புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

08 May 2020

டரென்டைஸ் நகர் புனிதர் பீட்டர் May 8

† இன்றைய புனிதர் †
(மே 8)

✠ டரென்டைஸ் நகர் புனிதர் பீட்டர் ✠
(St. Peter of Tarentaise)
டரென்டைஸ் பேராயர்:
(Archbishop of Tarentaise)

பிறப்பு: கி.பி. 1102
புனித மௌரிஸ்-இ'எக்ஸில், ஃபிரான்ஸ்
(Saint-Maurice-l'Exil, France)

இறப்பு: செப்டம்பர் 14, 1174 (வயது 72)
பெல்லேவாக்ஸ் துறவுமடம், ஃபிரான்ஸ்
(Bellevaux Abbey, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: மே 10, 1191
திருத்தந்தை மூன்றாம் செலேஸ்டின்
(Pope Celestine III)

நினைவுத் திருநாள்: மே 8

பாதுகாவல்:
டரென்டைஸ் (Tarentaise)

புனிதர் பீட்டர் (Saint Peter of Tarentaise) ஒரு ஃபிரெஞ்ச் ரோமன் கத்தோலிக்க துறவு மடாதிபதியும் (French Roman Catholic abbot), கி.பி. 1141ம் ஆண்டு முதல், தமது மரணம் வரை “டரென்டைஸ்” (Tarentaise) உயர்மறைமாவட்ட பேராயராக பணியாற்றியவருமாவார்.

அவரது குழந்தை பருவத்திலும், இளமை பருவத்திலும் அவர் பிறருக்கு முன்மாதிரியாக வாழ்ந்தார். அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் அனைவருமே மத வாழ்க்கையில் அவரைப் பின்பற்றினர். அவர் ஒரு புதிய துறவு மடத்தின் மடாதிபதியாக பணியாற்றினார். புனிதர் பெர்னார்ட் (Saint Bernard of Clairvaux) உள்ளிட்ட உயர் பொருப்பிலிருந்தவர்கள் இவரை உயர் பதவிகளை ஏற்குமாறு வற்புறுத்தினர். ஆனால் இவர் அவற்றையெல்லாம் மறுத்தார். ஆனால் அவரது இதயம், அவரது எளிய மற்றும் பக்தியான வாழ்க்கைக்காக, ஒரு துறவி என்ற இழப்புக்காக துபுற்றது. அவர் ஒருமுறை கான்வென்ட் வரை ஓடி வந்து, மறைந்து வாழ முயற்சித்தார். அவர் ஊழல் மற்றும் ஒழுக்கங்கெட்ட குருக்கள் அனைவரையும் அகற்றினார். ஏழைகளுக்கும், வீடற்றவர்களுக்கும் உதவும் நல்லெண்ணத்தில், அவர் கடுமையான வானிலைகளின்போது, தனது சொந்த வாழ்க்கையை ஆபத்திற்குள்ளாக்கி இருந்துள்ளார்.

பியர்ரே (Pierre) எனும் இயற்பெயர் கொண்ட பீட்டர், கி.பி. 1102ம் ஆண்டு, ஃபிரான்ஸ் நாட்டின் "ரோன்-ஆல்ப்ஸ்" மலைகளின் (Rhône-Alpes mountains) நகர்ப் பகுதியொன்றில் பிறந்தார். "சிஸ்டர்சியன் துறவியர் சபையில்" (Cistercian monastic order) இணைந்த இவர், கி.பி. 1132ம் ஆண்டு, "டமீ" (Tamié) என்னுமிடத்திலுள்ள துறவு மடத்தின் மடாதிபதியானார்.

1142ம் ஆண்டு, "டரென்டைஸ்" உயர் மறை மாவட்டத்தின் (Archbishop of Tarentaise) பேராயர் பதவியை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். ஒரு துறவு மடாதிபதியாக தாம் கற்றுக்கொண்ட "சிஸ்டர்சியன் கொள்கைகளை" (Cistercian principles) சிதைந்து கொண்டிருந்த தமது மறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தினார். அதில் வெற்றியும் கண்டார்.

இவர் ஸ்விட்சர்லாந்து (Switzerland) மற்றும் இத்தாலி (Italy) நாடுகளினிடையே பயணம் செய்பவர்களின் நலன்களிலும் அக்கறை காட்டினார். பொதுவாகவே, பீட்டர் தமது ஆயர் பதவியினால் மகிழ்ச்சியுடன் காணப்படவில்லை. அவர் அடிக்கடி காணாமலும் போனார். இடையில் ஒரு வருடம் (1155) அவர் காணாமல் போய் ஸ்விட்சர்லாந்தின் ஒரு தொலைதூர துறவியர் மடத்தில் காணப்பட்டார் என்பர்.

ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் ஏழாம் லூயிஸ் (King Louis VII of France) மற்றும் இங்கிலாந்தின் அரசன் இரண்டாம் ஹென்றி (King Henry II of England) ஆகியோரிடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டரின் (Pope Alexander III) சார்பில் பீட்டர் கலந்துகொண்டார். ஒருமுறை அதேபோன்றதொரு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு திரும்புகையில், ஃபிரான்ஸின் "பெல்லேவாக்ஸ்" (Monastery at Bellevaux) துறவு மடத்தில் மரித்தார்.

No comments:

Post a Comment