும் யோசேப்பு எகிப்து நாட்டிற்கு கடத்திச் செல்லப்பட்டது நல்லதாக விளங்கியதோ, அதுபோன்று பேட்ரிக் அயர்லாந்திற்கு கடத்திச் சொல்லப்பட்டது பிற்காலத்தில் அம்மக்களுக்கு மத்தியில் பணியாற்ற பேருதவியாக இருந்தது.

நம்முடைய வாழ்வில் நடைபெறுவதை நாம் கடவுளின் திருவுளமாகப் பார்க்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்காட்லாந்தில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத்தில் இருந்த தம்பதியினருக்கு ஏழு குழந்தைகள். அவர்களுக்கு பிரிட்டனிலிருந்து அமெரிக்கவிற்கு முதன்முறையாக செல்லக்கூடிய ஒரு சொகுசுக் கப்பலில் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசை. அதற்காக அவர் கஷ்டப்பட்டு பணத்தைத் திரட்டி, அந்த கப்பலில் பயணம் செய்ய தயாராக இருந்தார்கள். அவர்கள் கப்பலில் பயணம் செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அந்த குடும்பத்தில் இருந்த ஒரு மகனுக்கு ராபிஸ் எனப்படும் வெறிநாய் கடிப்பினால் ஏற்பட்ட நோய்வந்துவிட்டது. அவனை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் பார்த்தபோது, அவனை சோதித்துப் பார்த்த மருத்துவர், இரண்டு வாரங்களுக்கு அவனை மருத்துவமனையில் வைத்து பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டார். இதனால் அந்தக் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. இத்தனை நாட்களும் கஷ்டப்பட்டு பணம் சேகரித்து, இறுதியில் அந்த சொகுசுக் கப்பலில் பயணம் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று அந்த சிறுவனின் தந்தை அவனை அதிகமாகவே கடிந்துகொண்டார்.

சொகுசுக் கப்பல் புறப்படும் நாள் வந்தது. ஆனால் அந்தக் குடுப்பத்தினரால் அதில் பயணம் செய்யமுடியவில்லை. அவர்கள் மிகவும் ஏக்கத்தோடு அந்தக் கப்பல் புறப்படுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். ஐந்து நாட்கள் கழித்து, அமெரிக்க்க நோக்கிச் சென்ற அந்த சொகுசுக் கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதி, அதில் பயணம் செய்த அத்தனை பேரும் இறந்துவிட்டார்கள் என்ற செய்தி அந்தக் குடும்பத் தலைவனின் காதுகளை எட்டியது. உடனே அவர் தன்னுடைய குடும்பம் முழுவதையும் ஆபத்திலிருந்து காப்பாற்றிய அந்த சிறுவனை கட்டித் தழுவி முத்தமிட்டார். அவரோடு சேர்ந்து அந்தக் குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்தது. (பனிப்பாறையில் மோதி நெருங்கிய கப்பல் வேறொன்றும் கிடையாது டைடானிக் என்ற கப்பல்தான்)

சில நேரங்களில் நம்முடைய வாழ்வில் நடைபெறுவது நமக்கு வருத்தத்தைத் தரலாம், கஷ்டத்தைத் தரலாம். ஆனாலும் அவற்றை இறைத்திருவுளமாக ஏற்றுக்கொண்டு வாழப் பழகினால், நம்முடைய வாழ்வில் என்றும் மகிழ்ச்சிதான். பேட்ரிக் அப்படித்தான் வாழ்ந்தார்.

ஆகவே, தூய பேட்ரிக்கின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம். ஜெப வீரர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Feast : (17-03-2020)

St. Patrick

He was born in the year 387 in Scotland, England in a wealthy family to Roman parents Calpurnius and Conchessa. When he was about 14 years old, he was captured by Irish raiders and taken as a slave to Ireland. During the period of captivity he was employed as a shepherd. He turned to Christianity due to loneliness and fear of life. After about six years he heard voice telling him that he would soon go home and the ship was ready. He escaped from his master and went to a port about 200 miles away and returned home. He began his studies for priesthood and ordained as a priest by St. Germanus, bishop of Auxerre. Later he was made a bishop and was sent to Ireland to spread the gospel there. One legend about him was that the chieftain of one of the tribes tried to kill him. But the chieftain could not move his arm until he became friendly with Patrick. Then the chieftain also converted himself to Christianity.   He died on March 17, 461 at Saul, where he constructed the first church. He is regarded as the Apostle of Ireland. He gave a very brief account of his life and mission in his letter The Declaration (Confessio).

---JDH---Jesus the Divine Healer---

16 March 2020

march 16

இன்றைய புனிதர் : 
(16-03-2020) 
கொலோன் நகர் பேராயர் ஹெரிபெர்ட் Herbert von Köln

பிறப்பு 970, வோர்ம்ஸ் Worms, ஜெர்மனி

இறப்பு 16 மார்ச் 1021,கொலோன் Köln, ஜெர்மனி

இவர் அரசர் ஹூயூகோபின் Hugo மகன். அரசர் 3 ஆம் ஒட்டோ அவர்களால் 994 ல் இவரின் 24 ஆம் வயதில் இத்தாலி நாட்டில் பேராலயக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அப்பொறுப்பை ஜெர்மனி நாட்டிலும் ஏற்றார். இவர் அரசர் ஒட்டோவின் நெருங்கிய நண்பரானார். பின்னர் இவர் 995 ல் குருப்பட்டம் பெற்றார். பிறகு999 ஆம் ஆண்டு கொலோன் நகரின் பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஒருமுறை 1002 ஆம் ஆண்டு ஒட்டோ பயணம் ஒன்றை மேற்கொண்டபோது, திடீரென்று இறந்து போனார்.

இவ்விறப்பால் பேராயர் ஹெர்பெர்ட் பெரிதும் பாதிக்கபட்டார். இதனால் பல துன்பங்களை அனுபவித்தார். பல்வேறுபட்ட பிரச்சனைகளைச் சந்தித்தார். இவர் ஒட்டோவின் உடலை ஆஹனிற்கு Aachen கொண்டு வரப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டார். ஒட்டோ இறந்ததால் அரசர் 2 ஆம் ஹென்றி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற நாளிலிருந்து ஆயருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். இதனால் ஆயரை கவுன்சிலர் பதவியிலிருந்து விலக வைத்தான்.

ஆயர் ஹெரிபெர்ட் தான் மேற்கொண்ட அனைத்து துன்பங்களையும் இறைவனின் அருளால் பொறுமையோடு ஏற்றார். தன் பணியை தளராமல் சிறப்பாக ஆற்றினார். ஏழைகளின் மேல் இரக்கங் கொண்டுச் செயல்பட்டார். இவர் இறந்தபிறகு கொலொனிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.


செபம்:
குறைவில்லா நிறைபொருளாம் ஆண்டவராகிய இறைவா! உமது அன்பின் வழியில் இன்றைய புனிதரை வழிநடத்தினீர். உம் மகன் இயேசுவின் பெயரால் அவர் செய்த அனைத்து பணிகளிலும் நிறைவைத் தந்தீர். வாழ்வு முழுவதும் உடனிருந்து பாதுகாத்தீர். அவரின் வழியாக வோர்ம்ஸ் நகரில் வாழும் மக்களையும் கொலோன் நகரில் உள்ள மக்களையும் ஆசீர்வதித்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (16-03-2020)

Saint Heribert of Cologne

Son of Duke Hugo of Worms, Germany. Educated at the cathedral school at Worms. Provost of the cathedral. Ordained in 994. Chancellor for Italy under King Otto III in 994. Chancellor for Germany in 997. Archbishop of Cologne, Germany on 9 July 999. Attended the death-bed of King Otto at Paterno. Initially opposed the ascension of King Henry II, and was imprisoned by him. However, when Henry was elected king on 7 June 1002, Heribert immediately acknowledged him as king, and became one of his advisors. Founded and endowed the Benedictine monastery and church of Deutz, Germany. Obtained miracles by prayer, including the end of a drought. Honoured as a saint even during his lifetime.

Born :
c.970 at Worms, Germany

Died :
16 March 1021 at Cologne, Germany of natural causes
• relics in the church at Deutz, Germany (part of modern Cologne

Canonized :
1075 by Pope Saint Gregory VII

Patronage :
against drought
• for rain
• Deutz, Germany

---JDH---Jesus the Divine Healer---

பொப்பி நகர தூய டோரெல்லா (மார்ச் 16)

இன்றைய புனிதர்

பொப்பி நகர தூய டோரெல்லா (மார்ச் 16)
நிகழ்வு

டோரெல்லாவின் இறப்புக்குப் பிறகு அவருடைய கல்லறைக்கு ஒருவர் வந்தார். வந்தவரோ சியென்னாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர். அவர் டோரெல்லாவிடம், “எப்படியாவது நான் எனது சொந்த நாட்டிற்குத் திருப்பிச் செல்ல உதவியருளும். அப்படி நீர் எனக்கு உதவும்பட்சத்தில், நான் இங்கே இருக்கின்ற பாறையில் உம்முடைய திருவுருவத்தை வரைவேன்” என்று வேண்டினார். அவர் இந்த வேண்டுதலை பல நாட்களாகச் செய்துவந்தார். அவருடைய வேண்டுதல் வீண்போகவில்லை. ஆம், தூய டோரெல்லாவின் உதவியால் அம்மனிதர் தம் சொந்த நாட்டிற்கு வேற்று உருவில் சென்றார்.

இந்த நன்றிப்பெருக்கின் அடையாளமாக அந்த மனிதர் ஒருசில மாதங்கள் கழித்து, மீண்டுமாக டோரெல்லாவின் கல்லறைக்கு வந்து, அதற்குப் பக்கத்தில் இருந்த பாறையில் அவருடைய திருவுருவத்தை வரைந்துவிட்டுப் போனார்.

தூய டோரெல்லா இறைவனின் கையில் வல்லமையுள்ள கருவி என்பதற்கு இந்தப் புதுமை ஒரு சான்றாக இருக்கின்றது.

வாழ்க்கை வரலாறு

டோரெல்லா, இத்தாலியில் உள்ள பொப்பி என்னும் ஊரில் 1202 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். எனவே, இவர் எல்லா வசதிகளும் கிடைக்கப்பெற்று மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். டோரெல்லாவுக்கு 18 வயது நடக்கும்போது அவருடைய தந்தை அவரைவிட்டுப் பிரிந்தார். ஏற்கனவே அவருடைய தாயார் சிறுவயதிலே அவரை விட்டுப் பிரிந்ததால் அவர் தனிமரமானார். எனவே, அவர் தன்னுடைய உடைமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு துறவற வாழ்வை மேற்கொள்ள நினைத்தார். இத்தகைய சமயத்தில் அவரோடு இருந்த இரண்டு தீய நண்பர்கள், “உலகில் அனுபவிக்க எவ்வளவோ இருக்கின்றது, அதைவிடுத்து துறவற வாழ்க்கையை மேற்கொள்வது சுத்தப் பைத்தியக்காரத்தனம்” என்று சொல்லி அவருடைய மனதை மாற்றினார்கள். இதனால் அவர் நண்பர்கள் சொல்வதுதான் சரியென்று நினைத்து, எல்லாத் தீயப் பழக்கவழக்கங்களுக்கும் அடிமையாகி தன்னுடைய வாழ்வைத் தொலைத்தார்.

டோரெல்லாவுக்கு 36 வயது நடந்துகொண்டிருக்கும்போது அவர் தன்னுடைய (தீய)நண்பர்களோடு ஒரு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, காகம் ஒன்று அவருடைய கையில் அமர்ந்து மூன்றுமுறை கத்தியது. இதனை அவர் இறைவனின் அழைப்பாக இருக்குமோ என்னவோ (பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்தபோது சேவல் கூவியதே அதுபோன்று இது இருக்குமோ) என்று நினைத்து அவர் உலக மாயையிலிருந்து விடுபட்டு, சான் பிடலியில் இருந்த ஒரு துறவியிடம் சென்று, பாவ சங்கீர்த்தனம் செய்தார். பின்னர் அவர் பொப்பிக்கு அருகே இருந்த கொன்சாண்டினோ மலைக்குச் சென்று, அங்கே இருந்த ஒரு குகையில் தவவாழ்க்கை வாழத் தொடங்கினார்.

டோரெல்லா, கொண்டாண்டினோ மலையில் தவ வாழ்க்கை வாழ்ந்து வருவதைக் கேள்விப்பட்ட நிறையப் பேர் அவரிடத்தில் வந்து, ஆசிர் பெற்றுச் சென்றார்கள். டோரெல்லா மிகவும் குறைவான உணவையே உண்டு, மிகக் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளைச் செய்து வந்தார். சில நேரங்களில் அவருக்குச் சோதனைகள் வந்தபோது உறைபனியில் அப்படியே படுத்துக்கிடந்தது சோதனைகளை வெற்றி கொண்டார். டோரெல்லா வாழ்ந்து வந்த மலைப்பகுதியில் ஓநாய்களின் தொல்லைகள் அதிகமாக இருந்தன. சில நேரங்களில் ஓநாய்கள் அந்த வழியாக வரக்கூடிய சிறு பிள்ளைகளைப் பிடித்துச் சென்றபோது டோரெல்லா அற்புதமாக அக்குழந்தைகளைக் காப்பிற்றினார். இதனால் எல்லாரும் அவரை சின்ன அசிசியார் என்றே அவரை அழைத்து வந்தார்கள். டோரெல்லா தன்னுடைய வாழ்வின் கடைசிக் காலத்தில் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து தூய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவர் 1282 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய டோரெல்லாவின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இறைவனின் அழைப்பை உணர்தல்

தூய டோரெல்லா ஒருகாலத்தில் கடவுளை மறந்து உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்படிப்பட்டவர் ஒரு சமயம் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது காகம் வந்து அவருடைய கையில் அமர்ந்து, மூன்று முறை கரைந்தபோது அதனை கடவுளின் அழைப்பாக உணர்ந்து, எல்லாவற்றையும் துறந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். காகத்தின் வழியாக இறைவன் டோரெல்லாவை அழைத்தபோது, அவர் உடனே செவிமடுத்தி, இறைவழியில் நடந்தது போன்று, பல்வேறு வழிகளில் நம்மை அழைக்கின்றபோது இறைவனின் குரலுக்கு நாம் செவி மடுத்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நிறைய நேரங்களில் இறைவன் நம்மை நேரடியாக அழைத்தால்கூட அதனைக் கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றோம். இத்தகைய நிலை மாற வேண்டும்.

ஆகவே, தூய டோரெல்லாவின் விழாவைக் கொண்டாடும் நாம், இறைவனின் அழைப்பை நம்முடைய வாழ்வில் உணர்ந்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

15 March 2020

பயஸ் கெல்லர் Pius Keller மார்ச்15

இன்றைய புனிதர்
2020-03-15
பயஸ் கெல்லர் Pius Keller
பிறப்பு
25 செப்டம்பர் 1825,
பாலிங்ஹவ்சன் Nallinghausen, பவேரியா
இறப்பு
15 மார்ச் 1904,
முனர்ஸ்டாட் Münnerstadt, பவேரியா

இவர் ஓர் விவசாயியின் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் இவருக்கு யோஹானஸ் Johannes என்று பெயரிட்டனர். இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே 1849 ஆம் ஆண்டு அகஸ்டின் துறவற இல்லத்திற்குச் சென்றார். இவர் அவ்வில்லத்திற்குச் சென்ற ஒரு சில ஆண்டுகளில் அவ்வில்லத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது 53 ஆம் வயதில் அச்சபையின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு இவர் மீண்டும் முனர்ஷ்டட் திரும்பினார்.

இவர் அங்கு எண்ணிலடங்கா துறவற இல்லங்களைக் கட்டினார். அத்துடன் குருமடங்களையும் நிறுவினார். இவர் ஒப்புரவு அருட்சாதனம் கேட்கும் பணியை எப்போதும் தவறாமல் செய்தார். இவர் தன் வாழ்வின் எல்லாச் சூழலிலும் மிகக் கடுந்தவ வாழ்வை வாழ்ந்தார். இவர் புனித அகஸ்டின் துறவற இல்லத்தின் வாழும் புனிதர் என்றழைக்கப்பட்டார். 1934 ல் ஆண்டு முத்திபேறுபட்டம் அளிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டு தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்ததும் எழுத்தில் வடிவமைத்து அறிக்கைகள் அனைத்தும் உரோமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவரின் உடல் அகஸ்டின் துறவற இல்லத்தில் அமைந்துள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லவரே! பயஸ் கெல்லரை நீர் உம் மகனாகத் தேர்ந்தெடுத்தீர். உம் பணியை பரப்ப ஆசீர் வழங்கினீர். அவரின் வழியாக துறவற மடங்களை கட்டி எழுப்பினீர். உம் அழகிய பணி இம்மண்ணில் பரவ அவரை உமது கருவியாக பயன்படுத்தினீர். அவரின் வழியாக அச்சபையை உம் சிறகுகளின் நிழலில் வைத்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

குரு பிளாசிடஸ் ரிக்கார்டி Placidus Riccardi
பிறப்பு : 24 ஜூன் 1844, ட்ரேவி Trevi, இத்தாலி
இறப்பு : 15 மார்ச் 1915, உரோம், இத்தாலி


திருத்தந்தை சக்கரியாஸ் Zacharias
பிறப்பு : 7 ஆம் நூற்றாண்டு, இத்தாலி
இறப்பு : 15 மார்ச் 752, உரோம், இத்தாலி

தூய லூயிஸ் தே மரிலாக் (மார்ச் 15)

இன்றைய புனிதர் : 
(15-03-2020) 

தூய லூயிஸ் தே மரிலாக் (மார்ச் 15)
“சமூகத்தில் விளிம்பு நிலையிலிருப்பவர்களுக்கு சேவை புரிவதில் தீவிரம் காட்டுங்கள்; அவர்கள்மீது அன்பு மழை பொழியுங்கள்; அவர்களுக்குரிய மதிப்புக் கொடுங்கள்; கிறிஸ்துவுக்கு நீங்கள் காட்டும் மரியாதைப் போல் இவர்களுக்கும் காட்டுங்கள்” - தூய லூயிஸ் தே மரிலாக்

வாழ்க்கை வரலாறு

லூயிஸ் தே மரிலாக், 1591 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 12 ஆம் நாள், பாரிஸ் நகரிலிருந்த ஒரு தளபதிக்கு மகளாகப் பிறந்தார். இவர் பிறந்த உடனே இவருடைய தாயார் இறந்துபோக, இவருடைய தந்தை வேறொரு பெண்ணை மணந்தார். இதனால் லூயிஸ் தே மரிலாக் சிற்றன்னையின் கண்காணிப்பில் வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சிற்றன்னை இவரைக் கடுமையாகச் சித்ரவதை செய்தார். இதையெல்லாம் பார்த்த இவருடைய தந்தை, இவரை பார்சி நகரில் இருந்த சாமிநாதர் துறவுமடத்திற்கு அனுப்பி வைத்து கல்வி கற்க வைத்தார். லூயிஸ் தே மரிலாக்கும் அங்கு சிறந்த முறையில் கல்வி கற்றுவந்தார்.

நாட்கள் செல்லச் செல்ல லூயிஸ் தே மரிலாக்குக்கு தானும் துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே, அவர் கிளாரிஸ்ட் சபை தலைமை அருட்சகோதரியிடம் சென்று, தன்னை அவர்களுடைய சபையில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அந்த தலைமை அருட்சகோதரியோ, “உன்னைப் பார்க்கின்றபோது கடவுள் உனக்கென்று வேறொரு திட்டம் வைத்திருக்கிறார் என்பதுபோல் தோன்றுகிறது. ஆகவே, உன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்தி, அதன்பின் ஒருவேளை கடவுள் உன்னை இந்தப் பணிக்கென அழைத்திருந்தால் இங்கு வா” என்று சொல்லி அனுப்பி வைத்தார். லூயிஸ் தே மரிலாக்கும் தன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தார். இதற்கிடையில் பிரான்ஸ் நாட்டு அரசி, இவரை தன்னுடைய அரசாங்கத்தின் ஆவணக் காப்பாளராக இருக்கக் கேட்டுக்கொண்டார். லூயிஸ் தே மரிலாக்கும் அதற்குச் சரியென்று சொல்லி, அங்கேயே பணிசெய்து வந்தார். அப்போதுதான் அவர் அன்றோய்ன் என்ற உயர்குடி இளைஞரைச் சந்தித்தார். அவர் இவர்மீது ஆழமான அன்பு கொண்டிருந்தார். எனவே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமண வாழ்வில் மகிழ்ந்திருந்த லூயிஸ் தே மரிலாக், மிசெல் என்ற குழந்தையைப் பெற்றெடுத்தார். இப்படி வாழ்க்கை இன்பமயமாகப் போய்க்கொண்டிருக்க திடிரென்று ஒருநாள் லூயிஸ் தே மரிலாக்கின் கணவர் இறந்துபோனார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த இவர், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருந்தவர்களின் முன்னேற்றத்திற்காக தன்னுடைய வாழ்வினை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

இந்த சமயத்தில்தான் ஏற்கனவே அன்புப் பணிகளை ‘அன்புப் பணிக் குழுவினர்’ என்ற பெயரில் செய்துகொண்டிருந்த தூய வின்சென்ட் தே பவுலின் தோழமை கிடைத்தது. அவர் லூயிஸ் தே மரிலாக்கை வாஞ்சையோடு ஏற்றுக்கொண்டு தன்னோடு பணிசெய்ய இணைத்துக்கொண்டார். இப்படி நாட்கள் போய்கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள் ஆண்களுக்களு சேவை செய்ய ஏராளமான சபைகள் இருக்கின்றனவே, ஏன் பெண்களுக்கு சேவை செய்ய ஒரு சபையைத் தொடங்கக்கூடாது என்ற யோசனை வின்சென்ட் தே பவுலுக்குத் தோன்றியது. அதனடிப்படையில் அவர் லூயிஸ் தே மரிலாக்கிடம் பெண்களுக்கென்று ஒரு சபையைத் தொடங்கச் சொன்னார். அப்படித் தொடங்கப்பட்டதுதான் ‘அன்பின் பணியாளர் சபை’ (Sisters of Charity). இந்தச் சபையின் வழியாக, ஏழைக் குழந்தைகள், அனாதைகள், வயது முதிர்ந்தோர் இவர்களுக்குத் தொண்டு செய்யப்பட்டன. லூயிஸ் தே மரிலாக், இப்பணிகளை எல்லாம் செய்வதறிப் பார்த்து, நிறையப் பேர் இவருடைய சபையில் சேர்ந்தார்கள். இன்னொரு சமயம் போலந்து நாட்டு அரசி, லூயிஸ் தே மரிலாக்கை தன்னுடைய நாட்டிற்கு அழைத்து, சேவைகள் செய்யப் பணித்தார். அவரும் அங்கு சேவை செய்து நல்லதொரு பெயரோடு நாட்டிற்குத் திரும்பி வந்தார்.

இப்படி இறைப்பணியையும் மக்கள் பணியையும் செய்துவந்த லூயிஸ் தே மரிலாக் 1660 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1934 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லூயிஸ் தே மரிலாக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. சேவை செய்து வாழ்வோம்

தூய லூயிஸ் தே மரிலாக்கின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் சமூகத்தில் விளிம்பு நிலையில் இருந்த மக்களுக்கு சேவை செய்து வாழ்வதை தன்னுடைய இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார் என்பது நமக்குப் புரியும். அவரைப் போன்று நாம் நம்மோடு வாழக்கூடிய எளியவர், வறியவருக்கு சேவை செய்ய முன்வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். மத்தேயு நற்செய்தி 25 ஆம் அதிகாரத்தில் வருகின்ற இறுதித் தீர்ப்பு உவமையில் ஆண்டவர் இயேசு, ‘மிகச் சிறிய சகோதர சகோதரிகளுக்குச் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என்பார். ஆம், நாம் நம்மோடு வாழக்கூடிய எளிய எளியவருக்குச் செய்கின்ற உதவிகள் எல்லாம் இறைவனுக்குச் செய்யப்படக்கூடியவையே ஆகும்.

ஆகவே, தூய லூயிஸ் தே மரிலாக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஏழை எளியவரில் இறைவனைக் கண்டு, அவர்களுக்குச் சேவை செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (15-03-2020)

St. Louise de Marillac

She was born on August 15, 1591 in Paris was said to be born out of wedlock. She lived among the affluent society people of Paris. She wanted to become a Capuchin nun and to do social service. But her request was rejected by the family. She was then married off to one Antoine Le Gras, secretary to Queen Marie on February 5, 1617. She lived a happy life with Antoine and they had a boy child Michael. But her husband died of some illness some years later. She thought that she can now fulfill her desire to become a religious woman. She met St. Vincent de Paul and sought his advice to become a religious worker. She was the co-founder of Daughters of Charity with St. Vincent de Paul, in the year 1633. She became the head of the Daughters of Charity later. The association Daughters of Charity was having more than forty houses in France when she died on March 15, 1660. As a wife, mother, widow, teacher, nurse, social worker and religious founder, she stands as a model for all women.

She was beatified by pope Benedict-XV on May 9, 1920 and canonized by pope Pius-XI on March 11, 1934. Declared the Patron of Social Workers by pope John-XXIII, in the year 1960. She is venerated as the patroness of disappointing children, loss of parents, people rejected by religious orders, sick people, social workers and widows.

---JDH---Jesus the Divine Healer---

14 March 2020

தூய மெட்டில்டா (மார்ச் 14)

இன்றைய புனிதர் : 
(14-03-2020) 

தூய மெட்டில்டா (மார்ச் 14)
வாழ்க்கை வரலாறு

மெட்டில்டா 895 ஆம் ஆண்டு ஜெர்மனியை ஆண்டுவந்த அரசகுடும்பத்தில் (Dietrich) மகளாக பிறந்தார். இவருக்குப் பதினான்கு வயது நடந்துகொண்டிருந்த போதே இவருடைய பெற்றோர் இவரை ஹென்றி என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டனர். அப்படி இருந்தாலும் திருமண வாழ்க்கையில் இவர் தன்னுடைய கணவருக்கு மிகவும் பிரமாணிக்கமாக இருந்தார்.

மெட்டில்டாவிற்கு ஆடம்பரமான வாழ்க்கை வாய்க்கப்பட்டிருந்தாலும் இவருடைய மனம் அதில் நாட்டம் கொள்ளவில்லை. மாறாக, கடவுளோடு ஜெப தவ வாழ்க்கையில் ஈடுபடுவதிலும் விதவைகளை, கைவிடப்பட்டோர், அனாதைகள் இவர்களுக்கு சேவை செய்வதிலுமே மனம் அதிக ஈடுபாடு கொண்டது. அதனால் இவர் தன்னுடைய நாட்டில் வாழ்ந்துவந்த ஏழைகள், கைவிடப்பட்டோர், அனாதைகள், விதவைகள் போன்றோருக்கு உதவிசெய்வதில் மும்முரமாக இருந்தார். இவருடைய கணவரும் இதற்கு மறுப்பேதும் சொல்லாமல், இவரைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே வந்தார். கடவுள் இந்தத் தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகளைக் கொடுத்து ஆசிர்வதித்திருந்தார்.

இப்படி எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் 936 ஆம் ஆண்டு மெட்டில்டாவின் கணவர் ஹென்றி திடிரென்று நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகி அப்படியே இறந்துபோய்விட்டார். இதனால் மெட்டில்டா அடைந்த துயருக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அவர் அந்தத் துயரத்திலிருந்து மீண்டு வருவதற்கு வெகுநாட்கள் ஆனது. கணவரின் இறப்புக்குப் பிறகு மெட்டில்டாதான் ஜெர்மனியின் அரசியாக உயர்ந்தார். மக்களை நீதிவழியில் வழிநடத்திச் சென்றதோடு மட்டுமல்லாமல், ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர் கைம்பெண்கள் இவர்களுக்கு ஆற்றி வந்த சேவையினைத் தொடர்ந்து செய்து வந்தார்.

இதற்கிடையில் மெட்டில்டாவின் இரண்டு புதல்வர்களும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். அவர்கள் இருவரும் வளர்ந்த பின்னர் அரசியான மெட்டில்டா – தங்களுடைய தாய் – அரசாங்கச் சொத்துகளை தேவையில்லாமல் விரையம் செய்கின்றார் என்று குற்றம் சுமத்தி அவரை அரசாங்கப் பொறுப்பிலிருந்து நீக்கி, பதவியை தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். தன்னுடைய பதவி போனதைப் பற்றிக்கூட கவலைப்படாத மெட்டில்டா தன்னுடைய பிள்ளைகள் அப்படி நடந்து கொண்டதை நினைத்துப் பெரிதும் வருந்தினார். மெட்டில்டா தன்னுடைய கடைசி நாட்களை எல்லாவற்றையும் துறந்து ஒரு துறவற மடத்தில் கழித்து 968 ஆம் ஆண்டு அங்கேயே தன்னுடைய ஆவியை இறைவனிடம் ஒப்படைத்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மெட்டில்டாவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நாமும் ஒருநாள் புனிதர் ஆகலாம்

தூய மெட்டில்டாவின் வாழ்வை ஒருகணம் நாம் சிந்தித்துப் பார்க்கும்போது மேலே இருக்கும் தலைப்புதான் நமக்கு நினைவுக்கு வருகின்றது. மெட்டில்டா ஓர் அரசியாக, செல்வச்செழிப்பான வாழ்க்கை அமையப் பெற்றவர். அப்படியிருந்தாலும் அவர் அதில் நாட்டம் கொள்ளாமல், கடவுளுக்குத் தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுத்து, ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதில் தன்னுடைய வாழ்வைச் செலவழித்தார். இந்தப் பாடத்தைத் தான் நாம் இவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். நாம் எந்த நிலையில் இருந்தாலும் பணக்காரராகவோ, ஏழையாகவோ இருந்தாலும் நம்மாலும் புனிதராக முடியும் என்பதைத்தான் தூய மெட்டில்டா நமக்குக் கற்றுத் தருகின்றார்.

2. தாழ்ச்சியோடு சேவை

தூய மெட்டில்டாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய இரண்டாவது பாடம் தாழ்ச்சியோடு சேவை செய்வதாகும். மெட்டிலா ஓர் மிகப்பெரிய சாம்ராஜியத்தின் அரசியாக இருந்தபோதும் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் தாழ்ச்சியோடு சேவைசெய்து, கிறிஸ்துவின் விழுமியங்களின்படி வாழ்ந்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் தாழ்ச்சியோடு சேவை செய்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராய் இருக்கட்டும். இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுக்க வந்தார்” என்று (மத் 20: 26-28). ஆம், இயேசுவைப் பொறுத்தளவில் ஒரு தலைவர் என்றால் அவர் தொண்டரே, பணியாளரே. இயேசுவின் இத்தகைய மனநிலையைப் புரிந்தவராய் தூய மெட்டில்டா ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வந்தார். அவரைப் போன்று நாமும் ஏழை எளிய மக்களுக்கு தாழ்ச்சியோடு சேவை செய்வதுதான் இன்றைய நாளில் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதாக இருக்கின்றது.

ஆகவே, தூய மெட்டில்டாவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று தாழ்ச்சியோடு சேவை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்
Saint of the Day : (14-03-2020) 

Saint Matilda of Saxony

Daughter of Count Dietrich of Westphalia and Reinhild of Denmark; she was raised by her grandmother, abbess of the Eufurt. In 913, Matilda left the abbey, and married King Henry the Fowler of Saxony (Henry I), who had received an annulment from a previous marriage. Queen of Germany. Mother of Otto, Holy Roman Emperor; Henry the Quarrelsome, Duke of Bavaria; Saint Bruno the Great, Archbishop of Cologne, Germany; Gerberga, wife of King Louis IV of France; Hedwig, mother of Hugh Capet. Founded several Benedictine abbeys. Well known throughout the realm for her generosity, she taught the ignorant, comforted the sick, and visited prisoners. Betrayed by Otto after Henry's death when he falsely accused her of financial mismanagement.

Born :
c.895 at Engern, Westphalia, Germany

Died : 
14 March 968 at Quedlinburg, Germany of natural causes
• buried in the monastery at Quedlinburg

Patronage :
death of children
• disappointing children
• falsely accused people
• large families
• people ridiculed for their piety
• queens
• second marriages
• widows

---JDH---Jesus the Divine Healer---

13 March 2020

கான்ஸ்டான்டினோபிள் நகர்புனித யூப்ரசியா march 13

கான்ஸ்டான்டினோபிள் நகர்
புனித யூப்ரசியா
பிறப்பு:
380, கான்ஸ்டான்டினோபிள், கிழக்கு ரோம பேரரசு.

இறப்பு:
மார்ச் 13, 410, தீபைட், எகிப்து, இயற்கை மரணம்.
ஏற்கும் சபை/சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை,
கிழக்கு மரபுவழி திருச்சபை.
சித்தரிப்பு:
கல்லைப் பிடித்தாற்போல் அல்லது சுமப்பதுபோல்
புனித யூப்ரசியா, 380 ஆம் ஆண்டு, கான்ஸ்டான்டினோபிளைச் சார்ந்த அன்றிகோனஸ் என்பவருக்கு மகளாகப் பிறந்தார். இவர் மன்னர் தியோடசியஸ் என்பவருக்கு நெருங்கிய உறவினர்.
சிறுவயதிலே புனித யூப்ரசியாவின் தந்தை இறந்துவிட, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய உறவினராகிய மன்னர் தியோடசிசின் கண்காணிப்புக்குக் கீழ் வந்தார்கள். தியோடசிசோ, இளமையாக இருந்த புனித யூப்ரசியாவின் தாயை வேறொருவருக்கு மணமுடித்துக் கொடுக்கவும், புனித யூப்ரசியாவை இளைஞன் ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்கவும் திட்டம் தீட்டினார். விஷயம் அறிந்தப் புனித யூப்ரசியாவின் தாயார் புனித யூப்ரசியாவை தன்னோடு தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போனார். அப்போது புனித யூப்ரசியாக்கு வயது வெறும் ஒன்பதுதான். எகிப்துக்கு ஓடிப்போன புனித யூப்ரசியாவும் அவருடைய தாயாரும் ஒரு துறவற மடத்தில் தஞ்சம் புகுந்தார்கள்.
துறவற மடத்திலிருந்த சமயத்தில் அங்கிருந்த துறவிகளின் வாழும் முறையைப் பார்த்துவிட்டு புனித யூப்ரசியா தானும் ஒரு துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு, அவர்களைப் போன்றே வாழத் தொடங்கினார். ஒரு சமயம் மடத்திலிருந்த தலைமைச் சகோதரி புனித யூப்ரசியாவுக்கு துறவற ஆடையைக் கொடுத்தபோது, அதனை அணிந்துகொண்டு தன்னுடைய தாயிடம், “அம்மா! என்னுடைய திருமண ஆடை எப்படி இருக்கின்றது?” என்று கேட்டார். தாய் அவளிடம் ஒன்றும் சொல்லாமல், தன் மகளுக்குத் துறவற வாழ்வின்மீது எவ்வளவு ஆர்வம் இருக்கின்றது என்று மனதிற்குள்ளாகவே நினைத்துப் பெருமிதம் கொண்டார். இதுநடந்துச் சில நாட்கள் கழித்து, புனித யூப்ரசியாயின் தாயார் அவரை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்தார். இதனால் பெரிதும் வருத்தமடைந்த புனித யூப்ரசியா, அதன்பிறகு தன் வாழ்வு முழுவதையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கத் தொடங்கினார்.
இதற்கிடையில் புனித யூப்ரசியா எங்கு இருக்கின்றார் என்ற செய்தியும், அவருடைய தாயார் இறந்த போன செய்தியையும் கேள்விப்பட்ட மன்னர் தியோடசியஸ், ஆள் அனுப்பிப் புனித யூப்ரசியாவைக் கூட்டி வரச் சொன்னான். ஆனால், புனித யூப்ரசியாவோ கடிதமொன்றில், ‘நான் என்னை ஆண்டவருக்கு அர்ப்பணித்துவிட்டேன், அதனால் வேறு யாரையும் மணப்பதாக இல்லை என்றும், சொத்துக்களை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிடுங்கள் என்றும், தோட்டத்தில் அடிமைகளாக இருப்பவர்களை விடுதலைச் செய்து அனுப்பிவிடவும்” என்று எழுதி அதனை மன்னரிடத்தில் அனுப்பி வைத்தார். அதனைப் படித்துப் பார்த்த தியோடசியஸ், அதன்பிறகு புனித யூப்ரசியாவைத் தொந்தரவுச் செய்யவில்லை.
புனித யூப்ரசியா, துறவு மடத்திலிருந்த சமயங்களில் மிகவும் தாழ்ச்சியோடும் பொறுமையோடும் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்து வந்தார். சாத்தான் அவரைப் பலவிதங்களில் சோதித்துப் பார்த்தது. அத்தகைய தருணங்களில் எல்லாம் அவர் மிகவும் மனவுறுதியாக இருந்து, சாத்தனை வெற்றிகொண்டார். புனித யூப்ரசியாவிடம் நிறைய நோயாளிகள் அழைத்து வரப்பட்டார்கள். புனித யூப்ரசியா அவர்கள்மீது சிலுவை அடையாளம் வரைய, அவர்கள் நோய் நீங்கி நலம்பெற்றார்கள். இப்படி இறைவனுக்கு உகந்த அடியவராக வாழ்ந்து வந்த புனித யூப்ரசியா, 410 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

2020-03-13செவிலா நகர் பேராயர் லேயாண்டர் Leander von Sevilla OSB

இன்றைய புனிதர்
2020-03-13
செவிலா நகர் பேராயர் லேயாண்டர் Leander von Sevilla OSB
பிறப்பு
540,
கார்டாகெனா Cartagena, ஸ்பெயின்
இறப்பு
13 மார்ச்,
600, செவிலா Sevilla, ஸ்பெயின்
பாதுகாவல் : செவிலா நகர், மூட்டுவலியிலிருந்து

இவர் உரோமையர் ஒருவரின் குடும்பத்தில் பிறந்தார். இவரின் சகோதரர் புனித இசிதோர் Isidor. லேயாண்டர் புனித பெனடிக்ட சபையில் சேர்ந்து குருவானார். இவர் அரசர் மகன் ஒருவனுக்கு ஆலோசகராக இருந்தார். அரசரின் மகனின் உதவியுடன், அந்நாடு முழுவதும் விசுவாசத்தை பரப்பினார். இவர் கான்ஸ்டாண்டிநோபிளில் இறைவார்த்தையை எடுத்துரைத்தார். பிறகு திருத்தந்தை பெரிய கிரகோரி அவர்களின் நட்பைப் பெற்றார்.

இவர் ஏறக்குறைய 583 ஆம் ஆண்டில் செவிலா நகரின் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் தனது பதவி காலத்தில் தன் மறைமாவட்ட மக்களை கிறிஸ்துவ விசுவாசத்தில் வளரச் செய்தார். இவர் ஆரியன் கொள்கைகளை எதிர்த்து போரிட்டார். சில பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வெளிப்படையாகவே கிறிஸ்துவ விசுவாசத்தில் வளரச் செய்தார். இவர் ஆரியன் கொள்கைகளை எதிர்த்து போரிட்டார். சில பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு வெளிப்படையாகவே கிறிஸ்துவைப்பற்றி போதித்தார்.


செபம்:
உலகை படைத்து பராமரித்தாளும் பரம்பொருளே எம் இறைவா! உம்மை இவ்வுலகில் பறைசாற்ற, பலவிதங்களில் பணியாற்றிய உம் இறையடியார்களை நினைவுகூறும். உமக்கெதிராக செயல்படும் மக்களை ஆசீர்வதியும். உம் மக்களை நீர் ஆசீர்வதியும். தூய ஆவியால் நிரப்பியருளும். உம்மேல் அன்பும் அக்கறையும் கொண்டு வாழச் செய்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி நோவாலெசே நகர் எல்ட்ராட் Eldrad von Novalese OSB
பிறப்பு : 8 ஆம் நூற்றாண்டு, பிரான்சு
இறப்பு : 13 மார்ச் 840, நோவாலெசே Novalese, இத்தாலி


மாயோ நகர் ஜெரால்டு Gerald von Mayo OSB
பிறப்பு : 642, இங்கிலாந்து
இறப்பு : 13 மார்ச் 732 மயோ, இத்தாலி
பாதுகாவல் : கொள்ளை நோயிலிருந்து

12 March 2020

2020-03-12கன்னி ஃபீனா Fina

இன்றைய புனிதர்
2020-03-12
கன்னி ஃபீனா Fina
பிறப்பு
1238,
சான் கிமிக்னானோ San Gimignano, இத்தாலி
இறப்பு
12 மார்ச் 1253,
இத்தாலி
பாதுகாவல் : சான் கிமிக்னானோ நகர்

இவர் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். ஒருவேளை உணவு கூட வயிறார உண்ணமுடியாத அளவிற்கு ஏழ்மையாக வாழ்ந்தவர். அவ்வாறு இருந்தபோதிலும், தன்னிடம் உள்ள உணவில் சிறிதளவை மற்ற ஏழைகளுடன் பகிர்ந்து வாழ்ந்தார். இவர் நோயால் தாக்கப்பட்டு, மிகக் கொடுமையான வேதனைகளை அனுபவித்தார். தாங்கமுடியாமல் நோயால் துடித்தபோதும், பொறுமையை இழக்காமல், இறைவனை இறுக பற்றி வாழ்ந்தார். தான் பெறும் வலிகளை இறைவனுக்காக அனுபவிக்கிறேன் என்று புன்னகையோடு ஏற்றார். இவர் வாழும் போதே புனிதர் என்று போற்றப்பட்டார். இவர் தனது இறுதி நாட்களை சான் கிமிக்னானோவில் இருந்த பேராலயத்தில் கழித்தார். இவர் இறந்தபிறகும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். அப்பேராலயத்தின் அருகில் இவர் பெயரில் ஆலயம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.


செபம்:
மருத்துவர் நோயற்றவர்க்கு அன்று, மாறாக நோயுற்றவர்க்கே என்று மொழிந்த எம் இறைவா! நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நண்பர்களை ஆசீர்வதியும். புனித ஃபீனாவைப் போல தங்களின் வலியிலும் உம்மை பற்றுக்கொண்டு, பொறுமையைக் கடைபிடிக்க செய்தருளும். நீரே குணமளிப்பவராக இருந்து, உமக்கு விருப்பமானால் நோய்களை குணமாக்கி நலமளித்திட வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி ஏங்கல்கார்டு Engelhard OFM
பிறப்பு : 12 ஆம் நூற்றாண்டு, இத்தாலி
இறப்பு : 1230, ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து
புனிதர்பட்டம்: 1230


மறைபணியாளர் பவுலூஸ் அவ்ரேலியானூஸ் Paulus Aurelianus
பிறப்பு : 5 ஆம் நூற்றாண்டு, வேல்ஸ் Wales
இறப்பு : 573, பிரெட்டக்னே Bretagne, பிரான்சு

11 March 2020

குரு யோஹானஸ் பாப்டிஸ்டா ரீகி Johannes Baptista Righi OFM march 11

இன்றைய புனிதர்
2020-03-11
குரு யோஹானஸ் பாப்டிஸ்டா ரீகி Johannes Baptista Righi OFM
பிறப்பு
1469,
பாப்ரியானோ Fabriano, இத்தாலி
இறப்பு
11 மார்ச் 1539,
அன்கோனா Ancona, இத்தாலி

இவர் ஓர் உயர்தர குடும்பத்தில் பிறந்தார். இவர் இவ்வுலக வாழ்வில் சிறிதும் ஈடுபாடு இல்லாமல் வாழ்ந்தார். இவர் தான் ஓர் குருவாக வேண்டுமென்று சிறுவயதிலிருந்தே ஆசைக்கொண்டார். இதனால் இவர் தனது 15 ஆம் வயதில் புனித பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றார். அதன்பிறகு பிரான்சிஸ்கன் சபையிலும் முழு திருப்தி இல்லாமல் போகவே, மீண்டும் அன்கோனா திரும்பினார். அங்கு அவர் தான் இறப்பின் வரை மறைப்பணியாற்றினார்.

இவர் சிறப்பாக நோயாளிகளை சந்தித்து, ஆறுதல் கூறி நோயில் பூசுதல் வழங்கி, ஒவ்வொரு நோயாளிகளையும் இறைவனோடு ஒன்றிக்கச் செய்தார். இவர் தான் இறந்த பிறகு எண்ணிலடங்கா புதுமைகளைச் செய்தார்.


செபம்:
அருளை வாரி வழங்குபவரே இறைவா! ஏழைகளிடத்தில் அன்பு கொண்டு மறைப்பணியாற்றிய அருட்தந்தை யோஹானஸ் பாப்டிஸ்டாவைப் போல, நாங்களும் ஏழைகளின் மேல் அக்கறை கொண்டு வாழச் செய்தருளும். ஏழை மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்காக உழைக்க எமக்கு நல்ல மனதைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

மறைசாட்சி கன்னி ரோசினா Rosina
இறப்பு : அல்காய் Allgau, பவேரியா


எருசலேம் நாட்டின் சோப்ரோனியஸ் Sophronius von Jerusalem
பிறப்பு : 6 ஆம் நூற்றாண்டு, தமஸ்கு Damaskus
இறப்பு : 11 மார்ச் 638, எருசலேம்

தூய யூலோசியஸ் (மார்ச் 11)

இன்றைய புனிதர் :
(11-03-2020) 

தூய யூலோசியஸ் (மார்ச் 11)
“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” (யோவா 12: 24)

வாழ்க்கை வரலாறு

யூலோசியஸ், ஸ்பெயின் நாட்டில் உள்ள கோர்டோவா என்னும் இடத்தில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவர் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்திருக்கலாம் என்று சொல்வர்.

தொடக்கக் கல்வியை யூலோசியஸ், சோய்லஸ் என்பவரிடத்தில் கற்றார். இந்த சோய்லஸ் பின்னாளில் மறைசாட்சியாக உயிர்துறந்தார் என்பது வரலாறு. கல்வியை தகுந்தமுறையில் கற்றுக்கொண்ட பிறகு யூலோசியஸ் திருமறையைப் போதிக்கும் பள்ளிக்கூடத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றார். தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் யூலோசியஸ் எப்போதும் தாழ்ச்சியோடும் பொறுமையோடும் உண்மையான அன்போடும் வாழ்ந்து வந்தார். அதனால் எல்லாரும் அவர்மீது நன்மதிப்பு கொண்டிருந்தார்கள். யூலோசியஸ் எப்போதும் விவிலிய அறிவில் சிறந்து விளங்கி வந்தார். பல நேரங்களில் அவர் விவிலியத்தை வாசிக்கும்போது இறைவனின் வல்லமையை உணர்ந்தார்.

850 - களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனை நடைபெறத் தொடங்கியது. நிறையக் கிறிஸ்தவர்கள் மூர் இனத்தவரால் சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். அந்நேரத்தில் யூலோசியசும் சிறைபிடிக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது ‘கிறிஸ்தவ விசுவாசத்தில்’ நம்பிக்கை தளர்வுற்று இருந்த நிறைய கிறிஸ்தவர்களை நம்பிக்கையில் தேற்றினார். அப்படி அவரால் நம்பிக்கையில் தேற்றப்பட்ட ப்ளோராவும் மரியாவும் 851 ஆம் ஆண்டு கிறிஸ்துவுக்காக தங்களுடைய இன்னுயிரைத் தந்தார்கள். அவர்களைப் போன்று இன்னும் பலர் ஆண்டவர் இயேசுவுக்காக மறைசாட்சிகளானார்கள். யூலோசியஸ், சிறையில் இருந்துகொண்டே ‘Memorial of the Saints’ என்னும் நூலை எழுதினார். இந்நூல் விசுவாசத்திற்காக வேதசாட்சிகளாக உயிர்துறந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எடுத்துக்கூறுவதாக இருந்தது. இந்நூலின் வழியாக யூலோசியஸ், கிறிஸ்தவ விசுவாசத்தில் தளர்வுற்றிருந்த கிறிஸ்தவர்களைத் தேற்றி, நம்பிக்கையில் உறுதிபடுத்தினார்.

ஒருசில ஆண்டுகள் சிறைவாழ்விற்குப் பிறகு யூலோசியஸ் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்பு அவர் டோலேடோ நகரின் ஆயராக நியமிக்கப்பட்டர். ஆயர் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதற்காக யூலோசியஸ் டோலோடோ நகருக்குச் சென்றுகொண்டிருக்கும்போது அவர் லூக்ரசியா என்ற இஸ்லாமியரை மதம்மாற்றிவிட்டார் என்ற குற்றத்திற்காக மீண்டுமாகக் கைதுசெய்யப் பட்டு, நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்றது. விசாரணை சமயத்திலும் யூலோசியஸ் அங்கிருந்தவர்களுக்கு ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைத்தார். இதனால் சினம் கொண்ட அதிகாரிகள் யூலோசியசையும் அவரோடு இருந்த லூக்ரசியாவையும் தலைவெட்டிக் கொன்றுபோட்டார்கள். இவ்வாறு யூலோசியஸ் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி மறைசாட்சியானார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய யூலோசியசின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. விவிலியம் வாசித்து வேதத்தில் வேரூன்றி இருப்போம்

தூய யூலோசியசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது, விவிலியத்தில் அவர் கொண்டிருந்த ஆர்வமும் பற்றும்தான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. கிறிஸ்தவர்கள் எல்லாம் உயிருக்குப் பயந்து, கிறிஸ்தவ மறையை மறுதலித்தபோது, அவர்களையெல்லாம் நம்பிக்கையில் உறுதிபடுத்துவதற்கு யூலோசியசிற்கு விவிலியம்தான் தூண்டுகோலாக இருந்தது. யூலோசியசின் விழாவைக் கொண்டாடுகின்ற நாம், விவிலியம் வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கின்றோமா? அதில் ஆழமான பற்று கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது விவிலியத்தில் இருக்கின்ற எல்லா நூல்களும் ஒன்றாகத் தொகுக்கப்படுவதற்கு முந்தைய கால கட்டத்தில், சிசிலியைச் சார்ந்த ஒருவர் விவிலியத்தில் இருக்கின்ற ஒவ்வொரு நூலையும் தனித்தனியாக விற்றுக்கொண்டு வந்தார். ஒருநாள் அவர் தன்னுடைய விற்பனையை முடித்துவிட்டு ஒரு காட்டுப் பாதை வழியாக போய்க்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கொள்ளைக் கும்பல், “பையில் என்ன இருக்கின்றது?” என்று கேட்டது. அதற்கு அவர், “விவிலிய நூல்கள்” என்று சொல்ல, உடனே அந்த கொள்ளைக் குப்பல், “எல்லாவற்றையும் தீயிலிட்டுப் பொசுக்கு, இல்லையென்றால் நீ உயிரோடு ஊருக்குப் போகமுடியாது” என்று மிரட்டியது. அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறிதுநேர யோசனைக்குப் பின் அவர் அவர்களிடம், “ஐயா! இந்த நூல்களையெல்லாம் எரித்துவிடுகின்றேன். அதற்கு முன்னதாக இந்த நூல்களிலிருந்து ஒருசில பகுதிகளை வாசிக்கின்றேன். அவை உங்களுக்குப் பிடித்திருந்தால் வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் இதனை தீயிலிட்டு எரித்துவிடுகிறேன்” என்றார். அவர்களும் அதற்குச் சரியென்று சொல்ல, அவர் ஒவ்வொரு நூலிருந்தும் ஒரு பகுதியை எடுத்து வாசித்தார்.

முதலில் அவர் ஒருநூலிருந்து ‘திருப்பாடல் 23 யையும், இன்னொரு நூலிலிருந்து மலைப்பொழிவையும், மற்றறொரு நூலிருந்து நல்ல சமாரியன் உவமையையும் வேறொரு நூலிருந்து அன்பைப் பற்றிய கவிதையையும் (1 கொரிந்தியர் 13) வாசித்தார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அந்தக் கொள்ளைக் கும்பல், இவையெல்லாம் சாதாரண நூல்கள் மாதிரித் தெரியவில்லை, நல்ல நூல்களாகத் தெரிகின்றன. அதனால் இவற்றை எரிக்கவேண்டாம். எல்லாவற்றையும் எம்மிடத்தில் கொடுத்துவிடு” என்றது. அவரும் அதற்குச் சரியென்று சொல்லி, நூல்கள் அனைத்தையும் அந்தக் கொள்ளைக் கூட்டத்திடம் கொடுத்துவிட்டு வீடு திரும்பினார். சில ஆண்டுகள் கழித்து, அந்த நூல்களை எல்லாம் படித்துப் பார்த்துவிட்டு, தாங்கள் செய்துவந்த கொள்ளையடிக்கும் தொழிலை விட்டுவிட்டு அவர்கள் குருக்களாக மாறினார்கள்.

விவிலியம் ஒருவருடைய வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. இன்று நாம் நினைவுகூறும் யூலோசியசும் விவிலியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதனைப் படித்துப் படித்து ஆற்றலையும் வல்லமையையும் பெற்றார்.
Saint of the Day : (11-03-2020)

Saint Eulogius of Cordoba

Son of a senatorial family from Cordoba, Spain. Well educated. Priest. Head of an ecclesiastical school. Worked to comfort and support Christian martyrs and their survivors during Islamic persecutions in Moorish occupied Spain. Arrested several times for his faith, he wrote Exhortation to Martyrdom while during one of his imprisonments. Appointed to succeed the Archbishop of Toledo, Spain, but was never consecrated. Imprisoned after he gave shelter to Saint Leocritia of Cordoba, he preached the Gospel in court, then in front of the king's counsel. Martyr.

Died :
scourged and beheaded 11 March 859 at Cordoba, Spain
• some relics translated to Paris, France in the early 860's

Patronage :
carpenters
• coppersmiths

---JDH---Jesus the Divine Healer---

ஆகவே, யூலோசியசின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம், விவிலியம் வாசிப்பப்பதில் ஆர்வம் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.