ஜூன் 25
புனித தோமினிக் ஹெனாரஸ் (1764-1838)
இவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.
சிறுவயதிலேயே கடவுளின் அழைப்பை உணர்ந்த இவர், தோமிக்கன் சபையில் சேர்ந்து, 1790 ஆம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார். ஒரு சில ஆண்டுகளிலேயே இவர் ஆயராகவும் திருப்பொழிவு செய்யப்பட்டார்.
இதன்பிறகு இவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு வந்து, அங்கிருந்து வட வியட்நாமிற்கு வந்து, கடவுளின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார்.
வியட்நாமில் இருந்த மன்னன், யாரெல்லாம் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைத்தார்களோ அவர்களைப் பிடித்துச் சிறையில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்து வந்தான். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்போரைத் தன்னிடம் பிடித்துத் தருவோருக்குத் தக்க சன்மானம் தருவதாகவும் அறிவித்தான்.
இதனால் வியட்நாமில் இருந்த மக்கள், மன்னன் கொடுப்பதாகச் சொன்ன பணத்திற்கு ஆசைப்பட்டு, கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்த அருள்பணியாளர்களையும் ஆயர்களையும் மன்னனிடம் பிடித்துக் கொண்டார்கள். அப்படித்தான் மக்கள் ஆயர் தோமினிக் ஹெனாரஸையும் மன்னனிடம் பிடித்துத் தந்தார்கள்.
மன்னனோ ஆயர் தோமினிக் ஹெனாரஸை 1838 ஆம் ஆண்டு, ஜுன் 25 ஆம் நாள், 117 வியட்நாம் மக்களோடு தலையை வெட்டிக் கொன்று போட்டான்.
இவருக்கும் இவரோடு கிறிஸ்துவுக்காக இறந்தவர்களுக்கும் புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1988 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுத்தார்
No comments:
Post a Comment