† இன்றைய புனிதர் †
(ஜூன் 19)
✠ புனிதர் ரோமுவால்ட் ✠
(St. Romuald)
சபை நிறுவனர்/ மடாதிபதி:
(Founder/ Abbot)
பிறப்பு: கி.பி. 951
ரவென்னா
(Ravenna)
இறப்பு: ஜூன் 19, 1027
வால் டி காஸ்ட்ரோ
(Val di Castro)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
நினைவுத் திருநாள்: ஜூன் 19
ரோமுவால்ட் ஓரு “கமால்டோலிஸ்” (Camaldolese Order) சபையின் நிறுவனரும், “ஆழ்ந்த தியானத்தின் மறுமலர்ச்சி” என பெயர் பெற்ற ஏழாம் நூற்றாண்டின் பிரபலஸ்தருமாவார்.
ரோமுவால்டின் மரணத்தின் சுமார் பதினைந்து வருடங்களின் பின்னர் இவரது சரித்திரத்தை எழுதிய புனிதர் “பீட்டர் தமியான்“ (St. Peter Damian) அவர்களின் கூற்றின்படி, ரோமுவால்ட் வட கிழக்கு இத்தாலியின் “ரவென்னா” (Ravenna) மாநிலத்தில் உயர்குல குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை “செர்ஜியஸ் டெக்லி ஓனேஸ்டி” (Sergius degli Onesti) ஆவார். தாயாரின் பெயர் “டிரவர்சரா டிரவர்சரி” (Traversara Traversari) ஆகும்.
இவர் தமது இளம் வயதில், பத்தாம் நூற்றாண்டின் ஒரு பிரபுத்துவ இளைஞனைப் போன்று உலக பாவ காரியங்களிலும் சொகுசான வாழ்விலும் மனம் போன போக்கில் வாழ்ந்தார். ஒருமுறை, இவரது தந்தை தம் உறவினர் ஒருவரை சொத்து தகராறு காரணமாக, இவரின் கண்ணெதிரிலேயே கொலை செய்தார். மனம் வெறுத்துப்போன ரோமுவால்ட், “புனித அப்போலினர் திருத்தலம்” (Basilica of Sant'Apollinare in Classe) சென்று நாற்பது நாட்கள் தவ முயற்சிகளில் ஈடுபட்டார். உறுதியற்ற மனநிலை காரணமாக, ரோமுவால்ட் அங்கேயே துறவியானார். கடும் தவம் புரிந்தார். அங்கு துறவிகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி வாழ்ந்தது, இவருக்கு எரிச்சலை மூட்டியது. எனவே அந்த மடத்தை விட்டு வெளியேறி, முதலில் வெனிஸ் நகருக்கு அருகிலும், பின்னர் “ஃபிரனீஸ்” (Franis) மலைப்பகுதியிலும் ஜெப, தவ வாழ்க்கையை மேற்கொண்டார். ஏறக்குறைய 30 ஆண்டுகள் இத்தாலி முழுதும் பயணித்து துறவு மடங்கள் மற்றும் ஆசிரமங்களை நிறுவதிலும் புனரமைப்பதிலும் செலவிட்டார்.
தனிமையில் இறைவனுடன் நெருங்கிய தோழமை கொள்ள விரும்பியவர்களுக்கு, மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் குடிசைகள் அமைத்து கொடுத்தார். அவற்றில் ஒரு மடம் மட்டுமே “கமல்டொலி” (Camaldoli) என்ற இடத்தில், “அப்பினைன்” (Apinain) என்ற மலையுச்சியில் கி.பி. 1012ம் ஆண்டு 5 குடிசைகள் கொண்டதாக அமைந்தது. புனிதர் தனிப்பட்ட ஒரு துறவு சபையை தோற்றுவிக்க திட்டமிடவில்லை. இருப்பினும் “கமல்டொலி’ல்” (Camaldoli) நிறுவப்பட்ட மடம்தான், கடுமையான ஒழுங்குகள் கொண்ட பெனடிக்டின் துறவற சபையாக பெயர் பெற்று காட்சியளிக்கிறது. இதுவே மேலை திருச்சபையில் தவ துறவியர்க்கான சபையாக மீண்டும் தோன்றியது. இது சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட ஒரு சிற்றூர். இங்கே வாழும் ஒவ்வொரு துறவியும் ஒரு அறை, ஒரு பணித்தளம், ஒரு தோட்டம் இவற்றை பெற்றுக்கொண்டு அங்கே மௌனம், தனிமை, ஆகியவற்றுக்கிடையே இறை பணிபுரிந்தனர். வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்தனர். இவர் உலகம் முழுவதையும் ஒரு துறவற மடமாகவும், ஒவ்வொருவரையும் ஒரு துறவியாகவும் மாற்றும் திட்டம் வைத்திருந்தார். அமைதியும், கடுந்தவ முயற்சியும்தான் இச்சபையின் சிறப்புக் கூற்றுகளாக அமைந்திருந்தது. கி.பி. 1086ம் ஆண்டிலிருந்து, பெண்களுக்கும் அவரவர்களின் நிலைக்கேற்ப "கமல்டொலிஸ்" (Camaldolese) மடங்கள் தொடங்கப்பட்டன. இவர் இறந்தபிறகு, இவரின் கல்லறையில் பல புதுமைகள் நடந்தவண்ணமாய் இருந்தன. இதனால் இவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு, இவர் கல்லறையின்மேல் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது.
† Saint of the Day †
(June 19)
✠ St. Romuald ✠
Founder/ Abbot:
Born: 951 AD
Ravenna
Died: June 19, 1027
Val di Castro
Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church
Feast: June 19
Romuald was the founder of the Camaldolese order and a major figure in the eleventh-century "Renaissance of eremitical asceticism".
Working within the Western Church’s Benedictine tradition, he revived the primitive monastic practice of hermit life, allowing for greater solitude in a communal setting.
Born into an aristocratic family during the middle of the tenth century, Romuald grew up in a luxurious and worldly environment, where he learned little in the way of self-restraint or religious devotion. Yet he also felt an unusual attraction toward the simplicity of monastic life, prompted by the beauty of nature and the experience of solitude.
It was not beauty or tranquility, but a shocking tragedy that spurred him to act on this desire. When Romuald was 20 years old, he saw his father Sergius kill one of his relatives in a dispute over some property. Disgusted by the crime he had witnessed, the young man went to the Monastery of St. Apollinaris to do 40 days of penance for his father.
These 40 days confirmed Romuald’s monastic calling, as they became the foundation for an entire life of penance. But this would not be lived out at St. Apollinaris, where Romuald’s strict asceticism brought him into conflict with some of the other monks. He left the area near Ravenna and went to Venice, where he became the disciple of the hermit Marinus.
Both men went on to encourage the monastic vocation of Peter Urseolus, a Venetian political leader who would later be canonized as a saint. When Peter joined a French Benedictine monastery, Romuald followed him and lived for five years in a nearby hermitage.
In the meantime, Romuald’s father Sergius had followed his son’s course, repenting of his sins and becoming a monk himself. Romuald returned to Italy to help his father, after learning that Sergius was struggling in his vocation. Through his son’s guidance, Sergius found the strength to persist in religious life.
After guiding his penitent father in the way of salvation, Romuald traveled throughout Italy serving the Church. By 1012 he had helped to establish or reform almost 100 hermitages and monasteries, though these were not connected to one another in the manner of a distinct religious order.
The foundations of the Camaldolese order were not laid until 1012 – when a piece of land called the ”Camaldoli,” located in the Diocese of Arezzo, was granted to Romuald. It became the site of five hermits’ quarters, and a full monastery soon after. This combination of hermits’ cells and community life, together with other distinctive features, gave this monastery and its later affiliates a distinct identity and charism.
Romuald’s approach to the contemplative life, reminiscent of the early Desert Fathers, can be seen in the short piece of writing known as his “Brief Rule.” It reads as follows:
“Sit in your cell as in paradise. Put the whole world behind you and forget it. Watch your thoughts like a good fisherman watching for fish. The path you must follow is in the Psalms – never leave it.”
“If you have just come to the monastery, and in spite of your goodwill you cannot accomplish what you want, take every opportunity you can to sing the Psalms in your heart, and to understand them with your mind. And if your mind wanders as you read, do not give up; hurry back and apply your mind to the words once more.”
“Realize above all that you are in God’s presence, and stand there with the attitude of one who stands before the emperor. Empty yourself completely and sit waiting, content with the grace of God, like the chick who tastes nothing and eats nothing but what his mother brings him.”
St. Romuald of Ravenna died in his monastic cell on June 19, 1027. Pope Gregory XIII canonized him in 1582.
இன்றைய புனிதர்
2020-06-19
புனித ரோமுவால்ட் (St.Romuald )
ஆதீனத் தலைவர்
பிறப்பு
: 10 நூற்றாண்டு இறுதி
ராவென்னா(Ravena), இத்தாலி
இறப்பு
19 ஜூன் 1027
இவர் ஓர் அரச குலத்தில் தோன்றியவர். இவர் தம் 20 ஆம் வயது வரை மனம் போன போக்கில் வாழ்ந்தார். ஒருமுறை இவரது தந்தை தம் உறவினர் ஒருவரை சொத்து தகராறு காரணமாக, இவரின் கண்ணெதிரில் கொன்று போட்டார். இதற்கு பரிகாரமாக புனித ஆசீர்வாதப்பர் சபை ஒன்றில் சேர்ந்து, கடும் தவம் புரிந்தார். அங்கு துறவிகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி வாழ்ந்தது. இவருக்கு எரிச்சலை மூட்டியது. எனவே அந்த மடத்தை விட்டு வெளியேறி , முதலில் வெனிஸ் நகருக்கு அருகிலும், பின்னர் பிரன்னீஸ்(Franis) மலைப்பகுதியிலும் ஜெப, தவ வாழ்க்கையை மேற்கொண்டார். ஏறக்குறைய 30 ஆண்டுகள் வட இத்தாலி, தென் பிரான்சு, தென் ஸ்பெயின் பகுதிகளிலும் துறவு மடங்களில் ஒழுங்குமுறைகளை பற்றுறுதியுடன் கடைபிடிக்க வழிகாட்டியாக திகழ்ந்தார்.
தனிமையில் இறைவனுடன் நெருங்கிய தோழமை கொள்ள விரும்பியவர்களுக்கு, மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் குடிசைகள் அமைத்துகொடுத்தார். அவற்றில் ஒரு மடம் மட்டுமே கமல்டொலி(Kamaldoli) என்ற இடத்தில், அப்பினைன்(Apinain) என்ற மலையுச்சியில் 1012 ஆம் ஆண்டு 5 குடிசைகள் கொண்டதாக அமைந்தது. புனிதர் தனிப்பட்ட ஒரு துறவு சபையை தோற்றுவிக்க திட்டமிடவில்லை. இருப்பினும் கமல்டொலில் நிறுவப்பட்ட மடம்தான், கடுமையான ஒழுங்குகள் கொண்ட பெனடிக்டின் துறவற சபையாக பெயர் பெற்று காட்சியளிக்கிறது. இதுவே மேலை திருச்சபையில் தவ முனிவர்களுக்கான சபையாக மீண்டும் தோன்றியது. இது சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட ஒரு சிற்றூர். இங்கே வாழும் ஒவ்வொரு துறவியும் ஒரு அறை, ஒரு பணித்தளம், ஒரு தோட்டம் இவற்றை பெற்றுக்கொண்டு அங்கே மௌனம் , தனிமை, இவற்றுக்கிடையே இறை பணிபுரிந்தார். வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்தார். இவர் உலகம் முழுவதையும் ஒரு துறவற மடமாகவும், ஒவ்வொருவரையும் ஒரு துறவியாகவும் மாற்றும் திட்டம் வைத்திருந்தார். அமைதியும், கடுந்தவ முயற்சியும்தான் இச்சபையின் சிறப்புக் கூற்றுகளாக அமைந்திருந்தது. 1086 ஆம் ஆண்டிலிருந்து, பெண்களுக்கும் அவரவர்களின் நிலைக்கேற்ப "கமல்டொலிஸ்" மடங்கள் தொடங்கப்பட்டது. இவர் இறந்தபிறகு, இவரின் கல்லறையில் பல புதுமைகள் நடந்தவண்ணமாய் இருந்தது. இதனால் இவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு, இவர் கல்லறையின்மேல் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது.
செபம்:
வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! புனித ரோமுவால்ட் அரசர் குலத்தில் பிறந்தபோதும், ஆடம்பர வாழ்வில், தன் வாழ்வை வாழாமல், கடுமையான செப, தவ வாழ்வை வாழ்ந்து உமக்குரிய நல்ல சீடனாக திகழ்ந்தார். நாங்களும் எங்களின் அன்றாட வாழ்வில் ஏழையாக வாழ்ந்து உம்மை மட்டுமே பற்றிக்கொள்ள உம் வரம் தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
ஆயர் ஹில்டேகிரிம் HIldegrim
பிறப்பு: 750, ஃபிரீஸ்லாந்து Friesland
இறப்பு: 19 ஜூன் 827, சாக்சன் Sachsen
தலைவி ஃபால்கோனீரி நகர் ஜூலியானா Juliana von Falconieri OSM
பிறப்பு: 1270, புளோரன்ஸ், இத்தாலி
இறப்பு: 19 ஜூன் 1341, இத்தாலி
புனிதர்பட்டம்: 1737
பாதுகாவல்: சர்வைட் துறவற சபை
திருக்காட்சியாளர் மிசேலீனா மெட்டேல் Michelina Metelli OFM
பிறப்பு: 1310, பேசாரோ Pesaro, இத்தாலி
இறப்பு: 19 ஜூன் 1356, இத்தாலி
No comments:
Post a Comment