திருப்பலி முன்னுரை
இன்று ஆண்டவர் இயேசு தம் திருவுடலையும், இரத்தத்தையும் நமக்குஉணவாகத் தரும் அவரது பேரன்பைப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
இயேசுவின் திருவுடல் திரு இரத்தப்பெருவிழாவில் மகிழ்வோடு ஞாயிறுவழிபாட்டில் பங்கேற்க அணியமாகியிருக்கும் அன்புமக்கள் அனைவருக்கும்திருவிழாவின் அன்பு வாழ்த்தை உரியதாக்குகிறேன்.
நற்கருணை என்பது உறவின் சாட்சியமாகவும், உரையாடலின்சாத்தியமாகவும், உள்ளுணர்வுகளின் சங்கமமாகவும், உடன்படிக்கையின்சகாப்தமாகவும் திகழ்வதுதான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும்இரத்தமும் ஆகும். நாம் உழைக்க வில்லையேல் நமக்கு உணவில்லை.இதைத்தான் உழைக்க மனமில்லாதவன் எவரும் உண்ணலாகாது என்றுபுனித பவுல் அடிகளார் கூறுகிறார். இந்த உழைப்பு இறைவனின்உள்ளத்திலும் இதயத்திலும், மனித உள்ளமும், மனித இதயமும்குடிக்கொள்வதற்காக தயாரிக்கும் உழைப்பு. வாழ்வின் உணவாகநற்கருணை வடிவில் வந்த இயேசு நமது ஆன்ம தாகத்தையும், பசியையும்போக்குகிறார்; நம்மைக் குணப்படுத்துகிறார். நம் வாழ்வைப் புதுப்பிக்கிறார்.விசுவாச வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற ஆற்றல் தருகிறார்.நற்கருணை விருந்தில் நம்மீது இயேசு வைத்திருக்கும் அன்பின் ஆழஅகலத்தைப் புரிந்துக்கொள்ள வழிவகுக்கிறார். நம்மோடு நெருக்கமானஉறவுகொள்ள நற்கருணையில் வாழும் இயேசுவை ஆவலோடுவரவேற்போம்.
எனவே, இயேசுவின் உடலுக்காக, இரத்தத்துக்காக இன்று நன்றிசெலுத்துவோம். நமத உடலையும் இறைவனின் திருவுளத்தைநிறைவேற்றக் கையளிப்போம். நமது இரத்தத்தைச் சிந்தாவிட்டாலும், பிறர்வாழ தியாகங்கள் செய்ய முன்வருவோம். புதிய உடன்படிக்கையின் இந்தநினைவுத் திருப்பலியில் பங்கேற்கும் நாம்; தகுந்த விதமாகஇத்திருப்பலியில் பங்கேற்று இறையாசீர் பெறுவோம்

முதல் வாசகம்
"விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள்ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! தொடக்கநூலில் இருந்து வாசகம் 14;18-20
18 அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சைஇரசமும் கொண்டு வந்தார். அவர் "உன்னத கடவுளின்" அர்ச்சகராகஇருந்தார். 19 அவர் ஆபிராமை வாழ்த்தி, "விண்ணுலகையும்மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசிவழங்குவாராக! 20 உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள்போற்றி! போற்றி!" என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும்அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே
திருப்பாடல்கள் 110;1-4
திருப்பாடல்கள் 110;1-4
1 ஆண்டவர் என் தலைவரிடம் 'நான் உம் பகைவரை உமக்குப்கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார்.பல்லவி
2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்துஒங்கச்செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி
3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம்மக்கள் தம்மை உவந்தளிப்பர்;
2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்துஒங்கச்செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி
3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம்மக்கள் தம்மை உவந்தளிப்பர்;
வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மைவந்தடைவர். பல்லவி
4 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர்ஆணையிட்டுச் சொன்னார்
4 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர்ஆணையிட்டுச் சொன்னார்
அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார். பல்லவி
ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையேஉங்களிடம் ஒப்படைக்கிறேன்
புனித பவுல் 1கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம்11;23-26
புனித பவுல் 1கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம்11;23-26
23 ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையேஉங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசுகாட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, 24 கடவுளுக்குநன்றி செலுத்தி, அதைப்பிட்டு, "இது உங்களுக்கான என் உடல். என்நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார். 25 அப்படியே உணவுஅருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, "இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால்நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார். 26 ஆதலால்நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம்ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா!, "நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள்" என்றார்.அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
நற்செய்தி வாசகம்
புனித லூக்காஸ் எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 9;11-17
11 திரளான மக்கள் யேசுவை பின் தொடர்ந்தனர். அவர்களை அவர்வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாகவேண்டியவர்களைக் குணப்படுத்தினார். 12 பொழுது சாயத் தொடங்கவேபன்னிருவரும் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே;சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவுவாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்" என்றனர். 13 இயேசுஅவர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.அவர்கள், ";எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன.நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்"என்றார்கள். 14 ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்குஇருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, "இவர்களை ஐம்பதுஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்" என்றார். 15 அவர்சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள். 16அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தைஅண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப்பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். 17 அனைவரும் வயிறாரஉண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறையஎடுத்தனர்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப்புகழ்வாயாக!
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
“ எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடுஇணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்றுமொழிந்த எம் அன்பு இறைவா,
உம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள்,குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம்நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து உம்திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று தயவாய்உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே இறைவா!
உம்மைப் போற்றுகிறோம். உமது திருவுடல், திருஇரத்தம் என்னும்கொடைகளுக்காக நன்றி கூறுகிறோம். எங்களை ஆசிர்வதித்தருளும்,உம்முடைய பிள்ளைகளாகிய நாமனைவரும் உமது திருமகனாம்இயேசுவின் திருவுடலாகிய நற்கருணைக்குரிய மாண்பையும் மதிப்பையும்உணர்ந்து வாழவும்; இறைவார்த்தையாலும், நற்கருணையாலும் ஊட்டம்பெற்று உமது சாட்சிகளாக வாழ அருள் தர வேண்டுமென்று தயவாய் உம்மைமன்றாடுகின்றோம்.
“எனது சதை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையானபானம்” என்ற எம் தலைவனே,
எம் பங்கில் வசிக்கின்ற மக்கள் அனைவரும் உண்மையாகவேபாவங்களையும் உடல் உள்ள நோய்களையும் மன வேதனைகளையும் துன்பதுயரங்கள் அனைத்தையும் போக்குகின்றது என்பதனை உணர்ந்தவர்களாகஉம் நற்கருணை பிரசன்னத்தில் விசுவாசம் கொண்டவர்களாக சான்று பகரதயவாய் உம்மை மன்றாடுகிறோம்.
“வாழும் தந்தை என்னை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கிறேன்அதுபோல் என்னை உன்போரும் என்னால் வாழ்வர்” என்றுமொழிந்தவரே!
எம்பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர் இளையோர் பல்வேறுகுழுப்பொறுப்பாளர்கள்; அனைவரும் உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்;அனுப்பப்பட்டவர்கள் என்பதனை உணர்ந்தவர்களாக படிப்பிலும்நல்லொழுக்கத்திலும் விசுவாசத்திலும் உதவிபுரிபவர்களாகவும் தங்கள்பணிகளிலே பொறுப்பு மிக்கவர்களாகவும் வாழ்ந்தருள வேண்டுமென்றுதயவாய் உம்மை மன்றாடுகிறோம்.
என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும்மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும்வாழும் கணவன் மனைவி அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் அன்புதூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள்பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்குவேண்டிய அருளை அளித்துக் காத்திடவேண்டுமென்று தயவாய் உம்மைமன்றாடுகின்றோம்.
என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
நாங்கள் உமது வாக்கையும்; நியமங்களையும் நீதி நெறிகளையும் நேரியமுறையில் நாம் கடைப்பிடித்து, அன்பிய சமூக வாழ்வு வாழ்வதற்குவேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மைமன்றாடுகின்றோம்.
இன்றைய சிந்தனை
உடலும், இரத்தமும்...
இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்குமுன்னால் தம்மையே காணிக்கையாக்கிய நிகழ்ச்சியைத் திருச்சபைதொடர்ந்து கொண்டாடி வந்துள்ளது. இதுவே நற்கருணைக் கொண்டாட்டம்என அழைக்கப்படுகிறது. இயேசு இறுதி முறையாகத் தம் சீடர்களோடுஅமர்ந்து உணவருந்துகையில் அப்பத்தை எடுத்து அவர்களுக்குக் கொடுத்து, ''இது என் உடல்'' என்றும், இரசத்தை அவர்களுக்குக் கொடுத்து, ''இது என்இரத்தம்'' என்றும் கூறி அதை அவர்கள் அருந்தும்படிக் கொடுத்தார். இதுஇயேசு தம்மையே பலியாக்கியதைக் குறிக்கின்றது. நமக்காக வாழ்ந்தஇயேசு நமக்காக இறந்தது மட்டுமன்றி, நம்மோடு என்றும் தங்கியிருப்பதன்அடையாளமாக நற்கருணைக் கொண்டாட்டத்தை நமக்குத் தந்துள்ளார்.இயேசுவின் உடலும் இரத்தமும் உண்மையாகவே நமக்குஉணவாக்கப்படுகிறது என்றால் அது நமக்கு அவர் தருகின்ற ஆன்மிகஉணவாக உள்ளது. நம்மில் கடவுளின் உயிர் குடிகொண்டிருப்பதற்குநற்கருணை அடையாளமும் காரணமுமாய் இருக்கிறது.
நற்கருணை என்பது ஒரு இயேசு நமக்காக எந்நாளும் இருக்கின்றார்என்பதை நாம் மீண்டும் மீண்டும் நினைவுகூர்கின்ற நிகழ்ச்சியாகும். அதேநேரத்தில் நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது நாம் கடவுளின்குடும்பமாக இணைகின்றோம். ஏன், நாமே கிறிஸ்துவின் உடலாகமாறுகின்றோம். ஆகவே, நாம் உட்கொள்கின்ற அப்பமும் பருகுகின்றஇரசமும் இயேசுவோடு நம்மை இணைத்து, கடவுளின் வாழ்வில் நம் வாழ்வுஇணைந்து ஒன்றிப்பதற்கும், அதன் வழியாக நாம் ஒருவர் ஒருவரோடுசகோதர அன்பில் இணைவதற்கும் வழியாகிறது. இயேசுவை நம்பிவாழ்கின்ற மக்கள் இயேசுவில் வாழ்வு கண்டு மகிழ்வார்கள். அந்த வாழ்வுஅவர்களுடைய சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் கடவுளிடம்ஈர்க்கின்றது. நற்கருணையில் இயேசு அருளடையாள முறையில்பிரசன்னமாகிறார் என்பது நம் நம்பிக்கை. அதாவது இயேசுவை நாம் நம்இதயத்தில் ஏற்று, அவரோடு நம் வாழ்க்கையை ஒன்றித்து இணைகின்றபேறு நமக்கு அளிக்கப்படுகிறது. நமக்காகத் தம்மையே கையளித்தஇயேசுவைப் போல நாமும் ஒருவர் ஒருவருடைய வாழ்வு நலமடையவேண்டும் என்பதற்காக நம்மையே பலியாக்குவதற்கு நற்கருணை ஒருமுன் அடையாளமாகவும் அந்த பலி வாழ்வுக்கு நம்மைத் தூண்டுகின்றசக்தியாகவும் உள்ளது. அன்பின் வெளிப்பாடு நற்கருணை. அதுவே நம்மைஅன்புக்குச் சாட்சிகளாக மாற்றிட வேண்டும்.

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகனை எங்களுக்கு உணவாக அளித்ததற்கு நன்றி!
No comments:
Post a Comment