புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

24 June 2020

திருமுழுக்கு யோவானின் பிறப்பு (The birthday of John the Baptist) June 24

(24-06-2020) 

திருமுழுக்கு யோவானின் பிறப்பு (The birthday of John the Baptist)
இவரது பிறப்பை லூக்கா நற்செய்தியாளர் முன்னறிவித்தார். யோவானின் தாய் எலிசபெத் கருவுற இயலாதவர். இவரும் செக்கரியாவும் வயது முதிர்ந்தவர்கள். வானதூதர் யோவானின் பிறப்பை செக்கரியாவிடம் அறிவித்தார்கள். ஆனால் அவர் ஆண்டவரின் செயலை நம்பவில்லை. அது நிறைவேறும் வரை அவர் பேச இயலாதவராக தண்டனை பெற்றார். கருவுற்றிருந்த எலிசபெத்தை அவரின் உறவினரும் தெய்வ வல்லமையால் கருவுற்றருந்தவருமான மரியா சந்தித்தார். மலை நாடுகளை கடந்து முதன்முறையாக மறைபரப்பு பணியாளராக எலிசபெத்திடம் நற்செய்தி அறிவித்தார். எலிசபெத் மரியாவின் வாழ்த்துரையை கேட்ட நேரத்தில், அவள் வயிற்றினுள் இருந்த குழந்தை பேருவகையால் துள்ளிற்று. (லூக். 1:42-44). மறைவல்லுநர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் மீட்பர் இயேசுவின் வருகையினால் தாயின் வயிற்றிலிருந்த யோவான் பாவ மீட்பு பெற்று புனிதராக்கப்பட்டார் என்பார்கள். திருமுழுக்கு யோவான் பிறந்தபின் இறைவனால் குறிக்கப்பட்ட நாட்களில் பாலை நிலத்தை நாடி மீட்பரின் வழியை ஆயத்தம் செய்யவும், பாவ மன்னிப்பு அடைய மனம் மாறி திருமுழுக்கு பெறவும், மக்களை ஆயத்தம் செய்கிறார். (மாற்கு 1:2-43) 
திருமுழுக்கு பெற வந்த கூட்டத்தினரில் ஒருவராக மீட்பர் இயேசுவும் வருகிறார். தாமும் திருமுழுக்கு பெற வேண்டும் என்று இயேசு கேட்கும்போது யோவான் பதறி போகின்றார். இவரின் ஆழமான தாழ்ச்சியும் இறை இயேசுவிடம் கொண்டிருந்த வணக்கமும் இவரது சொற்களில் மிளிர்கின்றன. அவருடைய மிதியடிவாரை அவிழ்க்க கூட எனக்கு தகுதியில்லை (மாற்கு 1:7). யோவான் நற்செய்தியாளரும் இதே மனப்பான்மையை வெளிக்கொணருகின்றார். எனக்கு பின்வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர். ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரை பற்றியே சொன்னேன் என உரத்த குரலில் சான்று பகிர்ந்தார். (யோவான் 1:5) 

யோவானின் சீடர்கள் ரபி, யோர்தான் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே, நீரும் அவரை குறித்து சான்று பகர்ந்தீரே, இப்போது அவரும் திருமுழுக்கு கொடுக்கிறார். எல்லோரும் அவரிடம் செல்கின்றனர் என்றார்கள் அப்போதும் யோவானின் பதில் அவரது ஆழமான ஆன்மீகத்தை காட்டுகின்றது. "நான் மெசியா அல்லேன், மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன் என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள். மணமகள் மணமகனுக்கே உரியவர். அவரது செல்வாக்கு பெருக வேண்டும். எனது செல்வாக்கு மறைய வேண்டும் (யோவான் 3:25-30). இவருடைய சீடர் இவருக்கு மிகப்பெரிய இறைவாக்கினருக்குரிய மதிப்பு கொடுத்து நடந்து வந்தபோது, நான் மறையவேண்டும், அவர் வளரவேண்டும் என்ற பதில் அவரது ஆழமான தாழ்ச்சியை வெளிக்கொணர்கிறது. 

இவ்வாறு எந்த அளவுக்கு தம்மையே அவர் தாழ்த்தினாரோ அந்த அளவுக்கு அவரை எல்லார் முன்னிலையிலும் இயேசு வானளாவ உயர்த்திவிட்டார். இறைவனின் பணியை செய்யும்போது இவரிடத்தில் வெளிப்பட்ட மனத்துணிவையும், முகத்தாட்சண்யம் இன்மையும் நாம் நினைவு கூர்வோம். இவர்தம் உயிரை நீதிக்காக தியாகம் செய்கின்றார். யோவான் ஏரோதிடம், நீர் அவளை (பிலிப்பின் மனைவியை) வைத்திருப்பது முறையன்று என்று சொல்லி வந்தார். இதன் விளைவாக, யோவான் சிறையிலடைக்கப்பட்டார். அவரது தலை கொய்யப்பட்டது. (மத். 14: 1-12) 

புனித அகஸ்டின் இத்திருநாளுக்குரிய கட்டளை செபத்தில் இவ்வாறு விளக்கம் தருகின்றார். செக்கரியா, யோவானின் பிறப்புக்குப்பிறகு மீண்டும் பேசும் ஆற்றல் பெற்றார். இதனையும், கிறிஸ்து சிலுவையில் உயிர்விட்டபொழுது ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிந்ததையும் அகஸ்டின் இணைத்து பார்க்கிறார். திருமுழுக்கு யோவான் தமது வருகை பற்றியே அறிவித்திருந்தால், செக்கரியாவுக்கு மீண்டும் பேச நாவன்மை கிடைத்திருக்காது. நா கட்டவிழ்க்கப்பட்டதனால் குரலுக்கு வழிபிறந்தது. "நீர் யார்" என்று யோவானை கேட்டபோது " பாலைவனத்தில் எழும் குரலொளி நான்" என்றே விடையளிக்கின்றனர். யோவானின் குரல் சிறிது காலத்திற்கே நீடித்தது. வார்த்தையாம் கிறிஸ்து என்றென்றும் உள்ளவர். 

செபம்:
இரக்கத்தின் இறைவா! உண்மையை உரைத்ததற்காக யோவான் தன் உயிரை ஈந்தார். இவரை போல இன்று ஏராளமான இறைப்பணியாளர்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர். இவர்களின் பாவங்களை மன்னித்து, உம் வான் வீட்டில் சேர்த்தருளும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்

Feast : (24-06-2020)

Birth of John the Baptist

In the Roman Catholic Church the birth day is celebrated for only three persons the Jesus Christ, His mother the Holy Virgin Mary and John the Baptist. St. John the Baptist had a specific role ordained by the God as part of God's salvation of humanity, as a forerunner and precursor of Jesus Christ. As per the Gospel of Luke (1:17), the main duty of John the Baptist was to make the people ready for the Lord Jesus Christ. Jesus indirectly told his disciples in Matthew 17:11-13 that John the Baptist was the expected prophet Elijah, as written in Malachi 4:5-6. Jesus said 'To be sure, Elijah comes and will restore all things. But I tell you, Elijah has already come and they did not recognize him, but have done to him everything they wished. In the same way the Son of Man is going to suffer at their hands. The disciples then understood the Jesus was talking to them about John the Baptist'. The birth of John was foretold by the Arch-Angel Gabriel to Zachariah, the father of John, when Zachariah was performing the priestly duties in the Temple of Jerusalem. Zachariah is described as a priest of the course of Abijah and his wife Elizabeth was a descendant of Aaron and a kinswoman of Holy Virgin Mary. Zachariah and his wife Elizabeth were very old and Elizabeth was also barren. So naturally Zachariah raised a doubt with the arch-angel to the effect that how this may happen since they are very old. Gabriel got angry with Zachariah since he did not believe the prophesy and made him speechless till the birth of John. Zachariah regained speech after the birth of John and after Zachariah himself named him John.  So John was a descendant of Aaron on both his father's and mother's side. John saw the Holy Spirit descended as a dove on Jesus, when Jesus was baptized by him and gave witness later that Jesus was the Son of God. The baptism given by John was a complete baptism when the entire Holy Trinity was involved there. God the Son was getting baptism, Holy Spirit the God descended from Heaven and Father the God talked from the heaven that Jesus was His Son. When Herod Antipas S/o Herod the Great divorced his first wife (daughter of King Aretas of Damascus) and married Herodias, the wife of his living brother Philip, John advised Antipas not to keep his brother's wife Herodias. At the instigation of Herodias, Salome, the daughter of Herodias asked the head of John the Baptist from King Herod Antipas. Salome danced and entertained all the guests in a party organized by Antipas and Antipas promised her he would give anything she asked. With no alternative, Antipas sent an executioner to cut and bring the head of John, who was in prison. Historians say that the approximate date of John's beheading was August 29, in 28 A.D. The father of the first wife of Herod Antipas, King Aretas of Damascus waged war against Herod Antipas and destroyed his army in revenge for the divorce of his daughter by Herod Antipas. Jewish historian Flavius Josephus lived in the first century wrote in his book 'Jewish Antiquities' that the destruction of the army of Herod Antipas was the punishment came from God for what he did for John. He was buried in a place where the Umayyad Mosque or the Great Mosque of Damascus is now situated.

---JDH---Jesus the Divine Healer---
† இன்றைய திருவிழா †
(ஜூன் 24)

✠ புனிதர் திருமுழுக்கு யோவானின் பிறப்பு ✠
(Nativity of Saint John the Baptist)

இறைவாக்கினர், போதகர், கிறிஸ்துவின் முன்னோடி, மறைசாட்சி:

பிறப்பு: கி.மு. முதல் நூற்றாண்டின் இறுதி
(Late 1st century BC)

இறப்பு: கி.பி. 31 – 32
மச்சேரஸ், பெரியா, லெவன்ட்
(Machaerus, Perea, the Levant)

ஏற்கும் சமயம்: 
கிறிஸ்தவம்
(Christianity)
இஸ்லாம்
(Islam)

முக்கிய திருத்தலங்கள்:
புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், எருசலேம்,
நபி யமியாவின் கல்லறை, உமய்யாத் மசூதி, டமாஸ்கஸ், சிரியா
(Church of St John the Baptist, Jerusalem,
Tomb of Prophet Yahya, Umayyad Mosque, Damascus, Syria)

நினைவுத் திருவிழா: 
ஜூன் 24 (பிறப்பு), 
ஆகஸ்ட் 29 (இறப்பு)

இவர், கிறிஸ்துவின் முன்னோடியாக வந்த இறைவாக்கினரும், கிறிஸ்தவ சமயத்தின் பிரபலஸ்தரும் ஆவார். இறைமகன் இயேசுவின் உறவினரான இவர், யோர்தான் நதியில் திருமுழுக்கு கொடுத்து வந்தார். எனவே, மற்ற 'யோவான்'களிடம் இருந்து, இவரைப் பிரித்து அடையாளப்படுத்தும் விதமாக 'திருமுழுக்கு' என்ற அடைமொழி இவரது பெயரோடு இணைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமில் இவர் “யஹ்யா” என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

யோவானின் பிறப்பு:
திருமுழுக்கு யோவானின் பிறப்பு பற்றிய செய்தி, லூக்கா நற்செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது :

யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.

ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் செக்கரியா தூபம் காட்டுகிற வேளையில், அங்குத் தோன்றிய வானதூதர் அவரை நோக்கி, "செக்கரியா, உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார்; தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார். வானதூதரின் வார்த்தைகளை நம்ப செக்கரியா தயங்கியதால், அவர் யோவான் பிறக்கும் வரை பேச்சற்றவராய் இருப்பார் என்று வானதூதர் கண்டிப்பாக கூறினார்.
அதன் விளைவாக, செக்கரியா பேச்சற்றவராய் ஆனார்.

எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார். அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி, "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

குழந்தைப் பருவம்:
திருமுழுக்கு யோவானைப் பற்றி அவரது தந்தை செக்கரியா, "குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்" என்று இறைவாக்கு உரைத்தார்.

லூக்கா நற்செய்தியின் குறிப்புகள், இயேசுவின் தாய் மரியாவும், யோவானின் தாய் எலிசபெத்தும் உறவினர்கள் என்று குறிப்பிடுவதால், இயேசுவும் யோவானும் சிறுவயதில் சேர்ந்து விளையாடி இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் பல கிறிஸ்தவ ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் இயேசு சாதாரண உடையுடனும், யோவான் ஒட்டக முடியாலான ஆடையுடனும் காணப்படுகின்றனர்.

பழங்கால கிறிஸ்தவ மரபுகளின்படி, யோவானின் பெற்றோர் அவரது சிறு வயதிலேயே இறந்து விட்டதாகவும், யோவான் பாலை நிலத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இயேசுவை சுட்டிக்காட்டும் காலம் வரும் வரை, யோவான் பாலை நிலத்திலேயே வாழ்ந்து வந்தார். தற்கால அறிஞர்கள், பாலைநிலத் துறவிகளாக வாழ்ந்த எஸ்சேனியர்களில் ஒருவராக யோவானும் இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். இயேசு பிறப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இந்த பாலைவனத் துறவிகள், தனிமையில் கடவுளை தியானித்து வந்ததோடு இஸ்ரயேலரின் மனமாற்றத்துக்கும் அழைப்பு விடுத்தனர். மனமாற்றத்திற்கு அடையாளமாக திருமுழுக்கு பெறும் சடங்கைத் தொடங்கி வைத்தவர்கள் இவர்களே என்று நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment