புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

20 June 2020

திருக்காட்சியாளர் மார்கரோடே ஏப்னர் (Blessed Margarete Ebner) June 20

இன்றைய புனிதர் : 
(20-06-2020) 

திருக்காட்சியாளர் மார்கரோடே ஏப்னர் (Blessed Margarete Ebner) 
பிறப்பு 
1291
டோனவ்வோர்த்(Donauworth), அவுக்ஸ்பூர்க்(Augsburg)
    
இறப்பு 
20 ஜூன் 1351

தில்லிங்கன் என்ற ஊரில் இவருக்கென்று ஓர் ஆலயம் உள்ளது. அங்குதான் இவர்தான் இறுதி நாட்களை கழித்துள்ளார். பலவித கலாசாரத்தை கொண்ட மக்களிடத்தில் இவர் பணியாற்றினார். இவர் தனது 15 ஆம் வயதில் புனித டொமினிக்கன் சபையில் சேர்ந்து துறவியானார். அவர் அச்சபையில் வாழ்ந்தபோது 1312 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆண்டவரின் காட்சிகளை பலமுறை கண்டார். இவர் மிகவும் கடுமையான நோயால் தாக்கப்பட்டு, படுக்கையிலேயே தன் வாழ்நாட்களை கழித்தார். நோயால் மிகவும் வேதனைக்குள்ளானார். இதனால் இறைவனின்மீது தன் முழு நம்பிக்கையையும் வைத்து, இடைவிடாது செபித்தார். ஆண்டவரின் பாடுகளில் அவ்வப்போது பங்கெடுத்தார். இவரின் ஆன்ம வழிகாட்டி தந்தை ஹென்றி அவர்களின் அறிவுரைப்படி, தொடர்ந்து ஆண்டவரின் பாடுகளில் பங்கெடுத்தார். ஒருநாள் ஆண்டவர் கொடுத்த காட்சியை கண்டுகொண்டிருக்கும்போதே, தன் கண்களை மூடியபடியே உயிர் நீத்தார்.

​இவர் இறந்தபிறகு இவரின் கல்லறையை எண்ணிலடங்கா மக்கள் சந்திக்க வந்தனர். அங்கு வந்த அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு வகையில் புதுமைகளை செய்தார். இவர் இறந்த சில ஆண்டுகள் கழித்து அவரின் கல்லறைமேல் இயேசு கிறிஸ்துவின் உருவம் கொண்ட ஒரு சுரூபம் தானாகவே வளர்ந்தது. 1751 ல் சாதாரணமாக இருந்த இவரின் கல்லறைமேல் 1751-1755 வரை ஓர் ஆலயம் கட்டப்பட்டு, இன்றும் அவ்வாலயத்தில் அவரின் பெயரால் வழிபாடுகள் நடக்கின்றது.


செபம்:
குணமளிப்பவரே எம் தந்தையே இறைவா! இவ்வுலகில் நோயினால் வாடும் மக்களை நீர் கண்ணோக்கியருளும். தங்களின் நோய்களை தாங்கும் உடல் பலத்தையும், மனபலத்தையும் தந்து, வாழ்வில் மீண்டும் புத்துயிர் பெற்று வாழ நீர் வரம் தந்து வாழ்வை அளிக்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (20-06-2020)

Blessed Margareta Ebner

Born wealthy. Received a thorough classical education at home. Dominican nun at Maria-Medingen, Germany convent in 1306. Dangerously ill from 1312 to 1322 during which time she was sent home to recover, and during which she began receiving visions, revelations and prophies. Visited by the Infant Christ. Spiritual student of Father Henry of Nördlingen from 1332 to her death. Their correspondence is the first collection of its kind in German. At his command she wrote a full account of her mystic experiences.

Born :
c.1291 at Donauwörth, Bavaria, Germany

Died :
20 July 1351 at Mödingen, Bavaria, Germany of natural causes

Beatified :
24 February 1979 by Pope John Paul II (cultus confirmation)
• the first beatification of John Paul's pontificate

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment