புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

11 April 2020

புனித. மக்தலேனா கனோசா (Magdalena Conassa), April 10

இன்றைய புனிதர்
2020-04-10
புனித. மக்தலேனா கனோசா (Magdalena Conassa),
சபை நிறுவுனர்
பிறப்பு
02 மார்ச் 1774
வெரோனா, இத்தாலி
இறப்பு
10 ஏப்ரல் 1835
வெரோனா, இத்தாலி
முத்திபேறுப்பட்டம்: 1941 திருத்தந்தை 12 ஆம் பயஸ்
புனிதர் பட்டம்: 2 அக்டோபர் 1988 திருத்தந்தை 2 ஆம் ஜான் பால்

புனித மக்தலேனா கனோசா 1774 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் நாள் இத்தாலி நாட்டிலுள்ள வெரோனாவில் பிறந்தார். மார்க்கிராப்பின் ஒக்டோவியூஸ், தெரேசா ஸ்லூவா இவரின் பெற்றோர். மக்தலேனா ஐந்து வயதாக இருக்கும்போது அவரின் தந்தை விபத்தில் இறந்துவிட்டார். இதனால் தன் தாய் மீண்டும் ஓர் மறுமணம் செய்துகொண்டார். புதிய தந்தையால் மக்தலேனா பல துன்பங்களை அனுபவித்தார். தாழ்ச்சியிலும், பக்தியிலும் சிறந்து விளங்கிய மக்தலேனா குழந்தையாக இருந்த போதே துறவியாக வேண்டுமேன்று ஆசைப்பட்டார். மக்தலேனா தன் ஊரிலிருந்த கார்மேல் மடத்திற்கு சென்று அவ்வப்போது ஜெபித்து வந்தார். சிறுவயதில் பெற்றோரின் கொடுமை தாங்க முடியாமல் கார்மேல் மடத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தார். அங்கு மக்தலேனா கார்மேல் மட கன்னியர்களால் வளர்க்கப்பட்டார். தம் பள்ளிப்படிப்பை முடித்தபின், தம் பதினைந்தாம் வயதில் கார்மேல் மடத்தில் துறவற பயிற்சியில் சேர்ந்தார். எட்டு மாதங்கள் கழித்து, தன் சொந்த ஊரிலிருந்து, ற்றோவிசோ(Treviso) என்ற ஊரிலிருந்த கார்மேல் மடத்திற்கு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அங்கிருந்து சில மாதங்களிலிலேயே விரைவில் வெரொனா திரும்பினார். அப்போது அரசர் நெப்போலியன் வடக்கு இத்தாலியை ஆக்கிரமித்தான். இதனால் மக்தலேனா தன் சொந்த வீட்டு நிர்வாகத்தை கவனிக்க வேண்டியதாக இருந்தது.

நெப்போலியனின் ஆக்கிரமிப்பால் தன் அரண்மனையிலிருந்த பல குழந்தைகள் காயப்பட்டு, அனாதைகளாக விடப்பட்டனர். இதனால் மக்தலேனா தன் அரண்மனையிலே, ஓர் இல்லத்தில் குழந்தைகளை தங்க வைத்து, பராமரித்து அவர்களுக்கு கல்வியை வழங்கினார். 1808 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டி, உதவிக்காக ஜெனோவா மாவட்டத்திலிருந்து ஓர் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பயனாக 1808 ஆம் ஆண்டு அன்பின் மகள்கள்(Daughters of Love) என்ற சபையை நிறுவினார். பிறகு 1810 மற்றும் 1812 ஆம் ஆண்டுகளில் வெனிஸ் நகரிலிருந்த தெருகுழந்தைகளுக்கு, வெனிஸில் 2 சபையையும், 1816 ஆம் ஆண்டு மிலானிலுள்ள பெர்காமோவிலும்(Bergamo) சபைகளை நிறுவினார். இச்சபைகளை தொடர்ந்து பராமரிக்க அப்போது ஆஸ்திரிய நாட்டில் அரசராக இருந்த முதலாம் பிரான்ஸ் அவர்களால் ஆதரவு கொடுக்கப்பட்டது. அரசர் தொடர்ந்து எல்லா விதங்களிலும் உதவிகளை வழங்கினார். 1828 ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ அவர்களால், இச்சபை திருத்தந்தையின் அதிகாரத்திற்குட்பட்ட சபையாக அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு இச்சபை இத்தாலி, இந்தியா, இந்தோனிசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா என பல நாடுகளில் பரவியது.

மக்தலேனா 1835 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் வெரோனாவில் இறந்தார். 1941 ஆம் ஆண்டு திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்களால் முத்திபேறுப்பட்டம் கொடுக்கப்பட்டது. திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் அவர்களால் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் புனிதராக அறிவிக்கப்பட்டார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! புனித மக்தலேனாவைப் போல, நாங்களும் ஏழை, எளியவர்களின் மேல் அக்கறை கொண்டு வாழ உமதருள் தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

அட்மோண்ட் நகர் துறவி எங்கல்பெர்ட் Engelbert von Admont
பிறப்பு: 1250, ஸ்டையர்மார்க் Steiermark, ஆஸ்திரியா

No comments:

Post a Comment