இன்றைய புனிதர் :
(25-06-2020)
புனித.டோரட்டீ (St.Dorothea of Montau)
பிறப்பு
6 பிப்ரவரி 1347
ஒஸ்ட்புராய்சன், Germany
இறப்பு
25 ஜூன் 1394
மரியன்வேர்டர், Marienwerder
இவர் ஓர் விவசாய குடும்பத்தில் மகளாக பிறந்தார். தனது 16 வயதில் திருமணம் செய்தார். திருமண வாழ்வில் ஓர் எடுத்துக்காட்டான வாழ்வு வந்தார். கணவருக்கு நல்ல மனைவியாகவும், குழந்தைகளுக்கு அன்பான, பண்பான தாயாக திகழ்ந்தார். தனது 44 ஆம் வயதிலேயே தன் கணவர் இறந்ததால், தான் பிறந்த ஊரில் இருந்த ஆலய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மரியன்வேர்டர்(Marienwerder) என்ற ஊரிலிருந்து பேராலயத்தில் Reklusin பணியையும், ஆன்மீக வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். உதவி கேட்டு வந்த எல்லா தரப்பு மக்களுக்கும் தன்னால் இயன்ற உதவியை செய்து, ஏராளமான மக்களின் வாழ்வில் ஒளியேற்றினார். இவர் இறைவனிடமிருந்து பலமுறை தரிசனம் பெற்றதாக இவரின் பாவசங்கீர்த்தன ஆன்ம குரு கூறுகிறார். மனதாலும், உடலாலும் துன்பப்படுகிறவர்களும், தேர்வில் வெற்றி பெறுவதற்கும் இவர் துணையாக இருந்து இறைவனிடம் பரிந்து பேசினார். இவைகளில் எப்போதும் நற்பலன்களையும் பெற்றார். இவர் பொறுமையின் சிகரம் என்றழைக்கப்பட்டார்.
செபம்:
அன்பான இறைவா! இன்றைய குடும்பவாழ்வில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரையும் உம் பதம் அர்ப்பணிக்கின்றோம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அன்பு செய்து, மன்னித்து, ஏற்றுக்கொண்டு வாழ நீர் அருள்புரியும், திருக்குடும்பத்தைபோல எமது குடும்பங்களும் திகழ நீர் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (25-06-2020)
Blessed Dorothy of Montau
Peasant, one of nine children. Married at age 17 a wealthy swordsmith named Adalbert or Albrecht of Prague (in modern Czech Republic). Bore nine children, only one of whom survived; the girl became a Benedictine nun. Difficult marriage; she suffered abuse from her husband, but she encouraged him in his trade and his faith. Went on a pilgrimage to Rome, Italy in 1389, fell ill, and was forced to stay for many weeks, during which time her husband died at home. Widow. Nun at Marienwerser. Great devotion to the Blessed Sacrament; the absorption of the Eucharist "agitated her like boiling water; had she been allowed, she would willingly have torn the host from the priest's hands to bring it to her mouth...." Lived in a 6x9 foot cell. Visionary. Prophetess. Miracle worker.
Born :
6 February 1347 at Gross Montau, Prussia, one of the states of the Teutonic Knights (modern Matowy Wielkie, Poland)
Died :
25 January 1394 at Marienwerder, Kwidzyn, Prussia (in modern Poland) of natural causes.
Beatified :
9 January 1976 by Pope Paul VI (cultus confirmed)
Patronage :
brides
• death of children
• difficult marriages
• parents of large families
• widows
• Pomerania
• Prussia
---JDH---Jesus the Divine Healer---
No comments:
Post a Comment