புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

08 May 2020

புனித.கிளாரா ஃபாய் (St.Klara Foy) துறவி, சபை நிறுவுனர் May 8

இன்றைய புனிதர் : 
(08-05-2020)                       

புனித.கிளாரா ஃபாய் (St.Klara Foy)  
துறவி, சபை நிறுவுனர் 
பிறப்பு : 11 ஏப்ரல் 1815 ஆஹன்(Aachen), ஜெர்மனி  

இறப்பு : 8 மே 1848 சிம்பல்பெல்டு(Simpelfeld), ஹாலந்து

இவர் தனது கல்வியை முடித்தபின் துறவற சபைகளை பற்றி தெரிந்து கொள்ள பல புத்தகங்களை படித்தார். ஆஹனில் பிற ந்த இவர், தனது பங்குதந்தை பவுல் உதவியுடன், பல சமூக பணி களில் தன்னை ஈடுபடுத்தினார். சிறப்பாக இளைஞர்களிடத்தில் அதிக அன்பு காட்டினார். 1837 ஆம் ஆண்டு தனது 22 ஆம் வயதில் ஆஹனில் இளைஞர்களுக்கென்று ஓர் பள்ளியை நிறுவினார். இப்பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு, இவரின் சமூக சேவை பணிக்குழுவில் இருந்தவர்கள் முன் வந்தனர். இவ ர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சமூக சேவையோடு, 1844 ஆம் ஆண்டு இறைவனின் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திகொ ண்டனர். இதன் விளைவாக 1848 ஆம் ஆண்டு கிளாரா ஃபாய் அவ ர்கள் "குழந்தை இயேசுவின் ஏழைகள்" என்ற சபையை நிறுவி னார். ஏராளமான ஏழை குழந்தைகளை ஒன்று சேர்த்து அவர் களை பராமரித்தார்கள் இச்சபை கன்னியர்கள். அதோடு கல்வி கற்றுக் கொடுத்து, வாழ்விற்கு வழிகாட்டி, தாய்க்குத் தாயாக இருந்து பராமரித்தார்கள். நாளடைவில் குழந்தைகளின் எண் ணிக்கை பெருகவே மீண்டும் ஓர் துறவற இல்லத்தை நிறுவி னார். இதில் பல கைவிடப்பட்ட பெண்களும், விதவைகளும் வந்து சேர்ந்தனர். கிளாரா இச்சபையை தொடங்கிய 15 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனி முழுவதும் 19 துறவற மடங்களை துவ ங்கினார். சில கலாச்சார வேறுபாடுகளின் அடிப்படையில் இவ ரது சபை ஹாலந்து நாட்டிலும் தொடங்கப்படவேண்டியதாக இருந்தது. இதனால் ஹாலந்து நாட்டில் ஓர் துறவற மடம் தொடங் கப்பட்டு, அந்த மடமே பிற்காலத்தில் இச்சபையின் தலைமை இல்லமாகவும் அமைந்தது. இச்சபையின் முதல் சபைத்தலைவி யாக கிளாரா ஃபாய் அவர்களே பொறுப்பேற்றார். பல ஏழை குழ ந்தைகளுக்கும், கைவிடப்பட்ட பெண்களுக்கும், விதவைகளுக் கும் தாயான இவர் இறந்தபிறகு ஹாலந்து நாட்டிலுள்ள சிம்பல் பெல்டு என்ற ஊரில் அடக்கம் செய்யப்பட்டு, இவரை முன் மாதி ரியாக கொண்டு இன்றுவரை இச்சபைத்துறவிகள் பணியா ற்றிவருகிறார்கள். 

செபம்:

ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று மொழிந்த இயேசுவே! பெண்களின் மேல் அக்கறை கொண்டு, ஓர் சபையை நிறுவி இன்று வரை பணியாற்றிகொண்டிருக்கும் இச்சபையை நீர் நிறைவாக ஆசிர்வதியும். பெண்களின் முன்னேற்றத்தி ற்காக உழைக்கின்ற ஒவ்வொருவருக்கும் நல்ல உடல், உள்ள, ஆன்ம நலன்களை தந்து, எல்லா இடையூறுகளையும் எதிர் கொள்ள உமது சக்தியை தந்து, ஆசீர்வதித்து வழிநடத்தி யருள வேண்டுமென்று தந்தையாம் இயேசுவே உம்மை வேண்டு கிறோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

07 May 2020

புனித.கீசலா (St.Gisela, Queen of Hungary) May 7

இன்றைய புனிதர் : 
(07-05-2020) 
 
புனித.கீசலா (St.Gisela, Queen of Hungary) 
துறவி , ஹங்கேரி நாட்டு அரசி
பிறப்பு : 985 ரேகன்ஸ்பூர்க் (Regensburg), ஜெர்மனி

இறப்பு : 7 மே 1060 பாசாவ் (Passau), ஜெர்மனி
இவர் ஹங்கேரி நாட்டு அரசர் இரண்டாம் ஹென்றியின் மகளாக பிறந்தார். இவரது பெற்றோர் இவரை ஹங்கேரி நாட்டை சேர்ந்த அரசர் முதலாம் ஸ்டீபன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். 1003 ஆம் ஆண்டு இவர்களுக்கு எமரிச் (Emmerich) என்ற ஓர் மகன் பிறந்தார். கீசலா ஆன்மீக காரியங்களில் மிகவும் அக்கறை காட்டிவந்தார். ஹங்கேரியில் இருந்தபோது தினமும் தவறாமல் திருப்பலிக்கு செல்வதிலும், ஆலய பணிகளில் ஈடுபடுவதிலும் முழுகவனம் செலுத்திவந்தார். அப்போது அவர் தனது அரண்மனை அருகிலேயே ஓர் ஆலயம் எழுப்பினார்.

1038 ஆம் ஆண்டு கீசலாவின் கணவர் அரசர் முதலாம் ஸ்டீபன் இறந்துவிட்டார். இதனால் கீசலா விதவையாக ஆனார். அச்சமயத்தில் அவரை அரண்மனையில் இருந்த ஆண்கள் பலர், தங்களது ஆசைகளுக்கு இணங்க வற்புறுத்தினர். இதனை மறுத்த கீசலா பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார். சில வெறியர்களால் கீசலா ஹங்கேரி நாட்டிலிருந்து, ஜெர்மனி நாட்டிலுள்ள பாசாவ் என்ற ஊருக்கு அழைத்துவரப்பட்டு, அரசர் மூன்றாம் ஹென்றியின் அரண்மனையில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அங்கு பெனடிக்ட் துறவற சபையை சார்ந்த துறவற இல்லம் இருந்தது. கீசலா 1045 ல் இத்துறவற சபையில் சேர்ந்து முறைப்படி பயிற்சிகள் பெற்று, ஒரு சிறந்த துறவியானார். துறவி கீசலா மிகவும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இறைவனின் பாதையில் தன் காலத்தை கழித்தார். தனது ஜெப வாழ்வினாலும், தவ வாழ்வினாலும் மற்றவர்களை கவர்ந்தார். இதனால் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

1060 ல் இறந்தபோது அடக்கம் செய்யப்பட்ட இவரது கல்லறை, 1908 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்தும், இவரது உடல் அழியாமல் காணப்பட்டது.

செபம்:
வாழ்வின் வழிகாட்டியே எம் இறைவா! திருமணமானபோதும், உம்மில் விசுவாசம் கொண்டு பின்னர் துறவியாக தன்னை அர்ப்பணித்து, உமக்காக உயிர்விட்ட புனித கீசலாவைப்போல, இல்லற வாழ்வில் உள்ள ஒவ்வொரு பெண்களும், எல்லாஸ் சூழலிலும் உம்மில் விசுவாசம் கொண்டு வாழ, நீர் அவர்களோடு இருந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்
1038 ஆம் ஆண்டு கீசலாவின் கணவர் அரசர் முதலாம் ஸ்டீபன் இறந்துவிட்டார். இதனால் கீசலா விதவையாக ஆனார். அச்சமயத்தில் அவரை அரண்மனையில் இருந்த ஆண்கள் பலர், தங்களது ஆசைகளுக்கு இணங்க வற்புறுத்தினர். இதனை மறுத்த கீசலா பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார். சில வெறியர்களால் கீசலா ஹங்கேரி நாட்டிலிருந்து, ஜெர்மனி நாட்டிலுள்ள பாசாவ் என்ற ஊருக்கு அழைத்துவரப்பட்டு, அரசர் மூன்றாம் ஹென்றியின் அரண்மனையில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அங்கு பெனடிக்ட் துறவற சபையை சார்ந்த துறவற இல்லம் இருந்தது. கீசலா 1045 ல் இத்துறவற சபையில் சேர்ந்து முறைப்படி பயிற்சிகள் பெற்று, ஒரு சிறந்த துறவியானார். துறவி கீசலா மிகவும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இறைவனின் பாதையில் தன் காலத்தை கழித்தார். தனது ஜெப வாழ்வினாலும், தவ வாழ்வினாலும் மற்றவர்களை கவர்ந்தார். இதனால் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

1060 ல் இறந்தபோது அடக்கம் செய்யப்பட்ட இவரது கல்லறை, 1908 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்தும், இவரது உடல் அழியாமல் காணப்பட்டது.

செபம்:
வாழ்வின் வழிகாட்டியே எம் இறைவா! திருமணமானபோதும், உம்மில் விசுவாசம் கொண்டு பின்னர் துறவியாக தன்னை அர்ப்பணித்து, உமக்காக உயிர்விட்ட புனித கீசலாவைப்போல, இல்லற வாழ்வில் உள்ள ஒவ்வொரு பெண்களும், எல்லாஸ் சூழலிலும் உம்மில் விசுவாசம் கொண்டு வாழ, நீர் அவர்களோடு இருந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

புனிதர் ரோஸ் வெநேரினி May 7

† இன்றைய புனிதர் †
(மே 7)

✠ புனிதர் ரோஸ் வெநேரினி ✠
(St. Rose Venerini)
நிறுவனர் மற்றும் பெண்கள் கல்வியில் முன்னோடி:
(Foundress and Pioneer in the Education of Women)

பிறப்பு: ஃபெப்ரவரி 9, 1656 
விடெர்போ, திருத்தந்தையர் மாநிலம்
(Viterbo, Papal States)

இறப்பு: மே 7, 1728 (வயது 72)
ரோம், திருத்தந்தையர் மாநிலம்
(Rome, Papal States)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 4, 1952
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

புனிதர் பட்டம்: அக்டோபர் 15, 2006
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)

நினைவுத் திருநாள்: மே 7

புனிதர் ரோஸ் வெநேரினி, பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலியின் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வியில் முன்னோடியும் "வெநேரினி சமய ஆசிரியர்கள்" (Religious Teachers Venerini) எனும் "ரோமன் கத்தோலிக்க பெண்களின் மறைப்பணி அமைப்பின்" (Roman Catholic Religious Institute of Women) நிறுவனரும் ஆவார்.

1656ம் ஆண்டு, மத்திய இத்தாலியின் (Central Italy) அன்றைய திருத்தந்தையர் மாநிலமான (Papal States) “லாசியோ” (Lazio) பிராந்தியத்திலுள்ள "விடெர்போ" (Viterbo) எனும் பண்டைய நகரில் பிறந்த வெநேரினி'யின் தந்தை "கொஃப்ரேடோ" (Goffredo), ஒரு மருத்துவர் ஆவார். ரோம் நகரில் தமது மருத்துவ கல்வியை நிறைவு செய்த அவர், விடெர்போ நகரின் பிரசித்தி பெற்ற மருத்துவமனை ஒன்றில் பணியாற்றினார். தமது மருத்துவ பணிகளால் புகழ் பெற்ற அவர், நகரின் பழைமையான குடும்பம் ஒன்றின் பெண்ணான "மார்ஸியா ஸம்பிசெட்டி" (Marzia Zampichetti) என்பவரை மணந்தார். இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் "ரோஸ் வெநேரினி" மூன்றாமவர் ஆவார்.

இவரது வாழ்க்கை சரிதம் எழுதிய வரலாற்றாசிரியர் அருட்தந்தை "கிரோலோமோ ஆண்ட்ரூசி" (Father Girolamo Andreucci, S.J) அவர்களின் கூற்றின்படி, வெநேரினி தமது இருபது வயதில் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் சிறிதே காலத்தில் அவருக்கு நிச்சயம் செய்திருந்த வாழ்க்கைத் துணை மரித்துப் போனதாகவும் எழுதியிருந்தார்.

அந்த ஆண்டின் இலையுதிர் காலத்தில், தமது தந்தையின் அறிவுறுத்தலின்படி, "புனிதர் கேத்தரின் டொமினிக்கன் துறவு மடத்தில்" (Dominican Monastery of St. Catherine) வெநேரினி இணைந்தார். ஆனால், சில மாத காலத்திலேயே அவரது தந்தைக்கு நேர்ந்த அகால மரணம், அவரை தமது தாயாரை கவனிப்பதற்காக திரும்பிப் போக வைத்தது. அவரது சகோதரர் "டொமெனிக்கோ" (Domenico) தமது 27 வயதிலேயே மரித்துப் போனார். துக்கம் தாங்காத அவர்களது தாயாரும் சிறிது காலத்திலேயே மரித்தார். வெநேரினி'யின் சகோதரி "மரியா மடலேனா" (Maria Maddalena) திருமணமாகிப் போனார். வீட்டில் இவரும் இவரது சகோதரி "ஒரேஸியோ" (Orazio) ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர். வெநேரினி, அக்கம்பக்கத்து பெண்களையும் சிறுமிகளையும் ஒன்றுகூட்டி குழுவாக செபமாலை செபிக்க ஆரம்பித்தார்.

"டொமினிக்கன் துறவிகளுடனான" (Dominican Friars) முதல் தொடர்பின் பின்னர், இயேசு சபையினரின் (Jesuits) வழிகாட்டுதலின் பேரில், புனிதர் லயோலா இஞ்ஞாசியாரின் (St. Ignatius of Loyola) ஆன்மீக வழிகளை பின்பற்ற முடிவு செய்தார்.

ஏதாவதொரு பள்ளியில் செபம் - தியானம் செய்யும் அருட்கன்னியாக அல்லாது, இவ்வுலகில் ஒரு ஆசிரியையாக வாழவே தாம் அழைக்கப்பட்டிருப்பதாக ரோஸ் நம்பினார்.

1685ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 30ம் நாளன்று, "விடெர்போ ஆயர் கர்தினால் உர்பனோ சச்செட்டி" (Bishop of Viterbo, Cardinal Urbano Sacchetti) அவர்களின் ஒப்புதலுடன், "ஜெரோலமா" மற்றும் "போர்ஸியா" (Gerolama Coluzzelli and Porzia Bacci) ஆகிய இரண்டு நண்பர்களின் துணையுடன் தமது தந்தையின் வீட்டை விட்டு வெளியேறிய ரோஸ், ஏழை கிறிஸ்தவ பெண்களுக்கான தமது முதல் பள்ளியை இத்தாலியில் நிறுவினார்.

ஆரம்ப கட்டங்கள் அவருக்கு எளிதாக இல்லை. 1692 முதல் 1694ம் ஆண்டு வரையான காலத்தில் "மோன்டேஃபியாஸ்கோன்" (Montefiascone) என்ற நகரிலும், "போல்செனா ஏரியை"ச் (Lake Bolsena) சுற்றிலும் உள்ள கிராமங்களில் பத்து பள்ளிகளை தொடங்கினார்.

கல்வியின் மதிப்பு மற்றும் பெண் பிள்ளைகளுக்கு அதன் அவசியங்கள் பற்றின விழிப்புணர்வுகளை மக்களிடையே ரோஸ் உண்டாக்கினார். ஆசிரியைகளை பயிற்றுவித்தார். பள்ளிக்கூடங்களை ஒருங்கிணைத்தார்.

ரோஸ் வெநேரினியின் புகழ் பரவவே, ரோம் உள்ளிட்ட இத்தாலியின் பிற பாகங்களிலிருந்து பள்ளிகளை ஒருங்கிணைப்பதற்காக இவருக்கு அழைப்புகள் குவிந்தன.

ரோஸ் வெநேரினி, ரோம் நகரிலுள்ள “சேன் மார்க்கோ பேராலய” (Basilica of San Marco) சமூகத்தில், 1728ம் ஆண்டு, மே மாதம், 7ம் தேதி மரித்தார். அதுவரை அவர் தொடங்கி ஒருங்கிணைத்த பள்ளிகளின் எண்ணிக்கை நாற்பதுக்கும் மேற்பட்டதாகும்.

இவரது சமூகத்தின் அருட்சகோதரியர், 1909ம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு சென்றனர். அங்கே, இத்தாலியிலிருந்து புலம்பெயர்ந்து வரும் மக்களுக்கு உதவும் நோக்கில், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு நகரங்களில் (Northeastern United States) முதல்நாள் பராமரிப்பு மையங்களை (First Day Care Centers) நிறுவினார்கள். பின்னர், 1971 முதல் 1985ம் ஆண்டு வரையான காலத்தில், ஸ்விட்சர்லாந்து (Switzerland) நாட்டில் சேவை புரிந்தனர். பின்னர் இவர்களது சபையின் அப்போஸ்தலிக்க நடவடிக்கைகள், இந்தியா (India), பிரேசில் (Brazil), கேமரூன் (Cameroon), ருமேனியா (Romania), அல்பேனியா (Albania), சிலி (Chile), வெனிசூலா (Venezuela), மற்றும் நைஜீரியா (Nigeria) ஆகிய நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டன.

06 May 2020

புனிதர் ஃபிரான்காய்ஸ் டி லாவல் May 6

† இன்றைய புனிதர் †
(மே 6)

✠ புனிதர் ஃபிரான்காய்ஸ் டி லாவல் ✠
(St. François de Laval)
கியூபெக் ஆயர் மற்றும் மறைப்பணியாளர்:
(Bishop of Québec, and Missionary)

பிறப்பு: ஏப்ரல் 30, 1623
மொண்டிக்னி-சுர்-அவ்ர், பேர்ச், ஃபிரான்ஸ் அரசு
(Montigny-sur-Avre, Perche, Kingdom of France)

இறப்பு: மே 6, 1708 (வயது 85)
கியூபெக், புதிய ஃபிரான்ஸ் வைசிராயல்டி, ஃபிரெஞ்ச் காலனி பேரரசு
(Quebec, Viceroyalty of New France, French colonial empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜூன் 22, 1980
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 3, 2014
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

முக்கிய திருத்தலம்:
நோட்ரே-டேம் டி கியூபெக் ஆலயம், கியூபெக் நகரம்
(Notre-Dame de Québec Cathedral, Quebec City,  Quebec, Canada)

பொதுவாக "ஃபிரான்காய்ஸ் டி லாவல்" (François de Laval) என்று அழைக்கப்படும், "புனிதர் ஃபிரான்சிஸ்-சேவியர் டி மான்ட்மோரென்சி-லாவல்" (Saint Francis-Xavier de Montmorency-Laval), தமது 36 வயதில், திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர் (Pope Alexander VII) அவர்களால், "கனடா" (Canada) நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தின் "கியூபெக்" (Quebec) மாகாணத்தின், முதல் ரோமன் கத்தோலிக்க ஆயராக நியமிக்கப்பட்டவர் ஆவார்.

லாவல், ஃபிரான்ஸ் (France) நாட்டின் மிகப் பழமையான உன்னதமான குடும்பங்களில் ஒன்றான "மோன்ட்மோரென்சி" (Montmorency) குடும்ப உறுப்பினராக இருந்தார். மேலும், அவரது காலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராகவும் இருந்தார்.

லாவல், கி.பி. 1623ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 30ம் நாளன்று, பண்டைய மாகாணமான "பெர்ச்சில்" (Perche) உள்ள "மோன்டிக்னி-சுர்-அவ்ரே" (Montigny-Sur-Avre) நகரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் "ஹியூஜெஸ் டி லாவல்" (Hugues de Laval) ஆகும். அவரது தாயார், "மிச்சேல் டி பெரிகார்ட்" (Michelle de Péricard), "நார்மண்டியில்" (Normandy) உள்ள அரச பரம்பரை அதிகாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரது உன்னத வம்சாவளியாக இருந்தபோதிலும், அவரது பெற்றோர் செல்வந்தர்களாக கருதப்படவில்லை. லாவலுக்கு மேலும் ஐந்து சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர். அவரது இளைய சகோதரர் "ஹென்றி" (Henri), "பெனடிக்டைன்" (Benedictine Order) சபையில் இணைந்தார். அவரது சகோதரி "அன்னி சார்லோட்" (Anne Charlotte), :ஆசீர்வதிக்கப்பட்ட அருட்சாதன சகோதரியர்" (Congregation of Sisters of the Blessed Sacrament) சபையில் இணைந்தார்.

அவரது வாழ்நாள் முழுவதும், லாவலின் தாய் தொடர்ந்து பக்திக்கு ஒரு முன்மாதிரியாக பணியாற்றினார். மேலும், அதிர்ஷ்டமற்ற ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்யும்படி அவரை ஊக்குவித்து வந்தார். ஒரு திருச்சபை வாழ்க்கை முறைக்கு விதிக்கப்பட்டதாக பெரும்பாலும் விவரிக்கப்படும் லாவல், ஒரு தெளிவான பார்வை மற்றும் புத்திசாலித்தனமான சிறுவனாக விரைவில் அங்கீகரிக்கப்பட்டார்.

இதன் விளைவாக, அவர் விஷேட பதவிகளை உள்ளடக்கியவர்களின் குழுக்களைக் கொண்ட "பரிசுத்த கன்னி மரியாள் சபையில்" அனுமதிக்கப்பட்டார். இது, இளைஞர்களை ஆன்மீக வாழ்க்கை முறைகளை பின்பற்ற ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த, மேலும் வழக்கமான ஜெபத்தையும் ஆன்மீக நடைமுறைகளையும் ஊக்குவித்த இயேசுசபையினரால் நிறுவப்பட்ட ஒரு சமூகமாகும். எட்டு வயதில், லாவல் "டான்சரை" (Tonsure) (சமயச் சடங்குக்காக தலையை முழுவதுமோ (அ) பகுதியாகவோ மழித்தல்) ஏற்றார். பின்னர் கி.பி. 1631ம் ஆண்டு, "லா ஃப்லெச் கல்லூரியில்" (College of La Flèche) சேர அவர் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், இந்த காலகட்டத்தில்தான், கனடாவில் "ஹூரான்" (Huron) இன மக்கள் மத்தியில் இயேசுசபையினரின் பணிகள் பற்றிய தகவல்களுடன் லாவல் தொடர்பு கொண்டார். இது அவரது பாதுகாவலர், புனிதர் ஃபிரான்சிஸ் சேவியரைப் (St. Francis Xavier) போலவே மிஷனரியாக வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் ஆர்வத்தையும் அதிகரித்தது.

கி.பி. 1637ம் ஆண்டு, இவர் "எவ்ரியக்ஸ் பேராலய நியதியாக" (Canon of Cathedral of Évreux) ஆயரால் நியமிக்கப்பட்டார். கி.பி. 1636ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், லாவலின் தந்தை இறந்த பின்னர் இவர் வகித்த இந்த நிலைப்பாடு முக்கிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நிரூபித்தது. தந்தையின் மரணம், அவரது குடும்பத்தை ஒரு ஆபத்தான நிதி சூழ்நிலையில் விட்டுச் சென்றது. அந்த பதவியில் இணைக்கப்பட்ட (Prebend) எனப்படும் கிறிஸ்தவக் கோயிலின் உறுப்பினருக்கு அளிக்கப்படும் மானியப் பகுதியிலிருந்து வருவாயைப் பெற இது அவரை அனுமதித்தது. அது இல்லாவிடில், அவர் தனது கல்வியைத் தொடர முடியாமல் போயிருக்கும். தமது பத்தொன்பது வயதில் தனது பண்டைய கிரேக்க இலத்தீன் கலைக்குரிய கல்வியை (Classical education) முடித்தவுடன், "லா ஃப்ளூச்" (La Flèche) நகரிலிருந்து கிளம்பி, பாரிஸில் (Paris) உள்ள "கிளெர்மான்ட்" (College de Clermont) கல்லூரியில் தத்துவம் மற்றும் இறையியலில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

அவரது இரண்டு மூத்த சகோதரர்களின் மரணம் காரணமாக லாவலின் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. இது அவரை குடும்பத்தின் தலைவராக மாற்றியது. இந்த கட்டத்தில், லாவல் தனது தந்தையின் தோட்டத்தை பொறுப்பேற்றுக்கொள்வதற்காக தனது ஆன்மீக, திருச்சபை வாழ்க்கையை கைவிடுவதற்கான முடிவை எதிர்கொண்டார். உண்மையில், அவரது தாயார், எவ்ரூக்ஸ் ஆயர், மற்றும் அவரது உறவினர் அனைவரும் அவரை பாரிஸ் நகரை விட்டு வெளியேறி வீடு திரும்பும்படி சமாதானப்படுத்த முயன்றனர். ஆயினும்கூட, லாவல் தனது குடும்பத்தின் அழுத்தத்திற்கு அடிபணிய மறுத்தார். தனது தாய்க்கு குடும்ப விவகாரங்களை ஒழுங்காக அமைக்க உதவியதுடன், தனது முதன்மையான பொறுப்புக்களை முழுமையாக கைவிட ஏற்பாடு செய்தார். பின்னர் அவரது சகோதரர் ஜீன் லூயிஸுக்கு (Jean-Louis) தமது பொறுப்புக்களை மாற்றித் தந்தார்.

கி.பி. 1647ம் ஆண்டு, மே மாதம், முதல் தேதி, தமது இருபத்துநான்கு வயதில்,லாவல் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். இதற்குப் பிறகு, எவ்ரெக்ஸின் ஆயர், லாவலை தனது திருச்சபை பாதையை கைவிடுமாறு சமாதானப்படுத்த முயற்சித்ததற்கு வருத்தப்படத் தொடங்கினார். எனவே, கி.பி. 1647ம் ஆண்டு, டிசம்பர் மாதம், அவரை தனது மறைமாவட்டத்தின் தலைமை திருத்தொண்டராக (Archdeacon) நியமிக்க முடிவு செய்தார். 155 பங்குகள் மற்றும் நான்கு சிற்றாலயங்களின் விவகாரங்களை மேற்பார்வையிட லாவலுக்கு இப்பதவி அவசியப்பட்டது. லாவல் இந்த பணியை உணர்ச்சிபூர்வமாகவும், தீவிர ஆர்வத்தோடும் அணுகுவதாகக் கூறப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில், பங்குகளில் ஒழுங்கை நிறுவுவதற்கும், ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், நோயுற்றவர்களை கவனித்துக்கொள்வதற்கும், பல்வேறு வகையான தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அவர் தன்னை அர்ப்பணித்தார். அவரது இதே நடத்தை பின்னர், அவரது வாழ்க்கையில் முற்றிலும் மாறுபட்ட கண்டத்தில் தொடர்ந்தது.

நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், பயணிக்கவும் ஒரு மறைப்பணி மிஷனரியாக மாற வேண்டும் என்று லாவல் கனவு கண்டார். மிஷனரியாக பணியாற்றுவதற்கான சாத்தியம் அவருக்கு வழங்கப்பட்டபோது, அவர் 1654ம் ஆண்டு, தனது பங்கில் இருந்து தமது தலைமை திருத்தொண்டர் பதவியை ராஜினாமா செய்தார்.

லாவல் இப்போது தமது எல்லாப் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். இதனால் ஜெபத்தின் மூலம், கடவுள் அவருக்காகக் கொண்டிருக்கும் வடிவமைப்புகளுக்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். ஃபிரான்ஸ் நாட்டின் கத்தோலிக்க திருச்சபையின் சீர்திருத்தத்தில் ஒரு தலைவராக இருந்த பொதுநிலையினரான "ஜீன் டி பெர்னியர்ஸ் டி லூவிக்னி" (Jean de Bernières de Louvigny) என்பவரால் இயக்கப்படும் துறவுமடம் (Hermitage) என்று அழைக்கப்படும் ஆன்மீக தியான இல்லங்களில் தங்குவதற்காக அவர் வடமேற்கு ஃபிரான்ஸிலுள்ள "கெய்ன்" (Caen) நகருக்குச் பயணித்தார்.

மூன்று வருடங்கள் அங்கேயே இருந்த லாவல், பிரார்த்தனை மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்த சமயத்தில்தான், மிகவும் தளர்வான ஒழுக்கநெறிகள் கொண்டது என்று கருதப்பட்ட  ஒரு மடத்தை சீர்திருத்துவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  அதே போல் கன்னியாஸ்திரிகளின் இரண்டு மடங்களின் நிர்வாகியாகவும் ஆனார். இந்த திட்டங்களுக்கான அவரது அர்ப்பணிப்பு அவருக்கு "பேயக்ஸ் ஆயர்" (Bishop of Bayeux) ஃபிரான்காய்ஸ் டி செர்வியன்" (François de Servien) என்பவரது பாராட்டுக்களைப் பெற்றது. அவர் லாவலை மிகுந்த பக்தியான, விவேகமுள்ள மற்றும் வணிக விஷயங்களில் வழக்கத்திற்கு மாறாக சிறந்த திறமையான, நல்லொழுக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகள் நிறைந்தவர் என்று ஆயர் வர்ணித்தார். லாவல் இப்போது ஆத்மீக சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர் ஆனார். மற்றும் அவரது வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர தயாராக இருந்தார்.

கனடிய திருச்சபை தந்தை:
புதிய ஃபிரான்ஸ் காலனிக்கான ஆயராக லாவல் பரிந்துரைக்கப்பட்டதன் விளைவாக காலனியின் திருச்சபை நிலை தொடர்பான பதட்டங்களை அதிகரித்தன. புதிய ஃபிரான்ஸ் காலனி குடியேற்ற காலம் முதல் 50 ஆண்டுகள் வரை, ஒரு ஆயர் இல்லாமல் இருந்தது. இந்த நேரத்தில், ஆன்மீக விஷயங்கள் பெரும்பாலும் காலனியின் ஆன்மீக அதிகாரிகளால் ஒழுங்குபடுத்தப்பட்டன. அதிகாரம் நினைவுகூரல்களிலிருந்து இயேசுசபை குருக்களுக்கு நகர்ந்தது. கி.பி. 1646ம் ஆண்டில், ரோமில் இருந்து வந்த அழுத்தங்கள் காரணமாக, ரூயன் பேராயர் (Archbishop of Rouen) புதிய ஃபிரான்ஸில் உள்ள திருச்சபையின் உடனடி அதிகாரியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டார். இந்த அங்கீகாரத்துடன் கூட, பேராயரின் அதிகாரம் காலனிக்கு பயணிக்கும் மதகுருக்களுக்கு ஆசிரியர்களை வழங்குவது வரை மட்டுமே நீட்டிக்கப்பட்டது. இந்த நேரத்தில், புதிய ஃபிரான்ஸ் காலனிக்கு இன்னும் உடனடி ஆயர்கள் தேவை என்பது ஏற்கனவே தெளிவானது.

ஒரு புதிய ஆயரை நியமிப்பது என்பது, இயேசுசபையினருக்கும், புதிதாய் வந்த சல்பீசியன் (Sulpicians) குருக்களுக்குமிடையே கடினமானதும், ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாகவும் இருந்து வந்தது. இந்த நேரத்தில் சுயாதீனமாக பணியாற்றுவதில் மிகவும் பழக்கமாக இருந்த இயேசுசபையினர், ஒரு சல்பிசியன் ஆயரிடம் தாம் கட்டுப்படுத்தப்படுவோம் என்று அஞ்சினர். ஒரு சல்பீசியன் ஆயர், தங்களது கட்டுப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவார் என்றும், இறுதியில் திருச்சபையை ஆட்சியாளர்களுக்கு அடிபணியச் செய்வார் என்ற நம்பிக்கை அவர்களின் அசௌகரியமாக அவர்களுக்கு தோன்றியது. சல்பீசியர்கள், தங்களது "கேப்ரியல் துபியர்ஸ் டி லெவி டி கியூலஸ்" (Gabriel Thubières de Levy de Queylus) என்பவரை முன்மொழிய முனைப்பாக இருந்தபோது, இயேசுசபையினர் லாவலுக்கு தங்கள் ஆதரவைத் திருப்பினர். அரசியின் தாயாரான "ஆஸ்திரியாவின் அன்னி" (Anne of Austria) உதவியுடன் அரச அங்கீகாரத்தைப் பெறுவது சிறிய சவாலை அளித்தது.

திருத்தந்தையின் உறுதிப்படுத்துதல் கிடைப்பதில் இருந்த தாமதம், இயேசுசபையினருக்கும் லாவலுக்கும் தடையாக இருந்தது. ஒரு ஆயர் தேவை என்று அவர்கள் இயேசுசபையினருடன் உடன்பட்டனர். இருப்பினும்,  லாவல் ஆயரானால், இயேசுசபையினருக்கு மீண்டும் காலனியின் மீது ஏகபோக உரிமையை வழங்க முடியும் என்று அவர்கள் அஞ்சினர். இயேசுசபையினருக்கும் ரோம் தலைமைக்கும் இடையிலான சமரசத்தில், லாவல் புதிய ஃபிரான்ஸ் காலனியின் அப்போஸ்தலிக் விகாராக (Apostolic Vicar of New France) நியமிக்கப்பட்டார்.

அப்போஸ்தலிக் விகாராக நியமிக்கப்படுவதோடு, கனடாவில் திருச்சபையை கட்டியெழுப்ப அவருக்கு தேவையான சக்தியை வழங்குவதற்காகவும், "பார்ட்டிபஸ்" (Partibus) நகர ஆயராக அங்கீகரிக்கப்பட்ட லாவல், கி.பி. 1658ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதி, கியூபெக்கின் விகார் அப்போஸ்தலிக் (Vicar Apostolic of Quebec) ஆக, பாரிஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் அருட்பொழிவு செய்யப்பட்டார். அரச விசுவாச சத்திய பிரமாணம் செய்த லா, "லா ரோச்" (La Rochelle) நகரிலிருந்து புதிய ஃபிரான்ஸ் காலனிக்கு கி.பி. 1659ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 13ம் தேதி, பயணப்பட்டார். அதே ஆண்டின் ஜூன் மாதம், 16ம் நாளன்று, அவர் கியூபெக்கிற்கு வந்தார். வந்தவுடனேயே லாவல் தனது பணிகளைத் தொடங்கினார். அவரது கப்பல் வந்த அதே நாளில், அவர் ஒரு இளம் ஹூரோன் வாசிக்கு திருமுழுக்கு அளித்தார். இறக்கும் தருவாயில் இருந்த மனிதன் ஒருவருக்கு தனது கடைசி அருட்சாதனங்களை வழங்கினார்.

பல்வேறு சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்ட லாவல், கைவினைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும், நடைமுறைக் கல்வி கற்பிப்பதில் ஆர்வம் காட்டினார். "செயிண்ட்-ஜோச்சிம்" (Saint-Joachim) நகரில் கலை மற்றும் கைவினைப் பள்ளியை நிறுவினார்.

பிற்பகுதியில் ஆண்டுகள்:
நியூ ஃபிரான்ஸ் காலனியில் அவர் வந்ததிலிருந்து, காலனியில் குருக்களை பயிற்றுவிப்பதற்கு மேல், ஒரு சிறிய அமைப்பை நிறுவவும் ஒழுங்கமைக்கவும் லாவல் வலியுறுத்தி வந்தார். 1678ம் ஆண்டில், காலனியில் நிரந்தர அமைப்புகள் அமைக்கப்படும் என்று கூறி அரசரிடமிருந்து ஒரு அரசாணையைப் பெற்றார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1681ம் ஆண்டில், திருச்சபையின் நிலைப்பாட்டை நிரந்தரமாக உறுதிப்படுத்தும் முயற்சியில் லாவல் திருச்சபைகளின் எல்லைகளை வரைந்தார். ஒவ்வொரு பங்கினையும் அடிக்கடி பார்வையிட்ட லாவல், அவரது உடல்நிலை குறைந்து வருவதையும், இனி அகாடியா (Acadia) முதல், மிச்சிகன் ஏரி (Lake Michigan) வரை விரிவாக்கம் பெற்ற தனது பெரிய மறைமாவட்டத்தை இயக்க முடியாது என்பதையும் உணர்ந்தார். இதன் விளைவாக, 1688ம் ஆண்டு, ஜீன்-பாப்டிஸ்ட் டி லா குரோயிக்ஸ் டி செவ்ரியர்ஸ் டி செயிண்ட்-வள்ளியர் (Jean-Baptiste de La Croix de Chevrières de Saint-Vallier) என்பவருக்கு தனது ஆயர் பொறுப்புகளை வழங்கினார்.

லாவல் தனது கடைசி நாட்கள் வரை காலனியின் உயர் ஆன்மீக அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைத்தார். அவர் தம்மிடமுள்ள இருப்பு மற்றும் தர்மமாக கிடைத்த பரிசுகளை ஏழைகளுக்கு கொடுத்து உதவினார். உடல்நலம் குறைந்து கொண்டிருந்த போதிலும், அவர் ஒரு திருப்பலியையோ, அல்லது ஒரு நாள் உண்ணாவிரதத்தையோ தவறவிட்டதில்லை. கி.பி. 1707ம் ஆண்டு வாக்கில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், இறுதியில் கி.பி. 1708ம் ஆண்டு, மே மாதம், 6ம் தேதியன்று, மரித்தார்.

புனித டோமினிக் சாவியோ. இளைஞர்களின் பாதுகாவலர் May 6

இன்றைய புனிதர் : 
(06-05-2020) 

புனித டோமினிக் சாவியோ. 
இளைஞர்களின் பாதுகாவலர்
பிறப்பு : 1842 முரியால்டோ, இத்தாலி (Murialdo)

இறப்பு : 9 மார்ச் 1857 

முத்திபேறு பட்டம் : பதினோறாம் பத்திநாதர்

புனிதர் பட்டம் : 1954 பனிரெண்டாம் பத்திநாதர்

டோமினிக் சாவியோ, புனித தொன்போஸ்கோவின் முதல் மாண வர். இவர் குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே ஆன்மீக வாழ் வில் சிறந்து காணப்பட்டார். இவரின் குடும்பத்தில் இருந்த ஒவ் வொருவருமே, இவரை பக்தியுள்ள குழந்தையாக வளர்த்தனர். இவரின் பங்கு ஆலயத்தில் இருந்த பங்குதந்தை ஜான், டோமினி க்கின் தெய்வீக ஆர்வத்தை கண்டு, இன்னும் அதிகமாக இயேசு வை நெருங்கி செல்ல வழிகாட்டினார். அன்னை மரியிடம் பக்தி யை வளர்க்க எங்கும் நல்ல சூழ்நிலை இருந்தது. காற்று, மழை, குளிர், வெயில் என்று பாராமல் அதிகாலையிலேயே தினமும் தவறாமல் திருப்பலிக்கு சென்று பூசை உதவி செய்தார்.

டோமினிக் தான் பெற்ற திருமுழுக்கை பழுதின்றி பாதுகாத்து, புனிதத்துவத்தில் திளைத்தார். இதனால் சிறு வயதிலிருந்தே இவர் ஓர் புனிதராக கருதப்பட்டார். இவரின் வாழ்வு இளைஞர்க ளுக்கு ஓர் எடுத்துக்காட்டான வாழ்வாக இருந்தது. இவரின் தூய்மை, பக்தி, ஆன்ம வேட்கை மற்றவர்களின் வாழ்வை சிந்தி க்க தூண்டியது. இவரின் கிறிஸ்துவ வாழ்வு உயிரோட்டம் நிறைந்த வாழ்வாக இருந்தது என்று திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் குறிப்பிடுகின்றார்.

இவர் இறப்பதற்குமுன், விண்ணகவாழ்வைப்பற்றி காட்சியாக கண்டு, ஆஹா, என்ன ஒரு அற்புதமான, இன்பமயமான காட்சி என்று கூறி மகிழ்வோடு உயிர்துறந்தார். 1954 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாள் திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் புனிதர் பட்டம் கொடுக்கும்போது, இன்றைய இளைஞர்கள் டோமினிக் கின் வாழ்வை பின்பற்ற வேண்டுமென்று கூறினார். தீமையை விடுத்து, நன்மையை நாடி இறைப்பற்றோடு வாழ்ந்து சான்று பகர வேண்டும் என்று இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்தார்.


செபம்:

"எனக்கு பெரிய செயல்களை சாதிக்க ஆற்றல் கிடையாது. ஆனால் நான் செய்வது அனைத்தையும் மிகச் சிறியவையாக இருப்பினும், அவற்றை இறைவனின் மகிமைக்காக செய்கி றேன்" என்று கூறிய தோமினிக் சாவியோவைப்போல, நாங்க ளும் எல்லாவற்றையும் இறைவனின் மகிமைக்காக செய்ய இறைவா எமக்கு உமதருள் தாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

05 May 2020

புனிதர் நன்ஸியோ சல்ப்ரிஸியோ ✠(St. Nunzio Sulprizio) May 5

† இன்றைய புனிதர் †
(மே 5)

✠ புனிதர் நன்ஸியோ சல்ப்ரிஸியோ ✠
(St. Nunzio Sulprizio)
பொதுநிலையாளர்:

பிறப்பு: ஏப்ரல் 13, 1817
பெஸ்கோஸ்சென்ஸோனெஸ்கோ, பெஸ்கரா, இரண்டு சிசிலிய இராச்சியம்
(Pescosansonesco, Pescara, Kingdom of the Two Sicilies)

இறப்பு: மே 5, 1836 (வயது 19)
நேபிள்ஸ், இரண்டு சிசிலிய இராச்சியம்
(Naples, Kingdom of the Two Sicilies)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: டிசம்பர் 1, 1963
திருத்தந்தை நான்காம் பவுல்
(Pope Paul VI)

புனிதர் பட்டம்: அக்டோபர் 14, 2018
திருத்தந்தை பிரான்சிஸ்
(Pope Francis)

நினவுத் திருநாள்: மே 5

பாதுகாவல் : ஊனமுற்றோர், கொல்லர்கள், தொழிலாளர்கள், "பெஸ்கோஸ்சென்ஸோனெஸ்கோ நகரம்" (Pescosansonesco)

புனிதர் நன்ஸியோ சல்ப்ரிஸியோ, இத்தாலி நாட்டின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த ஒரு பொதுநிலையாளர் ஆவார். கொல்லர் பனியின் பயிற்சியாளராக இருந்த இவர், தமது சுருக்கமான வாழ்க்கையில்  மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவரை அறிந்தவர்களுக்கு, அவர் ஒரு மென்மையான மற்றும் பக்தியான நபராக கருத்தில் கொள்ளப்பட்டிருந்தார்.

இவரது மரணத்தின் பின்னர், தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்த இருவர், நலம் வேண்டி இவரை வேண்டிக்கொண்டதால், இவரது பரிந்துரையால் அவர்கள் அதிசயமாக குணமானதாக நிரூபணமான காரணத்தால், இவருக்கு கி.பி. 1963ம் ஆண்டின் இறுதியில் அருளாளராக முக்திப்பேறு பட்டமளிக்கப்பட்டார். இரண்டாவது அதிசயத்தை உறுதிப்படுத்திய பின்னர், 2018ம் ஆண்டு, ஜூன் மாதம், 14ம் தேதி, திருத்தந்தை ஃபிரான்சிஸ், புனிதர் படத்துக்கான தனது ஒப்புதலை உறுதிப்படுத்தினார். அதே ஆண்டு, அக்டோபர் மாதம், 14ம் தேதியன்று, இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.

கி.பி. 1817ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 13ம் தேதி, உயிர்த்த ஞாயிறு பெருநாளின் சில நாட்களின் பின்னர் பிறந்த இவரது தந்தையின் பெயர், "டொமெனிக்கோ சல்ப்ரிஸியோ" (Domenico Sulprizio) ஆகும். இவரது தாயார், "ரோசா லூசியானி" (Rosa Luciani) ஆவார். இவர் பிறந்த காலத்தில் கடுமையான பஞ்சம் தலை விரித்தாடியது. பிறந்த அன்றே திருமுழுக்கு பெற்ற இவர், 1820ம் ஆண்டு, மே மாதம், 16ம் நாள், உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற்றார்.

1820ம் ஆண்டின் ஜூலை மாதம், இவருக்கு மூன்று வயதாகையில், இவரது தந்தை மரித்துப் போனார். அதன் பிறகு, நான்கு மாதங்களின் பின்னர், இவரது சின்னஞ்சிறு தங்கை "டோமேனிக்கா" (Domenica) மரித்துப்போனார். இவரது தாயார் வாழ்க்கையை ஓட்டுவதற்காக, 1822ம் ஆண்டு வயதான ஒருவரை மறுமணம் செய்துகொண்டார். வளர்ப்புத் தந்தை இவருடன் எப்போதும் கடுமையாகவே நடந்துகொண்டதால், இவர் தமது தாயாருடனும் பாட்டியுடனும் ஒண்டிக்கொண்டார். இதற்கிடையே கத்தோலிக்க குருவானவர் "டி ஃபேபிஸ்" (De Fabiis) என்பவர் நடத்திவந்த பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். அவரது குழந்தை பருவத்தில் அவர் திருப்பலிகளில் கலந்துகொள்ளவும், இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ளவும் நேரம் எடுத்துக்கொண்டார். ஆனால் அவரது முன்மாதிரியையும் புனிதர்களையும் பின்பற்றினார்.

கி.பி. 1823ம் ஆண்டு, மார்ச் மாதம், 5ம் தேதி, அவரது தாயார் மரித்துப்போகவே, இவர் தமது தாய்வழி பாட்டியான "அன்னா ரொசாரியா லூசியானி டெல் ரோஸ்சி" (Anna Rosaria Luciani del Rossi) என்பவருடன் வசிக்க சென்றார். கல்வியறிவற்ற அவரது பாட்டி, கிறிஸ்தவ விசுவாசத்தில் தீவிரமானவர். அடிக்கடி கால்நடையாகவே நடந்து  போகும் வழக்கமுள்ள இருவரும், தவறாது உள்ளூர் ஆலயத்தில் திருப்பலிகளில் பங்குகொண்டனர். அருட்தந்தை பேண்டாக்ஸி என்பவர் நிர்வகித்த ஏழை மாணவர்க்கான பள்ளியில் சேர்ந்து கல்வி கற்க தொடங்கினார். அவருடைய பாட்டி பின்னர் 1826ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 4ம் தேதியன்று இறந்தார். அதன்பின்னர், அவரது தாய்மாமன் அவரை கொல்லர் பணி கற்க சேர்த்துவிட்டார். அவரது மாமன் அவரை மிகவும் கடுமையாக நடத்தினார். ஒழுக்கமாக வாழுவதற்கு பட்டினி கிடக்க வேண்டும் என்று நினைத்த அவர், சல்ப்ரிஸியோவுக்கு சரியான உணவளிக்காமல் பட்டினி போட்டார். அவர் செய்யும் சின்னஞ்சிறு தவறுகளுக்காக அவரை அடித்து உதைத்து துன்புறுத்தினார். அவரது வயதுக்கு மீறிய வேலைகளை செய்த அவருக்கு 1837ம் ஆண்டு, ஒரு நோய்த்தொற்று ஏற்பட்டது. ஒரு குளிர்கால காலை வேளையில், அவரது மாமா அவரை "ரொக்கா டாக்லியாட்டாவின்" (Rocca Tagliata) சரிவுகளுக்கு பொருட்களை விநியோகம் செய்ய  அனுப்பியபோது அவருக்கு நோய்த்தொற்று  ஏற்பட்டது. அன்று மாலை, உழைப்பின் களைப்பால் அவர் சோர்வாகிப்போனார். ஒரு கால்  வீங்கிப் போனது. மற்றும் எரியும் காய்ச்சல் அவரை படுக்கையில் கட்டாயப்படுத்தி தள்ளியது. இதனை அவர் தமது ராமனிடம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவரால் காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்க இயலவில்லை. அவரது மாமாவுக்கு அவரது துன்பம் அலட்சியமாக இருந்தது. அவரது நிலை பின்னர் ஒரு கால் (Gangrene) செயலற்றுப்போனது.  முதலில், தென் இத்தாலியின் "லாஅகுய்லா" (L'Aquila) நகரிலுள்ள மறுத்தவமனையிலும், பின்னர், "நேப்பிள்ஸ்" (Naples) நகரிலுள்ள மறுத்தவமனையிலும் சிகிச்சை பெற்றார். ஆனால் அவரது வேதனைகள் கூடியதேயொழிய, குறையவில்லை. இருப்பினும் வேதனைகளை தாங்கிக்கொண்ட அவர், அவற்றை ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்தார்.

தமது நோயின்போது, வீட்டிலிருக்கையில், அவருடைய புண் சீல் வைத்ததால், அவற்றை நிலையான அடிப்படையில் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. அவர் தனது காயத்தை சுத்தப்படுத்த வீட்டிற்கு அருகே ஒரு ஓடைக்கு சென்றார். ஆனால் துணி துவைக்க வந்த ஒரு பெண், அவர் தண்ணீரை மாசுபடுத்துவதாக கூறி, அவரைத் துரத்திவிட்டார். அதற்கு பதிலாக அவர் மற்றொரு ஓடையில் தமது புண்ணை சுத்தம் செய்ய அனுமதிக்க பலமுறை ஜெபமாலை ஜெபித்துவந்தார்.

1835ம் ஆண்டு, டாக்டர்கள் அவரது ஒரு காலை தங்கள் ஒரே விருப்பமாக வெட்ட முடிவெடுத்தனர். ஆனால் அவரது வலி தொடர்ந்து இருந்தது. 1836ம் ஆண்டு, மார்ச் மாதம், அவருடைய நிலைமை மோசமடைந்தது. அவருக்கு காய்ச்சல் அதிகரித்தபோதெல்லாம் அவருடைய அவரது துன்பங்களும் அதிகரித்தன. கடவுள்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை அவர் தொடர்ந்தார். தமது முடிவு நெருங்கிவிட்டது என்ற உண்மையை நன்கு அறிந்திருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து, அவர் மரித்த நாளன்று, அவர் சிலுவையாண்டவரின் திருச்சொரூபத்தை வரவழைத்தார். மற்றும் கடைசி நேரத்தில் தமது ஒப்புரவாளரை அழைத்து, அவரிடம் இறுதி அருட்சாதனங்களைப் பெற்றுக்கொண்டார். 1836ம் ஆண்டு, அவர் தமக்கு ஏற்பட்ட நோயின்காரணமாக மரித்தார். அவரது எஞ்சியுள்ள மிச்சங்கள் இப்போது நேபிள்ஸில் (Naples) நகரிலுள்ள "சான் டோமினிகோ சொரியானோ" (Church of San Domenico Soriano) தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அவரது மரணத்தின் பல தசாப்தங்களுக்கு பிறகு திருத்தந்தை "பதின்மூன்றாம் லியோ" அவரை தொழிலாளர்களின் முன்மாதிரியாக முன்மொழிந்தார்.

புனிதர் ஹிலாரி May 5

† இன்றைய புனிதர் †
(மே 5)

✠ புனிதர் ஹிலாரி ✠
(St. Hilary of Arles)
ஆர்ல்ஸ் ஆயர்:
(Bishop of Arles)

பிறப்பு: கி.பி. 403

இறப்பு: கி.பி. 449

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: மே 5

புனிதர் ஹிலாரி, தென் ஃபிரான்ஸ் (Southern France) நாட்டின் ஆர்ல்ஸ் (Arles) மறைமாவட்ட ஆயரும், ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளால் புனிதராக அங்கீகரிக்கப்பட்டவருமாவார். இவரது நினைவுத் திருநாள் மே மாதம் ஐந்தாம் நாளன்று நினைவுகூறப்படுகின்றது.

ஹிலாரி, தமது பதினேழு வயதில், “செயின்ட் ஹோனரட்” (Island of Saint-Honorat) தீவிலுள்ள “சிஸ்டேர்சியன்” துறவறமான (Cistercian monastery) “லெரின்ஸ்” (Lérins Abbey) மடத்தில் சேர்ந்தார். அக்காலத்தில், அவரது உறவினரான “புனிதர் ஹோனரடஸ்” (Saint Honoratus of Arles) “லெரின்ஸ்” மடத்தின் மடாதிபதியாக இருந்தார். அவரே ஆர்ல்ஸ் மறைமாவட்டத்தின் ஆதிகால ஆயராகவும் இருந்தார். ஹிலாரி இதற்கு முன்னதாக “டிஜோனில்” (Dijon) வாழ்ந்து கொண்டிருக்கிறார். மற்ற அதிகாரிகள், அவர் “பெல்கிக்கா” (Belgica) அல்லது “ப்ரோவென்ஸ்” (Provence) நகரிலிருந்து வந்ததாக நம்புகின்றனர்.

இவர், மேற்கத்திய ரோமப் பேரரசின் அரசியல்வாதியான “ஹிலாரியஸ்” (Hilarius) என்பவரது மகன் அல்லது உறவினர் என்று நம்பப்படுகின்றார். ஹிலாரியஸ், கி.பி. 396ம் ஆண்டில் “கௌல்” (Gaul) நகரிலும், கி.பி. 408ம் ஆண்டில் ரோம் நகரிலும் தலைமை அதிகாரியாக (Prefect) இருந்துள்ளார்.

ஹிலாரி, தமது உறவினரான ஆர்ல்ஸ் ஆயர், “புனிதர் ஹோனரடஸ்” என்பவருக்குப் பின்னர் 429ம் ஆண்டு, ஆர்ல்ஸ் ஆயராக பதவியேற்றார். இவர், புனிதர் அகுஸ்தினாரை (St Augustine) முன்னுதாரணமாக ஏற்று, அவரது சபைக் குருமார்களை ஒரு "சபைக்குள்" ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது; அவர்கள் கடுமையான சுய ஒழுக்கம் மற்றும் சமூகப் பயிற்சிகளுக்கு தங்கள் நேரத்தை அர்ப்பணித்தனர். ஹிலாரி, தமது உழைப்பு முழுவதையும் ஏழை மக்களுக்கே பகிர்ந்தளித்தார்.

கைதிகளை மீட்கும் பொருட்டு, இவர் ஆலயங்களின் பரிசுத்த பாத்திரங்களை (Sacred vessels) விற்றார். அவர் ஒரு அற்புதமான பேச்சாளர் (Orator) ஆனார். அவர் பயணம் செய்த எல்லா இடங்களுக்கும் நடை பயணமாகவே பயணித்தார். எப்போதும் எளிய ஆடை அணிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அது பிரகாசமான பக்கமாகும். ஹிலாரி பிற பிஷப்புகளுடன் தனது உறவுகளில் சிக்கலை எதிர்கொண்டார். அவரிடம் சில அதிகார வரம்பு இருந்தது. அவர், பாரபட்சம் பாராது, ஒரு ஆயரை பதவியை விட்டு விலக்கினார். நோய்வாய்ப்பட்டிருந்த ஆயர் ஒருவருக்குப் பதிலாக, வேறு ஒருவரை ஆயராக தேர்வு செய்தார். ஆனால், விடயம் சிக்கலானது. நோய்வாய்ப்பட்ட ஆயர் மரிக்கவில்லை. திருத்தந்தை புனிதர் பெரிய லியோ (Pope Saint Leo the Great), ஹிலாரியை ஒரு ஆயராகவே வைத்திருந்தார். ஆனால் அவருடைய சில அதிகாரங்களைக் கைப்பற்றினார்.

ஹிலாரி, கி.பி. 449ம் ஆண்டு மரித்தார். மிகவும் சரியான நேரத்தில், ஒரு ஆயர் எப்படி இருக்கவேண்டும் என்பதை கற்றுக்கொண்ட திறமைசாலியாகவும் பக்திமானாகவும் ஹிலாரி இருந்தார்.

புனித.காடேஹார்டு(St.Godehard)ஹில்டஸ்ஹைம் ஆயர் (Bishop of Hildesheim) may 5

இன்றைய புனிதர்
2020-05-05
புனித.காடேஹார்டு(St.Godehard)
ஹில்டஸ்ஹைம் ஆயர் (Bishop of Hildesheim)
பிறப்பு
960
ரைகர்ஸ்டோர்ப் (Reicherdorf), ஜெர்மனி
இறப்பு
5 மே 1038
ஹில்டஸ்ஹைம், ஜெர்மனி
புனிதர் பட்டம்: 1131
திருத்தந்தை. இரண்டாம் இன்னொசெண்ட்
ஹில்டஸ்ஹைம் நகரின் பாதுகாவலர்

காடேஹார்டு ஓர் ஏழை விவசாயியின் மகனாக பிறந்தார். இவர் சிறு பிள்ளையாக இருக்கும்போதே இவரின் தந்தை தன் நிலத்தை பெனடிக்ட் சபையை சேர்ந்த குருக்களுக்கு தானமாக தந்தார். இச்சபையை சார்ந்தவர்களும் அந்நிலத்தில் ஒரு துறவற இல்லம் கட்டினர். நாளடைவில் சிறுவன் காடேஹார்டு பள்ளி செல்லும் பருவத்தை அடைந்தததால் குருக்களாலேயே பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டான். அறிவிலும், ஞானத்திலும் மிக சிறந்தவனாய் இருந்தான். கல்வியை முடித்துவிட்டு, துறவிகளின் மடத்திலேயே சிறுசிறு உதவிகளை செய்து கொடுத்து, அவர்களுடனே தங்கினார். அப்போது துறவிகளோடு சேர்ந்து பாடல்கள் பாடுவதிலும், திருப்பலியிலும் பங்கேற்றார். துறவற குருக்களின் வாழ்க்கை இவருக்கு பிடித்துவிடவே, தானும் குருவாக வேண்டுமென்று ஆசைகொண்டு, 990 ஆம் ஆண்டு தனது துறவற வார்த்தைப்பாடுகளைபெற்று குருவானார். இவர் குருவானபிறகு ஜெர்மனியிலுள்ள ஹில்டஸ்ஹைம் என்ற ஊருக்கு மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைக்கப்பப்பட்டார்.

அப்போது ஜெர்மனியை ஆட்சி செய்த அரசர் இரண்டாம் ஹென்றி அவர்களால் 1022 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் நாள் ஹில்டஸ்ஹைமிற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆயரான பிறகு ஜெர்மனி முழுவதும் 30 புதிய ஆலயங்களையும், ஒரு சில பெரிய தேவாலயங்களை பழுது பார்த்து திருத்தியமைக்கும் பணியையும், பல பள்ளிகளையும் கட்டினார்.

பின்னர் "குளுனி" என்ற சபையை நிறுவினார். அதன்பிறகு பிரான்ஸ் நாட்டிலும் இச்சபையை தொடங்கினார். ஆயர் காடேஹார்டு மக்களிடம் காட்டிய அன்பிற்கு ஈடு இணை ஏதும் கிடையாது. ஹங்கேரி, ஹாலந்து, போலந்து, சுவிட்சர்லாந்து என பல்வேறு நாடுகளுக்கு சென்று மறைபரப்பு பணியை செய்து இறைவன்பால் மக்களை ஈர்த்தார். ஏராளமான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றினார். எப்போதும் புன்முறுவலுடன் பணிசெய்து, மக்களின் நண்பனாகவும், இறைவனின் சீடனாகவும் இறுதிவரை வாழ்ந்தார். இவர் இறக்கும் வரை இறைவனின் பணியை இடைவிடாமல் ஆர்வமாக ஆற்றினார். இவர் இறந்தபின் இவரது உடல் ஹில்டஸ்ஹைமில் உள்ள பெரிய தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! இறக்கும்வரை மக்களுக்கு உதவி செய்து, ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்ட காடேஹார்டைப் போல, இன்றைய உலகில் வாழும் உமது இறை ஊழியர்களும் பணிபுரிய உம் அருள்தாரும்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

குரு பிரான்சு டெண்ட்லர் Franz Tendler
பிறப்பு: 21 மார்ச் 1820 வீயன்னா Wien, ஆஸ்திரியா
இறப்பு: 5 மே 1902, ஆஸ்திரியா


எருசலேம் ஆயர் மாக்சிமுஸ் Maximus von Jerusalem
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 4 ஆம் நூற்றாண்டு, எருசலேம்

தூய ஆஞ்சலோ (மே 05)

இன்றைய புனிதர் :
(05-05-2020)

தூய ஆஞ்சலோ (மே 05)
“யோவான் கைது செய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்திப் பறைசாட்சிக்கொண்டே இயேசு கலிலேயாவுக்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் கூறினார்”      (மாற் 1: 14 – 15)

வாழ்க்கை வரலாறு

12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், யூதாவில் உள்ள எருசலேமில், ஒரு யூதக் குடும்பம் வாழ்ந்து வந்தது. அக்குடும்பத்தில் இருந்த பெண் மிகவும் பக்தியானவள். ஒரு சமயம் அன்னை மரியா அந்தப் பெண்ணுக்குத் தோன்றி, “நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெசியா ஏற்கனவே வந்துவிட்டார்; உனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் பிறக்கும். அவர்களில் ஒருவன் திருச்சபையில் பிதாபிதாவாகவும், மற்றவன் கார்மேல் சபையில் சேர்ந்து பின்னாளில் மறைசாட்சியாகவும் உயிர் துறப்பான்” என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்.

இந்தக் காட்சிக்குப் பிறகு அந்தப் பெண்ணும் அவளுடைய கணவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். ஓரிரு ஆண்டுகள் கழித்து, மரியா அந்தப் பெண்மணிக்குச் சொன்னது போன்று, அவளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் இன்று நாம் நினைவுகூருகின்ற ஆஞ்சலோ. ஆஞ்சலோ வளரும்போதே இறை அச்சத்திலும் ஞானத்திலும் சிறந்து விளங்கி வந்தார். கிரேக்கம், லத்தின், ஹீப்ரு போன்று மொழிகளிலும் அவர் புலமை பெற்று விளங்கினார். இப்படி நாட்கள் மிகவும் சந்தோசமாகப் போய்கொண்டிருந்த தருணத்தில், ஆஞ்சலோவின் பெற்றோர் இறந்து போனார்கள்.

ஆஞ்சலோவிற்கு பதினெட்டு வயது நடக்கும்போது அவர் கார்மேல் சபையில் துறவியாகச் சேர்ந்தார். அங்கு அவர் மிகவும் முன்மாதிரியான துறவியாக வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் அவர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது ஆண்டவர் இயேசு அவருக்கு முன்பாகத் தோன்றி, “ஆஞ்சலோ! நீ உடனே சிசிலிக்குப் புறப்பட்டுச் சென்று, அங்கு நற்செய்தி அறிவி” என்று சொல்லிவிட்டு மறைந்து போனார். அப்போது ஆஞ்சலோவோ வேறெதுவும் யோசிக்காமல் உடனே சிசிலிக்குப் புறப்பட்டுச் சென்றார். போகிற வழியில் இருந்த பலேர்மோ என்ற இடத்தில் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து, 200 க்கு மேற்ப்பட்டவர்களையும் மனம் திருப்பினார். தொடர்ந்து அவர் லாகத்தா என்னும் இடத்திலும் நற்செய்தியை அறிவித்து பலரை மனம் திருப்பினார்.

லாகத்தா என்ற இடத்தில் அவர் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருக்கும்போது தவறான முறையில் வாழ்ந்துவந்த பெரேங்கினுஸ் என்பவனைக் குறித்துக் கேள்விப்பட்டார். உடனே அவர் பெரேங்கினுசிடம் சென்று அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டினார். இதனால் அவன் இகழ்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டவனாய் நினைத்தான். அவன் அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்தான். எனவே, அவன் அதற்கான தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

ஒரு சமயம் ஆஞ்சலோ மக்களுக்கு முன்பாகப் போதித்துக் கொண்டிருக்கும்போது பெரேங்கினுசின் ஆட்களில் ஒருவன், கூட்டத்திற்குள் புகுந்து ஆஞ்சலோவை வெட்டிக் கொன்றுபோட்டான். அவர் கொல்லப்படுவதற்கு முன்பாக, தன்னைக் கொல்லவந்தவனை மனதார மன்னித்துவிட்டு தன்னுடைய உயிரைத் துறந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பெரேங்கினுசின் நினைவுநாளை கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தீமை செய்தவருக்கு நன்மை

தூய ஆஞ்சலோவின் வாழ்வின் வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவர் தன்னைக் கொல்லவந்தவனையும் மன்னித்து, அவனுக்காக ஜெபித்தார் என்று அறிந்துகொள்கின்றோம். இவ்வாறு அவர் தீமை செய்வதவருக்கும் நன்மை செய்பவராக, பகைவரை மன்னிப்பவராக விளங்கினார். தூய ஆஞ்சலோவைப் போன்று நம்மால் தீமை செய்வதவர்களை மன்னிக்க முடிகின்றதா? அவர்களுக்கு தீமைக்குப் பதிலாக நன்மை செய்ய முடிகின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஹிட்லரின் வதைமுகாமில் சிலகாலம் சித்ரவதைகளை அனுபவித்துவிட்டு, வெளியே வந்தவர் மார்டின் நிமொல்லர் என்பவர். பின்னாளில் அவர் பெரிய பிரபலமானார். அவர் வதை முகாமிலிருந்து வெளியே வந்தவுடன் சொன்ன செய்தி, “கடவுள் தன்னை பகைப்போருக்கும் ஏன் நம்மைப் பகைப்போருக்கும்கூட நன்மை அன்றி, தீமை செய்வது இல்லை” என்பதாகும். இவ்வார்த்தைகள் சிந்திக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. கடவுள் தனக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மை செய்வாரே அன்றி, தீமை செய்வதில்லை” எனவே நாம் அவரைப் போன்று தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும்.

ஆகவே, தூய ஆஞ்சலோவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தீமை செய்வோருக்கும் நன்மை செய்வோம், ஆண்டவரின் நற்செய்தியை வல்லமையோடு எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

04 May 2020

May 4

இன்றைய புனிதர்
2020-05-04
புனித.ஜோசப் மேரி ரூபியோ
சேசு சபை குரு
பிறப்பு
1864
ஸ்பெயின்
இறப்பு
1929
மட்ரிட், ஸ்பெயின்

இவர் மட்ரிட் நகர் (Madrid) அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டார். இவர் இளமையாக இருக்கும்போதே, இறைபணியிலும், சமூக பணியிலும் மிகவும் ஆர்வம் காட்டி வந்தார். அறிவில் சிறந்து விளங்கிய இவர், இறையியல் படிப்புகளைத் திறம்பட முடித்தார். தமது 23 ஆம் வயதில் குருவாக திருநிலைபடுத்தப்பட்டு மட்ரிட் மறைமாவட்டத்தில் பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்டார். அப்போது அங்கு ஏறக்குறைய 23 ஆண்டுகள் தந்தை ஜோக்கிம்டோரஸ் என்ற குருவிடம் மிக நெருக்கமான தோழமை கொண்டிருந்தார். இயேசு சபையில் சேர வேண்டுமென்று ஆசைப்பட்ட ரூபியோ, டோரஸின் தோழமையால் அதை தள்ளிபோட்டார். 19 ஆண்டுகள் மட்ரிட் மறைமாநிலத்தில் சிறப்பாக செய்தார். அப்போது தந்தை திடீரென்று இறைவனடி சேர்ந்தார். அதன்பின் ரூபியோ இயேசு சபையில் சேர்ந்து கிரனாடா நகரில் இளந்துறவு நிலையை தொடர்ந்தார். அப்போது இவரின் வயது 42. அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து தனது துறவற வார்த்தைப்பாடுகளை கொடுத்தார். பின்பு மீண்டும் மட்ரிட் வந்து 18 ஆண்டுகள் தொடர்ந்து இறைபணியை ஆற்றினார்.

ரூபியோ ஒப்புரவு அருட்சாதனத்திலும், சிறப்பாக மறையுரை ஆற்றுவதிலும் வல்லவராக இருந்தார். அரசர்களும், மக்களும் இவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெற எப்போதும் காத்து கொண்டிருந்தார்கள். பாவ அறிக்கையைவிட ரூபியோ மக்களுக்கு கொடுத்த அறிவுரையே மக்களை அதிகம் கவர்ந்தது. இவர் தம் மறையுரைகளில் எளிமை காணப்பட்டது. மற்றவர்களின் மனதை மாற்றியது. கடவுளை அன்பு செய்யும் எளிய முறைகளைக் கற்றுக்கொடுத்தார். திரு இதய பக்தியையும், நற்கருணை நாதர் பக்தியையும் பரப்பி வந்தார். இதனிடையே அப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்களை சந்தித்து வந்தார். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களில் ஒருவராகவே வாழ்ந்து வந்தார்.

ஆலயப்பீடத் திருப்பணிக்குத் தேவையான துணிகள் போன்ற பொருட்களுக்கு எல்லா ஆலயங்களிலும் தக்க அக்கறை செலுத்துவதற்கெனப் பெண்கள் இயக்கம் ஒன்றை தொடங்கினார். நாளடைவில் 6000 பெண்கள் இதில் உறுப்பினர்களாக சேர்ந்து பணி செய்தனர். இயேசுவின் திரு இதய பக்தியை வளர்க்கவும், சமுதாய தொண்டு புரியவும் வேறு ஓர் அமைப்பையும் ஏற்படுத்தினார். இவ்வமைப்பில் 5000 பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த அமைப்பு ஏழை மாணவ மாணவிகளுக்குப் பொருளுதவி அளித்து, கல்வி கற்க வைத்து, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு பொருளுதவியும் செய்தனர்.

இல்லறத்தினர் தலத்திருச்சபையில் தியானம், நோயாளிகளை சந்தித்தல் போன்ற தொண்டுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள தந்தை ரூபியோ மிக சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார். இப்படியாக மட்ரிட் நகரின் எல்லா பகுதிகளிலும் ரூபியோவின் செயல்பாடுகள் எதிரொலித்தது. ரூபியோ ஏராளமான இளம் உள்ளங்களுக்கு குருத்துவத்திற்கும், துறவற வாழ்வுக்கும் வழிகாட்டினார். பிரான்ஸ் நாட்டில் புனித மரிய வியான்னியை அவர் வாழ்ந்த போதே எப்படி மதித்துப் போற்றினார்களோ, அதேபோல் தந்தை ரூபியோவையும், மட்ரிட் நகரினர் மதித்து வந்தனர். அப்போது ரூபியோ தனது 64 ஆம் வயதில் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.


செபம்:
உலகை படைத்து பராமரித்து ஆளும் இறைவா! தந்தை ரூபியோவைப் போல ஏழை, எளியவர்களின் வாழ்வில் ஒளியேற்றி, அவர்களுக்கு வாழ்வளிக்க எமக்கு உமது வழிகாட்டுதலை தந்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

பிரைசிங் நகர் ஆயர் அர்பேயோ, (அரிபோ) Arbeo (Aribo) von Freising
பிறப்பு: 723 மைஸ் Mais, ஸ்யூட்டிரோல் Südtirol
இறப்பு: 4 மே 783, பிரைசிங், பவேரியா


பிரேம்மன் நகர் ஆயர் வில்லேரிச் Willerich von Bremen
பிறப்பு: 8 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 837 பிரேம்மன்

03 May 2020

புனித.பிலிப்பு ,யாக்கோபு May 3

இன்றைய புனிதர் : 
(03-05-2020) 

புனித.பிலிப்பு திருத்தூதர்
பிறப்பு பெத்சாயிதா, கலிலேயா
இறப்பு ஹியராப்போலிஸ், பிரிஜியா
கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா என்ற ஊரில் தோன்றிய பிலிப்பு, யோவான் நற்செய்தியாளரால் மீண்டும் மீண்டும் குறிப் பிடப்படுகின்றார். இறைமகன் இயேசு, பேதுருவையும், அந்திரே யாவையும் தேர்ந்து கொண்டபிறகு, என்னைப் பின்பற்றி வா என்று கூறி பிலிப்பைத் தேர்ந்துகொண்டார். பிலிப்பும் இயேசு வின் அழைத்தலை ஏற்று உடனே அவரைப் பின் தொடர்ந்தார். இதிலிருந்து பிலிப்பு எந்த அளவிற்கு இயேசுவுக்கு பணிந்திருந் தார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். பின்பு பிலிப்பு உடனே தன் நண்பர் நத்தனியேலிடம் சென்று, நடந்ததை எல்லாம் விள க்கினார். நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ என்ற நத்தனியேலிடம் வந்து பாரும் என்று கூறி பதிலளித்தார் பிலிப்பு. இதிலிருந்து பிலிப்பு எவ்வளவு திறந்த மனதுடன் இருந்திருக்கி றார் என்பதை அறிந்து கொள்ளலாம். 200 தெனாரியத்திற்கு அப் பம் வாங்கினாலும் கூட போதாதே என்று யேசுவிடம் பதிலளித் தார் பிலிப்பு (யோவான் 6:7)

ஒருமுறை இயேசுவைப்பற்றி கேள்விப்பட்ட கிரேக்கர்கள் யெருச லேமை வந்தடைந்து, யேசுவைப் பார்க்க வேண்டுமென்று பிலி ப்பிடம் கேட்டனர். உடனே பிலிப்பு இதை அந்திரேயாவிடம் தெரி வித்து இதைப்பற்றி இருவரும் கலந்து பேசி, கிரேக்கர்களைப்ப ற்றி இயேசுவிடம் தெரிவித்தார். இதிலிருந்து பிலிப்பின் உயர்ந்த எண்ணங்களை அறியலாம். தூய ஆவியாரின் வருகைக்கு பிறகு பிலிப்பு ஆசியா சென்று மறைபரப்புப்பணியில் நாட்களை செல விட்டார் என்று தியோடற், யுசிபியுஸ் என்ற பழங்காலத்து வரலா ற்று ஆசியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
† இன்றைய புனிதர் †
(மே 3)

✠ புனிதர் யாக்கோபு (அல்பேயுவின் மகன்) ✠
(St. James, Son of Alphaeus)

திருத்தூதர்:
(Apostle)
பிறப்பு: கி.மு. முதல் நூற்றாண்டு
கலிலேயா, யூதேயா, ரோம பேரரசு
(Galilee, Judaea, Roman Empire)

இறப்பு: கி.பி. 62
எருசலேம், யூதேயா, ரோம பேரரசு அல்லது எகிப்து
(Jerusalem, Judaea, Roman Empire or Aegyptus (Egypt)

ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

திருவிழா:
மே 3 (கத்தோலிக்கம்)
1 மே (ஆங்கிலிக்க ஒன்றியம்)
9 அக்டோபர் (கிழக்கு மரபுவழி திருச்சபை)

பாதுகாவல்:
மருந்தகப் பணியாளர்; இறக்கும் நிலையில் இருப்போர்; இத்தாலி, கம்பளி நெய்பவர்; தொப்பி செய்பவர்கள்; உருகுவை

அல்பேயுவின் மகனான புனித யாக்கோபு என்பவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவர் அல்பேயுவின் மகன் யாக்கோபு என்றே அனைத்து ஒத்தமை நற்செய்தி நூல்களிலும் உள்ள திருத்தூதர்களின் பட்டியலில் அழைக்கப்படுகின்றார்.

விவிலியத்தில்:
இவரைப்பற்றி விவிலியத்தில் அதிகம் இடம் பெறவில்லை. இவர் புதிய ஏற்பாட்டில் நான்கு முறை மட்டுமே குறிக்கப்படுகின்றார். செபதேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து பிரித்துக்காட்ட இவர் சிரிய யாக்கோபு அல்லது சின்ன யாக்கோபு என்று அழைக்கப்படுகின்றார். (மாற்கு 15:40) இப்பெயரே இவருக்கு பாரம்பரிய சுவடிகளிலும் உள்ளது.

மாற்கு நற்செய்தியில்:
அல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்பு :
மாற்கு நற்செய்தியாளரே முதன் முதலில் இவரை அல்பேயுவின் மகன் என திருத்தூதர்களைப் பட்டியல் இடும் போது அழைக்கின்றார். அவரும் ஒரே முறை தான் அழைக்கின்றார்.

மாற்கு நற்செய்தியில் இவர் அல்பேயுவின் மகன் லேவியின் அழைப்பு இடம் பெறுகின்றது. ஆயினும், லேவி திருத்தூதர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் அல்பேயுவின் மகன் யாக்கோபு இடம் பெறுகின்றார்.

மாற்கு நற்செய்தியில் பிற யாக்கோபு:
மாற்கு நற்செய்தியாளர் மூன்று யாக்கோபுகளை விகுதியுடன் குறிப்பிடுகின்றார். அவர்கள், அல்பேயுவின் மகன் யாக்கோபு, செபதேயுவின் மகன் யாக்கோபு, இயேசுவின் சகோதரரான யாக்கோபு. பிற மூன்று இடங்களில் விகுதியற்று குறிக்கின்றார். அவர்கள் உறுமாற்றத்தின் போது ஒலிவ மலையில் உள்ள யாக்கோபு, கெத்சமணி தோட்டத்தில் இயேசுவோடு இருக்கும் யாக்கோபு, தொலையில் நின்று இயேசுவின் சிலுவையை உற்று நோக்கிக்கொண்டிருந்தவர்களுல் ஒருவரான மரியாவைக்குறிக்க சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியா என்னும் போதும்.

மத்தேயு நற்செய்தியில்:
அல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்பு :
பேதுரு, அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் அவரின் சகோதரர் யோவான் ஆகியோர் இயேசு கிறிஸ்துவின் சீடராக அழைக்கப் பெற்றனர். இதன் பின்னர் மாற்கு நற்செய்தியில் உள்ள அல்பேயுவின் மகன் லேவியின் அழைப்பைப் போன்றே மத்தேயு இயேசுவின் அழைப்பை பெறுகின்றார். ஆனாலும் மத்தேயு அல்பேயுவின் மகன் என குறிக்கப்படவில்லை எனினும் மத்தேயுவும் லேவியைப்போல வரி தண்டினவராக குறிக்கப்படுகின்றார். மத்தேயு நற்செய்தியில் வரி தண்டினவரான மத்தோயுவும், அல்பேயுவின் மகன் யாக்கோபுவும் திருத்தூதர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

மத்தேயு நற்செய்தியில் பிற யாக்கோபு:
மத்தேயு தனது நற்செய்தியில் யாக்கோபுவைக்குறிக்கும் போது, அவரின் உறவுவினர்களை வைத்தே பிரித்துக் காட்டுகின்றார். மத்தேயு மூன்று யாக்கோபுகளை தன் நற்செய்தியில் குறிப்பிடுகின்றார். அவர்கள் 

♫ யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரராக
♫ செபதேயுவின் மகனாகவும், யோவான் சகோதரராகவும்
♫ அல்பேயுவின் மகனாகவும்.

உறுமாற்றத்தின் போது இருந்த யாக்கோபு யோவான் சகோதரர் என குறிப்பிடப்படுகின்றார். கெத்சமணி தோட்டத்தில் இருந்தவர் அல்பேயுவின் மகனாக குறிப்பிடப்படுகின்றார். மேலும் தொலையில் நின்று இயேசுவின் சிலுவையை உற்று நோக்கிக்கொண்டிருந்தவர்களுல் ஒருவரான மரியாளைக்குறிக்க யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாள் என்னும் போதும் யாக்கோபுவுக்கு இவர் மாற்கை போல "சின்ன" என்னும் அடை மொழி இல்லாமல் குறிக்கின்றார்.

பாரம்பரியம்:
புனித யாக்கோபு என்னும் பெயருடன் ஒருவர் சில கிறிஸ்தவர்களோடு சேர்த்து கைது செய்யப்பட்டு, பின்னர் ஏரோது மன்னனால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என திருத்தூதர் பணிகள் நூல் குறிக்கின்றது. ஆனால் அது இவர் அல்ல எனவும், அது செபதேயுவின் மகன் யாக்கோபுவே எனவும் அறிஞர்கள் கொள்கின்றனர்.

இவர் பாரம்பரியப்படி எகிப்தில் மறைப்பணி ஆற்றும்போது சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார் என்பது மரபு.

செபம்:

ஆண்டவராகிய கடவுளே! உம் திருத்தூதரான பிலிப்புவின் விழா வை ஆண்டுதோறும் கொண்டாடுவதன் வழியாக எங்களை மகிழ்வித்தீர். அவருடைய வேண்டுதலால் நாங்கள் உமது முடிவி ல்லா பேரின்ப ஒளியை காண எமக்கு உமதருளை தந்தருளும். 

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

02 May 2020

புனித அத்தனாசியார் ஆயர், மறைவல்லுநர் May 2

இன்றைய புனிதர் : 
(02-05-2020) 

புனித அத்தனாசியார் ஆயர், மறைவல்லுநர்
பிறப்பு : கி.பி.295  அலெக்சாந்திரியா, எகிப்து

இறப்பு : 3 மே 373 அலெக்சாந்திரியா
அலெக்சாந்திரியா நகரில் வசித்த கிறிஸ்தவர்களில் மிகவும் பக்தியான கிறிஸ்துவ பெற்றோர்க்கு மகனாக அத்தனாசியார் பிறந்தார். கிரேக்க பள்ளியில் படித்த இவர், இளம் வயதிலிருந்தே அறிவுத்திறன் மிகுந்தவராய் காணப்பட்டார். தமது 21 ஆம் வயதிலேயே திருத்தொண்டர் பட்டம் பெற்ற இவர், ஆயர் அலெக்சாண்டரின் செயலராக விளங்கினார். அப்போது மனித அவதாரம் என்ற நூலை எழுதினார். இவர் இளைஞனாக இருந்தபோதிலிருந்தே, பாலைநிலத்தில் தனிமையை தேடி வாழ்ந்து வந்த தவ முனிவர்களுக்கும், சிறப்பாக வனத்து அந்தோணியாருக்கும் மிகவும் அறிமுகமானவராக இருந்தார்.

323 ஆம் ஆண்டு ஆரியுஸ் என்ற கத்தோலிக்க குரு, ஒரு தவறான கொள்கையை உருவாக்கி அதை திருச்சபை முழுவதும் பரப்பி வந்தார். இதனால் ஆயர் அலெக்சாண்டர் இந்த தவறான கொள்கையை பற்றி பேசவேண்டாம் என்று ஆரியுசுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் ஆரியுஸ் ஆயருக்கு எதிராக செயல்பட்டு, மேலும் செசாரியா பகுதிக்கு சென்று அங்கும் பரப்பிவந்தார். மக்களை கவரக்கூடிய முறையில் இத்தவறான கொள்கைகளை பாடல்களாக தொகுத்து அவற்றை பாடவைத்தார். இந்நிலையில் 325 இல் மிகவும் புகழ்பெற்ற நீசேயா பொதுசங்கம் கூட்டப்பட்டது. இச்சங்கத்தில் தான் விசுவாசப் பிரமாணம் திருச்சபையில் பயன்படுத்தப்பட வேண்டுமென்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது ஆரியுசின் தவறான கொள்கையை சுட்டிகாட்டி, அவர்மீது குற்றம் சாட்டி, அவரை சபைக்கு புறம்பாக தள்ளிவைத்தனர். அப்போது சங்கம் முடிந்த சில நாட்களிலேயே ஆயர் அலெக்சாண்டர் காலமானார். அப்போது 30 வயதே ஆகியிருந்த அத்தனாசியார், அலெக்சாண்டிரியா நகர் ஆயராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆயர் அத்தனாசியார், ஆரியுசின் தவறுகளையும், அவருக்கு உதவி செய்த ஆயர்களையும் வன்மையாக கண்டித்தார். இதனால் 5 முறை ஆயர் அத்தனாசியர் நாடுகடத்தப்பட்டார்.17 ஆண்டுகள் அவர் ஆயராக வாழ்ந்தார். இருப்பினும் அவர் கிறிஸ்துவின் மீது இடைவிடாத பற்றும், நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்தார். அவரை துன்புறுத்தியவர்களின் மீது சிறிதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல் புனிதராகவே வாழ்ந்தார். அவர்மீது கொடுமையாக குற்றம் சாட்டியவர்களையும், பொறுமையோடு ஏற்று, அன்பு செய்தார்.

அப்போது ஆயர் அத்தனாசியாரை பழிவாங்கும் நோக்கத்துடன், அலெக்சாண்டிரியா ஆயர்களும், ஆரியூசும் ஒன்று சேர்ந்து, கப்படோசியாவை சேர்ந்த கிரகோரி என்பவரை அலெக்சாண்டிரியாவின் ஆயராக தேர்ந்தெடுத்தனர். இதனால் ஆயர் அத்தனாசியார் ரோம் சென்று திருத்தந்தையிடம் நடந்தவைகள் அனைத்தையும் எடுத்துக்கூறினார். பின்னர் திருத்தந்தையின் அனுமதி பெற்று மீண்டும் அலெக்சாண்டிரியாவுக்கு திரும்பினார். அப்போது ஆயராக இருந்த கிரகோரியின் வன்முறைகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இவர் திருச்சபைக்கு செய்யும் கொடுமைகளை கண்டு, இவற்றிற்கு நீதி கிடைக்கவேண்டுமென்று இடைவிடாமல் இறைவேண்டலில் ஈடுபட்டார். இதன் விளைவாக ஆயர் கிரகோரியும், அலெக்சாண்டிரியா அரசரும் இறந்துவிட்டனர்.

அதன்பிறகு அரசன் ஜூலியன் அரசனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அரசரானதும் முதலில் ஆயர் அத்தனாசியாரை மீண்டும் ஆயர் பதவியில் அமர்த்தினார். ஆனால் ஆரிய வெறியர்கள் இதனால் சீற்றம் கொண்டு, "அமைதியைக் குலைப்பவர் அத்தனாசியர்" என்று முத்திரையிட்டு, அரசன் ஜூலியனை நாடு கடத்தினர். அதன்பிறகு பகைவர்களால் அரசன் அம்பெய்து, குத்தி கொல்லப்பட்டார். இதனால் மன்னன் வாலென்ஸ் அரசு பதவியை ஏற்றார். இவர் ஆயர் அத்தனாசியருக்கு மிக பெரிய உதவிகளை செய்து, திருச்சபையைக் காத்தார். ஏறக்குறைய 50 ஆண்டுகள் பல்வேறு துன்பங்களை தாங்கி கொண்டு, ஆயர் அத்தனாசியார் திருச்சபையில் கிறிஸ்துவின் படிப்பினைகளை நிலைநாட்டினார். அலெக்சாண்டிரியாவில் இவர் இறந்தாலும், இவரது உடல் வெனிஸ் நகரில் வைக்கப்பட்டுள்ளது.


செபம்:
அன்பே உருவான இறைவா! யாருக்கும் தீமை செய்யாமலிருப்பது மட்டும் அறம் ஆகாது. நன்மை செய்யாமலிருப்பதும் தீமையே என்றுரைத்த புனித அத்தனாசியாரைப் போல, நாங்கள் எங்களது திருச்சபைக்கு நல்லதை செய்து வாழ எமக்கு உம் வரம் தாரும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

01 May 2020

புனிதர் சூசையப்பர் May 1

† இன்றைய புனிதர் †
(மே 1)

✠ புனிதர் சூசையப்பர் ✠
(St. Joseph the Worker)
இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை (Foster-father of Jesus Christ)
ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி, அன்னை மரியாளின் கணவர் (Spouse of the Blessed Virgin Mary)
உலக திருச்சபையின் இளவரசரும் பாதுகாவலரும் (Prince and Patron of the Universal Church)

பிறப்பு: கி.மு. 90
பெத்லஹெம்
(Bethlehem)

இறப்பு: கி.பி. 18
நாசரேத்து (பாரம்பரியம்)
(Nazareth)

ஏற்கும் சமயம்: 
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
லூதரனியம்
(Lutheranism)
மெதடிஸ்ட்
(Methodism)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)

நினைவுத் திருவிழா: 
மார்ச் 19 & மே 1 (கத்தோலிக்கம்)
திருக்காட்சி பெருவிழாவை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (கிழக்கு மரபு)

பாதுகாவல்: 
கத்தோலிக்க திருச்சபை, பிறக்காத குழந்தைகள், தந்தைகள், குடிவரவாளர்கள், தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு, ஆய்வுப்பயணம் செய்பவர், யாத்ரீகர்கள், பயணிகள், தச்சுப்பணியாளர், மனை முகவர், சந்தேகம் மற்றும் தயக்கங்களுக்கு எதிராக மற்றும் ஒரு மகிழ்ச்சியான மரணம், கனடா, குரோஷியா, கொரியா, இந்தோனேசியா, ஸபோட்லன் (Zapotlan), வியட்நாம், டக்பிலரண் நகரம் (Tagbilaran City), போஹோல் (Bohol), மண்டவ் நகரம் (Mandaue city), நகரம் (Cebu), பிலிப்பைன்ஸ், மற்றும் பல

புனிதர் யோசேப்பு அல்லது புனித சூசையப்பர் (Saint Joseph), இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித கன்னி மரியாளின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெரும் தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.

புனிதரின் வாழ்வு:
சூசையப்பர், தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த யோசேப்பு, தச்சுத் தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான மரியாளுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், மரியாள் தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார். மரியாள் திடீரென கருவுற்றதால் யோசேப்பு குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கிவிட நினைத்தார். மரியாள் கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை வானதூதர் வழியாக அறிந்த இவர் மரியாளை ஏற்றுக் கொண்டார்.

இயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும் மரியாளையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் யோசேப்பு பாதுகாத்தார். பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, யோசேப்பு மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். மரியாளும் நெசவுத் தொழில் மூலம் இவருக்கு உதவினார்.

சூசையப்பர் இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். மரியாளுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் யோசேப்பு விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட யோசேப்பு, திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமைதாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் மரியாளும் அருகில் இருக்க சூசையப்பர் பாக்கியமான மரணம் அடைந்தார்.

நற்செய்திகளில்:
மத்தேயு நற்செய்தி:
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாளுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியாள் கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியாள் தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார். 
~ மத்தேயு 1:18-21, 24-25

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச்செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்" என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்" என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். 
~ மத்தேயு 2:13-14,19-21

இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியாள் என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?" என்றார்கள். 
~ மத்தேயு 13:54-56

லூக்கா நற்செய்தி:
தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாளோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியாள் கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாளுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். 
~ லூக்கா 2:4-7

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள். மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். 
~ லூக்கா 2:21-22

ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாட்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். 
~ லூக்கா 2:41-46

வணக்கம்:
கிறிஸ்தவ புனிதர்களில், அன்னை கன்னி மரியாளுக்கு அடுத்தபடியாக, புனிதர் சூசையப்பர் வணங்கப்படுகிறார். கிறிஸ்தவ வரலாற்றின் தொடக்க காலம் முதலே இவர் புனிதராக போற்றப்படுகிறார். இவர் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார்.

நாத்திக பொதுவுடைமையாளர்கள் மே தினத்தை தொழிலாளரின் நலனுக்கென்று முதன்முறையாக உருவாக்கினர். இதற்கு முழுமையான பொருள் கிடைக்கும் வகையில் 1955ம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் "தொழிலாளரான புனித சூசையப்பர்" திருநாளை மே மாதம் முதலாம் நாளில் திருச்சபை முழுவதிலும் கொண்டாட பணித்தார். இயேசு ஒரு தச்சு தொழிலாளி என்பதற்கு நம் தாயாம் திருச்சபை முக்கியத்துவம் கொடுக்கிறது. இயேசுவை இப்பணிக்கு உருவாக்கியவர் சூசையே. மனிதன் தன் கைகளாலும், தன் அறிவாற்றலாலும் கிறிஸ்துவின் மறையுடலைக் கட்டி எழுப்பக் கடமைப்பட்டவன் என்பதை புனித சூசையப்பர் தன் வாழ்வின் வழியாக உணர்த்தியுள்ளார். உழைப்பை பரிசுத்தபடுத்தவும் உழைக்கிறவர்களுக்கு ஒரு மேல் வரிச்சட்டத்தை, ஒரு பரலோக பாதுகாவலரைக் கொடுக்கும்படியும் 12- ஆம் பத்திநாத பாப்பு 1995-ல் இந்த விழாவை ஏற்படுத்தினர்.

இன்றைய உலகில் மனிதன், தனது முயற்சியினாலும், திறமையாலும் அடைந்த மாபெரும் வெற்றியை நினைக்க நினைக்க அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றது. அனைத்து நாட்டு மக்களும் கைகோர்த்துப் பணியாற்றுகிறார்கள் என்பது வெற்றிக்கு மூல காரணமாக உள்ளது. உலக மாந்தர் அனைவரும் ஒரு குடும்பத்தினர்போல் சுருங்கிவிட்ட காட்சி வியப்பானது. புதிய சாதனங்களும், கண்டுபிடிப்புகளும் எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பதை திருச்சபை உலக மக்களுக்கு எடுத்துரைத்துவருகிறது. கடவுளின் திட்டம், மனித வரலாற்றில் நிறைவேற, மனிதன் எவ்வாறு ஒத்துழைக்கவேண்டும் என்பதை சூசை தன் வாழ்வில் உணர்த்தியுள்ளார். உலகின் பல பகுதிகளிலும் மனித உழைப்பின் மாண்பினைப் பாராட்டும் விழா மே மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படவேண்டுமென்று இத்திருவிழா நிறுவப்பட்டது.

ஏழையாக பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்தவர்! துன்பத்தில் துவண்டாலும் தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர்! கஷ்டங்களுக்கு மத்தியிலும் கண்ணிய வாழ்வு வாழ்ந்தவர்! இவ்வாறு வாழ்ந்தவர்தாம், புனித சூசையப்பர்.

இன்று நம் தாய் திருச்சபையானது தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரை நினைவு கூர்கின்றது. ஒருவர் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள தினம் தினம் தம்தம் தகுதிக்கும், அறிவுத்திறனுக்கும் உடல் வலிமைக்கும் ஏற்ப, உழைக்கும் கரங்களை போற்றும் நாள் இந்நாள். இறைவனின் படைப்புத் தொழிலின் பங்காளிகளான தொழிலாளர்களை கரம் குவித்து வணங்கி வாழ்ந்திடும் நன்னாள் இன்று. இந்த விழா எவ்வாறு தோன்றியது? 

உழைப்பை பரிசுத்தபடுத்தவும், உழைக்கிறவர்களுக்கு ஒரு மேல் வரிச்சட்டத்தை கொடுக்கவும் நம் அனைவருக்கும் ஒரு பரலோக பாதுகாவலரை கொடுக்கும்படியும் 12ம் பத்திநாதர் 1955ல் இவ்விழாவை ஏற்படுத்தினார்.

30 April 2020

புனிதர் ஜோசஃப் பெனடிக்ட் கொட்டலேங்கோ April 30

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 30)

✠ புனிதர் ஜோசஃப் பெனடிக்ட் கொட்டலேங்கோ ✠
(St. Joseph Benedict Cottolengo)
ஒப்புரவாளர் மற்றும் நிறுவனர்:
(Confessor, and Founder)

பிறப்பு: மே 3, 1786
ப்ரா, குனியோ மாகாணம், பீட்மாண்ட், சர்தீனியா இராச்சியம்
(Bra, Province of Cuneo, Piedmont, Kingdom of Sardinia)

இறப்பு: ஏப்ரல் 30, 1842 (வயது 55)
சியரி, டுரின் மாகாணம், பீட்மாண்ட், சர்தீனியா இராச்சியம் (தற்போதைய இத்தாலி)
(Chieri, Province of Turin, Piedmont, Kingdom of Sardinia (Now Italy))

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: ஏப்ரல் 29, 1917
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்
(Pope Benedict XV)

புனிதர் பட்டம்: மார்ச் 19, 1934
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 30

புனிதர் ஜோசப் பெனடிக்ட் கொட்டலேங்கோ, "தெய்வீக உறுதியின் சிறு இல்லம்" (Little House of Divine Providence) எனும் அமைப்பின் நிறுவனரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

ஜோசப் பெனடிக்ட் கொட்டலேங்கோ, கி.பி. 1786ம் ஆண்டு, மே மாதம், 3ம் நாளன்று, அன்றைய சர்தீனியா இராச்சியத்தின் (Kingdom of Sardinia) "ப்ரா" (Bra) நகரில் வாழ்ந்திருந்த ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் பன்னிரண்டு குழந்தைகளில் மூத்த குழந்தையாக பிறந்தார். (அவர்களில் ஆறு பேர் குழந்தை பருவத்திலேயே இறந்தனர்). பின்னர் கி.பி. 1802ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 2ம் தேதி, அவர் ஒரு பிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை (Franciscan Tertiary) உறுப்பினர் ஆனார். கி.பி. 1805ம் ஆண்டு, அவர் "அஸ்தி" (Asti) நகரில் உள்ள செமினரியில் (குரு மட பள்ளியில்) இணைந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அது மூடப்பட்டது. மேலும் அவர் தனது படிப்பை வீட்டிலேயே தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொட்டலேங்கோ, கி.பி. 1811ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ம் தேதி, குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

"கொர்னேலியானோ டி ஆல்பா" (Corneliano D'Alba) பங்கு ஆலய துணை பாதிரியாராக நியமிக்கப்பட்ட அவர், டுரின் (Turin) நகரில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும் கி.பி. 1818ம் ஆண்டு, டுரின் நகரில் உள்ள "கார்பஸ் டொமினி பேராலயத்தின்" (Basilica of Corpus Domini in Turin) தலைமை குருவாக (Canon) ஏற்றுக்கொள்ளப்பட்டார். கொட்டலேங்கோ, தமக்கு கிடைத்த பரிசுகள், நன்கொடைகள், பிரசங்கத்திற்கான கட்டணம், மற்றும் திருப்பலி நடத்துவதற்காக தமக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை ஆகியவற்றினை ஏழைகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.

டுரின் நகரம், ஃபிரெஞ்சு ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்த அந்த காலகட்டத்தில், கிராமப்புறங்களிலிருந்து தீவிரமான குடியேற்றத்தின் அழுத்தம் இருந்தது. இது கடுமையான சமூக பிரச்சினைகள் மற்றும் வறுமையை ஏற்படுத்தியது. மோசமான பஞ்சம், மற்றும் வறுமை, பிச்சைக்காரர்கள், கல்வியறிவு இல்லாமை, மற்றும் தொடர்ச்சியான தொற்றுநோய்கள், ஏராளமான சட்டவிரோத குழந்தை பிறப்புகள் மற்றும் அதிக குழந்தை இறப்பு விகிதம் ஆகியவற்றால் டுரின் நகர் நிறைந்திருந்தது. "புனித வின்சென்ட் டி பாலின்" (St. Vincent de Paul) வாழ்க்கை வரலாற்றினை படித்து அறிந்த கொட்டலேங்கோ, தனது நாற்பத்தொன்றாவது வயதில், தமது உண்மையான தொழில் தர்மம், கருணை என்பதை புரிந்துகொண்டார்.

இந்த நேரத்தில், "லியோன்ஸ்" (Lyons) நகரிலிருந்து "மிலன்" (Milan) நகருக்கு பயணிக்கும் ஒரு குடும்பத்தில் கொட்டலேங்கோ கலந்து கொண்டார். கர்ப்பிணித் தாய் ஒருவர், உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தாலும், அவருக்கு காசநோய் இருந்ததாலும், மாகியோர் மருத்துவமனையில் (Maggiore Hospital) அவர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் காய்ச்சலால் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மகப்பேறு மருத்துவமனைக்குச் செல்லவும் முடியவில்லை. மேலும் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய எவரையும் மருத்துவமனையில் அனுமதிக்க விதிமுறைகள் தடை விதித்தன. மரண தருவாயிலிருந்த அந்த தாய்க்கு கொட்டலேங்கோ இறுதி அருட்சாதனங்களை வழங்கினார். மற்றும் பிறந்த அந்த குழந்தைக்கு, இறப்பதற்கு முன்பு திருமுழுக்கு அள்ளித்தார். மரித்துப்போன அந்த தாயின் மற்ற குழந்தைகளின் அழுகையும் அரற்றலும் நிறைந்த காட்சிகள், கொட்டலேங்கோவை வெகுவாக பாதித்தன. உடனடியாக சென்ற அவர், தனது உடை உட்பட தனக்குச் சொந்தமான அனைத்தையும் விற்று, இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்தார். வயதான பக்கவாத நோயாளி ஒருவருக்கு இலவச தங்குமிடம் வழங்கினார். கி.பி. 1828ம் ஆண்டு, ஜனவரி மாதம், 17ம் தேதி, அவர் தனது புதிய பணியைத் தொடங்கினார். மருத்துவமனைகளில் ஏற்றுக்கொள்ளப்படாத மக்களுக்கு, நீண்ட காலத்திற்கு இந்த வளாகங்கள் விருந்தோம்பல் மையமாக மாறியது. நோய்வாய்ப்பட்டவர்களைப் பார்வையிட்ட பணக்கார விதவைப் பெண்ணான "மரியானா நாஸி" (Marianna Nasi) என்பவரின் வழிகாட்டுதலின் பேரில், அவருக்கு மருத்துவர் "லோரென்சோ கிரானெட்டி" (Doctor Lorenzo Granetti), மருந்தாளர் (Pharmacist) "பால் ராயல் ஆங்லெசியோ" (Paul Royal Anglesio), மற்றும் "கருணையின் மகளிர்" (Ladies of Charity) அமைப்பின் பன்னிரண்டு பெண்கள் ஆகியோர் உதவி செய்தனர்.

கி.பி. 1831ம் ஆண்டில் காலரா நோய்த் தொற்று வெடித்தபோது, தொற்று பயம் காரணமாக முன்னெச்சரிக்கையாக இவரது சிறிய மருத்துவமனை அதிகாரிகளால் மூடப்பட்டது. கொட்டலேங்கோ நகரின் புறநகரில் உள்ள "வால்டோக்கோ" (Valdocco) எனும் இடத்தில் ஒரு வீட்டை வாங்கி, இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியுடன் அங்கு இடம் பெயர்ந்தார். இது "தெய்வீக உறுதியின் சிறு இல்லம்" அமைப்பின் தொடக்கமாகும். "காவலியர் ஃபெர்ரெரோ" (Cavalier Ferrero) என்பவர் உள்ளிட்ட பல பயனாளிகளின் தாராள மனப்பான்மை காரணமாக, அவரால் விரைவில் ஒரு அனாதை இல்லத்தை நிறுவ முடிந்தது.

அவர், பல்வேறு துறவு மடங்கள், பள்ளிகள், குருக்களின் சமூகங்கள் (Communities of Priests), சகோதரர்களின் சமூகங்கள் (Communities of Brothers) மற்றும் பொதுநிலை தன்னார்வலர்களின் குழுக்களை (Groups of Lay Volunteers) நிறுவினார். அவரது தொண்டு மரபு, இன்று டுரின் நகரின் மையத்தில், சுவிசேஷ வழியில் பிறரை நேசிப்பதும் சேவை செய்வதும் என்ன என்பதற்கான அடையாளமாக உள்ளது.

இன்றும் கொட்டலேங்கோ அருட்தந்தையர், சகோதரிகள் மற்றும் சகோதரர்கள், ஏழை எளிய மக்களிடம் கடவுளின் அன்பைத் தொடர்புகொள்வதில் கவனம் செலுத்தும் செயல்களில் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள். இந்த அமைப்புகள், இன்று உலகம் முழுவதுமுள்ள ஈக்வடார் (Ecuador), இந்தியா (India), இத்தாலி (Italy), கென்யா (Kenya), சுவிட்சர்லாந்து (Switzerland), தான்சானியா (Tanzania), மற்றும் அமெரிக்கா (United States) ஆகிய நாடுகளில் பரவியுள்ளன.

கொட்டலேங்கோ தனது நோயாளிகளுக்கு உதவும்போது டைபாய்டு (Typhoid) நோயால் பாதிக்கப்பட்டு, கி.பி. 1842ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 30ம் தேதி, வடமேற்கு இத்தாலியின் (Northwestern Italy) "பீட்மாண்ட்" (Piedmont) பிராந்தியத்திலுள்ள "சியரி" (Chieri) நகரில் மரித்தார்.

புனித ஜோசப் பெனடிக்ட் கொட்டலேங்கோவின் பங்கு ஆலயம் (The Parish of Saint Joseph Benedict Cottolengo), "டஸ்கனியின் மத்திய இத்தாலிய பிராந்தியமான" (Central Italian Region of Tuscany), "க்ரோசெட்டோ" (Grosseto) நகரில் அமைந்துள்ளது.

தூய ஐந்தாம் பத்திநாதர் (ஏப்ரல் 30)

இன்றைய புனிதர் : 
(30-04-2020) 

தூய ஐந்தாம் பத்திநாதர் (ஏப்ரல் 30)
நாம் வெற்றியாளர்களாக மாற அல்ல, நம்பிக்கைக்குரியவர்களாக வாழவே இறைவன் நம்மைப் படைத்துள்ளார்” (அன்னை தெரசா)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் ஐந்தாம் பத்திநாதர் எனப்படும் அந்தோனி மைக்கேல் 1504 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 17 ஆம் நாள், இத்தாலியில் உள்ள போஸ்கோ என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எனவே இவர் தன்னுடைய பதினான்கு வயதில் டொமினிக்கன் சபையில் சேர்ந்து, அடுத்த பத்தாண்டுகளில் குருவாகவும், அதன்பின் வந்த ஆண்டுகளில் ஆயராகவும் கர்தினாலாகவும் 1566 ஆம் ஆண்டு, ஜனவரி 7 ஆம் நாள் திருத்தந்தையாகவும் மாறினார்.

அந்தோனி மைக்கேல் திருத்தந்தையாக உயர்ந்தபின் ஐந்தாம் பத்திநாதர் என்ற பெயரைத் தாங்கியவராய் திருச்சபைக்கு பல்வேறு பணிகளைச் செய்தார். குறிப்பாக 1545 லிருந்து 1563 வரை நடைபெற்ற திரிதெந்திய (Council of Trent) சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மிகத் துணிச்சலாக நடைமுறைப் படுத்தினார். அது மட்டுமல்லாமல் திருச்சபைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்துவந்த பிரிவினை சபைகளின் கோட்பாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்தார். இதனால் இவருக்குப் பயங்கர எதிர்ப்புகள் கிளம்பின. அவற்றையெல்லாம் இவர் கண்டுகொள்ளாமல், மிகத் துணிச்சலாக திருச்சபைக்காக உழைத்து வந்தார்.

திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் அவர்கள் நாடுகளிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கும் கடுமையாக உழைத்தார். குறிப்பாக இங்கிலாந்து அரசியான முதலாம் எலிசபெத்தை திருச்சபையோடு இணைப்பதற்கு அரும்பாடுபட்டார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அது மட்டுமல்லாமல், ஐரோப்பா கண்டத்தில் இருந்த ஏனைய நாடுகளையும் திருச்சபையோடு இணைப்பதற்கு பாடுபட்டார் அதுவும் தோல்வியிலேதான் முடிந்தது. இப்படி பல்வேறு தோல்விகளை அவர் சந்தித்தாலும் திருச்சபைக்காக எதையும் செய்யத் துணிந்து வந்தார்.

1571 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் நாள் துருக்கியப் படைகள் ஐரோப்பிய நாடுகள்மீது படையெடுத்து வந்தன. இதனை உணர்ந்த திருத்தந்தை அவர்கள் கிறிஸ்தவப் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து, கிறிஸ்தவ நாடுகளைக் காப்பாற்றினார். திருத்தந்தை அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தளவில் அவர் எப்போதும் டொமினிக்கன் சபையிலிருந்து கற்றுக்கொண்டு அனைத்துப் புண்ணியங்களையும் தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வந்தார். இரவில் நீண்டநேரம் முழந்தாள் படியிட்டு ஜெபித்தார்; கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டார்; ஏழை எளியவருக்கு தான தர்மங்களை நிறைய வழங்கினார்; நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் படுத்தினார்.

இப்படி திருச்சபைக்காக பல்வேறு பணிகளைச் செய்துவந்த திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் 1572 ஆம் ஆண்டு, மே திங்கள் 1 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

திருத்தந்தை தூய ஐந்தாம் பத்திநாதருடைய நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. தோல்விகள் என்பவை வெறும் தோல்விகள் அல்ல, அவை வெற்றிக்கான படிக்கட்டுகள்

தூய ஐந்தாம் பத்திநாதருடைய வாழக்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்ற நம்முடைய மனதில் எழுகின்ற ஒரே சிந்தனை, வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற தோல்விகளை வெறும் தோல்விகளாக மட்டும் எடுத்துக்கொள்ளாமல், அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதாகும்.

திருத்தந்தை அவர்கள் நாடுகளை ஒருங்கிணைப்பதிலும் அவர்களிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவதிலும் பல தோல்விகளைச் சந்தித்தார். அந்தத் தோல்விகளை எல்லாம் கண்டு மனமுடைந்து போகாமல், தொடர்ந்து இயேசுவுக்காகவும் அவருடைய திருச்சபைக்காகவும் உழைத்துக் கொண்டே இருந்தார். அதனால்தான் கடைசியில் துருக்கியர்களுக்கு எதிரான போரில் வெற்றிகண்டார். நாமும் நம்முடைய வாழ்வில் சந்திக்கின்ற தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், தொடர்ந்து போராடி வெற்றிபெறுவதுதான் சிறப்பான ஒரு காரியமாகும்.

இந்த இடத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தோல்வியைக் குறித்து சொல்கின்ற கருத்துகளையும் சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்பது பொருத்தமானது “என்னுடைய பார்வையில் வெற்றி என்றும் தோல்வி என்றும் ஒன்று கிடையாது. இவை இரண்டுமே இரு வேறு சம்பவங்கள். வாழ்க்கை என்பது சம்பவங்களால் ஆனது. அவ்வளவுதான்”. தோல்வி என்பது ஒரு சம்பவம்தான், அதை நினைத்து வருந்துவதால் ஒன்றும் ஆகபோவதில்லை என்ற வைரமுத்துவின் வார்த்தைகள் கவனிக்கப்படவேண்டியவை.

ஆகவே, தூய ஐந்தாம் பத்திநாதருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தொடர்ந்து இறைவனுக்காகவும் அவருடைய திருச்சபைக்காகவும் உழைப்போம். தோல்விகளைக் கண்டு துவளாமல், அவற்றிலிருந்து பாடம் கற்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.