ஜூன் 17
புனித ஹார்வே (521-556)
இவர் பிரிட்டனியில் பிறந்தவர். பிறவியிலேயே பார்வையற்றவரான இவர் பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே இவருடைய தந்தை இறந்துபோனார். இதனால் இவர் தன்னுடைய தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
இவருக்கு எட்டு வயது நடக்கும் போது, இவருடைய தாய் இவரை அர்ஜியன் என்ற துறவியிடம் ஒப்படைத்துவிட்டு அவரும் துறவியானார். இதனால் இவர் அர்ஜியன் என்ற துறவியோடு தங்கி இருந்து, அவர் கற்றுக்கொடுத்த பாடங்களை கற்றுவந்தார்.
அர்ஜியன் என்ற துறவியிடம் கல்வி கற்ற பிறகு, இவர் தன்னுடைய உறவினரான உர்ஜல் என்பவர் நடத்தி வந்த துறவுமடத்தில் சேர்ந்தார். அவர் ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துவிட, இவர் அந்த மடத்தின் தலைவரானார்.
துறவுமடத்தின் தலைவரான பின்பு இவர் தன்னுடைய சீடரின் உதவியுடன்
பல இடங்களுக்குச் சென்று போதித்தார். ஒரு சில நேரங்களில் இவர் தவளைகளுக்குக் கட்டளையிடும்போது அவை சத்தமிடாமல் அமைதியாக இருந்தன. இன்னும் ஒரு சில நேரங்களில் இவருக்கு ஓநாய்கூட வழிவிட்டன. அந்த அளவுக்கு இவர் வல்லமை நிறைந்தவராக இருந்தார்.
இவர் பார்வையற்றவர்களுக்குப் பாதுகாவலராக இருக்கிறார். பார்வை குறைபாடு உள்ளவர்கள் இவரிடம் வேண்டினால், நல்ல பார்வை கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது.
இவர் கிபி 556 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
No comments:
Post a Comment