புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 February 2020

தூய கொன்ராட் (பிப்ரவரி 19)

இன்றைய புனிதர் : 
(19-02-2020) 

தூய கொன்ராட் (பிப்ரவரி 19)

“நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்” (மத் 3: 8)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் விழாக் கொண்டாடும் கொன்ராட் இத்தாலியில் இருந்த ஓர் உயர்குடியில் பிறந்தவர். இவர் ஒரு பெண்ணை மணமுடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

வேட்டையாடுவதில் அதிக நாட்டம் கொண்ட கொன்ராட் தன்னுடைய சகாக்களோடு ஒரு சமயம் வேட்டையாடச் சென்றார். அப்போது அவர் குறிவைத்த விலங்கானது தப்பித்து புதருக்குள் ஓடி ஒழிந்தது. இதனால் அவர் அந்த விலங்கை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று புதருக்குத் தீ வைத்தார். அந்தத் தீயானது பரவி பெருவாரியான இடத்தை அழித்து நாசமாக்கியது. இதற்கிடையில் அந்த வழியாக வந்த ஓர் ஏழைக் குடியானவன்தான் இதற்கு காரணம் என்று சொல்லி அரசாங்கம் அவருக்கு மரண தண்டனை விதித்துக் கொன்றது.

இச்செய்தி கேள்விப்பட்ட கொன்ராட் மிகவும் மனம் வருந்தினார். உடனே அவர் அரசாங்கத்திடம் சென்று, “நான்தான் எல்லாவற்றிற்கும் காரணம், தன்னை எப்படியும் தண்டித்துக் கொள்ளலாம்” என்றார். அதற்கு அரசாங்கம் அவரிடமிருந்து பெரும் இழப்பீட்டுத் தொகையைக் கோரியது. உடனே அவர் தன்னுடைய நிலம், சொத்து பத்துகள் அனைத்தையும் விற்று இழப்பீட்டைக் கட்டினார். எல்லாவற்றையும் இழப்பீடாக் கட்டியபிறகு அவர் பரம ஏழையானார். அடுத்து என்ன செய்வது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது, தானும் தன்னுடைய மனைவியும் துறவறம் பூனுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவருக்குத் தோன்றியது. உடனே அவர் தன்னுடைய மனைவியை புனித கிளாரம்மாள் சபைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தன்னை பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் இணைத்துக்கொண்டு, ஒரு துறவியைப் போன்று வாழத் தொடங்கினார்.

கொன்ராட், பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்த பிறகு தன்னுடைய தவற்றுக்காக வருந்தாத நாளே இல்லை. தன்னுடைய வாழ்வின் அடுத்த முப்பது ஆண்டுகளில் அவர் நோட்டாவிற்குச் சென்று, அங்கிருந்த திருச்சிலுவையின் முன்பு முழந்தாள் படியிட்டு வேண்டிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் வேண்டுதலால் நிறைய அற்புதங்கள் நடைபெறுவதை அறிந்து நிறைய மக்கள் அவரிடத்தில் சென்றார்கள். அவர் அவர்களுக்காக இறைவனிடத்தில் வேண்டி ஆசிர்வாதத்தைப் பெற்றுத் தந்தார். அவர் மூப்படைந்ததும், அப்படியே இறையடி சேர்ந்தார்.


No comments:

Post a Comment