புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

31 May 2020

தூய ஆவியார் பெருவிழா

† இது எப்படி? †

† தூய ஆவியார் பெருவிழா †
(மே 31, 2020)

† திருத்தூதர் பணிகள் 2:1-11 †
† 1 கொரிந்தியர் 12:3-7, 12-13 †
† யோவான் 20:19-23 †
வெளியில் வர வகையறியாத சீடர்களை வெளியில் கொண்டு வந்து நிறுத்தியதும், அவர்களின் நாவுகளின் கட்டுக்களை அவிழ்த்து அவர்களைப் பேச வைத்ததும் தூய ஆவியாரே.

அவரின் திருநாளை, பெந்தெகோஸ்தே பெருநாளை இன்று நாம் கொண்டாடுகின்றோம்.

சீடர்கள் வெளியில் வந்ததையும், அவர்கள் பேசுவதையும் தத்தம் மொழிகளில் கேட்கின்ற அனைவரும், 'இது எப்படி?' எனக் கேட்கின்றனர், வியக்கின்றனர்.

தூய ஆவியாரைப் பற்றி சிந்திக்கும்போதெல்லாம் எனக்கு மூன்று விவிலியப் பகுதிகள் நினைவிற்கு வருவதுண்டு:

ஒன்று, திப 19:2. பவுல் தன்னுடைய தூதுரைப் பயணத்தில் எபேசு வருகின்றார். அங்கிருந்த நம்பிக்கையாளர்களிடம், 'நீங்கள் நம்பிக்கை கொண்டபோது, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?' எனக் கேட்கின்றார். அங்கிருந்தவர்கள், 'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!' எனப் பதில் தருகிறார்கள்.
இன்று, தூய ஆவியைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்று நம்மையே கேட்டால், அல்லது நம் வாழ்வை சற்றே கூர்ந்து கவனித்தால், தூய ஆவி என்னும் ஒன்று நம்மில் இல்லாததுபோல நாம் இருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. உறுதிப்பூசுதலின் போது கிறிஸ்தவர்களாகிய நம் அனைவர்மேலும், குருத்துவ அருள்பொழிவின் போது நம் அருள்பணியாளர்கள்மேலும் இறங்கி வந்த ஆவியார் என்ன ஆனார்?

இரண்டு, திபா 51:11. பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் தாவீது பாடியதாகச் சொல்லப்படுகின்ற திருப்பாடல் 51இல், தாவீது ஆண்டவரிடம், 'உம் முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்! உம் தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்!' என மன்றாடுகின்றார். தாவீது ஏன் இப்படி மன்றாட வேண்டும்? ஏனெனில், சவுல் கீழ்ப்படியாமையால் பாவம் செய்தபோது, 'ஆண்டவரின் ஆவி சவுலைவிட்டு நீங்கியது' (காண். 1 சாமு 16:14) அவருக்குத் தெரியும். ஆண்டவரின் ஆவி நீங்கியதால் சவுல் பொறாமையாலும், தீய எண்ணங்களாலும், வன்மத்தாலும், பிளவுண்ட மனத்தாலும் அலைக்கழிக்கப்படுகிறார்.

இன்று, ஆண்டவரின் ஆவி நம்மிடம் இருக்கிறதா? அல்லது நீங்கிவிட்டதா? ஒருவேளை நம்மிடமிருந்து அவர் நீங்கிவிட, சிம்சோன் போல நாம் அதை அறியாமல் இருக்கிறோமோ? (காண். நீத 16:20)
மூன்று, திபா 23:5. சில நாள்களுக்கு முன் இத்திருப்பாடல் பற்றி வாசித்துக்கொண்டிருந்தபோது, இத்திருப்பாடலில் நம் கத்தோலிக்க திருஅவையில் உள்ள ஏழு அருளடையாளங்களும் இருப்பதைக் காண முடிந்தது. அந்த வகையில், ஆவியாரைப் பற்றிய ஒரு வாக்கியமாக நான் கருதுவது: 'என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர். எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.' இதன் சூழல் என்னவென்றால், எதிரிகளின்முன் விருந்து. இந்த 'விருந்தை' நாம் நற்கருணை என எடுத்துக்கொள்ளலாம். நம் எதிரிகள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம் பசியும், வறுமையும், வீடின்மையும், ஆடையின்மையும், அல்லது சில நேரங்களில் நம் அழிவை. இப்படி எதிர்பார்க்கும் எதிரியின் முன் ஆண்டவர் நமக்கு விருந்தை ஏற்பாடு செய்கிறார் என்றால், அந்த எதிரியின் எதிர்பார்ப்புக்களை எல்லாம் தவிடுபொடியாக்குகின்றார் என்றே பொருள். கடவுள் அத்தோடு நிறுத்தவில்லை. நம் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றார். 'தலையில் நறுமணத் தைலம் பூசுதல்' என்பது திருப்பொழிவின் அடையாளம். அந்த நிகழ்வில் ஆண்டவர் தன் ஆவியை திருப்பொழிவு செய்யப்படுபவருக்கு அருள்கிறார். இதன் விளைவு, 'பாத்திரம் நிரம்பி வழிகின்றது.' அதாவது, 'குறையொன்றும் இல்லை' என்ற நிலை உருவாகிறது.

இன்று, நம்மிடம் குறைவு மனம் இருந்தால் ஆண்டவரின் ஆவி நம்மிடம் இல்லை என்பதை நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.

இந்த மூன்று இறைவார்த்தைப் பகுதிகளின் பின்புலத்தில், இன்றைய வாசகங்களைப் பார்க்கும்போது, தூய ஆவியாரின் வருகை, முன்பிருந்த நிலையை மாற்றி, 'இது எப்படி!' என்று காண்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது.

இன்றைய முதல் வாசகம் (காண். திப 2:1-11) பெந்தெகோஸ்தே நிகழ்வு பற்றிச் சொல்கிறது. நிகழ்வில் இரண்டு முக்கியமான வார்த்தைகள் இருக்கின்றன. ஒன்று, காற்று. இரண்டு, நாக்கு. இவ்விரண்டு வார்த்தைகளுமே இரட்டைப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று, காற்று. இந்த நிகழ்வில் பெருங்காற்று வீசுகிறது. அதே வேளையில், ஆவியார் என்னும் காற்று சீடர்களுக்குள் நுழைகிறது. இரண்டு, நாக்கு. பிளவுண்ட நெருப்பு நாக்குகள் இறங்கி வருகின்றன. சீடர்கள் வௌ;வேறு நாவுகளில் (மொழிகளில்) பேசுகின்றனர். ஆக, முன்பில்லாத ஒரு நிலை இப்போது வருகிறது. அடைத்து வைக்கப்பட்ட கதவுகள் காற்றினால் திறக்கப்படுகின்றன. கட்டப்பட்ட நாவுகள் பேச ஆரம்பிக்கின்றன.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:3-7,12-13), புனித பவுல், கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதுகின்ற திருமடலில், ஆவியாரையும் அவர் அருளும் வரங்களையும் பற்றிக் குறிப்பிடுகின்றார். நம்பிக்கையாளர்கள் தாங்கள் நம்பிக்கை நிலைக்குள் வந்தவுடன் ஆவியாரின் அருள்பொழிவையும், வரங்களையும் பெறுகின்றனர். ஆக, அவர்கள் தங்களுடைய பழைய வாழ்க்கையை, பிரிவினை வாழ்க்கையை விட்டுவிட வேண்டும்.

நற்செய்தி வாசகம் (காண். யோவா 20:19-23) நம்மில் சில ஐயங்களை எழுப்புகின்றது.

ஒன்று, இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாளன்று நடக்கிறது. அதாவது, 'வாரத்தின் முதல் நாள். மாலை வேளை.' ஆனால், வாரத்தின் முதல் நாள், மாலை வேளையில், லூக்காவின் பதிவின்படி (காண். லூக் 24), இயேசு எம்மாவு நகரில் இருக்கிறார். இயேசு எங்கேதான் இருந்தார்? யோவான் சொல்வது போல எருசலேமிலா? அல்லது லூக்கா சொல்வது போல எம்மாவு நகரிலா? அல்லது இரு இடங்களிலுமா?

இரண்டு, இந்த நிகழ்வில் தூய ஆவியார் இயேசுவின் உயிர்ப்பு நாளில் சீடர்களுக்கு வழங்கப்படுகிறார். ஆனால், லூக்காவின் பதிவின்படி பெந்தெகோஸ்தே நாளில்தான் ஆவியார் இறங்கி வருகின்றார்.

மூன்று, இந்த நிகழ்வில் தோமா இல்லை. அப்படி என்றால், தோமாவின் மேல் தூய ஆவி அருளப்படவில்லையா? அல்லது மன்னிப்பு வழங்கும், நிறுத்தும் அதிகாரம் தோமாவுக்கு வழங்கப்படவில்லையா?

நான்கு, இந்த நிகழ்வில் இயேசு தன் சீடர்களின்மேல் ஆவியை ஊதினார் என்றால், அவர்கள் மீண்டும் எட்டு நாள்களுக்குப் பின்பும் யூதர்களுக்கு அஞ்சி கதவுகளைப் பூட்டிக்கொண்டிருந்தது ஏன்? இயேசு ஊதிய ஆவி அவர்களுக்கு ஊட்டமும் ஊக்கமும் தரவில்லையா?

இந்த ஐயங்கள் ஒரு பக்கம் எழ, மற்றொரு பக்கம், இயேசு இங்கே பாவத்தைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், மற்ற நற்செய்தியாளர்களின் பதிவுகளில் பாவம் பற்றிய குறிப்பு இல்லை, மாறாக, பணி பற்றிய குறிப்பு இருக்கின்றது: 'எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா.' யோவான் நற்செய்தியின் பின்புலத்தை இங்கே புரிந்துகொள்வோம். யோவான் நற்செய்தியில், 'பாவம்' என்பது 'நம்பிக்கையின்மை.' ஆக, பாவம் நீக்குதல் என்பது நம்பிக்கையின்மை நீக்குதல் என எடுத்துக்கொள்ளலாம். இங்கே, சீடர்கள் தாங்களே நம்பிக்கையின்மையில்தான் இருக்கிறார்கள். ஆக, படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் முதல் மனிதன் மேல் தன் ஆவியை ஊதியதுபோல, இன்று இயேசு தன் சீடர்கள்மேல் ஆவியை ஊதுகின்றார். அவர்கள் இனி இன்றுமுதல் தங்கள் இயல்பு விடுத்து இயேசுவின் இயல்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், சீடர்களின் பயம் மறைந்து, துணிவு பிறக்கிறது.

இரண்டாம் வாசகத்தில், பிரிவினை மறைந்து, ஒருமைப்பாடு பிறக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், நம்பிக்கையின்மை மறைந்து, நம்பிக்கை பிறக்கிறது.

முந்தைய நிலை இப்போது இல்லை.

'இது எப்படி?' - தூய ஆவியாரால்!

இன்று நான் என் வாழ்வைப் பார்த்து, 'இது எப்படி?' என்று என்னால் கேட்க முடியுமா? அல்லது 'ஐயோ! மறுபடியும் இப்படியா?' என்று புலம்பும், பரிதவிக்கும் நிலையில் நான் இருக்கின்றேனா?

இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 104), பாடலாசிரியர், 'ஆண்டவரே! உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்!' எனப் பாடுகின்றார்.

என் முகம் ஆண்டவரின் ஆவியாரால் புதுப்பிக்கப்படுகிறதா?

சீடர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களிடம் இருந்ததுபோல, என்னுள் இருக்கும் பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, பொறாமை, வெட்கம், குற்றவுணர்வு, பலிகடா மனநிலை, சோர்வு, பின்வாங்குதல், இறுமாப்பு, பிரிவினை எண்ணம் ஆகியவை மறைகின்றனவா?

என் வாழ்க்கை இறைவனை நோக்கித் திரும்பியுள்ளதா?

என்னால் எல்லாரையும் மன்னிக்கவும் அன்பு செய்யவும் முடிகிறதா?

என் வாழ்வின் பொறுப்பாளரும், கண்காணிப்பாளரும், தலைவரும் நான் என்ற எண்ணம் என்னில் வருகிறதா?

என் அருள்பொழிவு நிலையை நான் அன்றாடம் உணர்கிறேனா?

என் வாழ்வின் கொடைகளுக்காகக் கடவுளுக்கு நன்றிகூறுகிறேனா?

கண்ணியத்தோடு என் கடப்பாடு இருக்கிறதா?

இப்படியாக,

முன்பிருந்த நிலை என்னில் மாறினால், என்னைச் சுற்றியிருக்கும் நிலையும் மாறும்.

இந்த நேரத்தில் நான், 'இது எப்படி?' என்று எருசலேம் நகரத்தார் போலக் கேட்க முடியும்.

இப்படிக் கேட்டலில்தான் நான் எந்த வியூகத்தையும் உடைத்து உள்ளே செல்லவும், வெளியே வரவும் முடியும்.

தூய ஆவியார் பெருவிழா வாழ்த்துக்களும் செபங்களும்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)

மரியா எலிசபெத்தை சந்தித்தல் (மே 31)

மரியா எலிசபெத்தை சந்தித்தால் : (31-05-2020) 


மரியா எலிசபெத்தை சந்தித்தல் (மே 31)
நிகழ்வு

தாவீது இஸ்ரயேலின் அரசனாக உயர்ந்த பிறகு, பெலிஸ்தியர்கள் கைப்பற்றிச் சென்ற ஆண்டவரின் பேழையை தன்னுடைய படைவீரர்களோடு சென்று மீட்டுக்கொண்டு வந்தான். அவன் ஆண்டவரின் பேழையை மீட்டுகொண்டு தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பி வரும்போது அதற்கு முன்பாக அவன் இசைக் கருவிகளை மீட்டிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும் வந்தான். ஆண்டவரின் பேழை நாக்கோனின் இடைத்திற்கு வந்தபோது உசா என்பவன் ஆண்டவரின் பேழையைத் தாங்கிப் பிடித்தான். அப்போது ஆண்டவரின் சினம் அவனுக்கு எதிராக எழுந்தது. ஏனென்றால் அவன் ஆண்டவரின் பேழையை தகுதியில்லாமல் தாங்கிப் பிடித்தான். இதனால் அவன் ஆண்டவரின் பேழையருகே மடிந்து இறந்தான்.

ஆண்டவரின் பேழையைத் தொட்ட உசா இப்படி இறந்துபோனதை அறிந்த தாவீது பெரிதும் வருந்தினார். எனவே அவர் ஆண்டவரின் பேழையை கித்தியனாகிய ஓபேது ஏதோமின் இல்லத்தில் விட்டுவிட்டு வந்தார். அவர் ஒரு லேவியர். இறைப்பற்றுக்கொண்ட மனிதர். ஆண்டவரின் பேழை ஓபேது ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதம் தங்கி இருந்ததால் ஆண்டவர் அவரை நிறைவாக ஆசிர்வதித்தார். அதன்பொருட்டு ஓபேது ஏதோம் பெரிதும் மகிழ்ந்தார்.
ஆண்டவரின் பேழை கித்தியனாகிய ஓபேது ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதங்கள் இருந்ததனால் ஆண்டவரால் அவர் ஆசிர்வதிக்கப்பட்டார். அதைப் போன்றுதான் ஆண்டவரைத் தன்னுடைய மடி தாங்கிய அன்னை மரியாள் எலிசபெத்தின் இல்லத்தில் தங்கியிருந்ததால் எலிசபெத்து ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டார்.

வரலாற்றுப் பின்னணி

மரியாள் எலிசபெத்தை சந்தித்த இந்த விழா பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பொனவெந்தூர் என்பவரால் தொடங்கப்பட்டது. ஆனால் இவ்விழா இவ்வளவு சிறப்பாக வளர்வதற்கு முக்கியக்காரணமாக இருந்தவர் பராக் (Prague) என்ற நகரில் ஆயராக இருந்த ஜான் ஜென்ஸ்டீன் என்பவர்தான். இவர்தான் மரியா எலிசபெத்தை சந்தித்ததன் முக்கியத்துவத்தை விவிலியப் பின்னணியோடு மறையுரை ஆற்றி மக்களுக்கு விளங்கச் செய்தார். மேலும் இவருடைய காலத்தில் திருச்சபையில் இரண்டு திருத்தந்தையர்கள் இருந்தார்கள். ஒருவர் (ஐந்தாம் அர்பன்) உரோமை நகரைத் தலைமைபீடமாகக்கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார். இன்னொருவர் (ஏழாம் கிளமென்ட்) அவிஞ்ஞோனை தலைமைபீடமாகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார். ஜான் ஜென்ஸ்டீன் இவ்விழாக் கொண்டாடுவதன் வழியாக இரண்டு திருத்தந்தையர்களுக்கும் இடையே சுமூகமான உறவை ஏற்படுத்த நினைத்தார். இதற்கு இரண்டு திருத்தந்தையர்களும் ஒத்து வந்தார்கள். இறுதியில் திருச்சபையில் ஏற்பட்ட இப்படிப்பட்ட குழப்பம் தீர்ந்தபோது அதன்பிறகு திருத்தந்தையாக வந்த திருத்தந்தை ஒன்பதாம் போனிபஸ் என்பவர் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். 1969 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஆறாம் பவுல் இவ்விழாவை மே மாதம் 31 ஆம் தேதி கொண்டாடப் பணித்தார். அப்படி வந்ததுதான் இவ்விழா.

ஆண்டவரின் தூதர் மரியாவுக்கு மக்கள வார்த்தை சொன்ன அதே நாளில், மரியாளிடம் அவர் எலிசபெத்து தன்னுடைய முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியையும் எடுத்துச்சொல்கிறார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட மரியா எலிசபெத்தின் வீட்டிற்கு விரைந்து செல்கிறார் (லூக் 1: 39). அங்கே அவரோடு தங்கியிருந்து அவருக்கு பல விதங்களில் உதவிசெய்கிறார். மரியா இருந்த ஊரான நாசரேத்திற்கும் எலிசபெத்தின் ஊரான ஹெப்ரோனுக்கும் இடையே 76 கிலோமீட்டர். இருந்தாலும், தான் ஒரு கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் பேறுகால வேதனையில் இருக்கும் எலிசபெத்துக்கு உதவச் செல்கிறார்.
இந்த நிகழ்வில் பழைய ஏற்பாட்டின் நிறைவாக திருமுழுக்கு யோவானும், புதிய ஏற்பாட்டின் காரணகர்த்தாவாகிய ஆண்டவர் இயேசுவும் கருவிலேயே சந்தித்துக்கொள்கிறார்கள். ஆகையில், மரியா எலிசபெத்து சந்திக்கின்ற அதே வேளையில் திருமுழுக்கு யோவானும் ஆண்டவர் இயேசுவும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிகழ்வு ஒரு சாதாரண நிகழ்வாக முடிந்துவிடாமல் மகிழ்ச்சியையும், வாழ்த்தையும், அருளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு நிகழ்வாக மாறுவது இதன் தனிச்சிறப்பாக இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மரியா எலிசபெத்தை சந்தித்த விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. உதவும் நல்ல மனம்

பேறுகால வேதனையில் இருக்கும் எலிசபெத்துக்கு மரியா உதவவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. மேலும் அவள் உதவும் நிலையிலும் இல்லை. ஏனென்றால் அவள் கர்ப்பிணியாக இருக்கிருக்கிறாள். அப்படி இருந்தாலும்கூட மரியா எங்கோ இருக்கும் எலிசபெத்துக்கு உதவச் செல்கிறார். இது அவளிடம் இருக்கும் உதவும் நல்ல பண்பைக் காட்டுகின்றது. கானாவூர் திருமணத்திலும் மரியாள் கேளாமலே உதவிசெய்தாள் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும். மரியாவை நம்முடைய அன்னையாகக் கொண்டிருக்கும் நாம், அவரைப் போன்று தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவும் நல்ல பண்பை நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

† இன்றைய திருவிழா †
(மே 31)

✠ அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா ✠
(Visitation of the Blessed Virgin Mary)

திருவிழா நாள்: மே 31

மரியாள், எலிசபெத்தை (Elizabeth) சந்தித்தல் அல்லது மாதா எலிசபெத்தம்மாளை மினவுதல் என்பது லூக்கா நற்செய்தி 1:39–56ல் விவரிக்கப்படும் ஒரு நிகழ்வாகும். இயேசு பிறப்பின் முன்னறிவிப்பின்போது, தனது உறவினராகிய எலிசபெத்து கருவுற்றிருப்பதை கபிரியேல் தூதர் மூலம் மரியாள் அறிந்தார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட எலிசபெத்து, தம் முதிர்ந்த வயதில் ஒரு மகவைக் கருத்தரித்திருக்கிறார் எனவும் இது அவருக்கு ஆறாம் மாதம் எனவும் கபிரியேல் மரியாளுக்கு அறிவித்திருந்தார்.

இதனால் மரியாள் புறப்பட்டு யூதேய (Judah) மலைநாட்டில், 100 மைல் தொலைவில் உள்ள எலிசபெத்தின் ஊருக்கு விரைந்து சென்றார். மரியாள் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என மரியாவை வாழ்த்தினார் என விவிலியம் விவரிக்கின்றது.

எலிசபெத்தின் வாழ்த்துதலைக் கேட்ட மரியாள் கடவுளை போற்றி ஒரு பாடல் பாடினார். அப்பாடல் மரியாளின் பாடல் என அழைக்கப்படுகின்றது.

இந்நிகழ்வு மேற்கு கிறிஸ்தவத்தில், குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையில் மே 31 அன்றும், கிழக்கு கிறிஸ்தவத்தில் 30 மார்ச் அன்றும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வு நடந்த இடத்தில் இப்போது சந்தித்தல் ஆலயம் உள்ளது.

கத்தோலிக்க திருச்சபையில், மரியாள் எலிசபெத்தை சந்தித்த நிகழ்வு, செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் இரண்டாம் மறைபொருள் ஆகும்.

இவ்விழாவில் நான்கு நிகழ்ச்சிகளைக் கொண்டாடுகிறோம்:

1. கபிரியேல் அதிதூதர் கிறிஸ்துவின் மனித அவதாரத்தை அறிவித்த பின் கன்னி மரியாள் தன் உறவினரான எலிசபெத்தம்மாளைச் சந்திக்க சென்றது.
2. அவரது உதரத்திலிருந்த ஸ்நாபக அருளப்பர் (John the Baptist) கன்னி மரியாளின் வாழ்த்து மொழிகளைக் கேட்டதும் ஜென்மப் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.
3. பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட எலிசபெத்தம்மாள், "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே" என கன்னி மரியாளைப் பாராட்டியது.
4. "என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது" என்னும் உயரிய பாடலை மரியாள் இசைத்தது.

எலிசபெத்தம்மாள் எருசலேமிலிருந்து மேல் திசையில் ஆறு மைல் தொலைவில் மலை நாட்டில் வசித்து வந்தார். அவருக்கு உதவி செய்யும்படி கன்னி மரியாள் சென்றார். தன்னைவிட தாழ்ந்த நிலையில் ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போகிறார். அவரை கூப்பிடாமலே தானாகக் செல்கிறார். ஒன்று இரண்டு நாட்களல்ல, மூன்று மாதங்களாக அங்கு தங்கி எல்லா வேலைகளையும் செய்கிறார்.

எலிசபெத்தம்மாள் அவரை வாழ்த்தியதும், தன்னைப்பற்றி பெருமை கொள்ளாமல் கடவுளை வாழ்த்துகிறார் மரியாள். ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தம்மாளோடு தங்கியிருந்தபின் வீடு திரும்பினார்.

இன்றைய புனிதர்

2020-05-31

புனித கன்னிமரி எலிசபெத்தை சந்தித்தல் (The visitation of the blessed virgin Mary)


பிறப்பு
--

இறப்பு
--


இத்திருநாள், தொடக்கத்தில் புனித பொனவெந்தூரின் தூண்டுதலால் பிரான்சிஸ்கன் சபையில் 1263 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் திருச்சபை முழுவதும் பரவியது. கன்னிமரியிடம் தேவதூதர் மங்களவார்த்தை சொன்னபிறகு, சில நாட்களுக்குள் யூதேயா நாட்டில் இருந்த தம் உறவினரான எலிசபெத்திடம் மரியா சென்றார். எலிசபெத்தம்மாளை சந்தித்த நேரத்தில்தான், கன்னிமரி "என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது" என்ற தமது ஒப்பற்ற புகழ்ப்பாடலைப் பாடி பூரிப்படைந்தார். அதன்பின்னர் திருமுழுக்கு யோவானின் பிறப்பு வரையிலும், 3 வாரங்கள் தங்கி எலிசபெத்தம்மாளுக்கு உதவி செய்து வந்தார். அன்னை மரியாள் அன்று பாடிய பாடல் ஓர் நன்றியின் பாடல். இறைவன் தன்னைத் தேவனின் தாயாக உயர்த்தியதற்கு நன்றி செலுத்துகிறார் மனுக்குலத்தை மீட்க இறைவன் வழிவகுத்ததையும், நன்றி மனப்பான்மையுடன் பாடுகின்றார்.

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசபெத், மரியாவை பார்த்துக் கேட்டார். "என் ஆண்டவரின் தாய்" என்று அவர் மரியாவை அழைப்பதிலிருந்தே, மரியாவுக்குரிய அஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும் மரியாவின் ஆன்மீகத்திற்கு அடித்தளமும் இடப்படுகிறது. இறைவன் இத்தகைய அருள் அடையாளத்தைஸ் செய்துள்ளார் என்று முதலில் இறைவனுக்குரிய புகழ்ச்சியை எலிசபெத் செலுத்துகின்றார். அதன்பிறகு மரியன்னையைப் பாராட்டுகின்றார். "ஆண்டவர் உமக்கு சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்று கூறுவதன் வழியாக, மரியாவின் ஆன்மீகம் அடித்தளமாக அமைவது, அவரது ஆழமான விசுவாசம் என்பதை எலிசபெத் சுட்டிக்காட்டுகிறார். மரியன்னையின் புகழ்மாலையில் "வாக்குறுதியின் பெட்டகமே" என்று மரியாவை திருச்சபை அழைக்கின்றது, வாழ்த்துகின்றது.

"வாக்குறுதியின் பெட்டகம்" யூதர்களிடம் இருந்த நாள் வரை, யூதர்கள் இறைப்பிரசன்னத்தையும் யாவேவின் வழி நடத்துதலையும் ஆழமாக உணர்ந்திருந்தனர். இந்த ஒளியில்தான், மரியன்னை உலக முடிவுவரை, இறை இயேசுவின் பிரசன்னத்தை மக்களிடையே கொண்டுவந்தார். மேலும் மன்னன் தாவீது மகிழ்ச்சி பொங்க, யூத மக்கள் கண்டுகளிக்கும் விதமாக பேழையின் முன் ஆடி மகிழ்ந்தார். அதேபோன்றுதான் எலிசபெத்தின் வயிற்றினுள் குழந்தையாக உருவாகிக்கொண்டிருந்த திருமுழுக்கு யோவானும் அக்களிப்பால் துள்ளினார். இறுதியாக திருப்பேழை 12 யூத கோத்திரத்தாரையும், யெருசலேம் நகரில் தாவீதின் அரியணை முன் ஒன்றாகக் கூட்டி சேர்த்தது. அதேபோன்று எல்லோருக்கும் முதல்வராக, நற்செய்தி மறைபரப்பாளராக, எலிசபெத்திடம் தமக்கு தேவதூதர் வழியாக கிடைத்த நற்செய்தியை அறிவிக்க சென்றதன் வழியாக, உலக முடிவு வரை, வரவிருக்கும் மறைபரப்புப் பணியாளர்களுக்கு ஓர் முன்னோடியாக மரியா அமைந்துவிட்டார் என்பதை அறியப்படுகின்றது.

மரியன்னை இறைவனில் மகிழ்ச்சி கொள்ள எல்லா உரிமையும் பெற்றிருந்தார். மனுக்குல மீட்பரை இவ்வுலகிற்கு கொண்டு வரும் பேறுபெற்றிருந்தார். கடவுளின் திட்டத்தை அறிந்தார். தனது ஆன்மீக ஆற்றல் அனைத்தையும், இறைவனின் தொண்டுக்காகவும், அவரது புகழ்ச்சிக்காகவும் தன்னை முழுவதும் அர்ப்பணித்தார்.


செபம்:

எங்கள் தாயும் தந்தையுமான அன்பான இறைவா! இதோ உமது அடிமை என்று கூறி, தன்னை முழுவதும் உம்மிடம் அர்ப்பணித்தார். அன்னை மரியாள் நாங்களும் அன்னையின் பக்தர்களாக வாழ்ந்து, அன்னையைப்போல பிறருக்கு உதவி செய்து, நாங்கள் என்றும் உம் திட்டத்திற்கு ஆம் என்று கூறி, உமது அடிமைகளாக வாழ வரம் தாரும்.



இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்


நிக்கோசியா நகர் துறவி, திருக்காட்சியாளர் பெலிக்ஸ் Felix von Nicosia OFM cap

பிறப்பு:5 நவம்பர் 1715 நிக்கோசியா Nicosia, இத்தாலி
இறப்பு:31 நவம்பர் 1787, நிக்கோசியா, இத்தாலி
முத்திபேறுபட்டம்:12 பிப்ரவரி 1888


துறவி ஹில்ரூட் Hiltrud

பிறப்பு:900, நொயன் ஹெர்சே Neuenhersee, ஜெர்மனி
இறப்பு:950, நொயன்ஹெர்சே


பாசாவ் நகர் ஆயர் பில்லேக்ரினுஸ் Pilegrinus von Passau

பிறப்பு:920 ஆஸ்திரியா
இறப்பு:991 பாசாவ், ஜெர்மனி


கொலோன் நகர் பேராயர் சீகேவின் Siegewin

பிறப்பு:11 ஆம் நூற்றாண்டு
இறப்பு:31 மே 1089, கொலோன், ஜெர்மனி

புனிதர் ஹெர்மியாஸ் May 31

† இன்றைய புனிதர் †
(மே 31)

✠ புனிதர் ஹெர்மியாஸ் ✠
(St. Hermias of Comana)
மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: தெரியவில்லை

இறப்பு: கி.பி. 160
கொமானா, கப்படோசியா
(Comana, Cappadocia)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: மே 31

புனிதர் ஹெர்மியாஸ், ஒரு ஆதிகால கிறிஸ்தவ திருச்சபையின் மறைசாட்சியும், ரோமன் கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் புனிதரும் ஆவார். இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்புனிதர், ரோம இராணுவத்தில் (Roman army) சிப்பாயாக நெடுங்காலம் பணியாற்றியவர் ஆவார். கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்காக கொடூரமாக துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

ஹெர்மியாஸ், "போன்டஸ்" எனுமிடத்திலுள்ள (Comana in Pontus) "கொமானா" எனுமிடத்தில் ரோம இராணுவத்தின் சிப்பாயாக நீண்ட கால சேவையாற்றினார். "அன்டோனியஸ் பயஸின்" (Antoninus Pius) ஆட்சியின் கீழ் (கி.பி. 138-161) இராணுவ சேவையை நிறைவு செய்த இவர், தமது சேவைக்காக சம்பளமாகவோ ஏனைய படியாகவோ ஏதும் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தமது விசுவாசத்தை கிறிஸ்துவில் அர்ப்பணித்தார்.

இவற்றை அறிந்த செபாஸ்டியன் (Sebastian) எனும் "கொமானா" எனுமிடத்தின் ஆளுநர் (Proconsul in Comana), கிறிஸ்துவில் விசுவாசத்தை மறுதலிக்கவும், ரோம பேரரசின்மேல் விசுவாசத்தை அறிக்கையிடவும் ஹெர்மியாசை அழைத்தான். அக்காலத்தில், ஆளுநர் என்பவர், பண்டைய ரோம் நாட்டில் ஏகாதிபத்திய அதிகாரம் கொண்ட பதவியாகும்.

ரோம ஆளுநர் செபாஸ்டியனின் (Sebastian) அழைப்பினை கடுமையாக நிராகரித்த ஹெர்மியாஸ், துன்புறுத்துவதற்காக அனுப்பப்பட்டார். சித்திரவதையாளர்களால் அவரது தாடை எலும்புகள் உடைக்கப்பட்டன. அவருடைய முகத்தின் தோல் உரிக்கப்பட்டது. பின்னர், எரியும் உலையில் எறியப்பட்ட இவர் மூன்று நாட்களின் பின்னர் எவ்வித காயங்களோ பாதிப்புகளோ இன்றி வெளிவந்தார். 

இவற்றையெல்லாம் கண்டு ஆத்திரம் கொண்ட செபாஸ்டியன், கொடிய விஷம் தயாரிக்கும் மந்திரவாதியான "மாரஸ்" (Marus) என்பவனின் உதவியை நாடினான். விஷம் தயாரிக்கப்பட்டு ஹெர்மியாஸ் அருந்த கொடுக்கப்பட்டது. ஆனால், அவ்விஷம் புனிதரை தீங்கு ஏதும் செய்யவில்லை. மீண்டும் கொடிய விஷம் தயாரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. பின்னரும் அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றானதும், கிறிஸ்துவின் தெய்வீக சக்தியை உணர்ந்த "மாரஸ்" (Marus) கிறிஸ்துவில் தமது விசுவாசத்தை அறிக்கையிட்டு வெளிப்படுத்தினான். இதுகண்ட செபாஸ்டியன், உடனடியாக "மாரஸின்" (Marus) தலையை வெட்டிக் கொன்றான். புனிதர் "மாரஸ்" (Marus) தமது சொந்த இரத்தத்தாலேயே திருமுழுக்கு அளிக்கப்பட்டார். உடனேயே மறைசாட்சி எனவும் அறிவிக்கப்பட்டார்.

புனிதர் ஹெர்மியாஸ் புதிய துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டார். கொதிக்கும் எண்ணெயில் இடப்பட்டார். அவரது கண்கள் பிடுங்கப்பட்டன. தலைகீழாக மூன்று நாட்கள் தொங்கவிடப்பட்டார். ஆனாலும் அவர் கிறிஸ்துவில் தமது நன்றியை அறிவித்துக்கொண்டேயிருந்தார். இறுதியில், வெறி பிடித்த செபாஸ்டியன் இப்புனிதரின் தலையை தமது வாளால் வெட்டிக் கொன்றான்.

புனிதர் பெட்ரோனிலா May 31

† இன்றைய புனிதர் †
(மே 31)

✠ புனிதர் பெட்ரோனிலா ✠
(St. Petronilla)
கன்னியர் மறைசாட்சி:
(Virgin Martyr)

கன்னியர், மறைசாட்சி:
(Virgin, Martyr)

பிறப்பு: தெரியவில்லை

இறந்தது: 1 ஆம் நூற்றாண்டு; 3 ஆம் நூற்றாண்டு

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள்: மே 31

பாதுகாவல்:
ஃபிரான்சின் டாபின்கள் (The dauphins of France) (ஃபிரான்சின் சிம்மாசனத்தின் வெளிப்படையான வாரிசுக்கு வழங்கப்பட்ட தலைப்பு), மலை பயணிகள்; திருத்தந்தையர் மற்றும் ஃபிராங்கிஷ் பேரரசர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள்; காய்ச்சலுக்கு எதிராக

புனிதர் பெட்ரோனிலா ஒரு ஆதிகால கிறிஸ்தவ துறவி ஆவார். கத்தோலிக்க திருச்சபையால் அவர் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட கன்னியர் மறைசாட்சியாக வணங்கப்படுகிறார். பெட்ரோனிலா "டொமிடிலா" (Domitilla family) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு உன்னதப் பெண்ணாக இருந்தார். அவர் கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ரோம் நகரில், கிறிஸ்தவ மதமாற்றம் பெற்றவர் ஆவார்.  அவர் மரித்தார்.

பெட்ரோனிலா பாரம்பரியமாக புனிதர் பேதுருவின் மகள் என்று அடையாளம் காணப்படுகிறது. இருப்பினும் இது பெயர்களின் ஒற்றுமையிலிருந்து வெறுமனே தோன்றக்கூடும். அவர் துறவியின் மதமாற்றக்காரராக இருந்திருக்கலாம் (இதனால் ஒரு "ஆன்மீக மகள்"), அல்லது பின்பற்றுபவர் அல்லது வேலைக்காரர் என்றுகூட பொருள்படும். புனிதர் பேதுரு அவரை வாத நோயிலிருந்து குணப்படுத்தினார் என்று கூறப்படுகிறது.

ரோமானிய கல்வெட்டுகள் அவளை ஒரு மறைசாட்சியாக அடையாளம் காட்டுகின்றன. அவர் புனிதர் "ஃபிளேவியா டொமிடிலா"வுடன் (Saint Flavia Domitilla) தொடர்புடையவராக இருக்கலாம்.

பெட்ரோனிலா ஒரு அழகான பெண் என்றும், பாகன் மன்னனான "ஃப்ளாக்கஸ்" (Flaccus) என்பவன் இவரை மணக்க விரும்பினான். ஃப்ளாக்கஸுடன் (Flaccus) திருமணத்தை மறுத்துவிட்ட பெட்ரோனிலா, அதற்கு பதிலாக தன்னை கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்க விரும்பினார். இவரைப்போன்றவர்களிடமிருந்து பெட்ரோனிலா வை காப்பதற்காக, தூய பேதுரு இவரை ஒரு ஒரு கோபுரத்தில் பூட்டி வைத்திருந்தார் என்றும், "ஃப்ளாக்கஸ்" (Flaccus) போன்றோரிடமிருந்து தப்புவதற்காக பெட்ரோனிலா உண்ணா நோன்பிருந்து தன்னை வருத்திக்கொண்டதாகவும், அதன் விளைவாக இவர் மரித்துப்போனதாகவும், இவர் சம்பந்தப்பட்ட புராணங்கள் கூறுகின்றன.

இவர் சம்பந்தப்பட்ட மற்றுமொரு புராண கதையில், தமது கிறிஸ்தவ விசுவாசத்தை கைவிட மறுத்த காரணத்தால், இவர் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

30 May 2020

புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் May 30

† இன்றைய புனிதர் †
(மே 30)

✠ புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் ✠
(St. Joan of Arc)
தூய கன்னியர்; மறைசாட்சி:
(Holy Virgin and Martyr) 

பிறப்பு: ஜனவரி 6, 1412
டோம்ரேமி, ஃபிரான்ஸ் அரசு
(Domrémy, Kingdom of France) 

இறப்பு: மே 30, 1431 (வயது 19)
ரோவன், நோர்மண்டி
(அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது)
(Rouen, Normandy - Then under English rule) 

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)

அருளாளர் பட்டம்: ஏப்ரல் 18, 1909
திருத்தந்தை பத்தாம் பயஸ்
(Pope Pius X) 

புனிதர் பட்டம்: மே 16, 1920
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்
(Pope Benedict XV) 

நினைவுத் திருவிழா: மே 30 

பாதுகாவல்:
ஃபிரான்ஸ்; இரத்த சாட்சிகள்; கைதிகள்; இராணுவத்தினர்; நம்பிக்கையினால் நிந்திக்கப்படுவோர்; “ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பெண் இராணுப் படையினர்” (Women's Army Corps); “ஐக்கிய அமெரிக்க கடற்படை ரிசர்வ் (மகளிர் ரிசர்வ்) அல்லது, “இரண்டாம் உலகப் போரின்போது தானாகவே முன்வந்து சேவையாற்றிய பெண்கள் படை” (Women Accepted for Volunteer Emergency Service in the World War II)

புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் (St. Joan of Arc), கி.பி. 1412ம் ஆண்டு, ஜனவரி மாதம், 6ம் தேதி, ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள “டாம்ரேமி” (Domrémy) என்ற இடத்தில் பிறந்தார் என நம்பப்படுகிறது. இவர் ஃபிரான்ஸ் நாட்டு வீராங்கனையும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

“ஓர்லியன்ஸ் பணிப்பெண்” (The Maid of Orléans) எனும் செல்லப்பெயர் அல்லது புனைப் பெயர் (Nickname) கொண்ட இவரது தந்தை “ஜாக்குஸ் டி ஆர்க்” (Jacques d'Arc) ஆவார். இவரது தாயார் “இஸபெல்லா ரோமி” (Isabelle Romée) ஆவார். இவர்களுக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில், ஜோன் மூன்றாவது குழந்தை ஆவார். இவரது தந்தை ஒரு விவசாயி. எனவே ஜோன் தனது குழந்தை பருவத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலும் கால்நடை பராமரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் ஜோன் தன் தாயாரிடம் இருந்து தனது மதம் மற்றும் அதன் கோட்பாடுகள் பற்றியும், வீட்டை பராமரிப்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டார். இவரது பெற்றோர்கள் ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவர்களாகத் திகழ்ந்தனர். எனவே ஜோன் ஆழ்ந்த இறை சிந்தனையுடையவராகவே இருந்தார்.

"இறைதூதர் மிக்கேல்" (Archangel Michael), "புனிதர் மார்கரெட்" (Saint Margaret) மற்றும் "புனிதர் கேதரின்" (Saint Catherine of Alexandria) ஆகியோர் தமக்குக் காட்சி தந்ததாகவும், ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பிலிருக்கும் ஃபிரான்ஸ் நாட்டினை மீட்க நூறு வருட கால போரிடும் முடியிழந்த ஃபிரெஞ்ச் மன்னன் ஏழாம் சார்ளசுக்கு (The uncrowned King Charles VII) உதவுமாறு தமக்கு உத்தரவிட்டதாகவும் ஜோன் கூறினார். 

அந்நியரை “ஓர்லியன்ஸ்” (Orléans) பிராந்தியத்தை விட்டு விரட்டுவதற்காகவே கடவுள் தம்மைப் படைத்திருப்பதாக இவர் நம்பினார். மீட்புப் போரின் முதல் கட்டமாக ஓர்லியன்ஸ் (Orléans) முற்றுகைக்கு செல்லுமாறு ஏழாம் சார்ள்ஸ் உத்தரவிட்டார். ஜோன் ஃபிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற ஃபிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர் ஃபிரெஞ்சு படையினர் நூறாண்டுப் போரின் போது பல முக்கிய வெற்றிகள் அடைய காரணமானார். இவையே ஃபிரான்சின் ஏழாம் சார்ளஸின் முடிசூடலுக்கு வழிவகுத்தது. 

ஆயினும் பர்கண்டியர்களால் (Burgundian) கி.பி. 1430ம் ஆண்டு, மே மாதம், 23ம் நாளன்று, போர்க் கைதியாக பிடிக்கப்பட்ட இவர், ஃபிரான்சின் எதிரிகளான ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார். அவர்கள் "பேயுவைஸ்" ஆங்கில சார்பு ஆயரான "பியேர் கெளசொன்" (pro-English Bishop of Beauvais Pierre Cauchon) துணையோடு இவரை சூனியக்காரி எனவும், தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய் குற்றம் சாட்டி, இவரின் 19ம் வயதில் இவரை உயிரோடு தீமூட்டிக் கொன்றனர். இவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை மூன்றாம் கலிக்ஸ்டஸால் (Pope Callixtus III) இவரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, இவர் மீதிருந்த குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் கத்தோலிக்க மறைசாட்சி என அறிவிக்கப்பட்டார்.

பின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான பணி துவங்கப்பட்டு, கி.பி. 1909ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 18ம் நாளன்று, திருத்தந்தை பத்தாம் பயஸ் (Pope Pius X) அவர்களால், “நோட்ரே டேம் டி பாரிஸ்” (Notre Dame de Paris) ஆலயத்தில் அருளாளர் பட்டமும், 1920ம் ஆண்டு, மே மாதம், 16ம் நாளன்று, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் (Pope Benedict XV) அவர்களால் ரோம் நகரின் “தூய பேதுரு பேராலயத்தில்” (St. Peter's Basilica) புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் நினைவுத் திருநாள் மே மாதம் 30ம் நாள் ஆகும்.

இன்றைய புனிதர்

2020-05-30

புனித ஜோன் ஆப் ஆர்க் (St.Johanna of Orleans )

பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலி (Patron of France)


பிறப்பு
6 ஜனவரி 1412
டோம்ரேமி(Domremy), பிரான்சு

இறப்பு
1431
ரூவன்(Rouen), பிரான்சு

புனிதர்பட்டம்: 16 மே 1920 திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட்


இவர் புத்தகங்களையும், பாடல்களையும் நாடகங்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தவர். பல வரலாற்று அறிஞர்களும், இறையியலாளர்களும், மருத்துவர்களும் இவரின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் பல ஆராய்ச்சிகளை செய்ய குவிந்தனர். பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலியாக உள்ள இப்புனிதரை பார்க்கும் அனைவரும் வியக்கின்றனர். இப்பெண்ணின் வீரம் அந்நாட்டை அதிர வைக்கக்கூடியதாக இருந்தது. இவர் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் படத்தை பார்க்கும்போதே, இவர் எவ்வளவு பெரிய போர் வீரர் என்பதை அறியலாம்.

இவர் டோம்ரேமி என்ற ஊரில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தவரின் மகளாக பிறந்தார். அவர் பிறந்த ஊர் இன்று டோம்ரேமிலா புசேலா(Domremy la Pucelie) என்றழைக்கப்படுகின்றது. இவர் பிறந்த ஊரிலிருந்த ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார். இவர் ஞானஸ்நானம் பெற்ற அந்தத் தொட்டியும், அவர் தங்கியிருந்த அறையில் இருந்த சிறிய சிறிய பொருட்களும், அவர் பயன்படுத்திய பெரிய துப்பாக்கியும், இன்றும் அவர் பிறந்த வீட்டில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது. அவ்வீடு இன்று ஓர் அருங்காட்சியகமாக காணப்படுகின்றது.

இவர் மிகுந்த பக்தியுள்ளவராக தன் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார். ஆனால் இவர் படிக்கவோ, எழுதவோ ஒருபோதும் கற்றுக்கொள்ளவில்லை. இவரின் வீட்டில் இருந்த தோட்டத்தில் எப்போதும் வேலை செய்வார். தனது 13 ஆம் வயதில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒருவித சத்தத்தைக் கேட்டார். இங்கிலாந்து நாட்டிலிருந்து பிரான்சு நாட்டிற்கு போர் வீரர்கள் போர்புரிய வந்ததை அப்போது அவர் பார்த்தார். நூற்றுக்கணக்கான இங்கிலாந்து போர் வீரர்கள் பிரான்சை கைப்பற்ற வந்ததை அறிந்தார். இதனால் தன் நாட்டை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தார். இதற்காக நாள்தோறும் தன்னையே தயாரித்தார். 1429 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்களில் ஆண்கள் உடுத்தும் ஆடையை, அணிந்துகொண்டு, குதிரையின் மேல் ஏறி, Vaucoulerus மற்றும் Chinon நகரங்களை நோக்கி சென்று, போரிட்டு இளவரசர் 7 ஆம் சார்லஸ் அவர்களை வென்றார். அதோடு அங்கு மறைபரப்புப்பணியையும் செய்தார். இவர் உரைத்த வாக்கைப்போல, அதுவரை யாரும் உரைக்கவில்லை. அவரின் மறையுரைகள் அனைத்தும், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனையறிந்த 7ஆம் சார்லஸ், இறையியலாளர்கள், கவிஞர்கள் என அனைவரையும் வரவழைத்து, ஜோன் ஆப் ஆர்க்கின் உரையைப் போல ஒன்றை தயார் செய்து கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அவர்களால் அதை செய்ய இயலவில்லை. அவர் ஆற்றிய உரைகள் அனைத்தையும், இறைஞானத்தால் தூண்டப்பட்டதாக இருந்தது.

இவர் 1429 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் முறைப்படி, பிரான்சு நாட்டு படைவீரர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அன்று முதல் முழு நேர போர் பணியாளராக இருந்தார். மிகக் குறைந்த நாட்களிலேயே போர் வீரர்களின் தலைமைப்பொறுப்பை ஏற்றார். சக்தி பெற்ற ஆண்களால் செய்ய முடியாத வேலைகளைகூட இவ்விளம்பெண் சாதாரணமாக செய்து முடித்தார். செய்த வேலைகள் அனைத்திலும் வெற்றிப்பெற்றார். 1429ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் நாள் 7ஆம் சார்லஸை மனம்மாற்றி, அவருடைய உதவியுடன், ரைம்ஸ் (Reims) என்ற ஊருக்கு அழைத்து சென்று, அங்கிருந்த பேராலயத்தில் அவருக்கு மூடி சூட்டினார். இதனால் மன்னர் சார்லஸ், ஜோன் ஆப் ஆர்க்கின் காலடியில் விழுந்து வணங்கி நன்றி கூறினார். இச்செயலைப் பார்த்த மன்னருடன் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, அச்சமுற்று, மன்னரின் மேல் கோபம் கொண்டார்கள். பிறகு மன்னருக்கும் ஜோன் ஆப் ஆர்க்குக்கும் எதிராக போர்புரிய ஆரம்பித்தார்கள். 1440 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டினர், பிரான்சு நாட்டை முற்றுகையிட்டபோது, மன்னனை பழிவாங்கும் விதமாக போரில் ஆர்வம் காட்டாமல், கடமைக்காக போர்புரிந்தனர். அப்போது இதனை கண்ட ஜோன் ஆப் ஆர்க் பெரும் வேதனை அடைந்தார். எதிரிகளால் இவர் தாக்கப்பட்டு, பிடித்துக்கொண்டுப் போகப்பட்டார். எதிரிகள் அவரின் மேல் பல குற்றங்களை சுமத்தி பழிவாங்கினர். எதிரிகளின் கொடுமையை தாங்கமுடியாமல், சொல்லொண்ணா துயரம் அடைந்தார். பிரான்சு நாட்டிற்காக ஏராளமான நன்மைகளை செய்த ஜோன் ஆப் ஆர்க், தன் 19 ஆம் வயதில் ரூவென் என்ற இடத்தில் சுட்டெரித்துக் கொல்லப்பட்டார். பிரான்சு நாட்டு இளம்பெண்கள் பலர், இவரது வாழ்வால் ஈர்க்கப்பட்டு, தங்கள் வாழ்வை இன்றும் நாட்டிற்காக அர்ப்பணிக்கின்றனர். எதிரிகளை எதிர்த்து போரிடுபவர்களுக்கு இவரின் வாழ்வு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாய் உள்ளது.


செபம்:

வழிநடத்துபவரே எம் இறைவா! எதிரிகளால் எம் நாட்டு மக்கள் தாக்கப்படும்போது, வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க்கின் துணைகொண்டு, எம் மக்களை நாங்கள் காத்தருள, நீர் துணைபுரிய வேண்டுமென்று, இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.



இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்


குரு, சபைநிறுவுநர் லெயோனார்ட் முரியால்டோ Leonhard Murialdo

பிறப்பு:26 அக்டோபர் 1828, தூரின் Turin, இத்தாலி
இறப்பு:30 மே 1900, தூரின், இத்தாலி
புனிதர்பட்டம்:1970, திருத்தந்தை 6 ஆம் பவுல்


இன்றைய புனிதர் :
(30-05-2020)

ஜோன் ஆப் ஆர்க் (மே 30)

ஜோன் ஆஃப் ஆர்க் சாதாரண மனித தரத்திலிருந்து மிகவும் உயர்ந்த ஒரு மானிடப் பிறவி. அவளுக்கு இணையான மனிதப் பிறவி ஓராயிரம் ஆண்டுகளிலும் உதிக்கப்போவதில்லை – வின்ஸ்டென்ட் சர்ச்சில்

வாழ்க்கை வரலாறு

15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. இங்கிலாந்து& பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் போர் நடந்துகொண்டிருந்த காலம் அது. இங்கிலாந்து, பிரான்ஸின் பல பகுதிகளைக் கைப்பற்றியது. பிரான்ஸ் அரசனான ஏழாவது சார்லஸ், அதிகாரங்கள் எதுவுமற்ற பொம்மையாக இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.


இத்தகைய சூழலில் பிரான்ஸ் தேசத்தில், ‘தோம்ரிமி’ என்ற சிறிய கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள்தான் நம் புனிதை ஜோன். இவள், தனது தாய்நாடான பிரான்ஸ், இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடப்பதைப் பற்றி, தன் தந்தையின் மூலம் அறிந்திருந்தாள். எப்பாடுபட்டாவது தாய் நாட்டை அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற விருப்பம் அவளுக்குள் தோன்றியது. நாளடைவில் இந்த விருப்பம், தீவிரமானது. ‘தாய் நாட்டை காக்கவே நீ பிறவி எடுத்திருக்கிறாய். அதற்கான முயற்சியில் உடனே ஈடுபடு!’ என்ற பொருளில் காட்சிகளும், குரல்களும் அடிக்கடி தனக்குள் தோன்றுவதாக சொல்லத் தொடங்கினாள். அது மட்டுமில்லை, இந்த உயரிய குறிக்கோளுக்காகவே இறைவன் தன்னைப் படைத்திருப்பதாகவும் அவள் நம்பத் தொடங்கினாள்.


இதை, தன் தாய் தந்தையரிடமும், கிராமத்துப் பெரியவர்களிடமும் அவள் சொன்னபோது, அவர்கள் நம்ப மறுத்தனர். ‘இது, வெறும் கற்பனை!’ என்றவர்கள், திரு மணம் செய்து, பிள்ளைகள் பெற்றுக் கொண்டு வாழும் வழியைப் பார்க்குமாறு அவளுக்கு அறிவுரை கூறினர். ‘இது கற்பனை அல்ல; கடவுளின் ஆணை!’ என்று உறுதியாக நின்ற அவளை மெதுவாக நம்பத் தொடங்கினர் சிலர். அவர்களது உதவியுடன் பிரான்ஸ் அரசன் ஏழாவது சார்லஸை சந்தித்தாள் ஜோன். தான், இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்து பிரான்ஸை மீட்க வந்திருப்பதாக அரசனிடம் பணிவுடன் தெரிவித்தாள். மேலும், தென் பிரான்ஸில் இருந்த ‘ஆர்லேன்ஸ்’ என்ற முக்கிய நகரை மீட்க, பிரெஞ்சுப் படையைத் தன் தலைமையில் அனுப்புமாறு வேண்டினாள். பெரும் தயக்கத்துக்குப் பின் அவளது கோரிக்கையை ஏற்றான் அரசன்.


போர்க் கவசம் அணிந்து, ஒரு கையில் உருவிய கத்தி, மறு கையில் ‘இயேசு மரி’ என்று பொறிக்கப்பட்ட வெண் கொடியுடன் குதிரையின் மீது அமர்ந்து, ஐந்தாயிரம் பிரெஞ்சுப் போர்வீரர்களுடன் புறப்பட்டாள் ஜோன். இது நடந்தது 1429 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம். அப்போது அவளது வயது 18. இளம் பெண் ஒருவளது தலைமையில் ஆர்லேன்ஸ் நகரை நெருங்கிய பிரெஞ்சுப் படையைப் பார்த்து முதலில் சிரித்தனர் ஆங்கிலேயப் படையினர். ஆனால், சுதந்திர வேட்கை மிகுந்த ஜோனின் உணர்ச்சியூட்டும் தலைமையின் கீழ் வீரப் போர் புரிந்த பிரெஞ்சுப் படையினரின் தாக்குதலில், நகரின் கோட்டைகள் ஒவ்வொன்றாக வீழத் தொடங்கின. மிக முக்கியமான கடைசி கோட்டையைக் கைப்பற்றும் போரில் காயம் அடைந்து, மருத்துவ சிகிச்சைக்காக ஜோன் போரிலிருந்து விலக நேர்ந்தது. இதைக் கண்டு மனம் தளர்ந்த பிரெஞ்சு வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினர்.

பிரெஞ்சு வீரர்கள் மனம் தளர்வதை விரும்பாத ஜோன், மீண்டும் போரில் குதித்தாள். கடும் போருக்குப் பின் கடைசி கோட்டையையும் வென்று, ஆர்லேன்ஸ் நகரைக் கைப்பற்றினாள். அவளின் இந்த வீரச் செயலைப் பார்த்து, ‘இவள் சாதாரண மானிடப் பெண் இல்லை. தெய்வீக சக்தி மிக்கவள்’ என்று பிரான்ஸ் மட்டுமல்லாமல், எதிரி நாடான இங்கிலாந்தும் நம்பத் தொடங்கியது. ‘ஆர்லேன்ஸை மீட்ட நங்கை’ என்று சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்றாள் ஜோன்.


ஜோனின் வாழ்க்கை இத்துடன் முடியவில்லை. மேலும் பல போர்களில் கலந்து கொண்டு, பிரான்ஸ் தேசத்துக்கு வெற்றி மேல் வெற்றியைத் தேடிக் கொடுத்தாள். அவளது வீரம், ஆங்கிலேயர்களை பிரான்ஸின் வடக்கு மூலைக்கே விரட்டி அடித்தது. பிரான்ஸின் அரசனாக ஏழாவது சார்லஸ் முடி சூட்டிக் கொண்டதுடன், அதன் மாட்சிமை நிலை நாட்டப்பட்டது. ஆனால், விரைவிலேயே வஞ்சகத்தால் பிடிபட்டு, ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டாள் ஜோன். அவர்கள் அவளுக்கு மரண தண்டனை விதித்தனர். 30.05.1431 அன்று ஊரின் நடுவே கழுமரத்தில் கட்டப்பட்டு, சுற்றிலும் மரக் கட்டைகளை அடுக்கி, தீ வைத்து எரிக்கப்பட்டு ஜோன் கொல்லப்பட்டாள். இவ்வாறு அசாதாரண வீரத்துடன் வாழ்ந்து, இறுதியில் பெரும் துணிச்சலுடன் மரணத்தைத் தழுவிய அவள், இந்த பூமியில் வாழ்ந்தது மொத்தம் 19 ஆண்டுகளே.

இவருக்கு 1920 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினைந்தாம் ஆசிர்வாதப்பரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜோன் ஆஃப் ஆர்க்கின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஆபத்தில் – அனைத்து வேளையிலும் - ஆண்டவர் இயேசுவின் பெயரை உச்சரிப்போம்

ஜோன் ஆஃப் ஆர்க் ஒரு வீர நங்கையாக விளங்கியதோடு மட்டுமல்லாமல் பக்தியான ஒரு பெண்மணியாகவும் விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக அவர் இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் மிகுந்த பக்தி கொண்டு இருந்தார்.

இங்கிலாந்து நாட்டுக்கு எதிரான போரில் பிரான்ஸ் நாட்டுப் படைக்குத் தலைமைதாங்கிய ஜோன் தன்னுடைய கையில் இயேசு, மரியின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கொடியைத் தாங்கிச் சென்றார். அதுவே ஜோனுக்கு இங்கிலாந்துக்கு எதிரான போரில் வெற்றியைத் தேடித் தந்தது. தூய ஜோனைப் போன்று இயேசுவின் பெயருக்கு – மரியாவின் பெயருக்கு – இருக்கும் வல்லமையை நம்முடைய வாழ்க்கையில் உணர்ந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்கு தருவார்” என்று (யோவா 16:23). இயேசு கூறிய வார்த்தைகள் உண்மையிலும் உண்மை. தூய ஜோன் இயேசுவின் பெயரை நம்பி உச்சரித்தார். அதனால் வெற்றிகள் பல கண்டார். நாமும் ஆண்டவர் இயேசுவின் பெயரை நம்பிக்கையுடன் உச்சரிக்கும் போது ஆசிரைப் பெறுவோம் என்பது உறுதி.
ஆகவே ஜோன் ஆஃப் ஆர்க்கின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவரைப் போன்று வீரத்தோடு செயல்படுவோம், ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் உண்மையான நம்பிக்கை கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (30-05-2020)

Saint Joan of Arc

One of five children born to Jacques d'Arc and Isabelle Romee. Shepherdess. Mystic. From age 13 she received visions from Saint Margaret of Antioch, Saint Catherine of Alexandria, and Michael the Archangel.

In the early 15th century, England, in alliance with Burgundy, controlled most of what is modern France. In May 1428 Joan's visions told her to find the true king of France and help him reclaim his throne. She resisted for more than three years, but finally went to Charles VII in Chinon and told him of her visions. Carrying a banner that read "Jesus, Mary", she led troops from one battle to another. She was severely wounded, but her victories from 23 February 1429 to 23 May 1430 brought Charles VII to the throne. Captured by the Burgundians during the defence of Compiegne, she was sold to the English for 10 thousand francs. She was put on trial by an ecclesiastical court conducted by Cauchon, Bishop of Beauvais, a supporter of England, and was excuted as a heretic. In 1456 her case was re-tried, and Joan was acquitted (23 years too late).

"About Jesus Christ and the Church, I simply know they're just one thing, and we shouldn't complicate the matter." - Saint Joan of Arc, as recorded at her trial. 

Born :
6 January 1412 at Greux-Domremy, Lorraine, France.

Died :
burned alive on 30 May 1431 at Rouen, France.

Canonized :
16 May 1920 by Pope Benedict XV.

Patronage :
captives, prisoners
• martyrs
• opposition of Church authorities
• people ridiculed for their piety
• rape victims
• soldiers
• France
• WACs (Women's Army Corps)
• WAVES (Women Appointed for Voluntary Emergency Service)

---JDH---Jesus the Divine Healer---

29 May 2020

அருளாளர் ஜோசப் ஜெரார்டு ( 183-1914) May 29

மே 29 

அருளாளர் ஜோசப் ஜெரார்டு ( 183-1914)
இவர் பிரான்சில் உள்ள நான்சி மறை மாவட்டத்தைச் சார்ந்தவர்.

சிறுவயதில் தோட்டத் தொழிலை செய்துவந்த இவர், தனது இருபதாவது வயதில் இறை அழைத்தலை உணர்ந்தார். இதற்குப் பின்பு இவர் அமல மரி தியாகிகள் (OMI) சபையில் சேர்ந்தார்.

தனது 22 வது வயதில் தென் ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர், லெசோதோ என்ற இடத்திற்குச் சென்று, அங்கிருந்த ஜூலு என்ற மக்கள் நடுவில் பணி செய்தார். 

தொடக்கத்தில் இவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு யாரும் மனம் மாறவில்லை. ஆனாலும், இவர் மனந்தளராமல் நோயாளர்களையும் வயது முதிர்ந்தவர்களையும் கவனித்துக்கொண்டு, அதன் மூலமாக நற்செய்தி அறிவித்து வந்ததால், பலர் இவர் அறிவித்த நற்செய்தியை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள்.

சாலை வசதி அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்தில், இவர் கால்நடையாகவே அதுவும், காலில் செருப்பு அணியாமலேயே பல இடங்களுக்குச் சென்று பணி செய்தார். அர்ப்பண உள்ளத்தோடு பணிசெய்த இவருடைய வாழ்க்கையைப் பார்த்துவிட்டுப் பலரும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கைகொள்ளத் தொடங்கினார்கள்.

இவர் புனித கன்னி மரியாவிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் அடிக்கடி உச்சரிக்கக் கூடிய வார்த்தைகள், "எல்லாச் சூழ்நிலையிலும் மக்களை அன்பு செய்யவேண்டும்" என்பதாகும். இவர் 1914 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

இவருக்கு 1988 ஆம் ஆண்டு புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் புனிதர் பட்டம் கொடுத்தார்.

.

✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸிMay 24

† இன்றைய புனிதர் †
(மே 24)

✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி ✠
(St. Mary Magdalene de' Pazzi)
கன்னியர்:
(Virgin)

பிறப்பு: ஏப்ரல் 2, 1566
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Duchy of Florence)

இறப்பு: மே 25, 1607 (வயது 41)
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Grand Duchy of Tuscany)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்கம்
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: கி.பி. 1626
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 28, 1669 
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
(Pope Clement X)

முக்கிய திருத்தலம்:
புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி துறவு மடம், கரேக்கி, ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Monastery of Santa Maria Maddalena de' Pazzi, Careggi, Florence, Italy)

நினைவுத் திருவிழா: மே 24

பாதுகாவல்: 
நேப்பிள்ஸ் (துணை பாதுகாவலர்) (Naples (co-patron), நோய்களுக்கெதிராக (Against bodily ills), பாலின தூண்டுதளுக்கே எதிராக (Against sexual temptation), நோயாளிகள் (Sick people)

புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க புனிதரும், கார்மேல் சபை துறவியும், கிறிஸ்தவ சித்தரும் ஆவார்.

“கதெரீனா” (Caterina) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி, கி.பி. 1566ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 2ம் நாளன்று, ஃப்ளாரென்ஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை நகரின் புகழ்பெற்ற செல்வந்தர் ஆவார். அவரது பெயர், “கமிலோ டி கெரி டே பஸ்ஸி” (Camillo di Geri de' Pazzi) ஆகும். இவரது தாயாரின் பெயர், “மரிய பௌன்டெல்மொன்டி” (Maria Buondelmonti) ஆகும். பஸ்ஸி சிறுமியாக இருக்கையிலேயே ஆன்மீக மற்றும் பக்தி மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தார். ஒன்பது வயதிலேயே பஸ்ஸி இறைவனின் திருப்பாடுகளை தியானிக்கக் கற்றுக்கொண்டார். தமது பத்து வயதிலேயே புது நன்மை பெற்றுக்கொண்ட அவர், தமது கன்னிமைக்காக பிரமாணம் செய்துகொண்டார்.

அவரது பன்னிரண்டு வயதில் தமது தாயாரின் முன்னிலையிலேயே இறைவனின் திருக்காட்சியைக் காணும் பேறு பெற்றார். அதுமுதலே பலவித அற்புத திருக்காட்சிகளைக் கண்டார்.

கி.பி. 1580ம் ஆண்டு, பஸ்ஸி “மால்டா சபையினர்” (Order of Malta) நடத்தும் பெண் துறவியரின் மடத்தில் கல்வி கற்க அவரது தந்தையால் அனுப்பப்பட்டார். ஆனால் விரைவிலேயே திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்ட பஸ்ஸி, ஒரு பிரபுக் குடும்ப இளைஞனை திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டார். ஆனால், தாம் தமது கன்னிமைக்காக இறைவனிடம் பிரமாணம் எடுத்துக்கொண்டதை தந்தையிடம் எடுத்துக்கூறினார். இறுதியில், தமது சம்மதத்தை தெரிவித்த தந்தையார், பஸ்ஸியின் துறவு வாழ்க்கைக்கு சம்மதம் தெரிவித்தார். பஸ்ஸி, “தூய மரியாளின் கார்மேல் துறவு மடத்தை” (Carmelite Monastery of St. Mary) தேர்ந்துகொண்டார். கி.பி. 1583ம் ஆண்டு, புகுமுக (Novice) துறவறம் பெற்ற பஸ்ஸி, “அருட்சகோதரி மேரி மகதலின்” (Sister Mary Magdalene) என்ற துறவற பெயரை ஏற்றுக்கொண்டார்.

புகுமுக (Novice) துறவறத்தில் ஒருவருட காலம் இருந்த பஸ்ஸி, ஒருமுறை மிகவும் மோசமாக நோயால் பாதிக்கப்பட்டார். வேதனைகளை வெளிக்காட்டாத பஸ்ஸியின் இருதயம் கிறிஸ்துவின் அன்பில் நிறைந்திருந்தது. இதனைக் கண்ட மடத்தின் அருட்சகோதரி ஒருவர் பஸ்ஸியிடம், “சிறு முணுமுணுத்தல் கூட இல்லாமல் எப்படி உங்களால் வேதனைகளை பொறுத்துக்கொள்ள முடிகிறது” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பஸ்ஸி, இறைவனின் பாடுபட்ட சொரூபத்தைச் சுட்டிக்காட்டியபடி, “கிறிஸ்துவின் பாடுகளை அனுபவிக்க அழைக்கப்பட்ட எவருக்குமே வலிகளும் வேதனைகளும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்” என்றார்.

இதுபோன்ற இவரது எண்ணங்களும் கிறிஸ்துவுக்குள்ளான இவரது அன்பும் இவருக்கு தொடர்ந்த இறைவனின் திருப்பாடுகளின் திருக்காட்சிகளை காண கிட்டியது. இறைவனின் பெயரால் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணிலடங்காதவை ஆகும். பிறரின் எண்ணங்களைக் கூட அறிந்து கூறும் வல்லமை பெற்றவராக இவர் திகழ்ந்தார் என்பர். அதுபோலவே, எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தியும் இவர் பெற்றிருந்தார். உதாரணத்துக்கு, “கர்தினால் அலெஸ்ஸான்ட்ரோ டே மெடிசி” (Cardinal Alessandro de' Medici) அடுத்த திருத்தந்தை ஆவார் என்றார். அதுபோலவே அவர் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு, “பதினோராம் லியோ” (Pope Leo XI) ஆனார்.

அவரது வாழ்நாளில், தூர தொலைவு நாடுகளிலிருந்த பலருக்கு நேரில் காட்சியளித்து அவர்களது நோய்களை குணமாக்கியதாக கூறப்படுகிறது.

கி.பி. 1607ம் ஆண்டு, தமது 41 வயதில் மரித்த இப்புனிதரின் உடல், கெட்டுப்போகாத நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

புனிதர் பட்டமளிப்பு:
இவரின் இறப்புக்குப் பின், பல புதுமைகள் நிகழ்ந்ததால், இவருக்கு முக்திபேறு பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் திருத்தந்தை ஐந்தாம் பவுலின் (Pope Paul V) ஆட்சியில் தொடங்கி திருத்தந்தை எட்டாம் அர்பனின் (Pope Urbun VIII) ஆட்சியில் கி.பி. 1626ம் ஆண்டு, வழங்கப்பட்டது. எனினும் 62 ஆண்டுகளுக்குப் பின்னரே திருத்தந்தை பத்தாம் கிளமெண்டால் (Pope Clement VIII), கி.பி. 1669ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 28ம் நாளன்று, புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. 

நினைவுத் திருவிழா நாள்:
இவரின் புனிதர் பட்டமளிப்பின் போது, இவரது விழா நாள், இவரின் இறந்த நாள் ஆகிய, மே மாதம், 25ம் நாள் எனக் குறிக்கப்பட்டது. ஆனால் கி.பி. 1725ம் ஆண்டு, அந்நாள் புனித திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு (Pope Gregory VII) ஒதுக்கப்பட்டதால், மே மாதம், 29ம் தேதிக்கு நகர்த்தப்பட்டது. கி.பி. 1969ம் ஆண்டு நடந்த மாற்றத்தில் மீண்டும் மே மாதம், 24ம் தேதிக்கு நகர்த்தப்பட்டது.

✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸிMay 24

† இன்றைய புனிதர் †
(மே 24)

✠ புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி ✠
(St. Mary Magdalene de' Pazzi)
கன்னியர்:
(Virgin)

பிறப்பு: ஏப்ரல் 2, 1566
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Duchy of Florence)

இறப்பு: மே 25, 1607 (வயது 41)
ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Florence, Grand Duchy of Tuscany)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்கம்
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: கி.பி. 1626
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 28, 1669 
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
(Pope Clement X)

முக்கிய திருத்தலம்:
புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி துறவு மடம், கரேக்கி, ஃப்ளாரன்ஸ், இத்தாலி
(Monastery of Santa Maria Maddalena de' Pazzi, Careggi, Florence, Italy)

நினைவுத் திருவிழா: மே 24

பாதுகாவல்: 
நேப்பிள்ஸ் (துணை பாதுகாவலர்) (Naples (co-patron), நோய்களுக்கெதிராக (Against bodily ills), பாலின தூண்டுதளுக்கே எதிராக (Against sexual temptation), நோயாளிகள் (Sick people)

புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க புனிதரும், கார்மேல் சபை துறவியும், கிறிஸ்தவ சித்தரும் ஆவார்.

“கதெரீனா” (Caterina) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் மரிய மகதலின் டி பஸ்ஸி, கி.பி. 1566ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 2ம் நாளன்று, ஃப்ளாரென்ஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை நகரின் புகழ்பெற்ற செல்வந்தர் ஆவார். அவரது பெயர், “கமிலோ டி கெரி டே பஸ்ஸி” (Camillo di Geri de' Pazzi) ஆகும். இவரது தாயாரின் பெயர், “மரிய பௌன்டெல்மொன்டி” (Maria Buondelmonti) ஆகும். பஸ்ஸி சிறுமியாக இருக்கையிலேயே ஆன்மீக மற்றும் பக்தி மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தார். ஒன்பது வயதிலேயே பஸ்ஸி இறைவனின் திருப்பாடுகளை தியானிக்கக் கற்றுக்கொண்டார். தமது பத்து வயதிலேயே புது நன்மை பெற்றுக்கொண்ட அவர், தமது கன்னிமைக்காக பிரமாணம் செய்துகொண்டார்.

அவரது பன்னிரண்டு வயதில் தமது தாயாரின் முன்னிலையிலேயே இறைவனின் திருக்காட்சியைக் காணும் பேறு பெற்றார். அதுமுதலே பலவித அற்புத திருக்காட்சிகளைக் கண்டார்.

கி.பி. 1580ம் ஆண்டு, பஸ்ஸி “மால்டா சபையினர்” (Order of Malta) நடத்தும் பெண் துறவியரின் மடத்தில் கல்வி கற்க அவரது தந்தையால் அனுப்பப்பட்டார். ஆனால் விரைவிலேயே திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்ட பஸ்ஸி, ஒரு பிரபுக் குடும்ப இளைஞனை திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டார். ஆனால், தாம் தமது கன்னிமைக்காக இறைவனிடம் பிரமாணம் எடுத்துக்கொண்டதை தந்தையிடம் எடுத்துக்கூறினார். இறுதியில், தமது சம்மதத்தை தெரிவித்த தந்தையார், பஸ்ஸியின் துறவு வாழ்க்கைக்கு சம்மதம் தெரிவித்தார். பஸ்ஸி, “தூய மரியாளின் கார்மேல் துறவு மடத்தை” (Carmelite Monastery of St. Mary) தேர்ந்துகொண்டார். கி.பி. 1583ம் ஆண்டு, புகுமுக (Novice) துறவறம் பெற்ற பஸ்ஸி, “அருட்சகோதரி மேரி மகதலின்” (Sister Mary Magdalene) என்ற துறவற பெயரை ஏற்றுக்கொண்டார்.

புகுமுக (Novice) துறவறத்தில் ஒருவருட காலம் இருந்த பஸ்ஸி, ஒருமுறை மிகவும் மோசமாக நோயால் பாதிக்கப்பட்டார். வேதனைகளை வெளிக்காட்டாத பஸ்ஸியின் இருதயம் கிறிஸ்துவின் அன்பில் நிறைந்திருந்தது. இதனைக் கண்ட மடத்தின் அருட்சகோதரி ஒருவர் பஸ்ஸியிடம், “சிறு முணுமுணுத்தல் கூட இல்லாமல் எப்படி உங்களால் வேதனைகளை பொறுத்துக்கொள்ள முடிகிறது” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பஸ்ஸி, இறைவனின் பாடுபட்ட சொரூபத்தைச் சுட்டிக்காட்டியபடி, “கிறிஸ்துவின் பாடுகளை அனுபவிக்க அழைக்கப்பட்ட எவருக்குமே வலிகளும் வேதனைகளும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்” என்றார்.

இதுபோன்ற இவரது எண்ணங்களும் கிறிஸ்துவுக்குள்ளான இவரது அன்பும் இவருக்கு தொடர்ந்த இறைவனின் திருப்பாடுகளின் திருக்காட்சிகளை காண கிட்டியது. இறைவனின் பெயரால் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணிலடங்காதவை ஆகும். பிறரின் எண்ணங்களைக் கூட அறிந்து கூறும் வல்லமை பெற்றவராக இவர் திகழ்ந்தார் என்பர். அதுபோலவே, எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தியும் இவர் பெற்றிருந்தார். உதாரணத்துக்கு, “கர்தினால் அலெஸ்ஸான்ட்ரோ டே மெடிசி” (Cardinal Alessandro de' Medici) அடுத்த திருத்தந்தை ஆவார் என்றார். அதுபோலவே அவர் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு, “பதினோராம் லியோ” (Pope Leo XI) ஆனார்.

அவரது வாழ்நாளில், தூர தொலைவு நாடுகளிலிருந்த பலருக்கு நேரில் காட்சியளித்து அவர்களது நோய்களை குணமாக்கியதாக கூறப்படுகிறது.

கி.பி. 1607ம் ஆண்டு, தமது 41 வயதில் மரித்த இப்புனிதரின் உடல், கெட்டுப்போகாத நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

புனிதர் பட்டமளிப்பு:
இவரின் இறப்புக்குப் பின், பல புதுமைகள் நிகழ்ந்ததால், இவருக்கு முக்திபேறு பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் திருத்தந்தை ஐந்தாம் பவுலின் (Pope Paul V) ஆட்சியில் தொடங்கி திருத்தந்தை எட்டாம் அர்பனின் (Pope Urbun VIII) ஆட்சியில் கி.பி. 1626ம் ஆண்டு, வழங்கப்பட்டது. எனினும் 62 ஆண்டுகளுக்குப் பின்னரே திருத்தந்தை பத்தாம் கிளமெண்டால் (Pope Clement VIII), கி.பி. 1669ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 28ம் நாளன்று, புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. 

நினைவுத் திருவிழா நாள்:
இவரின் புனிதர் பட்டமளிப்பின் போது, இவரது விழா நாள், இவரின் இறந்த நாள் ஆகிய, மே மாதம், 25ம் நாள் எனக் குறிக்கப்பட்டது. ஆனால் கி.பி. 1725ம் ஆண்டு, அந்நாள் புனித திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு (Pope Gregory VII) ஒதுக்கப்பட்டதால், மே மாதம், 29ம் தேதிக்கு நகர்த்தப்பட்டது. கி.பி. 1969ம் ஆண்டு நடந்த மாற்றத்தில் மீண்டும் மே மாதம், 24ம் தேதிக்கு நகர்த்தப்பட்டது.

புனிதர் மாடலின் சோஃபி பாரட் May 29

† இன்றைய புனிதர் †
(மே 29)
✠ புனிதர் மாடலின் சோஃபி பாரட் ✠
(St. Madeleine Sophie Barat)

திருஇருதய சபை நிறுவனர்:
(Founder of the Society of the Sacred Heart)

பிறப்பு: டிசம்பர் 12, 1779
ஜோய்க்னி, பர்கண்டி ஃபிரான்ஸ்
(Joigny, Burgundy, France) 

இறப்பு: மே 25, 1865 (வயது 85)
பாரிஸ், ஃபிரான்ஸ்
(Paris, France)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: மே 24, 1908
திருத்தந்தை பத்தாம் பயஸ் 
(Pope Pius X)

புனிதர் பட்டம்: மே 24, 1925
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)

நினைவுத் திருநாள்: மே 29

புனிதர் மாடலின் சோஃபி பாரட், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஃபிரெஞ்ச் புனிதரும், "திருஇருதய சபை" (Founder of the Society of the Sacred Heart) நிறுவனரும் ஆவார்.

புனிதர் மாடலின் சோஃபி பாரட், அவரது பெற்றோருக்கு மூன்றாம் குழந்தையாவார். இவரது தந்தையார், திராட்சை வளர்க்கும் தொழில் புரியும் "ஜாக்குவெஸ் பாராட்" (Jacques Barat) என்பவராவார். இவரது தாயாரின் பெயர், "மேடம் மடலின் ஃபௌஃப் பாரட்" (Madame Madeleine Fouffé Barat) ஆகும். கி.பி. 1779ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 12ம் தேதி நள்ளிவு, அவர்களது அண்டை வீடு தீ பிடித்து எரிந்தது. தீ விபத்தின் காரணமாக பதற்றமடைந்த அவரது தாயார் எட்டு மாத கர்ப்பத்திலேயே மாடலின் சோஃபியை குறை மாத குழந்தையாக பிரசவித்தார். பிறந்தவுடன் ஆரோக்கியமற்று மிகவும் நலிவடைந்திருந்த மாடலின் சோஃபி'க்கு, மறுநாளே திருமுழுக்கு அளிக்கப்பட்டது. அவரது வீட்டின் அருகாமையிலேயே உள்ள புனித "திபௌல்ட்" (St. Thibault Church) ஆலயத்தில் விடியற்காலை ஐந்து மணிக்கே திருமுழுக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது பெற்றோர் அவருக்காக ஞானப்பெற்றோரை ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அவசரம் காரணமாக அவர்களை அழைக்க இயலவில்லை. ஆலயத்திற்கு தற்செயலாக வந்த "சோஃபி செடோர்" (Sophie Cédor) என்ற உள்ளூர் பெண் ஒருவரும், அவரது மூத்த சகோதரர் லூயிசும் அவரது ஞானப்பெற்றோராக நிறுத்தப்பட்டனர்.

பதினாறு வயதினிலே, கத்தோலிக்க குருவாக வேண்டி கல்வி கற்ற அவரது தமையன் லூயிஸ், இருபத்தொரு வயதுக்கு முன் குருத்துவம் பெற இயலாத காரணத்தால் வீட்டுக்கு திரும்பினார். அவர் தமது தங்கை மாடலின் சோஃபி பாரட்'டின் கல்வியில் கவனம் செலுத்தினார். அக்காலத்தில் இளம்பெண்களுக்கு கல்வி கற்பதில் பல இன்னல்கள் இருந்தன. ஆனாலும் அவர் தமது தங்கைக்கு இலத்தீன், கிரேக்கம், ஸ்பேனிஷ், இத்தாலியன் ஆகிய மொழிகளையும், இயற்கை அறிவியல் மற்றும் சரித்திரம் ஆகிய பாடங்களையும் கற்பித்தார்.

கி.பி. 1789ம் ஆண்டு, ஃபிரெஞ்ச் புரட்சியின்போது, மதகுருமார்களின் சிவில் அரசியலமைப்பு சம்பந்தமான விவாதங்களில் ஈடுபட்டு, கைது செய்யப்படும் நிலை வந்தபோது, பாரிஸ் நகருக்கு தப்பிச் சென்றார். கி.பி. 1793ம் ஆண்டு, மே மாதம், பாரிஸ் நகரில் கைது செய்யப்பட்ட லூயிஸ் இரண்டு வருடம் சிறையிலிருந்தார். கி.பி. 1795ம் ஆண்டு, விடுதலை பெற்று வீடு வந்து, தமது தங்கையையும் அழைத்துக்கொண்டு மீண்டும் பாரிஸ் நகர் வந்தார். அங்கே மாடலின் சோஃபி பாரட் ஐந்து வருடங்கள் வரை செப வாழ்க்கை வாழ்வதிலும், கல்வி கற்பதிலும், ரகசியமாக சிறார்களுக்கு மறைக் கல்வி கற்பிப்பதிலும் கழித்தார்.

பாரிஸ் நகரில் இவருக்கு “ஜோசப் வேரின்” (Joseph Varin) என்ற கத்தோலிக்க குரு அறிமுகமானார். ஜோசப் வேரின், இளம்பெண்களின் கல்வியில் ஈடுபாடு கொண்ட, இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணிப்பு கொண்ட பெண்களுக்கான ஒரு சமூகத்தை நிறுவ விரும்பினார். கார்மேல் சபையில் சேரும் கனவுடனிருந்த மாடலின் சோஃபி பாரட், தமது கனவைக் கைவிட்டு, பாரிஸ் நகரில் மூன்று இளம்பெண்களுடன் இணைந்து புதிய "திருஇருதய சமூகத்தை" நிறுவினார். ஆரம்பத்தில், ஃபிரெஞ்ச் அதிகார வர்க்கம் இயேசுவின் திருஇருதயத்தை பூஜிப்பதை தடை செய்திருந்த காரணத்தால் இந்த புதிய சமூகம் "விசுவாசமுள்ள பெண்கள்" (Women of Faith) என்ற பெயரில் இயங்கியது.

ஃபிரான்சின் வட பிராந்தியத்தில் கி.பி. 1801ம் ஆண்டு, இச்சமூகத்தினரால் முதல் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. "திருஇருதய சமூகமும்" பள்ளியும் வேகமாக வளர்ந்தன. தமது 23 வயதில் "திருஇருதய சமூகத்தின்" தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

ஜோசப் வேரின் துணையுடன் இவரது பள்ளிகள் வளர ஆரம்பித்தன. ஃபிரான்ஸில் பல பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவை, வட அமெரிக்கா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், அல்ஜியர்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், ஹாலந்து, ஜெர்மனி, தென் அமெரிக்கா, ஆஸ்திரியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளிலும் தோற்றுவிக்கப்பட்டன.

கி.பி. 1832ம் ஆண்டு, “லியோன்ஸ்” (Lyons) நகரில், "மரியாளின் குழந்தைகள்" (Congregation of the Children of Mary) எனும் சபையை தோற்றுவித்தார்.

கி.பி. 1840ம் ஆண்டு, சோஃபியின் முயற்சியால் வத்திக்கான் (Vatican) மற்றும் பாரிசின் பேராயர் (Archbishop of Paris) ஆகியோருக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் தவிர்க்கப்பட்டன. வத்திக்கான் அல்லது பாரிஸ் பேராயர் பக்கங்களைத் தேர்வு செய்யும்படி அவருடைய எல்லா சகோதரிகளும் அழுத்தம் கொடுத்திருந்தாலும், சோஃபி அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். அவரால் மீறுதலைக் குணப்படுத்த முடிந்தது. 65 வருடங்களுக்கும் மேலாக சோஃபியின் தலைமையில் அவரது சமூகம் நெப்போலியனின் ஆட்சி பிழைத்திருந்தது. பிரான்ஸ் இன்னும் இரண்டு புரட்சிகளை சந்தித்ததோடு, இத்தாலியின் போராட்டம் காரணமாக, முழுக்க முழுக்க தனி தேசமாக மாறியது.

திருஇருதய பள்ளிகள் விரைவில் ஒரு சிறந்த நற்பெயரைப் பெற்றன. குழந்தைகளின் பெற்றோரின் நிதி வசதிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லா குழந்தைகளையும் கல்வி கற்பிக்கும் கனவு கண்டார். அவர் நிறுவிய ஒவ்வொரு பள்ளிக்கும் ஈடாக ஒரு இலவச பள்ளியும் நிறுவப்பட்டது. ஒவ்வொரு ஏழைக் குழந்தைக்கும் உயர்தர கல்வி கிடைக்க உறுதிகொண்டிருந்தார்.

இவரது அறுபத்தைந்து வருடகால தலைமையில், இவரது சபை பெண்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் 3500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன், ஐரோப்பா (Europe), வட ஆபிரிக்கா (North Africa), வடக்கு மற்றும் தென் அமெரிக்க (North and South America) நாடுகளில் பரவியது.

85 வயதான மாடலின் சோஃபி பாரட், கி.பி. 1865ம் ஆண்டு, பாரிஸ் நகரிலுள்ள தலைமை இல்லத்தில், இயேசுவின் விண்ணேற்ற தினத்தன்று மரித்தார்.

பிசா நகர் புனிதர் போநா May 29

† இன்றைய புனிதர் †
(மே 29)

✠ பிசா நகர் புனிதர் போநா ✠
(St. Bona of Pisa)
கன்னியர்:
(Virgin)

பிறப்பு: கி.பி 1156
பிசா, இத்தாலி
(Pisa, Italy)

இறப்பு: கி.பி 1207
பிசா, இத்தாலி
(Pisa, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: கி.பி 1962
திருத்தந்தை இருபத்துமூன்றாம் ஜான்
(Pope John XXIII)

நினைவுத் திருநாள்: மே 29

பாதுகாவல்:
பயணிகள், கூரியர்கள், வழிகாட்டிகள், யாத்ரீகர்கள், விமான பணிப்பெண்கள், பிசா

பிசா நகர் புனிதர் போநா, அகஸ்தீனிய மூன்றாம் நிலை (Third Order of the Augustinian nuns) கன்னியர் சபையின் உறுப்பினர் ஆவார். அவர் பயணிகளை யாத்திரைகளுக்கு வழிநடத்த உதவினார். கி.பி. 1962ம் ஆண்டில், திருத்தந்தை இருபத்துமூன்றாம் ஜான் இவரை கத்தோலிக்க திருச்சபையில் ஒரு புனிதராக அருட்பொழிவு செய்தார். அவர் பயணிகளின் பாதுகாவல் புனிதராக கருதப்படுகிறார். குறிப்பாக கூரியர்கள், வழிகாட்டிகள், யாத்ரீகர்கள், விமான பணிப்பெண்கள் மற்றும் பிசா நகரம் ஆகியவற்றின் பாதுகாவலராவார்.

வாழ்க்கை:
பிசா நகரை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு சிறு வயதிலிருந்தே தெய்வீக தரிசனங்கள் காணும் அனுபவங்கள் வாய்த்ததாக கூறப்படுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில், தூய கல்லறை தேவாலயத்தில் (Holy Sepulchre Church) சிலுவையில் அறையப்பட்ட திருச்சொரூபம் ஓன்று, அவளுக்கு கையில் கிட்டியது.

மற்றொரு தேவாலயத்தில், இயேசு, அன்னை கன்னி மரியாள், மற்றும் புனிதர் பெரிய யாக்கோபு (James the Greater) உள்ளிட்ட மூன்று புனிதர்களின் தரிசனத்தைக் கண்டார். இவர்களைச் சுற்றியிருந்த ஒளியால் அவள் பயந்து ஓடிப்போனாள். புனிதர் பெரிய யாக்கோபு, அவளைப் பின்தொடர்ந்து சென்று, அவளை இயேசுவின் திருச்சொரூபத்திடம் அழைத்துச் சென்றார். போநா, தமது வாழ்நாள் முழுதும், புனிதர் பெரிய யாக்கோபுவிடம் தீவிர பக்தி கொண்டிருந்தார். தமது பத்து வயதில், அவர் தன்னை ஒரு அகஸ்தீனிய மூன்றாம் நிலை கன்னியர் (Augustinian tertiary) சபையில் அர்ப்பணித்தார். சிறு வயதிலிருந்தே தவறாமல் உண்ணாவிரதம் இருந்தார். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும், ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே தமது உணவாக எடுத்துக் கொண்டார்.

இவர் மேற்கொண்ட பல பயணங்களின் முதல் பயணமாக, நான்கு வருடங்கள் கழித்து, ஜெருசலேமுக்கு (Jerusalem) அருகே நடந்துவந்த சிலுவைப் போரில் (Crusades) சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது தந்தையைக் காண பயணப்பட்டார். வீட்டிற்கு செல்லும் பயணத்தில், அவர் மத்தியதரைக் கடலில் (Mediterranean Sea) முஸ்லீம் கடற்கொள்ளையர்களால் (Muslim pirates) சிறைபிடிக்கப்பட்டார். அதில் காயமடைந்த அவர், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் தனது நாட்டு மக்களில் சிலரால் மீட்கப்பட்டு, வீட்டிற்கு செல்லும் தனது பயணத்தை முடித்தார்.

அதன்பிறகு, அவர் மற்றொரு புனித யாத்திரைக்கு புறப்பட்டார். இந்த முறை புனிதர் பெரிய யாக்கோபு கௌரவிக்கப்படும் இடமான, வடமேற்கு ஸ்பெய்ன் (Northwestern Spain) நாட்டிலுள்ள, "கலீசியா" (Galicia) பிராந்தியத்திலுள்ள, "சாண்டியாகோ டி காம்போஸ்டெலா" (Santiago de Compostela) நகருக்கு, நீண்ட மற்றும் ஆபத்தான ஆயிரம் மைல் பயணத்தில் ஏராளமான யாத்ரீகர்களை வழிநடத்தினார். இதற்குப் பிறகு, "நைட்ஸ் ஆஃப் செயிண்ட் ஜேம்ஸ்" (Knights of Saint James) என்றழைக்கப்படும், அப்போஸ்தலர் பெரிய யாக்கோபுவால் உருவாக்கப்பட்ட ஆன்மீக சபையினரால், இந்த யாத்திரை வழிப்பாதைகளில், அதிகாரப்பூர்வ வழிகாட்டிகளில் ஒருவராக அவர் நியமிக்கப்பட்டார். அவர், ஒன்பது தடவை, இந்த வழிப்பாதைகளில் வெற்றிகரமாக பயணங்களை நடத்தி முடித்தார்.

பின்னர், தமது உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், அவர் பத்தாவது பயணத்தை மேற்கொண்டு முடித்து, பிசா நகருக்குத் திரும்பினார். சிறிது காலத்திலேயே அவர் பிசா நகரில், உள்ள "சான் மார்டினோ" தேவாலயத்திற்கு (Church of San Martino) அருகில் தாம் தங்கியிருந்த அறையில் மரித்தார். அங்கு அவரது உடல் இன்றுவரை பாதுகாக்கப்படுகிறது.

புனிதர் ஆறாம் பவுல் ✠(St. Paul VI)MAY 29

† இன்றைய புனிதர் †
(மே 29)

✠ புனிதர் ஆறாம் பவுல் ✠
(St. Paul VI)
262ம் திருத்தந்தை:
(262nd Pope)

பிறப்பு: செப்டம்பர் 26, 1897
கொன்சேசியோ, ப்ரேசியா, இத்தாலி அரசு
(Concesio, Brescia, Kingdom of Italy)

இறப்பு: ஆகஸ்ட் 6, 1978 (வயது 80)
கன்டோல்ஃபோ கோட்டை, இத்தாலி
(Castel Gandolfo, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

திருப்பட்டங்கள்:
குருத்துவத் அருட்பொழிவு (Ordination) : மே 29, 1920
ஜாச்சிந்தோ காஜ்ஜியா (Giacinto Gaggia)

ஆயர்நிலை திருப்பொழிவு (Consecration): டிசம்பர் 12, 1954
யூஜீன் டிஸ்செரன்ட் (Eugène Tisserant)

கர்தினாலாக உயர்த்தப்பட்டது: டிசம்பர் 15, 1958
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்
(Pope Saint John XXIII)

முத்திப்பேறு பட்டம்: அக்டோபர் 19, 2014
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

புனிதர் பட்டம்: அக்டோபர் 14, 2018
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

நினைவுத் திருவிழா: மே 29

பாதுகாவல்:
மிலன் உயர்மறைமாவட்டம் (Archdiocese of Milan)
ஆறாம் பால் “போண்டிஃபிகல்” இன்ஸ்டிடியூட் (Paul VI Pontifical Institute)
இரண்டாம் வத்திக்கான் கவுன்சில் (Second Vatican Council)
ப்ரெஸ்ஸியா மறைமாவட்டம் (Diocese of Brescia)
“கான்செஸியோ” (Concesio)
“மெஜந்தா” (Magenta)
“பதர்னோ டுக்னானோ” (Paderno Dugnano)

திருத்தந்தை ஆறாம் பவுல், கி.பி. 1963ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரையான காலத்தின் கத்தோலிக்க திருச்சபையின் 262ம் திருத்தந்தையும், ரோம் ஆயரும் ஆவார். "ஜியோவன்னி பட்டிஸ்டா என்ரிக்கோ அன்டோனியோ மரிய மோன்டினி" (Giovanni Battista Enrico Antonio Maria Montini) என்னும் நீண்ட திருமுழுக்கு பெயர் கொண்ட இவர், 1962ம் ஆண்டு, கூட்டியிருந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை (Second Vatican Council) தொடர்ந்து நடத்தி நிறைவுக்குக் கொணர்ந்தார். மரபுவழி கிறிஸ்தவ சபையோடும், எதிர் திருச்சபைகளோடும் கத்தோலிக்க திருச்சபை நல்லுறவுகளை வளர்க்க இவர் பாடுபட்டார். இக்குறிக்கோளை அடைய இவர் பல திருச்சபைகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியதோடு அச்சபைகளோடு பல ஒப்பந்தங்களையும் செய்தார்.

2018ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 14ம் நாள் அன்று, வத்திக்கான் நகரின் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள், இவருக்கு புனிதர் பட்டம் அளித்தார். கடந்த 2019ம் ஆண்டுவரை, இவரின் நினைவுத் திருவிழா நாள், இவரின் பிறந்த நாளான செப்டம்பர் 26ம் தேதி நினைவுகூரப்பட்டது. 2020ம் ஆண்டுமுதல், இவரது நினைவுத் திருநாள் மே மாதம் 29ம் நாளன்று நினைவுகூரப்படும்.

திருத்தந்தை ஆவார் என்னும் எதிர்பார்ப்பு:
குருத்துவப் பட்டம் பெற்றதும் தந்தை “மோன்டினி" (Montini) வத்திக்கான் நகரத்தின் வெளியுறவுத் துறையில் 1922ம் ஆண்டு முதல் 1954ம் ஆண்டு வரை பணியாற்றினார். அப்போது மோன்டினியும், (Domenico Tardini) “டோமினிக்கோ டர்டினி” என்னும் மற்றொரு குருவும் அன்று ஆட்சியிலிருந்த திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் என்பவருக்கு மிக நெருக்கமான உடனுழைப்பாளர்களாகக் கருதப்பட்டார்கள். பன்னிரண்டாம் பயஸ், மோன்டினியை மிலான் நகரத்தின் பேராயராக உயர்த்தினார். வழக்கமாக, மிலான் உயர் மறைமாவட்டத்தின் ஆயர் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்படுவதுண்டு. ஆனால் பன்னிரண்டாம் பயசின் ஆட்சிக்காலம் முழுவதும் மோன்டினி கர்தினாலாக நியமிக்கப்படவில்லை. திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இறந்தபின்னர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்திமூன்றாம் யோவான் பேராயர் மோன்டினியை 1958ல் கர்தினால் நிலைக்கு உயர்த்தினார். 1962ல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் இறந்ததும் கர்தினால் மோன்டினி அவருக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் எதிர்பார்ப்பு வலுவாக இருந்தது.

பவுல் என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தல்:
கர்தினால் மோன்டினி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் "பவுல்" என்னும் பெயரைத் தெரிந்துகொண்டார். கி.பி. முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில் அயராது உழைத்த புனிதர் பவுலைப் போல, தாமும் கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க அழைக்கப்பட்டதாகப் புதிய திருத்தந்தை உணர்ந்ததால் "பவுல்" என்னும் பெயரைத் தமதாக்கிக் கொண்டார். அவரது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே அவர் எடுத்த முக்கியமான முடிவு, அவரது முன்னோடியாகிய இருபத்திமூன்றாம் யோவான் தொடங்கியிருந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் தாம் தொடர்ந்து நடத்தப்போவதாக அறிவித்ததுதான்.

1965ம் ஆண்டு, பொதுச்சங்கம் நிறைவுற்றதும் அச்சங்கம் எடுத்த முடிவுகளையும், பரிந்துரைத்த கருத்துகளையும், செயல்படுத்தும் பெரும் பொறுப்பு ஆறாம் பவுல் கைகளில் சேர்ந்தது. பொதுச்சங்கம் முன்மொழிந்த சீர்திருத்தங்கள் யாவை என்று வரையறுப்பதில் கருத்துவேறுபாடுகள் எழுந்த பின்னணியில் ஆறாம் பவுல் தீவிரப் போக்குகளைத் தவிர்த்து நடுநிலை நின்று செயல்பட்டார்.

அன்னை மரியாள் மீது பக்தி:
ஆறாம் பவுல், அன்னை மரியாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலங்களை அவர் சென்று சந்தித்து, அங்கு பல முறை உரையாற்றினார். அன்னை மரியாளைப் பற்றிச் சுற்றுமடல்கள் எழுதினார். அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன், மிலான் நகரின் ஆயராக இருந்த புனித அம்புரோசு என்பவரைப் போல, ஆறாம் பவுலும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது மரியாளைத் "திருச்சபையின் தாய்" என்னும் சிறப்புப் பெயரால் அழைத்து பெருமைப்படுத்தினார்.

உலக மக்களோடு உரையாடல்:
ஆறாம் பவுல் உலக மக்களோடும், கத்தோலிக்கரல்லாத பிற கிறிஸ்தவர்களோடும், பிற சமயத்தவரோடும், ஏன், கடவுள் நம்பிக்கையற்றவர்களோடு கூட உரையாடலில் ஈடுபட முன்வந்தார். அவருடைய அணுகுமுறை எந்த மனிதரையும் விலக்கிவைக்கவில்லை. துன்பத்தில் உழல்கின்ற மனித இனத்திற்குப் பணிசெய்யும் எளிய ஊழியனாகக் கடவுள் தம்மைத் தேர்ந்தெடுத்ததாக அவர் உணர்ந்தார். எனவே "மூன்றாம் உலகம்" (Third World) என்று அழைக்கப்பட்ட ஏழை நாடுகளின் வளர்ச்சிக்குச் செல்வம் படைத்த நாடுகள் மனமுவந்து உதவிட வேண்டும் என்று அவர் அடிக்கடி கோரிக்கை விடுத்தார். செயற்கை முறைகளைப் பயன்படுத்தி குடும்பக் கட்டுப்பாடு செய்வது அறநெறிக்கு மாறானது என்று திருத்தந்தை 1968ம் ஆண்டு, தாம் எழுதிய "மானிட உயிர்" (Humanae Vitae) என்னும் சுற்றுமடலில் போதித்தார். அது மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. ஆயினும் கிழக்கு ஐரோப்பா, தெற்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் அப்போதனைக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.

உலக நாடுகளில் நிகழ்ந்த பெரும் மாற்றங்கள்:
ஆறாம் பவுல் திருத்தந்தையாகப் பணியாற்றிய காலம் அரசியல், கலாச்சாரம், சமூக உறவுகள் ஆகிய பல துறைகளிலும் பெரிய மாற்றங்களைச் சந்தித்த காலம் ஆகும். 1960களில் வெடித்த மாணவர் போராட்டம், வியட்நாம் போருக்கு எதிர்ப்பு, மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்ட போராட்டங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றிற்கு நடுவே கத்தோலிக்க திருச்சபையின் போதனையை எடுத்துரைத்து, மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஆறாம் பவுல் ஆற்ற வேண்டியிருந்தது.

மரணம்:
திருத்தந்தை ஆறாம் பவுல் 1978ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 6ம் நாள், இயேசு கிறிஸ்து தோற்றம் மாறிய திருவிழாவன்று மரித்தார்.

புனித சிசினியுஸ், புனித அலெக்சாண்டர் (St.Sicinnius, St.Alexander). May 29

இன்றைய புனிதர்
2020-05-29
புனித சிசினியுஸ், புனித அலெக்சாண்டர் (St.Sicinnius, St.Alexander)
மறைசாட்சிகள் (Martyrius)
இறப்பு
29 மே 397
தென் டிரோல்(Südtirol), இத்தாலி

இவர்கள் மூவரும் தென் டிரோலிலுள்ள பேராலயத்தில் மறைசாட்சிகளானார்கள். இவர்கள் மூவருமே மிலான் பேராயர் அம்புரோஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டு, தமத்திருத்துவர்கள் என்றழைக்கப்பட்டார்கள். பிறகு ஆயர் விஜிலியஸ்(Vigilius) அவர்களால் மிஷினரியாக அனுப்பப்பட்டார்கள். மூன்று பேரும் இறைவனின் வார்த்தைகளை இடைவிடாமல் பரப்பினார்கள். கடவுளுக்கென்று நோனிஸ்பெர்க்(Nonsberg) என்ற ஊரில் ஓர் ஆலயம் எழுப்பினார்கள். இவர்களின் மறைபரப்பு பணிகளை பார்த்தவர்களும், இதனால் ஈர்க்கப்பட்டவர்களுள் ஏராளமானோர் மனந்திரும்பி இறைவனை நம்பினர். அவ்வாறு அவர்கள் தொடர்ந்து போதிக்கும்போது ஒருநாள், மூவரும் அறுவடை திருநாளை சிறப்பிக்கும்விதமாக ஆலயத்தில் கூடி ஜெபிக்கும் வேளையில், கடவுளை நம்பாதவர்களில் சிலர், அதிரடியாக ஆலயத்திற்குள் நுழைந்து மூவரையும் தாக்கினார்கள். அதில் அலெக்சாண்டர் உயிருடன் எரிக்கப்பட்டார். உயிருடன் எரித்த அலெக்சாண்டரின் சாம்பலை கொண்டுவந்து சிசினியுஸ், மார்டீரியசின் மேல் தூவி ஏளனம் செய்து, அவர்கள் இருவரையும் கொலை செய்தார்கள். இவ்வாறு மூவருமே கொடியவர்களின் அகோர செயல்களால், மறைசாட்சிகளாக அவ்வாலயத்திலேயே இறந்தார்கள்.


செபம்:
அன்புத் தந்தையே இறைவா! அன்று இன்றைய புனிதர்கள் மூவரும் மறைசாட்சிகளாக மரித்தார்கள். அவர்களைப்போல இன்றும் எத்தனையோ மக்கள், தங்கள் அன்றாட வாழ்வில் மறைசாட்சிகளாக மரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் இம்மண்ணில் செய்த பாவங்களை மன்னித்து, உம் வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

பீசா நகர் திருக்காட்சியாளர் போனா Bona von Pisa
பிறப்பு: 1156, பீசா Pisa, இத்தாலி
இறப்பு: 1208, பீசா, இத்தாலி
பாதுகாவல்: பீசா நகர்


கோர்ன்வால் நகர் அரசி எர்பின் Erbin von Cornwall
பிறப்பு: 410, இங்கிலாந்து
இறப்பு: 480 கோர்ன்வால், இங்கிலாந்து


பியோரே நகர் சபைநிறுவுநர் யோவாக்கிம் Joachim von Fiore
பிறப்பு: 1130, செலிகோ Celico, இத்தாலி
இறப்பு: 30 மார்ச் 1202, பியோரே Fiore, இத்தாலி
புனிதர்பட்டம்: 1346

தூய சிரில் (மே 29)

இன்றைய புனிதர் :
(29-05-2020)

தூய சிரில் (மே 29)
“நீங்கள் மனந்திரும்பி சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்த சிறு பிள்ளையைப் போல் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர்” (மத் 18: 4)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் சிரில் ஒரு கிறிஸ்தவத் தாய்க்கும், பிற தெய்வத்தை வழிபடும் ஒரு தந்தைக்கும் பிறந்தார். சிரிலின் தாயார் கிறிஸ்தவ நெறியில் சிறந்து விளங்கியவர். அதனால் அவர் தன்னுடைய அன்பு மகனுக்கு கிறிஸ்தவ நெறியை தொடக்க முதலே புகட்டி வந்தார். சிரிலும் தன்னுடைய தாய் தனக்குக் கற்றுக்கொடுத்த எல்லாவற்றையும் நல்ல முறையில் கற்றுக்கொண்டு கிறிஸ்துவின்மீது ஆழமான விசுவாசம் கொண்டு வாழ்ந்து வந்தார்.

சிரில், கிறிஸ்தவ நெறியின்மீது ஆழமான பற்றுகொண்டு வாழ்ந்து வந்தது அவருடைய தந்தைக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர் சிரிலை பலவாறாக சித்திரவதைப் படுத்தினார்; நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு உரோமைக் கடவுளை வழிபடு என்று கட்டாயப்படுத்தினார். ஆனால் சிரில் எதற்கும் பயப்படாமல் கிறிஸ்துவின் மீது மிக உறுதியாக நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார். இதனால் கடுப்பான சிரிலின் தந்தை வீட்டை விட்டே துரத்திவிட்டார். அப்போது அவர் தன் தந்தையைப் பார்த்துச் சொன்னார், “இப்போது நான் இழப்பதோ மிகக் குறைவுதான். ஆனால் எதிர்காலத்தில் விண்ணகத்தில் நான் பெறக்கூடிய கைமாறோ மிகுதியாகும்”. இவ்வாறு சொல்லிவிட்டு அவர் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இதற்கிடையில் சிரில், கிறிஸ்தவ விசுவாசகத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கின்றார் என்ற செய்தி செசாரியாவின் ஆளுநனுக்குத் தெரிய வந்தது. அவன் படைவீரர்களை அனுப்பி, சிரிலை பிடித்து வரச் சொன்னான். அவரைப் பிடிக்க வந்த படைவீரர்கள், சிரில் வயதில் மிகவும் சிறியவராக இருப்பதைப் பார்த்துவிட்டு அவரிடம், “நீ தயதுசெய்து கிறிஸ்தவை மறுதலித்துவிடு, இல்லையென்றால் நீ பலவாறாக சித்ரவதை செய்யப்படுவாய்” என்றார்கள். இதைக் கேட்டு சிரில் பயப்படாமல் மிகவும் மனவுறுதியோடு இருந்தார். பின்னர் அவர் ஆளுநன் முன்பாக இழுத்துச் செல்லப்பட்டார்.

ஆளுநன் அவரைப் பார்த்துவிட்டு, “உனக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கிறேன், நீ கிறிஸ்துவை மறுதலித்து விடு. அப்படிச் செய்தால் உன்னை நான் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். இல்லையென்று சொன்னால், நீ வாளுக்கோ அல்லது தீயிக்கோ இரையாவாய்” என்றார். ஆளுநன் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு சிறிதும் பயப்படாமல், “நான் கிறிஸ்துவுக்காக உயிர் துறப்பேனோ தவிர, உரோமைக் கடவுளை ஒருபோதும் வணங்க மாட்டேன். அதற்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை” என்றார்.

இதைக் கேட்டு ஆளுநன் கடுப்பானான். பின்னர் படைவீரன் ஒருவனிடமிருந்து வாளை வாங்கி சிரிலை வெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறு சிரில் தன்னுடைய சிறி வயதில் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி மறைசாட்சியானார்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய சிரிலின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

. 1. ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்தல்

தூய சிரிலின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது நம் மனதில் தோன்றக்கூடிய சிந்தனை, நாமும் ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழவேண்டும் என்பதுதான். சிரில் தன்னுடைய சிறுவதிலே ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து அவருக்காகத் தன் உயிரையும் தந்தார். வளர்ந்து பெரியவர்களாக இருக்கக்கூடிய நாம் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா கண்டத்தில் ஜான் வார் (John Warr) என்ற செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவருடைய விருப்பமெல்லாம் முடிந்தமட்டும் ஆண்டவரின் நற்செய்தியை தனக்குத் தெரிந்தவர்களுக்கு அறிவிக்கவேண்டும் என்பதுதான். ஜான் வாருக்குக் கீழ் சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்தான். ஒரு சமயம் அவன் ஒரு திருட்டு வேலையில் ஈடுபட்டு, ஜான் வாரிடம் கையும் மெய்யுமாகப் பிடிபட்டான். அதற்காக அவன் மன்னிப்பும் கேட்டான். அப்போது ஜான் வார் அவரிடம், “நீ மன்னிப்புக் கேட்பது இருக்கட்டும். ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வாயா?” என்று கேட்டார். அவனும் சரியென்று சொல்ல, அவனுக்கு அவர் ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைத்தார்.

இதனால் அவன் தொடப்பட்டு, இந்திய நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்க வந்தான். இங்கே வந்து பலரும் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிந்துகொள்ள தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுத்தான். அந்தச் சிறுவன்தான் வில்லியம் காரே (William Carey) என்பவராகும். இவர்தான் இந்தியாவில் நவீன காலத்தின் நற்செய்தி அறிவிப்பின் தந்தையாக இருக்கின்றார்.

ஜான் வாரின் சாட்சிய வாழ்வு வில்லியம் காரேயை கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வைத்தது. வில்லியம் காரியின் சாட்சிய வாழ்வோ பலரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வைத்தது. நம்முடைய வாழ்வும் பலரை கிறிஸ்துவை ஏற்றுகொள்ள செய்வதுதான் உண்மையான சாட்சிய வாழ்வாக இருக்கும்.

ஆகவே, தூய சிரிலின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

28 May 2020

மார்கரெட் போல் (1473-1541) May 28

மே 28 

மார்கரெட் போல் (1473-1541)
இவர் இங்கிலாந்தில் பிறந்தவர். இவர் இங்கிலாந்தை ஆண்டுவந்த நான்காம் எட்வர்ட் என்பவருக்கு நெருங்கிய சொந்தம்.

இவர் ரெஜினால்ட் போல் என்பவரை மணந்தார். இறைவன் இவர்களுக்கு ஐந்து குழந்தைகளைக் கொடுத்து ஆசி வழங்கினார். இப்படி இவர்களுடைய இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த  வேளையில், இவரது கணவர் திடீரென இறந்து போனார். இதனால் இவர் கைம்பெண் ஆனார்.

தன் கணவருடைய இறப்பிற்குப் பிறகு இவர்  தன்னுடைய குழந்தைகளை இறை நம்பிக்கையிலும் பிறர் அன்பிலும் சிறந்த விதமாய் வளர்த்து வந்தார். இதற்கு பின்பு இவர் சாலிபரி என்ற இடத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இவ்வேளையில் இங்கிலாந்தை ஆண்டு வந்த எட்டாம் ஹென்றி என்ற மன்னர் தன்னுடைய மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணந்தார். இத்தவற்றை மார்கரெட் போல் சுட்டிக் காட்டியதால், மன்னர் இவரைக் கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தார். 

பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர், மன்னரால் தலை வெட்டிக் கொல்லப்பட்டார். இவருக்கு திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ 1886 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுத்தார்.

.

மான்ட்ஜூக்ஸ் நகர புனிதர் பெர்னார்ட் May 28

† இன்றைய புனிதர் †
(மே 28)

✠ மான்ட்ஜூக்ஸ் நகர புனிதர் பெர்னார்ட் ✠
(St. Bernard of Montjoux)
இத்தாலிய துறவி, மறைப்பணியாளர், புகழ்பெற்ற (Hospice) எனப்படும் நல்வாழ்வு சேவை மையம் மற்றும் மடத்தின் நிறுவனர்:
(Italian monk, Religious, and the Founder of the famed Hospice and Monastery)

பிறப்பு: கி.பி 1020
சேட்டோ டி மெந்தன், சவோய் கவுண்டி, ஆர்லஸ் இராச்சியம்
(Château de Menthon, County of Savoy, Kingdom of Arles)

இறப்பு: ஜூன் 1081
நோவாரா இம்பீரியல் சுதந்திர நகரம், தூய ரோமானியப் பேரரசு
(The Imperial Free City of Novara, Holy Roman Empire)

ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை (Catholic Church)
(புனித அகஸ்டினின் சபை உறுப்பினர்கள்) (Canons Regular of St. Augustine)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: கி.பி 1681
திருத்தந்தை பதினோராம் இன்னசென்ட்
(Pope Innocent XI)

நினைவுத் திருநாள்: மே 28

பாதுகாவல்:
மலையேறுபவர்கள், பனிச்சறுக்கு, பனிச்சறுக்குப் பலகை, மலையேறுபவர்கள் பின்னால் சுமக்கும் சுமை மற்றும் ஆல்ப்ஸ் மலை

மான்ட்ஜூக்ஸ் நகர புனிதர் பெர்னார்ட், ஒரு இத்தாலிய துறவியும், மறைப்பணியாளருமாவார். இவர், (Hospice) எனப்படும் புகழ்பெற்ற நல்வாழ்வு மையம் மற்றும் துறவு மடத்தின் நிறுவனரும் ஆவார். இது, கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டு காலமாக, மேற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் அடைக்கலமாகும் மலையேறும் பயணிகளை மீட்கும் பணி சேவை செய்திருக்கிறது. இவர்களது மீட்புப் பணி முழுதுமே, இவர்களது சபையினராலேயே செய்யப்பட்டு வந்துள்ளது. குளிர்கால புயல்களின் போது மீட்புப் பணிக்காக இவர் வளர்த்துவந்த புகழ்பெற்ற ஒருவகை இன நாய்கள், இவற்றின் சிறப்புக்காகவே, இவரது பெயராலேயே - "புனித பெர்னார்ட் நாய்கள்" (St. Bernard dogs) என்று அழைக்கப்படுகின்றன.

அக்கால "ஆர்லெஸ்" (Kingdom of Arles) இராச்சியத்தின் ஒரு பகுதியான "கௌன்டி சவோய்" (County of Savoy) எனப்படும் தூய ரோம மாநிலத்தின் "சேட்டோ டி மெந்தன்" (Château de Menthon) எனும் நகரில் பிறந்த பெர்னார்ட், ஒரு பணக்கார மற்றும் உன்னத குடும்பத்திலிருந்து வந்தவர் ஆவார். பாரிஸ் (Paris) நகரில் தமது முழுமையான கல்வியைப் பெற்றார். அவர் இளமைப் பருவத்தை அடைந்ததும், திருச்சபையின் சேவைக்காக தன்னை அர்ப்பணிக்க முடிவுசெய்தார். தனது தந்தை ஏற்பாடு செய்த கெளரவமான திருமணத்தை மறுத்துவிட்டார்.
(பிரபலமான புராணக்கதை ஓன்று, இவருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திற்கு முந்தைய இரவில் அவர் கோட்டையிலிருந்து வெளியேறினார் என்றும், ஜன்னலிலிருந்து தன்னைத் தூக்கி எறிந்து, தரையிலிருந்து சுமார் 40 அடி உயரத்தில் கோட்டையிலிருந்து பறக்கும்போது, தேவதூதர்களால் பிடிக்கப்பட்டு மெதுவாக, பாதுகாப்பாக இறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளில் (Italian Alps) உள்ள இருமொழிப் பகுதியான "ஆஸ்டா பள்ளத்தாக்கின்" (Aosta Valley) "ஆஸ்டா" (Aosta) நகரின் தலைமை திருத்தொண்டரான (Archdeacon of Aosta) "பீட்டரின்" (Peter) வழிகாட்டுதலின் கீழ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவருடைய வழிகாட்டுதலின் கீழ் அவர் வேகமாக முன்னேறினார். ஒரு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட பெர்னார்ட், மலை கிராமங்களில் மிஷனரியாக பணியாற்றினார். பின்னர், அவரது கற்றல் மற்றும் நல்லொழுக்கம் காரணமாக, அவர் தனது ஆலய தலைமை திருத்தொண்டராக நியமிக்கப்பட்டார். அவருக்கு நேரடியாக ஆயரின் கீழே, மறைமாவட்டத்தின் அதிகார பொறுப்புகளை வழங்கினர்.

42 ஆண்டுகளாக, அவர் தொடர்ந்து இந்த மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தார். இத்தாலியின் வடமேற்குப் பிராந்தியமான லோம்பார்டியின் பல மண்டலங்களுக்குள் கூட, ஏராளமான மாற்றங்களைச் செய்தார். மற்றும் பல அற்புதங்களையும் செய்தார். புனித பெர்னார்ட்டின் வாழ்க்கையின் கடைசி செயல் இரண்டு பிரபுக்களின் இடையே இருந்த வேற்றுமைகளை அகற்றிச் சமரச நல்லிணக்கமாகும். அவர்களிடையே இருந்த சண்டை ஒரு அபாயகரமான அச்சுறுத்தியதலை விளைவிக்கக் கூடியதாய் இருந்தது.

அவர் கி.பி. 1081ம் ஆண்டு, ஜூன் மாதம், நோவாரா இம்பீரியல் சுதந்திர நகரில் இறந்தார். புனித லாரன்ஸ் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

நியூயார்க் (New York) நகர "சரனாக்" (Saranac Lake) ஏரியில் உள்ள புனித பெர்னார்ட் கத்தோலிக்க தேவாலயம் (Saint Bernard's Catholic Church) அவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.