புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

23 June 2020

St. Mary of Oignies* *அர்ச். ஆய்க்னீஸ் மரியம்மாள்**(கி.பி. 1213).* June 23

*ஜூன் மாதம் 23-ம் தேதி* 

*St. Mary of Oignies*            
*அர்ச். ஆய்க்னீஸ் மரியம்மாள்*
*(கி.பி. 1213).*    
இவள் ப்ரபாண்ட் நாட்டில் பிறந்து, தனது பக்தியுள்ள தாயாரால்  புண்ணிய வழியில் வளர்க்கப்பட்டாள். தனக்கு தேவையான படிப்பை முடித்துக்கொண்டு, தன்னைப்போல பக்தி விசுவாசமுள்ள ஒரு வாலிபனை திருமணம் செய்துகொண்டாள். இவ்விருவரும் தங்கள் ஊருக்குள் ஓர் இடத்தில் குஷ்டரோகிகள் முதலிய வியாதியஸ்தர்களை; அழைத்துவந்து, அவர்களை பராமரித்து வந்தார்கள். இதைக் கண்டவர்கள் இவர்களைப் பழித்துப் பரிகாசம் செய்தபோதிலும் தாங்கள் தொடங்கிய பிறர்சிநேக வேலையை விடாமல் செய்து வந்தார்கள். நாள்தோறும் கர்த்தருடைய திருப்பாடுகளைக் குறித்துத் தியானம் செய்;வார்கள். திருப்பாடுகளைப்பற்றி மரியம்மாள் நினைக்கும்போதெல்லாம் கண்ணீர் சொரிந்து அழுவாள். இவள் ஒரு நாளைக்கு ஒரு தடவை கொஞ்சம் ரொட்டியும் கீரையும் புசித்து தபம்; செய்து, தன் செல்வத்தையெல்லாம்  வியாதியஸ்தருக்கு செலவு செய்வாள். இப்புண்ணியவதி சமையல் செய்யும்போதும், நூல் நூற்கும்போதும், மற்ற எவ்வித வேலைகளை செய்யும்போதும், நாவாலும் மனதாலும் ஜெபத்தியானம் செய்வாள். அந்நேரங்களில் அவளுடைய வேலைகளை சம்மனசுக்கள் செய்வார்கள். வீண் பேச்சுக்கு இடம் கொடுக்கமாட்டாள். அடிக்கடி மிகவும் பக்தியுடன் நன்;மை வாங்குவாள். அவளுக்கு இருந்த தேவசிநேகத்தால் பரவசமாவாள். இப்புண்ணியவதியைப் பார்க்க வருகிறவர்கள், ஒருவித தேவசிநேகத்தால் பற்றியெரிவார்கள். இவள் தீர்க்கதரிசன வரமும், ஞான அறிவும் பெற்றிருந்தும் தனக்கு ஒன்றும் தெரியாதென்று கூறுவாள். பெரும் பாவியும் நீசமுமானவளென்று தன்னை நினைத்துக்கொள்வாள். மோட்சத்தில் தேவதரிசனை அடைய ஆசைகொண்டு, தனக்கு 36 வயது நடக்கும்போது தன் சிருஷ்டிகரிடம் போய்ச் சேர்ந்தாள்.         

*யோசனை*
இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களே! உங்களுக்குத் தேவையான புண்ணியத்தை இந்த அர்ச்சியசிஷ்டவளிடத்தில் கற்றுக்கொள்வீர்களாக.

No comments:

Post a Comment