புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

16 June 2020

புனித லுட்கார்திஸ்(1182-1246) June 16

ஜூன் 16 

புனித லுட்கார்திஸ்
(1182-1246)
இவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர். இவருடைய குடும்பம் மிகவும் வறிய குடும்பம். எந்தளவுக்கு என்றால், இவருடைய பெற்றோர் இவரை ஒருவருக்கு மணமுடித்து கொடுக்கும்போது, மணமகன் வீட்டார் கேட்ட வரதட்சனையைக் கொடுக்க முடியாமல் போகவே, இவரை இவரது பெற்றோர்  புனித பெனடிக்ட் சபையில் சேர்த்தனர்.

இந்தக் காரணத்தால் துறவற வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் இவர் வாழ்ந்து வந்தார். இவருக்கு இருபதாவது வயது நடக்கும் பொழுது, ஆண்டவருடைய காட்சி கிடைத்தது. அக்காட்சி இவரைப் புதிய வாழ்க்கை வாழ அழைத்தது. புனித கன்னி மரியாவும் இவருக்குக் காட்சி தந்து, இவரைத் தேற்றினார். இதனால் இவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறியது.

இதற்குப் பிறகு இவர் நோயாளர்களை நலப்படுத்தும் ஆற்றலையும், எதிர்காலத்தில் நடக்கக்கூடியதை முன்கூட்டியே அறிவிக்கக் கூடிய வல்லமையும் பெற்றார்.

சிலகாலம் புனித பெனடிக்ட் சபையிலிருந்த இவர், அதன்பிறகு சிஸ்டர்சியன் துறவற சபைகள் சேர்ந்து, இறுதிவரைக்கும் அங்கேயே இருந்து, இறைவேண்டலிலும் நோன்பிலும் பிறரன்புச் செயல்களிலும் தன் வாழ்நாள்களைச் செலவழித்து வந்தார்.

இவருடைய வாழ்வின் கடைசி பதினோரு ஆண்டுகள் கண்பார்வையின்றியே கழித்தன.  அப்படி இருந்தும் இவர் ஆண்டவரை இகழாமல், அவரைப் புகழ்ந்து கொண்டே இருந்தார்.

இவர் தன்னுடைய அறுபத்து நான்காவது வயதில் இறையடி சேர்ந்தார்.

No comments:

Post a Comment