இன்றைய புனிதர்
2020-04-18
புனித.ஹெர்லூக்கா பெர்ன்ரீட் (Herluka of Bernried)
துறவி
பிறப்பு
1060
ஸ்டுட்கார்ட்(Stuttgart), ஜெர்மனி
இறப்பு
1127
பெர்ன்ரீட்(Bernried)
ஹெர்லூக்கா இளமையாக இருக்கும்போது, தன் ஊரில் வில்லியம் என்ற துறவி ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார். அப்போது துறவி வில்லியம் அவர்களின் பணிவாழ்வினால் தூண்டப்பட்டு, எப்போதும் அவருடன் சென்று மக்களை சந்தித்தார். அப்போது கண்பார்வை இழந்த ஒருவருக்கு ஹெர்லூக்கா வழிகாட்டினார். அவரின் மேல் அதிக அன்பு வைத்து, தன் ஜெபத்தினால் கண்ணிழந்தவருக்கு உதவி செய்தார். பின்னர் 1086-ல் ஜெர்மனியிலுள்ள பவேரியா (Baveria) மறைமாவட்டத்திலிருந்த ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியானார்.
துறவியான பிறகு ஆக்ஸ்பூர்க் (Augsburg) ஆயராக இருந்த விக்கிட்ரீப் (Wikterp) அவர்களுக்கு எல்லா விதங்களிலும் அவரின் பணிவாழ்விற்கு தேவையான ஏராளமான உதவிகளை செய்தார். அப்போது தனது செபத்தாலும், தியாக வாழ்வினாலும், கிறிஸ்துவ பக்தியை பரப்ப பவேரியாவில் மிகவும் பாடுபட்டார். அப்போது மிக கொடூரமான துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். இதனால் ஹெர்லூக்கா அங்கிருந்து தப்பி ஓடி ஜெர்மனியிலுள்ள ஸ்டன்பெர்கர் (Starnberger) ஆற்றின் அருகிலுள்ள அகஸ்டினா துறவற மடத்தில் தங்கி இருந்தார். 1122 ஆம் ஆண்டு வரை பெர்ன்ரீட் என்ற ஊரில் இருந்த, துறவற இடத்தில் வாழ்ந்து, துறவியாகவே இறந்தார்.
செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! கிறிஸ்துவை இவ்வுலகில் பரப்ப உமது அரசை இம்மண்ணில் கொண்டுவர, புனித ஹெர்லூக்கா பெர்ன்ரீட் அனுபவித்த துன்பங்களை நினைத்து, நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு துறவியையும் நீர் காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
தூனன் நகர் துறவி இடெஸ்பால்ட் Idesbald von Dünen
பிறப்பு: 1090 பெல்ஜியம்
இறப்பு: 1167 தூனன், பெல்ஜியம்
பாதுகாவல்: கப்பல், காய்ச்சல் மற்றும் மூட்டு நோயிலிருந்து
மறைப்பணியாளர் உர்ஸ்மார் Ursmar
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு, பிரான்சு
இறப்பு: 18 ஏப்ரல் 713, லோபெஸ் Lobbes, பெல்ஜியம்
No comments:
Post a Comment