புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

Showing posts with label அருள் வாக்கு இணைய மின்னஞ்சல். Show all posts
Showing posts with label அருள் வாக்கு இணைய மின்னஞ்சல். Show all posts

16 August 2013

12ஆம் வாரம்

வெள்ளி

முதல் ஆண்டு



 முதல் வாசகம்

 உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். சாரா ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெறுவாள்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 1, 9-10, 15-22

ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ``நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு'' என்றார். மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், ``நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்'' என்றார்.

பின்பு கடவுள் ஆபிரகாமிடம், ``உன் மனைவியைச் `சாராய்' என அழைக்காதே. இனிச் `சாரா' என்பதே அவள் பெயர். அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்'' என்றார்.

ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, ``நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?'' என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

ஆபிரகாம் கடவுளிடம், ``உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்'' என்றார்.

கடவுள் அவரிடம், ``அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ `ஈசாக்கு' எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப் பின்வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இஸ்மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர் களுக்கு அவன் தந்தையாவான்; அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும். ஆனால், சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்'' என்றார்.

அவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 4)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் ஆசி பெற்றவராய் இருப்பார்.

1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 8: 17

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4

அக்காலத்தில் இயேசு மலையிலிருந்து இறங்கியபின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, ``ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்'' என்றார்.

இயேசு தமது கையை நீட்டிஅவரைத் தொட்டு, ``நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!'' என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.

இயேசு அவரிடம், ``இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் ஆசீர் பெறுவர்.

இரண்டு வாசகங்களிலும் அண்டவருக்கு அஞ்சி நடந்தவர்கள் ஆசீர் பெற்றனர் என்பதனை பார்க்கின்றோம்.

வளர்ந்த உலகில் இன்று ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோர் எண்ணிக்கை குறைந்த வருகின்றது. ஏன் அஞ்ச வேண்டும் என்று கேட்கின்றனர். ஏன் அஞ்ச வேண்டும் என்று கேட்போருக்கு என்ன பதில்?

படைத்தவருக்கு மாத்திரமே அஞ்சுங்கள் என்ற வார்த்தையை அறியாத உள்ளங்கள் பரிதாபத்திற்குரியவர்களே. அவரால் இயலாதது எதுவுமில்லை. எனவெ அவருக்கு மட்டும் அஞ்சி வாழ்வது தான் வாழ்வு. அஞ்சுவது என்பது பயந்து நடுங்குவத இல்லை, பணிந்து, கீழ்ப்படிந்து செயல்படுவதுவேயாகும். இவர்கள் ஆசீர் பெறுவார்கள். விவிலியமும். பராம்பரியமும், திருஅவை வரலாறும் இதனை உறுதிப்படுத்துகின்றது. அறிந்து, பணிந்து, அறிக்கை செய்து, ஆசீர் பெறுவோம்.
12ஆம் வாரம்

வியாழன்

முதல் ஆண்டு



 முதல் வாசகம்

 ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 16: 1-12,15-16

அந்நாள்களில் ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள். சாராய் ஆபிராமிடம், ``ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்'' என்றார். ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார்.

ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின், அவர் மனைவி சாராய் எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத் தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார். அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள். அப்பொழுது சாராய் ஆபிராமிடம், ``எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும். நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள்.

ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்'' என்றார். ஆபிராம் சாராயிடம், ``உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்'' என்றார். இதற்குப் பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது. அவர் அவளை நோக்கி, ``சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?'' என்று கேட்டார்.

அதற்கு அவள், ``என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்'' என்றாள். ஆண்டவரின் தூதர் அவளிடம், ``நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட'' என்றார்.

பின்பு ஆண்டவரின் தூதர் அவளிடம், ``உன் வழிமரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்'' என்றார்.

மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், ``இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு `இஸ்மயேல்' எனப் பெயரிடுவாய். ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார். ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லாரையும் அவன் எதிர்ப்பான். எல்லாரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்'' என்றார்.

ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார். ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



 அல்லது

குறுகிய வாசகம்



ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 16: 6b-12, 15-16

அந்நாள்களில் ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது. அவர் அவளை நோக்கி, ``சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?'' என்று கேட்டார்.

அதற்கு அவள், ``என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்'' என்றாள்.

ஆண்டவரின் தூதர் அவளிடம், ``நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட'' என்றார்.

பின்பு ஆண்டவரின் தூதர் அவளிடம், ``உன் வழிமரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்'' என்றார். மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், ``இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு `இஸ்மயேல்' எனப் பெயரிடுவாய். ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார். ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லாரையும் அவன் எதிர்ப்பான். எல்லாரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்'' என்றார்.

ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் `இஸ்மயேல்' என்று பெயரிட்டார். ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 106: 1-2. 3-4ய. 4b-5 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு! 2 ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால் இயம்ப இயலும்? அவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்? பல்லவி

3 நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபெற்றோர்! 4ய ஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவுகூரும்! பல்லவி

4b அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்! 5 நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்; உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்! அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு உம்மைப் போற்றிட இயலும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

கற்பாறை மீதும், மணல் மீதும் கட்டப்பட்ட வீடுகள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

அந்நாளில் பலர் என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?' என்பர்.

அதற்கு நான் அவர்களிடம், `உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்' என வெளிப்படையாக அறிவிப்பேன். ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.'' இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

ஆண்டவரை வெறுமனே அழைப்பதால் அல்ல, அவருடைய விருப்பம் ஏற்று செயல்படுபவரே நிலைவாழ்வை சுதந்தரிப்பார்கள்.

ஆபிராம் தன் வாழ்வில் தந்தையின் விரப்பத்தை நிறைவேற்றி, வாக்களித்த ஆசீரைப் பெற்று சாட்சியாக உள்ளார்.
12ஆம் வாரம்

புதன்

முதல் ஆண்டு



 முதல் வாசகம்

 ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-12,17-18

அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: ``ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.''

அப்பொழுது ஆபிராம், ``என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப்பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்'' என்றார்.

அதற்கு மறுமொழியாக, ``இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்'' என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.

அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, ``வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்'' என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.

ஆண்டவர் ஆபிராமிடம், ``இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே'' என்றார்.

அதற்கு ஆபிராம், ``என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?'' என்றார்.

ஆண்டவர் ஆபிராமிடம், ``மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா'' என்றார்.

ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டு வந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார். கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. கதிரவன் மறைந்ததும் இருள் படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, ``எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்'' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 8ய)

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி

3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 4,5b

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்து கொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா?

நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.

நல்ல கனி கொடாத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

தம்முடைய உடன்படிக்கையை தான் செய்து கொள்ளும் உடன்படிக்கையை நிறைவு செய்யும் கடவுளே நாம் நம்பி விசுவசிக்கும் கடவுள்.

ஆபிராம் வாழ்வில் கடலின் மணலைப் போலவும், வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போலவும் சந்ததியை பெருகச் செய்வேன் என்றவர், செய்தார் என்பதனை நம்பம் நாம், நம்முடைய வாழ்விலும், நம்மோடு செய்யும் உடன்படிக்கையை நிறைவு செய்து தருபவர் நம் கடவுள்.

அவரே எங்கள் கடவுள், அவரு எங்கள் அண்டவர் என்று நாம் உண்மையாய் இருக்கும் போது, வாக்களித்தவாறே, நிலையான வாழ்வுக்கு நம்மை தகுதியுள்ளவராக்குவார். அவருடைய உயிர்ப்பே இதற்கு சாட்சி.  எவ்வாறு அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டாரோ, அவ்வாறே அவா வரும் நாளிலும் நாமும் ஏற்றுக் கொள்ளப்படுவோம்.
12ஆம் வாரம்

செவ்வாய்

முதல் ஆண்டு

 முதல் வாசகம்

 எனக்கும் உனக்கும் இடையே பூசல் வேண்டாம்; ஏனெனில் நாம் உறவினர்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 13: 2,5-18

அந்நாள்களில் ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார். ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை.

ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது கானானியரும் பெரிசியரும் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.

ஆபிராம் லோத்தை நோக்கி, ``எனக்கும் உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்பட வேண்டாம். ஏனெனில் நாம் உறவினர். நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா? என்னிடமிருந்து பிரிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நீ இடப்பக்கம் சென்றால் நான் வலப்பக்கம் செல்வேன்; நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்வேன்'' என்றார்.

லோத்து கண்களை உயர்த்தி, எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியைக் கண்டார். சோகார் வரை அப்பகுதி ஆண்டவரது தோட்டம் போலும் எகிப்து நாட்டைப் போலும் இருந்தது. சோதோம், கொமோராவை ஆண்டவர் அழிப்பதற்கு முன் அது அவ்வாறு இருந்தது. லோத்து யோர்தான் சுற்றுப் பகுதி முழுவதையும் தேர்ந்து கொண்டு கிழக்குப் பக்கமாகப் பயணமானார். இவ்வாறு ஒருவர் ஒருவரிடமிருந்து பிரிந்தனர்.

ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்த நகரங்களில் வாழ்ந்து வந்தார். இறுதியில் சோதோமுக்கு அருகில் கூடாரம் அமைத்துக் கொண்டார். ஆனால் சோதோமின் மக்கள் ஆண்டவருக்கு எதிரான மிகக் கொடிய பாவிகளாக இருந்தனர்.

லோத்து ஆபிராமிடமிருந்து பிரிந்தபின், ஆண்டவர் ஆபிராமை நோக்கி, ``நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார். ஏனெனில் நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும் கொடுக்கப் போகிறேன். உன் வழிமரபினரைப் பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன். ஆகவே பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழிமரபினரையும் எண்ணலாம். நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனெனில் இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்'' என்றார்.

ஆகவே ஆபிராம் தம் கூடாரத்தைப் பிரித்துக் கொண்டு எபிரோனில் இருந்த மம்ரே என்ற கருவாலி மரத்தோப்பு அருகில் வந்து வாழ்ந்தார். அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 15: 2-3ய. 3bஉ-4யb. 5 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

2 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; 3ய தம் நாவினால் புறங்கூறார். பல்லவி

3bஉ தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4யb நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

பிறர் உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றை மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6,12-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்.

ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

மாசற்றவராய் நடப்போர் பேறுபெற்றோர்.

இன்றைக்கு திருப்பாடல் ஆசிரியர் 15ம் அத்தியாத்தில் அற்புதமாக தெரிவித்து உள்ளார்.

ஆபிராம் இத்தகைய நிலையில் வாழ்ந்து, இறையாசீர் பெற்றதாக முதல் வாசகத்தில் வாசிக்க கேட்கின்றோம்.

கடவுளின் இல்லத்தில் வாழ்வார்கள் மாசற்றவராய் வாழ்வோர் என்கிறார்.

இடுக்கமான வாயில் வழியே தான் நுழைய முடியும், இத்தகைய மாசற்ற வாழ்வு வாழ்வோர்.

வாழ்வின் நிலையும், வாழ்வின் சூழலும் இன்றைக்கு மாறிப் போனது.

மாசற்றவர்கள் அருகிக் கொண்டே போகிறார்கள்.

விசாலமான வாயில் வழியாக நுழையவே முற்படுகிறோம். இதுவே விவேகமான செயல் என தெரிவிக்கின்றது உலகம். மாசற்ற நிலையில் உலகில் வாழ்ந்திடவே முடியாது என்று, சொல்லி எப்படியாகிலும் சம்பாதிக்கலாம், வாழலாம், உலகில் இருக்கும் வரை அனுபவித்து கொண்டு போகலாம், என சொல்வோர் அதிகரிக்க அதிகரிக்க, தீவிரவாதமும், வன்முறையும் அதிகரிக்கத் தான் செய்கின்றது.

மாசற்ற வாழ்வு தியாகம் நிறைந்தது,  அடுத்தவரிடம் எதிர்பார்க்கும் மாசற்ற வாழ்வு நம்முிலே தொடங்கிட செய்வோம்.
சூன் 24

புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா

திருநாள் திருப்பலி

முதல் வாசகம்

 நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6

தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள் போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக் கொண்டார்.

அவர் என்னிடம், `நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். நானோ, `வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது' என்றேன்.

யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார். ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 139: 1-3. 13-14. 15 (பல்லவி: 14ய)

பல்லவி: வியத்தகு முறையில் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்.

1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. பல்லவி

13 ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! 14 அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். பல்லவி

15 என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர். பல்லவி



இரண்டாம் வாசகம்

 இயேசுவின் வருகைக்கு முன்பே யோவான் போதித்து வந்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 22-26

அந்நாள்களில் பவுல் கூறியது: கடவுள் சவுலை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து `ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்' என்று சான்று பகர்ந்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.

அவருடைய வருகைக்கு முன்பே யோவான், `மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்' என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார்.

யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில், `நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப் பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை' என்று கூறினார்.

சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 1: 76

காண்க அல்லேலூயா, அல்லேலூயா! குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 இக்குழந்தையின் பெயர் யோவான்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66, 80

எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.

எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, ``வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' என்றார்.

அவர்கள் அவரிடம், ``உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே'' என்று சொல்லி, ``குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?'' என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, ``இக்குழந்தையின் பெயர் யோவான்'' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர்.

அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.

கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, ``இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது. குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து மன வலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

குழந்ழைதகள் ஆண்டவருடைய கைவன்மையை பெற்றிருக்குமா? இந்த குழந்தை மட்டும் ஆண்டவருடைய கைவன்மையை பெற்றிருந்ததா?

எல்லா குழந்தைகளும் ஆண்டவருடைய குழந்தைகள் தான் என்றாலும் சில குழந்தைகள் ஆண்டவருடைய சிறப்பான கைவன்மையை பெற்றிருக்கிறது என்பதிலே மாற்றுக் கருத்து இல்லை.

இந்த குழந்தை சிறப்பு பெற்றது. மெசியாவை அறிவிக்க வந்ந இறுதி இறைவாக்கினர்.

அவரை சுட்டிக் காட்டும் பாக்கியம் பெற்றது.

சம காலத்தில் வாழும் பாக்கியம் பெற்றது.

இறையாட்சிக்காக இரத்தம் சிந்தி சாட்சியம் பகர வாய்ப்பு பெற்றது.

ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றதாலே இத்தகைய வாய்ப்பபுக்கள்.

பிறப்பிலே அவர் முன் கூறிக்கப்பட்டதாலே இத்தகைய சிறப்பு.

நாமும் பிறப்பதற்கு முன்பாகவே முன் கூறிக்கப்பட்டதாலேஈ பிறந்த பின்னர் அவரை அறியும் பாக்கியம் பெற்றோம்.

அவரையே உணவாக பெறும் பாக்கியம் பெற்றோம்.

நம்மோடு கூடவே வாழும் அவருக்கு சாட்சியாக இரத்தம் சிந்தாவிட்டாலும் பாவத்திற்கான போராட்டத்தில் தீவிரமாக உள்ளோமா? சுய ஆய்வு காலத்தின் கட்டாயம். எபி 12: 04
12ஆம் வாரம்

ஞாயிறு

மூன்றாம் ஆண்டு



 முதல் வாசகம்

 தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்று நோக்குவர்.

இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 12: 10-11

ஆண்டவர் கூறியது: நான் தாவீது குடும்பத்தார் மேலும், எருசலேமில் குடியிருப்போர் மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன்.

அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்று நோக்குவார்கள்; அவனை உற்றுநோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்து போன தம் தலைப்பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள். அந்நாளில் எருசலேமில் எழும்பும் ஓலம் மெகிதோவின் சமவெளியில் அதத்ரிம்மோனின் புலம்பலைப் போலப் பெரிதாயிருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 63: 1. 2-3. 4-5. 7-8 (பல்லவி: 1ய)

பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. பல்லவி

2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி

7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். 8 நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. பல்லவி



இரண்டாம் வாசகம்

திருமுழுக்குப் பெற்ற நீங்கள் கிறிஸ்துவை அணிந்துள்ளீர்கள்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 26-29

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள்.

இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.

நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல் களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

நீர் கடவுளின் மெசியா.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-24

அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று அவர் கேட்டார்.

அவர்கள் மறுமொழியாக, ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள்.

``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ``நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

மேலும் இயேசு, ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார்.

பின்பு அவர் அனைவரையும் நோக்கி, ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



2013 Jun 23 SUN: TWELFTH SUNDAY IN ORDINARY TIME

Zec 12: 10-11; 13: 1/ Ps 63: 2. 3-4. 5-6. 8-9 (2b)/ Gal 3: 26-29/ Lk 9: 18-24

இயேசுவின் உண்மை சீடனாக வாழ விரும்புபவா அவரைப் பற்றி ஆழமாக அறிந்து அவரது அன்பை அனுபவித்து உணர்ந்து தன்னலம் துறந்து தன் சிலுவையை நாள் தோறும் சுமக்க வேண்டும் என்று உணர்த்துகின்றார் பேதுரு. சுயநலம் மறப்போம். சிலுவையை சுமப்போம்.

உண்மை ஞானம் பெற வேண்டுமென்றால் சீடன் குருநாதனின் திருமேனியை காண வேண்டும். அவரின் திருநாமத்தை சொல்ல வேண்டும். அவரின் திருவார்த்தையை கேட்க வேண்டும். அவரின் தீருவுருவத்தை தியானிக்க வேண்டும். எல்லாரையும் மரியாவைப் போல் இயேசவின் சீடராக்குவோம்.



முன்னுரை:

பிரியமானவர்களே!

பொதுக்காலத்தின் 12ம் ஞாயிறுக்கு வந்துள்ள நாம், நம்மை அறிந்து கொள்ள முன் வருவதோடு, நம்மோடு இருப்பவர்களையும் சரியாக புரிந்து கொண்டால் மாத்திரமே நம்முடைய நட்பு உண்மையானதாக இருந்திட முடியும்.

நண்பனை சரியாக புரிந்து கொள்ளாத பட்சத்தில் நட்பினையும் நரிவர தொடர்ந்திட முடியாது.

கிறிஸ்து தன்னை யார் என்று மக்கள் சொல்கிறார்கள் என கேட்டு தெரிந்து கொள்கின்றார். அப்பொழுது பேதுரு நீர் மெசியா என்று சரியாக சொல்லி, தன்னுடைய சரியான புரிதலை வெளிப்படுத்தினார் என்பதனை அறிகின்றோம்.

நாமும் நம்மோடு இருப்பவர்களை சரியாக புரிந்து அறிந்து அவர்களோடு நல்ல நட்புறவு கொண்டவர்களாக வாழ்ந்திட அருள் கேட்டு பலியிலே பங்கேற்று செபிப்போம்.



மன்றாட்டு:

திருஅவையின் தலைவர்களை ஆசீர்வதியும். பொறுப்பிலெ சந்திக்கின்ற பாரங்களை, சிலுவைகளை மகிழ்வுடனே உம் அருளோடு ஏற்றுப் பயணிக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குடும்பங்களை வழிநடத்தும் பொறுப்பேற்ற அன்பர்கள், தங்களது குடும்ப பாரங்களை சுகமான சுமைகளாக கருதி, இணைந்து ஏற்று பயணிக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் இளையவர்களை ஆசீர்வதியும். தாங்கள் தங்களது செயல்களால் யாருக்கும் சிலுவையாக இருந்து விடாமல், குடும்பத்திலும், சமூகத்திலும் பாரத்தை குறைக்க பகிர்ந்து வாழும் நல்ல உள்ளம் அருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பலியிலே பங்கேற்கும் நாங்கள் எங்களை அறிந்து தெரிந்து புரிந்து ஏற்று அன்பு செய்த வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உறவினை விரும்பி தேடி, உறவுகள் எங்கள் உறவினிலே எத்தகைய வளர்ச்சி வாழ்வு காண்கிறார்கள் என்பதனை அறிந்து, சரியான நட்புடனே பயணிக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
11ஆம் வாரம்

சனி



முதல் ஆண்டு

முதல் வாசகம்

 நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-10

சகோதரர் சகோதரிகளே, பெருமை பாராட்டுதல் பயனற்றதே. ஆயினும் பெருமை பாராட்ட வேண்டி இருப்பதால் ஆண்டவர் அருளிய காட்சிகளையும் வெளிப்பாடுகளையும் குறித்துப் பேசப்போகிறேன்.

கிறிஸ்துவின் அடியான் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான். அவன் உடலோடு அங்குச் சென்றானா, உடலின்றி அங்குச் சென்றானா, யான் அறியேன். கடவுளே அதை அறிவார். ஆனால் அம்மனிதன் பேரின்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் சொல்கிறேன்; அவன் உடலோடு அங்குச் சென்றானா அல்லது உடலின்றி அங்குச் சென்றானா, யான் அறியேன். கடவுளே அதை அறிவார். அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும் சொல்லவும் முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான். இந்த ஆளைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன்.

என் வலுவின்மையே எனக்குப் பெருமை. அப்படி நான் பெருமை பாராட்ட விரும்பினாலும் அது அறிவீனமாய் இராது. நான் பேசுவது உண்மையாகவே இருக்கும். ஆயினும் என்னிடம் காண்பதையும் கேட்பதையும்விட உயர்வாக யாரும் என்னைக் கருதாதபடி நான் பெருமை பாராட்டாது விடுகிறேன்.

எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்தச் சாத்தான் அனுப்பிய தூதனைப்போல் இருக்கிறது. நான் இறுமாப்பு அடையாது இருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்.

ஆனால் அவர் என்னிடம், ``என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்'' என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும்.

ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 34: 7-8. 9-10. 11-12 (பல்லவி: 8ய)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி

9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. 10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. பல்லவி

11 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். 12 வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராய் இருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வர் ஆகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-34

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.

ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதும் இல்லை; அறுப்பதும் இல்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!

கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூற்பதும் இல்லை. ஆனால் சாலமோன்கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப்போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாய்ச் செய்ய மாட்டாரா?

ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றை எல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

ஆகையால் நாளைக்காகக் கவலைப் படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

பெருமைப் பாராட்டுதல் பயனற்றதே.

இதை உணர்ந்து கொள்பவர் யார்?

வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள் தான் இதனை அறிந்து கொள்ள முடியும்.

பெருமைப் பாராட்டுதல் இன்றைக்கு மற்றொரு வடிவம் எடுத்து இருப்பது வேதனையானதே.

தன்னிடம் பெருமைப் பாராட்ட ஒன்றுமே இல்லையென்றாலும் கூட, தான் அதற்குரிய காரியங்கள் எதனையும் சாதித்தது இல்லையென்று தெரிந்தாலும், இன்று வறட்டுத் தனப் போக்கோடு, மலட்டுத்தனமாக பேசிக் கொள்வதைப் பார்க்கும் போது, இறைவா இவர்களை குணமாக்கும் என அமைதியாக மன்றாடவே தோன்றுகின்றது.

பவுலடிகளாரைப் போல பெருமைப் பாராட்ட நினைப்போர் 01 கொரி 01: 31 ஆண்டவரிலே தான் பெருமைப் பாராட்ட முடியும். 01 கொரி 03: 21 மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது.

யோவா. 7:18 தாமாகப் பேசுபவர் தமக்கே பெருமை தேடிக்கொள்கிறார். தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் உண்மையுள்ளவர்: அவரிடத்தில் பொய்ம்மை இல்லை.
11ஆம் வாரம்

வெள்ளி



முதல் ஆண்டு

 முதல் வாசகம்

 எல்லாத் திருச்சபைகளைப் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 18,21b-30

சகோதரர் சகோதரிகளே, பலர் உலகு சார்ந்த முறையில் பெருமையடித்துக் கொள்வதால் நானும் அவ்வாறே செய்கிறேன். அவர்கள் எதில் பெருமை பாராட்டத் துணிகிறார்களோ அதில் நானும் பெருமை பாராட்டத் துணிந்து நிற்கிறேன். இப்போதும் ஓர் அறிவிலியைப் போன்றே பேசுகிறேன். அவர்கள் எபிரேயரா? நானும்தான்; அவர்கள் இஸ்ரயேலரா? நானும்தான்; அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினரா? நானும்தான். அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களா? நான் அவர்களை விடச் சிறந்த பணியாளனே.

இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன். நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்து முறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்று முறை தடியால் அடிபட்டேன்; ஒரு முறை கல்லெறி பட்டேன்; மூன்று முறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில் ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர் களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண் விழித்தேன்; பசி தாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன். இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது.

யாராவது வலுவற்றிருந்தால் நானும் அவரைப் போல் ஆவதில்லையா? யாராவது பாவத்தில் விழ நேர்ந்தால் என்உள்ளம் கொதிப்பதில்லையா? நான் பெருமை பாராட்ட வேண்டும் என்றால் என் வலுவின்மையைப் பற்றியேதான் நான் பெருமை பாராட்ட வேண்டும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 17b)

பல்லவி: ஆண்டவர் இடுக்கண்ணினின்று நீதிமான்களை விடுவிக்கின்றார்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

 மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.

ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாய் இருந்தால் இருள் எப்படியிருக்கும்!''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

தங்களது வலுவின்மையில் பெருமை கொண்டு, தங்களது செல்வம் தங்களை படைத்தவரிடம், அழைத்தவரிடமே உள்ளது என்று சொல்லி, வாழ்ந்தவர்கள் புனிதர்களானார்கள். வலுவின்மையை ஏற்று, தங்களது வல்லமை கடவுளிடமேயிருந்து பெற்றுக் கொள்ள, உலக சொத்துக்களை இழந்தவர்கள் பலருண்டு.

இன்றைக்கு விழாக்காணும் இருவர் ஒருவர் புனித அலோசியுஸ் கொன்சாகா, மற்றவர் பரதேசி பீட்டர்.  இவர்களில் முதலாமவர் பிரபு குடும்பத்தில் பிறந்தவர். இரண்டாமவர் பேராசிரியர்.

முதலாமவர் தன்னுடைய சகோதரனுக்கு வாரிசு உரிமையை கொடுத்து விட்டு, சேசு சபையில் சேர்ந்து, நோயாளிகளுக்காக உழைத்து, மரித்தவர். கிறிஸ்து இயேசுவில் தன்னுடைய வல்லமையை கண்டு, விண்ணகத்தில் நிலையான சொத்தை சேமித்தவர்.

இரண்டாமர் இயேசு சபை கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றி, தன்னுடைய பணி ஏழை எளியவர்களிடம் தன்னை அணுக விடாது என்று சொல்லி, பதவியை துறந்து திருவோடு ஏந்தி, மறைக்கல்வி கற்றுக் கொடுக்க ஊர் ஊராக அலைந்து திரிந்து பணியாற்றியவர். தன்னுடைய படிப்பு தன்னை நிலைவாழ்வுக்கு அழைத்து செல்லாது என்றும், அது வல்லமையல்ல என்பதனையும் உணர்ந்து, தன் வல்லமை கிறிஸ்துவிலே தான் என உணர்த்தியவர்.

கற்றுக் கொண்டு கரை சேர வழி தேடுவோம்.
11ஆம் வாரம்

வியாழன்



முதல் ஆண்டு

முதல் வாசகம்

 ஊதியம் எதிர்பார்க்காமல் நான் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தேன்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-11

சகோதரர் சகோதரிகளே, என் அறிவீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக்கொள்ள வேண்டும்; ஆம் சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள். உங்கள்மீது கடவுள் கொண்டுள்ள அதே அன்பார்வத்தை நானும் கொண்டுள்ளேன். கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்கும் இடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியாக நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் ஏவா பாம்பின் சூழ்ச்சியினால் ஏமாற்றப்பட்டதைப் போல நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டுக் கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும் தூய்மையையும் இழந்து விடுவீர்களோ என அஞ்சுகிறேன்.

உங்களிடம் யாராவது வந்து, நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப்பற்றி அறிவித்தால், அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர வேறு ஓர் ஆவியைப் பற்றிப் பேசினால், அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டுவந்தால் நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக்கொள்கிறீர்கள். இப்படிப்பட்ட `மாபெரும்' திருத்தூதரை விட நான் எதிலும் குறைந்தவன் அல்லேன் என்றே கருதுகிறேன். நான் நாவன்மையற்று இருக்கலாம்; ஆனால் அறிவு அற்றவன் அல்ல; இதை எப்போதும் எல்லா வகையிலும் உங்களுக்குத் தெளிவு படுத்தியே இருக்கிறோம். ஊதியம் எதுவும் எதிர்பார்க்காமல் நான் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தேன். நீங்கள் உயர்வு பெற நான் தாழ்வுற்றேன். இதுதான் நான் செய்த பாவமா? நான் உங்களிடையே பணிபுரிந்தபோது என் செலவுக்கு வேண்டியதை மற்றத் திருச்சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக அவர்களைக் கொள்ளையிட்டேன் என்றே சொல்லலாம்.

நான் உங்களோடு இருந்த போது எனக்குப் பற்றாக்குறை இல்லாமல் இல்லை. எனினும் நான் உங்களில் எவருக்கும் சுமையாய் இருந்ததில்லை. மாசிதோனியாவிலிருந்து வந்த அன்பர்கள் என் பற்றாக்குறையைப் போக்கினார்கள். நான் எதிலும் உங்களுக்குச் சுமையாய் இருந்ததில்லை; இனி இருக்கவும் மாட்டேன். கிறிஸ்துவின் உண்மையே என்னுள்ளும் இருப்பதால் நான் பெருமைப் படுவதை அக்காயா பகுதியிலுள்ள யாரும் தடுக்க முடியாது. ஏன் இப்படிச் சொல்கிறேன்? உங்களிடம் எனக்கு அன்பே இல்லை என்பதாலா? நான் உங்கள்மீது அன்பு கொண்டவன் என்பது கடவுளுக்குத் தெரியும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 111: 1-2. 3-4. 7-8 (பல்லவி: 7ய)

பல்லவி: ஆண்டவரின் செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை.

1 நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி

3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. 4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். பல்லவி

7 அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை; அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை. 8 என்றென்றும் எக்காலமும் அவை நிலை மாறாதவை; உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை. பல்லவி





நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

உரோ 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், ``அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். ``விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.

மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

என் நண்பரின் கவி வரிகள்

பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து

பொழுதிங்கு போகுது கழிந்து

உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்

ஊதியங்கள் தேவையில்லை நமக்கு

நற்செய்தி அறிவிக்க ஊதியங்கள் இன்றைக்கு இதனையே மையப்படுத்திய பணிகள் நடைபெறுவதைப் பார்க்கின்ற போது, நற்செய்தி ஏழைகளுக்கா, இல்லை அறிவிக்கின்றவர்களுக்காக . . .

பொய்மையை சுட்டெரித்து, வாய்மையை வாழ்ந்து அறிவிப்போம்.

ஊதியங்களை மையப்படுத்திய நற்செய்தி அறிவிப்பு உள்ளங்களை ஊடுறுவதில்லை.

ஊதியங்களை மையப்படுத்தி, நற்செய்தியவிக்க வந்தவர்கள், பிற ஊழியத்தில் தங்களை உட்படுத்திக் கொள்வது அழைத்தவருக்கு மகிமைச் சேர்க்கவா? தங்களது கஜனாவை பெருக்கிக் கொள்வதற்கா?

ஊதியங்கள் பெற்று, ஊருக்கு எதிர்சாட்சியாகிறவர்களை யார் தட்டிக் கேட்பது?

அழைப்புக்கேற்ற வாழ்வு காலத்தின் கட்டாயம்.
11ஆம் வாரம்

புதன்



முதல் ஆண்டு

முதல் வாசகம்

 முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-11

சகோதரர் சகோதரிகளே, குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார்.

``ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்'' என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச் செய்து அறச் செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார். நீங்கள் எல்லா வகையிலும் செல்வர்களாகி வள்ளன்மை மிகுந்தவர்களாய் விளங்குவீர்கள். இவ்வாறு எங்கள் பணி வழியாய்ப் பலர் கடவுளுக்கு நன்றி செலுத்துவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 3-4. 9 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி

3 சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும். 4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். பல்லவி

9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6,16-18

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.

நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக் கை செய்வது இடக் கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள், அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

கொடுப்பதில் முகமலர்ச்சியை காட்டுபவரை என்றுமே நிரம்ப ஆசீர்வதிப்பார் இறைவன்.

வலக்கை செய்வதை இடக்கைக் கூட அறிந்திடக் கூடாது என்பதுவே அவருடைய போதனை.

பெற்றுக் கொள்ள முற்பட்ட கத்தோலிக்கர்கள் இன்றைக்கு மனம் மகிழ்ந்து கொடுக்க பழகியிருப்பது அருமை.

அவர் வாக்கு மாறாத இறைவன் தான் சொன்னபடியே அளப்பறிய விதத்தில், செய்வார் என்பதில் இறைமக்களுக்கு நம்பிக்கை மிகுந்ததையே இது காட்டுகின்றது. இறைவனும் தம்மை நம்புவோரை நிறைவாக ஆசீர்வதித்து வருவதை பார்க்கின்றோம். இது மகிழ்வானவே.

கொடுப்பதை விளம்பரப்படுத்துவதை குறைத்து, கடவுளின் கைமாறை நிரம்ப தேடிக் கொள்வது நல்லது. விளம்பரப்பலகை, கல்வெட்டு, பெருமை தேடுவது போன்றவைகள் கடவுளின் கைம்மாறு கிடைக்கப் பெறச் செய்யாது என்பதனை புரிந்த கொண்டால் நலமே.
11ஆம் வாரம்

செவ்வாய்



முதல் ஆண்டு

முதல் வாசகம்

 கிறிஸ்து உங்களுக்காக ஏழையானார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1-9

சகோதரர் சகோதரிகளே, மாசிதோனியத் திருச்சபைகளுக்குக் கடவுள் கொடுத்த அருளைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம். அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களால் கடுமையாகச் சோதிக்கப் பட்டபோதும் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் வறுமையில் மூழ்கி இருந்தாலும் வள்ளன்மையோடு வாரி வழங்கினார்கள். அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தாங்களாகவே கொடுத்தார்கள். ஏன், அளவுக்கு மீறியே கொடுத்தார்கள். இதற்கு நானே சாட்சி.

இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியில் பங்கு பெறும் பேறு தங்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக அவர்கள் தங்களை முதன்மையாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள்; நாங்கள் கடவுளின் திருவுளப்படி செயல்படுவதால், எங்களுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள். எனவே இந்த அறப்பணியைத் தொடங்கிய தீத்துவே அப்பணியை முடிக்க வேண்டும் என நாங்கள் அவரை வேண்டிக்கொண்டோம்.

நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபடவேண்டும். நான் இதை உங்களுக்கு ஒரு கட்டளையாகச் சொல்லவில்லை. மாறாக, பிறருடைய ஆர்வத்தை எடுத்துக்காட்டி உங்கள் அன்பு உண்மையானதா எனச் சோதிக்கவே இவ்வாறு செய்கிறேன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 146: 1-2. 5-6. 7. 8-9ய (பல்லவி: 1ய)

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

1 என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு; 2 நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன். பல்லவி

5 யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர். 6 அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! பல்லவி

7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலைஅளிக்கின்றார். பல்லவி

8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9ய ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: `` `உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', `பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக' எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.

ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர் களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?

நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியில் பங்கு பெறும் பேறு தங்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டார்கள்.

அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார்.

அறப்பணிச் செய்ய தங்களை கிறிஸ்துவைப் போல ஏழையாக்கிக் கொண்டோர் பலருண்டு.

புனிதர்களில் சவேரியார். அந்தோணியார் என்றும் அறிவிக்கப்படாதவர்களில் இறையாடியார் பரதேசி பீட்டர் போன்றவர்கள் அறப்பணிக்காக தங்களை ஏழையாக்கிக் கொண்டார்கள்.

பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் புகழ் பெற்ற சவேரியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய பீட்டர், அதனை துறந்து அறப்பணியில் தன்னை உட்படுத்தி திருவோட்டை கையில் ஏந்தி பரதேசி பீட்டரானார்.

இன்றைக்கு அறப்பணிக்காக அர்ப்பணித்தவர்கள், ஏழ்மை வார்த்தைப்பாட்டினை ஏற்றவர்கள் தங்களை கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாங்கள் சேர்த்துள்ள சொத்துக்கள், தங்கள் பெயருக்கு பின்னால் சேர்க்கப்பட்டுள்ள அடைமொழிகள் அறப்பணிக்காக இல்லை அந்த பெயரில் தங்களது ஏழ்மை நிலையை மாற்றிக் கொள்ளவா?

காலத்தோடு தங்களை திருத்திக் கொள்ளாதவரை, நான் கீழ் இறக்குவேன் என்று கூறும் இறைவாக்கை அலட்சியப்படுத்திட வெண்டாம்.

அழைத்தவருக்காக நம்மை ஏழையாக்கி, அறப்பணிகளை செய்வோம்.

11ஆம் வாரம் திங்கள்

11ஆம் வாரம்

திங்கள்



முதல் ஆண்டு

 முதல் வாசகம்

 நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-10

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ``தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்'' எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

எவரும் குறைகூறா வண்ணம் எங்கள் திருப்பணியை ஆற்ற விரும்புகிறோம். எனவே நாங்கள் எவருக்கும் இடையூறாக இருப்பதில்லை. மாறாக அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்; வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம்.

நாங்கள் அடிக்கப்பட்டோம்; சிறையில் அடைக்கப்பட்டோம்; குழப்பங்களில் சிக்கினோம்; பாடுபட்டு உழைத்தோம்; கண்விழித்திருந்தோம்; பட்டினி கிடந்தோம்; தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக் கிறோம்; உண்மையையே பேசி வருகிறோம்; கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம்.

நேர்மையே எங்கள் படைக்கலம். அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள்.

அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர். செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை. துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம். எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3ய. 3b-4. (பல்லவி: 2ய)

பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ய இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3b உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி





நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 119: 105

அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-42

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: `` `கண்ணுக்குக் கண்', `பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.

மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.

உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

இடையூறாக இருப்பதைவிட, செயல்களால் நல்ல நடத்தையை காட்டிட விரும்புகின்றோம். அதன் வழியாக அவருடைய பணியாளர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றோம்.

இன்றைக்கு இடையூறாக இருப்பது வன்முறை செயல்களே. வன்முறையினால் எதனையும் வென்று விடலாம் என்கின்ற உணர்வே அதிகரித்து இருக்கின்றது. வன்முறை வன்முறைக்கு துணை போகிறதே ஓழிய, நல்ல சமூகம் காண உதவுவது இல்லை.

எத்தகைய செயல்களால் நாம் அவருடைய பணியாளர்கள் என்பதனை உலகுக்கு உணாத்திடனும் என்று நற்செய்தியில் அறிவுறுத்தியுள்ளார்.

மாற்றாக சிந்தித்து, நடத்தையால் உணர்த்துவோம், நாம் அவர்களது பணியாளர்கள் என்று.

12 August 2013

2013 திருவிழா









2013 திருவிழா











2013 திருவிழா









2013 திருவிழா






2013 திருவிழா







2013 திருவிழா





2013 திருவிழா





14 June 2013


 திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசுவில் அன்பானவர்களே ஆண்டின் பொதுக்காலம் 11 – ஆம் வாரத்தில் திருப்பலியில் பங்கேற்கஅணியமாயிருக்கும் உங்கள் எல்லாரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.
பாவியான பெண்ணை இயேசு மன்னித்துஅவருக்கு ஆதரவாகப் பேசும் பகுதியை இன்றைய நற்செய்தியில்வாசிக்கக் கேட்கிறோம்இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டனஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார்குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர் என்னும் இயேசுவின்நிறைவான சொற்கள் அன்புக்கும்பாவ மன்னிப்புக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகின்றனஅன்பு திரளானபாவங்களைப் போக்குகிறது என்னும் பேதுருவின் மொழிகள் இங்கு நினைவுகூரத்தக்கவைநமது பாவங்கள்அதிகமாக இருந்தால்நமது அன்புச் செயல்களை அதைவிட அதிகமாக்கிக் கொள்வதுதான் மன்னிப்புப்பெறுவதற்கான வழி.
குறைகளோகுற்றங்களோ இல்லாத மனிதர் நம்மில் எவருமே இலர்எல்லாருமே பாவிகள்தாம்எனவே,பாவங்களிலிருந்து விடுதலை பெறவும்மன்னிப்பு அடையவும் இயேசு சுட்டிக்காட்டும் வழி அன்புதான்.இறைவனைநம் அயலாரைநமக்குத் துன்பம் செய்வோரை நாம் அன்பு செய்ய முன் வந்தால்நமது பாவங்களைஇறைவன் நிச்சயமாக மன்னிப்பார்இந்த ஆறுதல் தரும் வார்த்தைகளுக்காக இயேசுவுக்கு நன்றி சொல்வோமா?இத்திருப்பலியில் பங்கேற்று இறையாசீர் பெறுவோம்

முதல் வாசகம்
முதல் வாசக முன்னுரை:

நம்பிக்கைக்குரியவர்களேஇன்றைய முதல் வாசகம்தாவீது அரசரின் மனமாற்றத்தை குறித்து எடுத்துரைக்கிறது.ஆண்டவரால் இஸ்ரயேலின் அரசராய் திருப்பொழிவு செய்யப்பட்ட தாவீதுகடவுளின் அன்பை மறந்து உலகப்பொருட்களில் இன்பம் காண முயற்சிக்கிறார்சிற்றின்ப ஆசைகளுக்கு அடிமையான தாவீதுஇத்தியராகியஉரியாவைக் கொன்றுஅவரது மனைவியை உரிமையாக்கி கொள்கிறார்இதை இறைவாக்கினர் நாத்தான்வழியாக ஆண்டவர் கண்டிப்பதைக் காண்கிறோம்தாவீதும் தன் பாவத்தை உணர்ந்தவராய், "நான் ஆண்டவருக்குஎதிராகப் பாவம் செய்துவிட்டேன்என அறிக்கையிட்டு மன்னிப்பு பெறுகிறார்நமது பாவ வாழ்வால் ஆண்டவரைவேதனைப்படுத்தியிருந்தால்தாவீதைப் போன்று மனம் வருந்தி மன்னிப்பு பெற வரம் வேண்டிஇந்த வாசகத்தைசெவியேற்போம்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 12: 7-10,13
அந்நாள்களில் நாத்தான் தாவீதிடம், "நீயே அம்மனிதன்இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறுகூறுகிறார். "நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்நான் உன்னைச் சவுலின்கையிலினின்று விடுவித்தேன். 8 உன் தலைவரிடம் வீட்டை உன்னிடம் ஒப்படைத்தேன்அவன் மனைவியரையும்உனக்கு மனைவியர் ஆக்கினேன்இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்இதுபோதாதென்றால் நான் மேலும் உனக்கு மிகுதியாய் கொடுத்திருப்பேன். 9 பின் ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப்புறக்கணித்து அவர்தம் பார்வையில் தீங்கு செய்தாய்இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இறையாக்கிஅவன்மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய்அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்! 10இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாதுஏனெனில் நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின்மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய்.13 அப்போது தாவீது நாத்தானிடம், "நான் ஆண்டவருக்குஎதிராக பாவம் செய்துவிட்டேன்என்று சொன்னார்நாத்தான் தாவீதிடம், "ஆண்டவரும் பாவத்தை நீக்கிவிட்டார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்
பல்லவிநீதிமான்களேஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்நேரிய உள்ளத்தோரேநீங்கள்அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள் 
திருப்பாடல்கள்: 32: 1-2. 5. 7. 11

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோஎவரது பாவம் மறைக்கப்பட்டதோஅவர் பேறு பெற்றவர்பல்லவி 

ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோஎவரது மனத்தில் வஞ்சம் இல்லையோஅவர்பேறுபெற்றவர் பல்லவி 

5 '
என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்என் தீச்செயலை நான் மறைத்ததில்லைஆண்டவரிடம் என்குற்றங்களை ஒப்புக்கொள்வேன்என்று சொன்னேன்நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.பல்லவி 

நீரே எனக்குப் புகலிடம்இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச்சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர்பல்லவி 

11 
நீதிமான்களேஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்நேரிய உள்ளத்தோரேநீங்கள் அனைவரும் மகிழ்ந்துபாடுங்கள் பல்லவி 


இரண்டாம் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல்நம்பிக்கையாலே நாம் இறைவனுக்கு ஏற்புடையவர்ஆகமுடியும் என எடுத்துரைக்கிறார்திருச்சட்டம் சார்ந்த செயல்கள் அல்லஇயேசு கிறிஸ்து மீது கொள்ளும்நம்பிக்கையே மீட்பு அளிக்கிறது என்பதை உணர அழைப்பு விடுக்கப்படுகிறதுகடவுள் மீதான நம்பிக்கை,கடவுளின் விருப்பத்துக்கு நம்மை அர்ப்பணித்து வாழத் தூண்டுகிறதுதன்னையே சிலுவையில் பலியாககையளித்த கிறிஸ்துவின் அருளால்பாவத்திற்கு எதிரான தூய வாழ்வு வாழ நாம் அழைக்கப்படுகிறோம்இயேசுகிறிஸ்து மீதான நம்பிக்கையால்கடவுளை அன்பு செய்து வாழ வரம் வேண்டிஇந்த வாசகத்தை செவியேற்போம்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 16,19-21

சகோதர சகோதரிகளே திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்லஇயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும்நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம்.ஆதலால்தான் நாமும் சட்டம் சார்ந்த செயல்களால் அல்லநம்பிக்கையால் இறைவனுக்கு எற்புடையவராகுமாறுகிறிஸ்து இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம்ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் எவருமேஇறைவனுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை. 19 திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன்.அதற்கு அச்சட்டமே காரணம்நான் கடவுளுக்காக வாழ்கிறேன்கிறிஸ்துவோடு சிலுவையில்அறையப்பட்டிருக்கிறேன். 20 எனவே இனி வாழ்பவன் நான் அல்லகிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன்இவரே என்மீதுஅன்புகூர்ந்தார்எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார். 21 நான் கடவுளின் அருள் பயனற்றுப்போக விட மாட்டேன்.ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக்கூடுமானால் கிறிஸ்துஇறந்தது வீண் என்றாகுமே!
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயாஅல்லேலூயாஇவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமதுகூந்தலால் துடைத்தார்.அல்லேலூயா 
நற்செய்தி வாசகம்
புனித லூக்கா எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 7;36--50 8;1-;3

அக்காலத்தில் பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார்அவரும் அந்தப்பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். 37 அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார்.இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்ததுஉடனே அவர்நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். 38 இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்துஅவர் அழுதுகொண்டே நின்றார்அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்துதம் கூந்தலால் துடைத்து,தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் +சினார். 39 அவரை அழைத்த பரிசேயர் இதைக்கண்டு, "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால்தம்மைத் தொடுகிற இவள் யார்எத்தகையவள் என்று அறிந்திருப்பார்;இவள் பாவியாயிற்றேஎன்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். 40 இயேசு அவரைப் பார்த்து, "சீமோனேநான்உமக்கு ஒன்று சொல்லவேண்டும்என்றார்அதற்கு அவர், "போதகரேசொல்லும்என்றார். 41 அப்பொழுது அவர், "கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர்கடன்பட்டிருந்தனர். 42 கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவேஇருவர் கடனையும் அவர் தள்ளுபடிசெய்துவிட்டார்இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?" என்று கேட்டார். 43 சீமோன்மறுமொழியாக, "அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்என்றார்இயேசுஅவரிடம், "நீர் சொன்னது சரியேஎன்றார். 44 பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பிசீமோனிடம், "இவரைப்பார்த்தீராநான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லைஇவரோதம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். 45 நீர் எனக்கு முத்தம்கொடுக்கவில்லைஇவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டேஇருக்கிறார். 46 நீர் எனது தலையில் எண்ணெய் +சவில்லைஇவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம்+சினார். 47 ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டனஏனெனில் இவர்மிகுதியாக அன்பு கூhந்தார்குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்என்றார். 48பின்பு அப்பெண்ணைப் பார்த்து, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டனஎன்றார். 49 "பாவங்களையும் மன்னிக்கும் இவர்யார்?" என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். 50 இயேசுஅப்பெண்ணை நோக்கி, "உமது நம்பிக்கை உம்மை மீட்டதுஅமைதியுடன் செல்கஎன்றார்.1 அதற்குப்பின் இயேசுநகர் நகராய்ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்பன்னிருவரும்அவருடன் இருந்தனர். 2 பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும்ஏழுபேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவியோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள்இவர்கள் தங்கள்உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்:

"
ஆண்டவரே உம்மை ஏத்திப்புகழ்வேன்ஏனெனில் நீர் என்னை கைதூக்கி விட்டீர்!
பதில் ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்
“ எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் நானும் அவர்களோடுஇணைந்திருப்பேன்” என்று மொழிந்த எம் அன்பு இறைவா,
உம் திருச்சபையை வழிநடத்தும்எம் திருத்தந்தை பிரான்சிஸ்ஆயர்கள்குருக்கள்கன்னியர் மற்றும்பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலேஉம் வார்த்தையிலே இணைந்திருந்து உம்திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்
அன்புத் தந்தையே இறைவா!
பெண்களைப் பெருமைப்படுத்திய இயேசுவேஉம்மைப் போற்றுகிறோம்உமது மாதிரியை நாங்களும் பின்பற்றி,பெண்களை மதிக்கவும்நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஆண்களும்பெண்களும் இணைந்து பணியாற்றும்நல்மனதை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
பாவங்களை மன்னிப்பதில் வள்ளலான இயேசுவே,
இன்றைய நற்செய்திக்காக உமக்கு நன்றிமிகுதியாக அன்பு செய்பவரின் மிகுதியான பாவங்கள் மன்னிக்கப்படும்என்று மொழிந்த உம்மைப் போற்றுகிறோம்எங்களுடைய பாவங்களின் அழுத்தத்திலிருந்து விடுதலை பெறஅன்பை ஆயதமாக அணிந்துகொள்ள அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
ஞானத்தின் ஊற்றே இறைவா!
எம் பங்கு மக்கள் அனைவரும் இறைஅன்பிலுமபிறர் அன்பிலும் நாளும் வளரவும்குடும்பங்களில் சமாதானம்நிலவிடவும்பிள்ளைகள் நன்கு படித்திடவும் தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்
என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
பிரிவினைகளோடும்கசப்புணர்வுகளோடும்பழிவாங்கும் மனநிலையோடும்வேதனைகளோடும்,விரக்தியோடும்கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் அன்புதூய்மையானதாகவும்நிலையானதாகவும் இருக்கவும்அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்பபிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திடவேண்டுமென்று தயவாய் உம்மைமன்றாடுகின்றோம்
கருணையின் தேவா!
எம் பங்கிலுள்ள இளைஞர்கள்இளம் பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளை வீணடித்து விடாமல்எதிர்காலவாழ்வை திட்டமிட்டு செயல்படுத்திட தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
இன்றைய சிந்தனை
''இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் (பாவியான பெண்அழுதுகொண்டே நின்றார்அவருடையகாலகளைத் தம் கண்ணீரால் நனைத்துதம் கூந்தலால் துடைத்துதொடர்;ந்து முத்தமிட்டு அக்காலடிகளில்நறுமணத் தைலம் பூசினார்'' (லூக்கா 7:38)
சீமோன் என்னும் பரிசேயரின் வீட்டில் இயேசு விருந்து உண்பதில் ஈடுபட்டிருக்கின்றார்அப்போது அங்கேஅழையாத ஒரு ''விருந்தினர்'' வருகிறார்அது ஒரு பெண்அவருடைய பெயர் நமக்குத் தெரியாதுஅப்பெண்எந்தவொரு வார்த்தையும் பேசவுமில்லைஆனால் அவர் செய்த செயல்களை லூக்கா துல்லியமாகப்பதிவுசெய்துள்ளார்அக்கால வழக்கப்படி விருந்தினர் ஒரு மேசை முன் அமர்ந்துதலையணையில் சாய்ந்தநிலையில் இடது முட்டுக்கையை ஊன்றிக் கொண்டு வலது கையால் உணவை எடுத்து அருந்துவர்அப்போதுவிருந்தினரின் கால்கள் மடக்கப்பட்ட நிலையில் அவர்களின் காலடிகள் பின்புறம் தெரியும்இதனால்தான் அந்தப்''பாவி''யான பெண் (லூக் 7:37) ''இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் அழுதுகொண்டே நின்றார்'' (லூக் 7:38). தன்வாழ்க்கை பாழாகிப் போனதே என்னும் மனக் கவலையால் அவர் அழுதாராபுதியதொரு வாழ்வைத்தொடங்கவேண்டும் எனத் தீர்மானித்துதன் தவறுகளை நினைத்து மனம் வருந்தி அழுதாராஅவர் தேடி வந்ததுஇயேசுவைஉணவருந்திக் கொண்டிருந்த இயேசுவின் காலடிகளின் அருகில் நின்று அழுததால் கண்ணீர்த்துளிகள் அப்பாதங்களை நனைக்கின்றனஅப்பெண் தன் கூந்தலை அவிழ்க்கிறார்நனைந்த இயேசுவின்காலடிகளைத் தன் கூந்தலால் துடைக்கின்றார்இயேசுவின் பாதங்களை முத்தமிடுகிறார்தன் கையிலிருந்தபடிகச் சிமிழிலிருந்து நறுமணத் தைலத்தை இயேசுவின் காலடிகளில் கரிசனையோடு பூசுகின்றார் (காண்கலூக்7:38).
லூக்கா விவரிக்கின்ற இக்காட்சி உண்மையிலேயே வியப்புக்குரியதுதான்விருந்து நடக்கும்போது அங்கேநுழைவதற்கு அப்பெண்ணுக்கு அனுமதி இருக்கவில்லைஅதுவும் சட்ட நுணுக்கங்களைத் துல்லியமாகக்கடைப்பிடித்த பரிசேயர் ஒருவர் ''பாவி''யான பெண்ணை வீட்டில் ஏற்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.மேலும், ''இறைவாக்கினர்'' என மக்களால் கருதப்பட்ட இயேசுவிடம் சென்று அவருடைய காலடிகளை அப்பெண்தொட்டார் என்பது இன்னும் ஒரு பெரிய எல்லை மீறல்ஆனால் இயேசுவுக்கு அப்பெண்ணின் இதயத்தில்புதைந்துகிடந்த சிந்தனைகள் தெரியும்அப்பெண்ணின் உள்ளத்தில் எழுந்த அன்பும் நம்பிக்கையும் இயேசுவுக்குவெளிச்சம்எனவே இயேசு பாவியான அப்பெண்ணைப் போற்றிப் பேசுகின்றார்இயேசுவை வீட்டுக்குஅழைத்துவிட்டு அவருக்கு உரிய மரியாதை காட்டாத சீமோன் எதையெல்லாம் செய்யாது விட்டாரோஅதையெல்லாம் அப்பெண் இயேசுவுக்குச் செய்கிறார்அதாவதுவீட்டுக்குள் நுழைவதற்கு முன் காலடிகளைக்கழுவுவது வழக்கம்அப்பெண் இயேசுவின் காலடிகளைத் தன் கண்ணீரால் கழுவித் தன் முடியால் துடைக்கிறார்.விருந்தினரை முத்தமிட்டு வரவேற்க வேண்டும்ஆனால் அப்பெண்ணோ இயேசுவின் காலடிகளையேமுத்தமிடுகிறார்விருந்தினரின் தலையில் எண்ணெய் பூச வேண்டும்ஆனால் அப்பெண்ணோ தன்னையேதாழ்த்திக்கொண்டுஇயேசுவின் காலடிகளைத் தொட்டு அவற்றில் நறுமணத் தைலம் பூசுகிறார்இவ்வாறு அவர்தன் அன்பை வெளிப்படுத்துகிறார்இயேசு அப்பெண்ணின் அன்பையும் நம்பிக்கையையும் பாராட்டியதோடுஅவருடைய பாவங்களையும் மன்னித்துஅவருக்கு மீட்பைபும் அமைதியையும் வாக்களிக்கின்றார் (லூக் 7:50).அன்பு இருக்கும் இடத்தில் கடவுளின் அருள் தோன்றும் என்பதற்குப் ''பாவியான பெண்'' சிறந்த எடுத்துக்காட்டு.
மன்றாட்டு:
இறைவாஅன்பு நிறைந்த உள்ளத்தோடு நாங்கள் உம்மை அணுகி வர எங்களுக்கு அருள்தாரும்