ஜூன் 30
புனித எரன்ரூடிஸ் (ஏழாம் நூற்றாண்டு)
இவர் ஜெர்மனியில் உள்ள வோம்ஸ் நகரில் பிறந்தவர். இவருடைய நெருங்கிய உறவினர்தான் ஆஸ்திரியாவில் உள்ள சால்ஸ்பார்கில் ஆயராக இருந்த புனித ரூபர்ட்.
ஆயருடைய அழைப்பின் பேரில் எரன்ரூடிஸ் தன் இளம் வயதிலேயே சால்ஸ்பர்க் நகருக்குச் சென்று, அங்கிருந்து துறவற மடத்தின் தலைவியானார்.
இவர் தனது துறவுமடத்தில் இருந்த மற்ற அருள் சகோதரிகளுக்குத் தன்னுடைய எடுத்துக்காட்டான வாழ்வால் வழிகாட்டினார். மட்டுமில்லாமல், இவர் நோயாளர்களைச் சந்தித்ததன் வழியாகவும், வயது முதிர்ந்தவர்களோடு தன்னுடைய நேரத்தைச் செலவழித்ததன் வழியாகவும் அவர்களோடு தன்னுடைய உடனிருப்பைக் காட்டினார்.
இவர் தனது வழிகாட்டியாயான ஆயர் ரூபர்ட்டிற்கு முன்பாகவே இறந்து விட வேண்டும் என நினைத்தார்; ஆனால் ஆயர் இவருக்கு முன்பாக இறந்தார். அவர் இறந்த ஒருசில மாதங்களில் இவர் இறையடி சேர்ந்தார்.
No comments:
Post a Comment