இன்றைய புனிதர் :
(10-05-2020)
புனித. அவிலா அருளப்பர் (St.John of Avila)
அண்டலூசியா திருத்தூதர்(Apostle of Andalusien)
பிறப்பு
1500
ஸ்பெயின்
இறப்பு
10 மே 1569
மோண்டில்லா (Montilla), ஸ்பெயின்
31 மே 1970
திருத்தந்தை ஆறாம் பவுல்
இவரின் தந்தை ஓர் யூத குலத்தை சேர்ந்தவர். இதனால் யூதரான அருளப்பர் பள்ளியிலும், கல்லூரியிலும் இருந்து அவ்வப்போது வெளியேற்றப்பட்டார். மாணவர்களுக்கான உரிமைகள் அனைத்தும் இவரிடமிருந்து பறிக்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவில் மிஷினரியாக பணியாற்ற விரும்பி இறையியலை முறைப்படி கற்றார். ஆனால் இவரால் இத்திட்டத்தை நிறைவேற்றாமல் போகவே, ஸ்பெயினில் இத்திட்டத்தை நிறைவேற்றினார்.
ஏறக்குறைய 1530 லிருந்து அருளப்பர் செவிலா நகர் (Sevilla) ஆயருடன் இணைந்து மறைபரப்பு பணியாளராக அண்டலூசியாவில் பணியாற்றினார். இவரது மறைபரப்பு பணியால் கவரப்பட்ட பலர் அவரை பின் தொடர்ந்தனர். பலரும் இவர் உரைத்த இறைவாக்குகளை கேட்டு தங்களின் தாறுமாறான வாழ்வை மாற்றிக் கொண்டனர். இவரின் எளிமையான வாழ்வும், போதனையும் எல்லோரையும் தன்னிடத்தில் ஈர்த்தது. இக்னேசியஸ் லயோலா தொடங்கிய இயேசு சபைக்கு அருளப்பர் பல விதங்களில் உதவி செய்தார். ஆனால் அருளப்பரிடமிருந்து உதவிகளை பெற்றுக் கொண்ட இயேசு சபை சகோதரர்கள், மத அடிப்படையில் அவருக்கு பல தொந்தரவுகளை கொடுத்தனர். அருளப்பரை மிகவும் துன்புறுத்தினர். இறை இயேசுவின் மறைபோதனை பணியை திறம்பட ஆற்றிய அருளப்பர் ஏறக்குறைய 20 ஆண்டுகள் தீராத நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இறந்த இவரின் உடலை இயேசு சபையினர் அவர்களின் மடத்திலிருந்த கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி தர மறுத்துவிட்டனர். இதனால் மாண்டிலாவில் இருந்த இயேசு சபைக்கு சொந்தமான ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
இவர் எழுதிய பல கடிதங்களும், புத்தகங்களும் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திருவருட்சாதனங்களைப் பற்றியும், அன்னை மரியாவைப் பற்றியும் இவர் எழுதிய 18 நூல்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்நூல்களை வாசிக்கும்போதே அவிலா அருளப்பரின் மிக எளிமையான வாழ்வையும், அவரின் போதனைகளையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இவர் ஸ்பெயின் நாடு முழுவதிலும் சென்று மிஷினரியாக பணியாற்றினார். சிறப்பாக இவர் அண்டலூசியாவின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்டார்.
செபம்:
எங்களோடு இருந்து எம்மை நாளும் வழிநடத்திவரும் எல்லாம் வல்ல இறைவா! புனித அவிலா அருளப்பரின் மறைபோதனையின் வழியாக ஏராளமான மக்களை உம்பால் ஈர்த்தீர். இப்புனிதரின் வழியாக நீர் உம் மக்களோடு பேசினீர். உமக்கு எதிராக செயல்படும் ஒவ்வொருவரையும் நீர் மனந்திருப்பி, உமது சாட்சிகளாக வாழ வரம் தாரும்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
No comments:
Post a Comment