திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசுவில் அன்பானவர்களே ஆண்டின் பொதுக்காலம் 11 – ஆம் வாரத்தில் திருப்பலியில் பங்கேற்கஅணியமாயிருக்கும் உங்கள் எல்லாரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.
பாவியான பெண்ணை இயேசு மன்னித்து, அவருக்கு ஆதரவாகப் பேசும் பகுதியை இன்றைய நற்செய்தியில்வாசிக்கக் கேட்கிறோம். இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர் என்னும் இயேசுவின்நிறைவான சொற்கள் அன்புக்கும், பாவ மன்னிப்புக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகின்றன. அன்பு திரளானபாவங்களைப் போக்குகிறது என்னும் பேதுருவின் மொழிகள் இங்கு நினைவுகூரத்தக்கவை. நமது பாவங்கள்அதிகமாக இருந்தால், நமது அன்புச் செயல்களை அதைவிட அதிகமாக்கிக் கொள்வதுதான் மன்னிப்புப்பெறுவதற்கான வழி.
குறைகளோ, குற்றங்களோ இல்லாத மனிதர் நம்மில் எவருமே இலர். எல்லாருமே பாவிகள்தாம். எனவே,பாவங்களிலிருந்து விடுதலை பெறவும், மன்னிப்பு அடையவும் இயேசு சுட்டிக்காட்டும் வழி அன்புதான்.இறைவனை, நம் அயலாரை, நமக்குத் துன்பம் செய்வோரை நாம் அன்பு செய்ய முன் வந்தால், நமது பாவங்களைஇறைவன் நிச்சயமாக மன்னிப்பார். இந்த ஆறுதல் தரும் வார்த்தைகளுக்காக இயேசுவுக்கு நன்றி சொல்வோமா?இத்திருப்பலியில் பங்கேற்று இறையாசீர் பெறுவோம்.

முதல் வாசகம்
முதல் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே, இன்றைய முதல் வாசகம், தாவீது அரசரின் மனமாற்றத்தை குறித்து எடுத்துரைக்கிறது.ஆண்டவரால் இஸ்ரயேலின் அரசராய் திருப்பொழிவு செய்யப்பட்ட தாவீது, கடவுளின் அன்பை மறந்து உலகப்பொருட்களில் இன்பம் காண முயற்சிக்கிறார். சிற்றின்ப ஆசைகளுக்கு அடிமையான தாவீது, இத்தியராகியஉரியாவைக் கொன்று, அவரது மனைவியை உரிமையாக்கி கொள்கிறார். இதை இறைவாக்கினர் நாத்தான்வழியாக ஆண்டவர் கண்டிப்பதைக் காண்கிறோம். தாவீதும் தன் பாவத்தை உணர்ந்தவராய், "நான் ஆண்டவருக்குஎதிராகப் பாவம் செய்துவிட்டேன்" என அறிக்கையிட்டு மன்னிப்பு பெறுகிறார். நமது பாவ வாழ்வால் ஆண்டவரைவேதனைப்படுத்தியிருந்தால், தாவீதைப் போன்று மனம் வருந்தி மன்னிப்பு பெற வரம் வேண்டி, இந்த வாசகத்தைசெவியேற்போம்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 12: 7-10,13
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 12: 7-10,13
7 அந்நாள்களில் நாத்தான் தாவீதிடம், "நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறுகூறுகிறார். "நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன். நான் உன்னைச் சவுலின்கையிலினின்று விடுவித்தேன். 8 உன் தலைவரிடம் வீட்டை உன்னிடம் ஒப்படைத்தேன்; அவன் மனைவியரையும்உனக்கு மனைவியர் ஆக்கினேன்; இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்; இதுபோதாதென்றால் நான் மேலும் உனக்கு மிகுதியாய் கொடுத்திருப்பேன். 9 பின் ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப்புறக்கணித்து அவர்தம் பார்வையில் தீங்கு செய்தாய்? இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இறையாக்கி, அவன்மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய்; அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்! 10இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது. ஏனெனில் நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின்மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய்.13 அப்போது தாவீது நாத்தானிடம், "நான் ஆண்டவருக்குஎதிராக பாவம் செய்துவிட்டேன்" என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், "ஆண்டவரும் பாவத்தை நீக்கிவிட்டார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள்அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள்
திருப்பாடல்கள்: 32: 1-2. 5. 7. 11
திருப்பாடல்கள்: 32: 1-2. 5. 7. 11
1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர். பல்லவி
2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர்பேறுபெற்றவர் . பல்லவி
5 'என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என்குற்றங்களை ஒப்புக்கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.பல்லவி
7 நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச்சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். பல்லவி
11 நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்துபாடுங்கள் . பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நம்பிக்கையாலே நாம் இறைவனுக்கு ஏற்புடையவர்ஆகமுடியும் என எடுத்துரைக்கிறார். திருச்சட்டம் சார்ந்த செயல்கள் அல்ல, இயேசு கிறிஸ்து மீது கொள்ளும்நம்பிக்கையே மீட்பு அளிக்கிறது என்பதை உணர அழைப்பு விடுக்கப்படுகிறது. கடவுள் மீதான நம்பிக்கை,கடவுளின் விருப்பத்துக்கு நம்மை அர்ப்பணித்து வாழத் தூண்டுகிறது. தன்னையே சிலுவையில் பலியாககையளித்த கிறிஸ்துவின் அருளால், பாவத்திற்கு எதிரான தூய வாழ்வு வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுகிறிஸ்து மீதான நம்பிக்கையால், கடவுளை அன்பு செய்து வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 16,19-21
சகோதர சகோதரிகளே திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும்நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம்.ஆதலால்தான் நாமும் சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, நம்பிக்கையால் இறைவனுக்கு எற்புடையவராகுமாறுகிறிஸ்து இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் எவருமேஇறைவனுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை. 19 திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன்.அதற்கு அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில்அறையப்பட்டிருக்கிறேன். 20 எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீதுஅன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார். 21 நான் கடவுளின் அருள் பயனற்றுப்போக விட மாட்டேன்.ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக்கூடுமானால் கிறிஸ்துஇறந்தது வீண் என்றாகுமே!
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமதுகூந்தலால் துடைத்தார்.அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
நற்செய்தி வாசகம்
புனித லூக்கா எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 7;36--50 8;1-;3
அக்காலத்தில் பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப்பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். 37 அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார்.இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர்நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். 38 இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்துஅவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து,தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் ப+சினார். 39 அவரை அழைத்த பரிசேயர் இதைக்கண்டு, "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்;இவள் பாவியாயிற்றே" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். 40 இயேசு அவரைப் பார்த்து, "சீமோனே, நான்உமக்கு ஒன்று சொல்லவேண்டும்" என்றார். அதற்கு அவர், "போதகரே, சொல்லும்" என்றார். 41 அப்பொழுது அவர், "கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர்கடன்பட்டிருந்தனர். 42 கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடிசெய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?" என்று கேட்டார். 43 சீமோன்மறுமொழியாக, "அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்" என்றார். இயேசுஅவரிடம், "நீர் சொன்னது சரியே" என்றார். 44 பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், "இவரைப்பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோதம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். 45 நீர் எனக்கு முத்தம்கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டேஇருக்கிறார். 46 நீர் எனது தலையில் எண்ணெய் ப+சவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம்ப+சினார். 47 ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர்மிகுதியாக அன்பு கூhந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார். 48பின்பு அப்பெண்ணைப் பார்த்து, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார். 49 "பாவங்களையும் மன்னிக்கும் இவர்யார்?" என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். 50 இயேசுஅப்பெண்ணை நோக்கி, "உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க" என்றார்.1 அதற்குப்பின் இயேசுநகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும்அவருடன் இருந்தனர். 2 பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழுபேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் 3 ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவியோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள்உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
"ஆண்டவரே உம்மை ஏத்திப்புகழ்வேன், ஏனெனில் நீர் என்னை கைதூக்கி விட்டீர்!
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
“ எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் நானும் அவர்களோடுஇணைந்திருப்பேன்” என்று மொழிந்த எம் அன்பு இறைவா,
உம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும்பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து உம்திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே இறைவா!
பெண்களைப் பெருமைப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது மாதிரியை நாங்களும் பின்பற்றி,பெண்களை மதிக்கவும், நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஆண்களும், பெண்களும் இணைந்து பணியாற்றும்நல்மனதை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பாவங்களை மன்னிப்பதில் வள்ளலான இயேசுவே,
இன்றைய நற்செய்திக்காக உமக்கு நன்றி. மிகுதியாக அன்பு செய்பவரின் மிகுதியான பாவங்கள் மன்னிக்கப்படும்என்று மொழிந்த உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய பாவங்களின் அழுத்தத்திலிருந்து விடுதலை பெறஅன்பை ஆயதமாக அணிந்துகொள்ள அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஞானத்தின் ஊற்றே இறைவா!
எம் பங்கு மக்கள் அனைவரும் இறைஅன்பிலும, பிறர் அன்பிலும் நாளும் வளரவும், குடும்பங்களில் சமாதானம்நிலவிடவும், பிள்ளைகள் நன்கு படித்திடவும் தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும்,விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் அன்புதூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்பபிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திடவேண்டுமென்று தயவாய் உம்மைமன்றாடுகின்றோம்.
கருணையின் தேவா!
எம் பங்கிலுள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளை வீணடித்து விடாமல், எதிர்காலவாழ்வை திட்டமிட்டு செயல்படுத்திட தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
இன்றைய சிந்தனை
''இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் (பாவியான பெண்) அழுதுகொண்டே நின்றார்; அவருடையகாலகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்;ந்து முத்தமிட்டு அக்காலடிகளில்நறுமணத் தைலம் பூசினார்'' (லூக்கா 7:38)
சீமோன் என்னும் பரிசேயரின் வீட்டில் இயேசு விருந்து உண்பதில் ஈடுபட்டிருக்கின்றார். அப்போது அங்கேஅழையாத ஒரு ''விருந்தினர்'' வருகிறார். அது ஒரு பெண். அவருடைய பெயர் நமக்குத் தெரியாது. அப்பெண்எந்தவொரு வார்த்தையும் பேசவுமில்லை. ஆனால் அவர் செய்த செயல்களை லூக்கா துல்லியமாகப்பதிவுசெய்துள்ளார். அக்கால வழக்கப்படி விருந்தினர் ஒரு மேசை முன் அமர்ந்து, தலையணையில் சாய்ந்தநிலையில் இடது முட்டுக்கையை ஊன்றிக் கொண்டு வலது கையால் உணவை எடுத்து அருந்துவர். அப்போதுவிருந்தினரின் கால்கள் மடக்கப்பட்ட நிலையில் அவர்களின் காலடிகள் பின்புறம் தெரியும். இதனால்தான் அந்தப்''பாவி''யான பெண் (லூக் 7:37) ''இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் அழுதுகொண்டே நின்றார்'' (லூக் 7:38). தன்வாழ்க்கை பாழாகிப் போனதே என்னும் மனக் கவலையால் அவர் அழுதாரா? புதியதொரு வாழ்வைத்தொடங்கவேண்டும் எனத் தீர்மானித்து, தன் தவறுகளை நினைத்து மனம் வருந்தி அழுதாரா? அவர் தேடி வந்ததுஇயேசுவை. உணவருந்திக் கொண்டிருந்த இயேசுவின் காலடிகளின் அருகில் நின்று அழுததால் கண்ணீர்த்துளிகள் அப்பாதங்களை நனைக்கின்றன. அப்பெண் தன் கூந்தலை அவிழ்க்கிறார். நனைந்த இயேசுவின்காலடிகளைத் தன் கூந்தலால் துடைக்கின்றார். இயேசுவின் பாதங்களை முத்தமிடுகிறார். தன் கையிலிருந்தபடிகச் சிமிழிலிருந்து நறுமணத் தைலத்தை இயேசுவின் காலடிகளில் கரிசனையோடு பூசுகின்றார் (காண்க: லூக்7:38).
லூக்கா விவரிக்கின்ற இக்காட்சி உண்மையிலேயே வியப்புக்குரியதுதான். விருந்து நடக்கும்போது அங்கேநுழைவதற்கு அப்பெண்ணுக்கு அனுமதி இருக்கவில்லை. அதுவும் சட்ட நுணுக்கங்களைத் துல்லியமாகக்கடைப்பிடித்த பரிசேயர் ஒருவர் ''பாவி''யான பெண்ணை வீட்டில் ஏற்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.மேலும், ''இறைவாக்கினர்'' என மக்களால் கருதப்பட்ட இயேசுவிடம் சென்று அவருடைய காலடிகளை அப்பெண்தொட்டார் என்பது இன்னும் ஒரு பெரிய எல்லை மீறல். ஆனால் இயேசுவுக்கு அப்பெண்ணின் இதயத்தில்புதைந்துகிடந்த சிந்தனைகள் தெரியும். அப்பெண்ணின் உள்ளத்தில் எழுந்த அன்பும் நம்பிக்கையும் இயேசுவுக்குவெளிச்சம். எனவே இயேசு பாவியான அப்பெண்ணைப் போற்றிப் பேசுகின்றார். இயேசுவை வீட்டுக்குஅழைத்துவிட்டு அவருக்கு உரிய மரியாதை காட்டாத சீமோன் எதையெல்லாம் செய்யாது விட்டாரோஅதையெல்லாம் அப்பெண் இயேசுவுக்குச் செய்கிறார். அதாவது, வீட்டுக்குள் நுழைவதற்கு முன் காலடிகளைக்கழுவுவது வழக்கம். அப்பெண் இயேசுவின் காலடிகளைத் தன் கண்ணீரால் கழுவித் தன் முடியால் துடைக்கிறார்.விருந்தினரை முத்தமிட்டு வரவேற்க வேண்டும். ஆனால் அப்பெண்ணோ இயேசுவின் காலடிகளையேமுத்தமிடுகிறார். விருந்தினரின் தலையில் எண்ணெய் பூச வேண்டும். ஆனால் அப்பெண்ணோ தன்னையேதாழ்த்திக்கொண்டு, இயேசுவின் காலடிகளைத் தொட்டு அவற்றில் நறுமணத் தைலம் பூசுகிறார். இவ்வாறு அவர்தன் அன்பை வெளிப்படுத்துகிறார். இயேசு அப்பெண்ணின் அன்பையும் நம்பிக்கையையும் பாராட்டியதோடுஅவருடைய பாவங்களையும் மன்னித்து, அவருக்கு மீட்பைபும் அமைதியையும் வாக்களிக்கின்றார் (லூக் 7:50).அன்பு இருக்கும் இடத்தில் கடவுளின் அருள் தோன்றும் என்பதற்குப் ''பாவியான பெண்'' சிறந்த எடுத்துக்காட்டு.

மன்றாட்டு:
இறைவா, அன்பு நிறைந்த உள்ளத்தோடு நாங்கள் உம்மை அணுகி வர எங்களுக்கு அருள்தாரும்
No comments:
Post a Comment